a_Pen

முதற்பக்கம்

மணிக்குரல்

ஈ.பி.ஆர்.எல்.எப்

ஈ.பி.டி.பி

புளொட்

தூ

ராஜேஸ்பாலா

டெலோ நியூஸ் 

இலங்கைநெற் 

மீன்மகள்

 சூத்திரம்   

உண்மைகள்  

கவிமலர்

 பூந்தளிர்   

 எங்கள்தேசம்

நோயல்நடேசன் 

விடிவெள்ளி

எங்கள்பூமி 

புயல்   

யாழமுஸ்லீம் 

புண்ணியாமீன் 

பஷீர்      

கவசங்களைதல்  

எதுவரை

அறிக்கை நியூஸ்

அதிரடி

சுபீட்சம்

தினமுரசு

காத்தான்குடி இன்போ

ARRR

சிறிலங்கா புளொக்

என்தேசியம்

யாழ்நாதம்

இலங்கைக்குரல்

பற்றிபறை

Rajesbala

Asientribune

The lka academic

Tamil Week 

The Hindu

Daily News

Sunday Times

Daily Mirror

The island

The Sunday Leader

ColomboPage

Sunday Times

CNN

BBC

Newsnow

Thendral Radio

NamuPonn

 

Thenee_head02

Online Newspaper in Tamil                        Vol.  15                             25.04.2015

15 வருடங்களுக்கு முன்பு சுற்றி வளைத்து தளர்வடையச் செய்யும் போர் உத்தி மூலம் எப்படி எல்.ரீ.ரீ.ஈ ஆனையிறவைக் கைப்பற்றியது

                                       -  டி.பி.எஸ்.ஜெயராஜ்

பகுதி – 1

“எல்லோரும் இளவரசனை பாராட்டினார்கள்
அவர்தான் இந்த பெரிய யுத்தத்தை வெற்றி கண்டவர்”
“ஆனால் இறுதியில் அதனால் என்ன நன்மை ஏற்பட்டது?”
என்று சொன்னார் சிறியவரான பீற்றர்கின்
“ஏன் நான் அதைச் சொல்ல முடியாது” என்று அவர் கேட்டார்
“ஆனால் அது பிரசித்தமான ஒரு வெற்றி”
                                -றொபேட் சவுத்தி – “பிளென்ஹெயிம் யுத்தம்”

15 வருடங்களுக்கு முன்பு 22 ஏப்ரல்,2000 ல் மூலோபாயமிக்க ஆனையிறவு elepahntpassமுகாம் ஒரு தீர்க்கமான போரில் இராணுவத்தின் நீடித்த எதிர்ப்பின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் (எல்.ரீ.ரீ.ஈ) கைப்பற்றப்பட்டது. வன்னி பெருநிலப் பரப்பை யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இணைக்கும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிலப் பகுதியான பூசந்திதான் ஆனையிறவு. யாழ்ப்பாணம் - கண்டி வீதி அல்லது ஏ – 9 நெடுஞ்சாலை மற்றும் யாழ்ப்பாண தொடரூந்து பாதை ஆகிய இரண்டுமே ஆனையிறவின் ஊடாகத்தான் செல்கிறது, மற்றும் இந்த குறுகிய நாடா போன்ற நிலப்பகுதியை ஒரு அர்த்தத்தில் யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயில் என்றும் கூறலாம். ஆனையிறவின் வீழ்ச்சி, அதாவது அந்தப் பிரதேசம் எல்.ரீ.ரீ.ஈ யின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது நீண்ட தமிழ் ஈழப் போரில் ஒரு வரலாற்று அடையாளமாக கருதப்படுகிறது. டச்சுக் காலனித்துவத்தின் போது 1776ல் முதலில் ஒரு சிறு கோட்டை ஒன்று கட்டப்பட்டது, நவீன காலத்தில் இது உல்லாசப் பயணிகளுக்கான ஒரு தங்கும் விடுதியாக மாற்றப்பட்டது.  மேலும் 25.04.15

_____________________________________________________________________________________________

திரும்பிப்பார்க்கின்றேன் - 02

ஜெயகாந்தன்  அறிந்திருந்த  ஈழத்து  இலக்கிய  உலகம்.

ஆளுமையால்  ஆகர்ஷிக்கப்பட்டார்  -   ஈழத்தின் அழைப்புகளை    நிராகரித்தார். 

.- முருகபூபதி

ஜெயகாந்தனின்  இயற்பெயர்  முருகேசன்.   பெற்றவர்கள்  வைத்தபெயர்  Lakshmikanthan ஜெயகாந்தனாக  மாறியதும்  சுவாரஸ்யமான தகவல்தான்.   இந்துநேசன்  பத்திரிகை   ஆசிரியர்  லட்சுமிகாந்தன்  பற்றி  அறிந்திருப்பீர்கள். அவர்  மிகவும்  துணிச்சலான   பத்திரிகையாளர்.   திரையுலகத்தின் மோசமான   மறுபக்கங்களை  அம்பலப்படுத்தியது  இந்து நேசன். அதனை   அக்காலத்தில்  மஞ்சள்  பத்திரிகை   எனவும்  அழைத்தனர். தியாகராஜ பாகவதர்  தமிழகத்தில்  மட்டுமல்லாது  கடல் கடந்து இலங்கையிலும்   தமிழ்ப்பட  ரசிகர்களிடம்  புகழ்பெற்று  விளங்கியவர்.    கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணன்,  பாகவதர் ஆகியோர்  உட்பட  வேறும்  சில  திரையுலக  பிரபலங்களின் அந்தரங்கங்களை  வெளிச்சம்போட்டு  காண்பித்த  இந்து நேசன் பத்திரிகையின்   ஆசிரியர்  லட்சுமிகாந்தன்  ஒருநாள்  ரிக்க்ஷாவில் வரும்பொழுது   எதிர்ப்பட்ட  சிலரால்  குத்திக்கொலை செய்யப்பட்டார்.அந்தவழக்கில்  சந்தேக  நபர்களாக  கைதான  தியாகராஜ பாகவதரும் கலைவாணரும்  சிறையில்  தண்டனையும்  அனுபவித்தனர்.   மேலும் 25.04.15

_____________________________________________________________________________________________

கடலில் ஒரு கல்லறை!


சிரியா, லிபியாவில் பயங்கரவாதிகளுக்கும் நேட்டோ படைகளுக்கும் இடையிitaly mapலான சண்டையில் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள், உயிருக்கு ஆபத்து எனத் தெரிந்தும் அபாயகரமான வகையில் மத்தியதரைக் கடலை படகுகளில் கடந்து உயிரை இழக்கிறார்கள் மத்தியதரைக் கடலில் நிகழ்ந்த படகு விபத்தில் சுமார் 800 அகதிகள் பலியான சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "ஓர் இனப்படுகொலைக்கு இணையானது; கடலில் நிகழ்ந்த படுகொலை' என பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்துள்ளன. வாழ்வதற்காக சாவதற்குக்கூடத் துணிவது என்பார்களே, அப்படித்தான் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்காதா என்கிற எதிர்பார்ப்பில், போரின் பிடியில் சிக்கியுள்ள குறிப்பாக லிபியா, சிரியா போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் மத்தியதரைக்கடலை உயிரைப் பணயம் வைத்துக் கடக்கிறார்கள் அகதிகள். ஒரே படகில் அளவுக்கு அதிகமாக ஆள்களை ஏற்றுவது, திடீர் கடல் கொந்தளிப்பு உள்ளிட்ட காரணங்களால், இந்தப் படகுகள் கவிழ்ந்து ஒன்றுமறியா குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கில் அகதிகள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது.  மேலும் 25.04.15

_____________________________________________________________________________________________

குடியிருப்பு பகுதிக்குள் பிரதேசசபையும் படையினரும் குப்பைகளை கொட்டுகிறார்கள்

- சந்திரகுமார் எம் பியிடம் மக்கள் முறைப்பபாடு.

பரந்தன் உமையாள்புரம் மக்கள் குடியிருப்புக்குள்  தனியாரின் கchandrakumarap2015ாணிகளில் கரைச்சி பிரதேசசபையினரும் இரானுவத்தினரும் குப்பைகளைக் கொட்டுவதால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் பாரிய சுகாதார பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவருவதாக பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவருமான மு.சந்திரகுமாரிடம் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். குப்பைகொட்டுவதற்கென பிரதேசசபை உரிய இடத்தை இனம் காட்டாததன் விளைவாவே இவ் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். இன்று(27) வெள்ளிக்கிழமை உமையாள்புரம் பகுதிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்களுடன் மக்கள் உரையாடும் போதே இவ்விடயம் தொடர்பில் அவரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இதுதொடர்பில் மக்கள் மேலும் குறிப்பிடுகையில் பிரதேச சபையினரால் கழிவுப் பொருட்களை கொட்டுவதற்கென ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்ட இடம் எ9 வீதியிலிருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் அமைந்திருக்கின்றது ஆனால் குப்பைகளை ஏற்றிவரும் பிரதேசசபைக்குரிய வாகணங்கள் அங்கு செல்வதில்லை மாறாக எ9வீதியிலிருந்து 400 மீற்றர் தூரத்திற்குள் உள்ள மக்களின் காணிகளிலேயே அவர்கள் குப்பைகளை கொட்டுகின்றனர்; அத்தோடு இரானுவத்தினரும் மலக்கழிவுகளை அவ்விடத்தில் கொண்டுவந்து கொட்டுகின்றனர். மேலும் 25.04.15

_____________________________________________________________________________________________

9 எம்.பி.க்கள் உட்பட 26 பேருக்கு அழைப்பாணை

நீதிமன்ற உத்தரவை அவமதித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் உள்ளிட்ட 26 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இந்த 26 பேரையும் எதிர்வரும் 8ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அந்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டவே மேற்கண்டவாறு அழைப்பாணை விடுத்துள்ளார். இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வருவதையடுத்து, ஆணைக்குழுவின் கட்டடம் இருக்கின்ற பிரதேசத்தை அண்மித்த பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதை தடுப்பதற்கு பொலிஸாரினால் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவு பெறப்பட்டது. நீதிமன்றத்தின் தடையுத்தரவை அவமதித்த குற்றச்சாட்டின் பேரிலேயே மேற்கண்ட 26 பேருக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களா டலஸ் அழகபெரும, பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, ஜயந்த கெட்டகொட மற்றும் சரத் வீரசேகர, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண உறுப்பினர் உதயன் கம்பன்பில உள்ளிட்ட 26 பேருக்கே இவ்வாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

_____________________________________________________________________________________________

மைத்திரி - மஹிந்த சந்திப்பு ரத்து மே மாதம் நடைபெறும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால Mahinda and Maithiriசிறிசேனவுக்குமிடையில் இன்று (25) நடைபெற இருந்த சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மே மாதத்தில் இருவரும் சந்தித்து கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து பேச இருப்பதாக முன்னாள் அமைச்சர் குமாரவெல்கம எம்.பி. தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் டீ.பி. ஏக்கநாயக்கவும் நானும் ஜனாதிபதியை சந்தித்தோம். கட்சிக்குள் தற்பொழுதுள்ள நெருக்கடி நிலை குறித்து பேசினோம். ஜனாதிபதியையும் முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க வைக்க முயற்சி செய்தோம். அதற்கு ஜனாதிபதி இணங்கினார். முன்னாள் ஜனாதிபதி 25ஆம் திகதி மாலை 7 மணிக்கு தம்மை சந்திக்க முடியும் என சு.க செயலாளர் ஊடாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். தற்பொழுதுள்ள சூழல் இருதரப்பு சந்திப்பிற்கு உகந்ததல்ல. அரசாங்க ஊழியர்கள் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுகின்றனர். இது சரியான முன்மாதிரியல்ல. இது குறித்து மீள கவனம் செலுத்த வேண்டும். ஜனாதிபதியை சந்தித்து விட்டு ரீ.பி. ஏக்கநாயக்கவின் வீட்டுக்கு செல்லும் போது மத்திய குழுவில் இருந்து அகற்றப்படும் கடிதம் வந்திருந்தது. ராஜபக்ஷ குடும்பத்தினர் பழிவாங்கப் படுகின்றனர். ராஜபக்ஷவினரை முற்றாக துடைத்தெறிய வேண்டுமென பிரதமர் கூறியிருக்கிறார். எமது கட்சி துண்டாடப் படுவதை நாம் விரும்பவில்லை.

_____________________________________________________________________________________________

தேசியக்கொடி விவகாரம் : மன்னித்து கொள்ளுங்கள்

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட தேசியக் கொடிகள் பயன்படுத்தப்பட்டன. இச் செயலுக்காக நாம் கவலையடைவதோடு மன்னிப்பையும் வேண்டி நிற்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட தேசியக் கொடியை ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்தியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் டலஸ் அழகப்பெரும மற்றும் உதய கம்பன்பில ஆகியோர் இருந்தமை காணொளிகள் மூலம் தெரிய வந்தது. இந்நிலையில் இச் செயலுக்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மன்னிப்பு கோரியுள்ளார்.  இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்களின் போது இவ்வாறான செயல்கள் இடம்பெறாமல் இருக்க நாங்கள் பொறுப்புடன் செயற்படுவோம். மேலும் இச் செயலினால் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த யாரும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தால் மன்னிப்பையும் கோருகின்றோம் என்றார்.

_____________________________________________________________________________________________

கலாநிதி ராஜன் ஹூல் ‌ "Palmyrah Fallen: From Rajani to War's End" என்ற நூல் பற்றிய ஓர் உரையாடலுக்கு தடை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கணிதத் துறை விரிவுரையாளரும், மனித book eventஉரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (யாழ்ப்பாணம்) உறுப்பினருமாகிய கலாநிதி ராஜன் ஹூல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆங்கிலத்திலே எழுதி வெளியிட்டுள்ள‌ "Palmyrah Fallen: From Rajani to War's End" என்ற நூல் பற்றிய ஓர் உரையாடலினை நாளை, ஏப்ரல் 24ஆம் திகதி பி.ப 2 மணிக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் நூலகக் கேட்போர் கூடத்தில் நடாத்துவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம் தீர்மானித்திருந்தது. இந்த நிகழ்விலே யாழ்ப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த கலாநிதி என். சிவபாலன், பேராசிரியர் தயா சோமசுந்தரம் ஆகியோரும், பேராதனைப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த பேராசிரியர் அர்ஜுன பராக்ரம மற்றும் திறந்த பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோர் உரையாற்றவுள்ளனர். எனினும் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் இந்த உரையாடலினைப் பல்கலைக்கழகத்தினுள் நடாத்துவதற்குத் தடைவிதித்துள்ளார். தனது கடிதம் ஒன்றிலே இதற்கு அவர் கூறியுள்ள காரணம் பல்கலைக் கழகத்திலே இவ்வாறான நிகழ்ச்சிகள் நடைபெறுவதனை அனுமதிக்க முடியாது என்பதாகும்.  மேலும் 24.04.15

_____________________________________________________________________________________________

ஊடக அறிக்கை                                

 23.04.2015

19;ம் 20ம் சட்ட திருத்தங்களுடன் அடிப்படை உரிமைகள் சட்டவரைவையும் இணைத்துக்கொள்ளவும்

- வீ. ஆனந்தசங்கரி,

இரத்தம் சிந்தாத ஓர் அமைதிப் புரட்சி ஏற்பட்ட பின் இந்த நாட்டில் நடப்பவைAnanthaSangaree.7 ஏமாற்றத்தை தருகின்றது. எதிர்வரும் 27ம் 28ம் திகதிகளில் 19ம் 20ம் சட்டத் திருத்தங்கள் நடைபெறுமா அல்லது விவாதத்திற்காவது எடுபடுமா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலைமையை ஏற்படுத்துவது, மக்கள் தலைவர்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு பெரும் துரோகம் இழைப்பதாக அமையும். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மக்கள் ஒரு மாற்றத்தையே விரும்புகின்றனர். நல்லாட்சி ஒன்றை விரும்பும் மக்களின் அவாவை பூர்த்தி செய்யவேண்டியது ஒவ்வொருவருடைய கடமையுமாகும். நல்லதொரு அரிய சந்தர்ப்பம் கடவுளால் வழங்கப்பட்டுள்ளது. இதை இழப்போமேயானால் இன்னும் பல தலைமுறைகளுக்கு இப்பேற்பட்ட வாய்ப்பு மீண்டும் ஏற்படாது. இலங்கையில் 55 ஆண்டுகளுக்கு மேல் நான் ஒரு சிரேஷ்ட அரசியல்வாதியாக செயற்பட்டு கொண்டிருப்பதை சிலரே அறிந்துள்ளனர். சிரேஷ்ட அரசியல்வாதிகளாக செயற்படுபவர்களில் நானும் ஒருவன். அதுவும் தமிழ் அரசியல்வாதிகளில் நான் ஒருவன் மட்டுமே இருப்பதாக நம்புகின்றேன். மேலும் 24.04.15

_____________________________________________________________________________________________

திரும்பிப்பார்க்கின்றேன்

இன்று  ஜெயகாந்தனின்  பிறந்த  தினம்.

முற்போக்கு   இலக்கிய  முகாமில்   காலங்கள்  மாறியது .

சில   நேரங்களில்  சில   மனிதர்களாக   நட்புறவு  பேணிய  மல்லிகை  ஜீவாவும்   ஜெயகாந்தனும்

- முருகபூபதி

தமிழ்நாட்டில்  கடலூரில்  மஞ்சகுப்பம்  என்ற  கிராமத்தில் தண்டபாணிப்பிள்ளjeyakanthan-ை  - மகாலட்சுமி  அம்மாள்  தம்பதியரின்  மகனாக  24-04-1934  ஆம்  திகதி   பிறந்த ஜெயகாந்தனுக்கு  இன்று  24-04-2015 ஆம்  திகதி  81   வயது.  ஆனால்,  வழக்கம்போன்று  தமது நண்பர்களுடன்   இந்த  நன்நாளைக் கொண்டாட வேண்டியவர்  சில நாட்களுக்கு   முன்னர்  கடந்த  08-04-2015  ஆம்  திகதி   மறைந்துவிட்டார்.  ஜெயகாந்தன்   சின்னவயதில்  தமது  ஊரைவிட்டு  சென்னைக்கு வந்தவர்.    ஐந்தாம்  வகுப்புவரையுமே   படித்தவர்.   இளம் பராயத்தில் பல   அன்றாடத் தொழில்களும்  செய்தவர்.   எனினும்  அவரை புடமிட்டு   வளர்த்தது  சென்னையிலிருந்த  கம்யூனிஸ்ட்  கட்சி காரியாலயம்.  அங்கிருந்த  தோழர்களின்  அரவணைப்பு  அவரை பின்னாளில்    ஆளுமையுள்ள  சக்தியாக  வளர்த்தது. தமது   12   வயதில்    சென்னை  வந்து  கம்யூனிஸ்ட்  கட்சியின்    கம்யூன்   வாழ்க்கைக்கு  தன்னை  அர்ப்பணித்துக்கொண்டு  படிப்படியாக   தன்னை  வளர்த்துக்கொண்டவர்.   சுயம்புவாக வாழ்ந்தமையினால்    சுதந்திரமாகவும்  இயங்கினார்.  மேலும் 24.04.15

_____________________________________________________________________________________________

துக்ளக் கேள்வி பதிலிலிருந்து

  • கே: விடுதலைப் புலிகள் மீண்டும் அணி சேர்ந்து, போர் நடத்த முயன்று வருவதாகவும், இதற்காக அவர்கள் வெளிநாடுகளில் வர்த்தகத்தின் மூலம் பணம் சேர்த்து வருவதாகவும் இலங்கை மந்திரி அச்சம் தெரிவித்துள்ளாரே! இதெல்லாம் இனி சாத்தியமா? இலங்கைத் தமிழ் மக்கள் இதற்குச் சம்மதிப்பார்களா?

ப: இலங்கைத் தமிழ் மக்களின் சம்மதம் பெற்றுத் தான் முன்பு புலிகள் தங்கள் அராஜகங்களை நிகழ்த்தி வந்தார்களா என்ன? வெளிநாடுகளில் புலிகளுக்கு நிறைய நிதி சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது என்று பல முன்னாள் புலிகள் கூறியிருக்கின்றனர். ஆயுதங்கள் பல மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இவற்றுக்கு எல்லாம் உரிமை கொண்டாடுகிற ‘தலைவர்கள்’, இதோ மீண்டும் வருகிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்தால்தான், அவர்களுடைய மோசடிகளைத் தொடர முடியும்; தமிழ்நாடு போன்ற இடங்களில் புலி ஆதரவுப் பிரசாரமும் தொடரும். இதைக் கூறுகிற அதே சமயத்தில், ஒருவேளை ஏதம்வது ஒரு சிலரால் மீண்டும் புலிகளின் தீவிரவாதச் செயல்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்படலாமோ என்ற எண்ணம் எனக்கும் இருக்கத்தான் செய்கிறது. இந்த மாதிரி விஷயங்களில் சம்பந்தப்பட்ட அரசுகள் தொடர்ந்து உஷார் நிலையில் இருப்பதுதான் நல்லது.

_____________________________________________________________________________________________

திருடிய குற்றச்சாட்டு; யாழ். ஊடகவியலாளர் கைதாகி விளக்கமறியல்

ஒரு இலட்ச ரூபா திருடினார் என்ற குற்றச்சாட்டில் சுயாதீன ஊடகவியலாளர் உட்பட பல்க லைக்கழக மாணவர்கள் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தின் முன்பாக குறித்த ஊடகவியலாளர் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் இருந்த நபர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் அவரின் கைப்பையில் இருந்த 1 இலட்சம் ரூபா பணத்தினை திருடினார்கள் என்ற குற்றச்சாட்டில் ஊடகவியலாளர் உட்பட பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் யாழ். பொலிஸாரினால் நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் உட்பட பல்கலைக்கழக மாணவர்கள் மூவரும் யாழ். சிறுகுற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி பொ. சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

_____________________________________________________________________________________________

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளா அல்லது விடுதலைப் போராளிகளா

அமெரிக்கா விடுதலைப் புலிகள் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களிltte logoன் பட்டியலில் 1997ம் ஆண்டு அறிவித்திருந்தது. அதாவது சிறிலங்கா விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கு முன்னதாகவே அமெரிக்கா புலிகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக முதன்முதலில் இந்தியாதான் பிரகடனப்படுத்தியிருந்தது. இந்தியாவின் முன்நாள் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தார்கள் என்று குற்றம் சுமத்தி விடுதலைப் புலிகளை இந்தியா 1992ம் ஆண்டு தடை செய்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா விடுதலைப் புலிகள் அமைப்பை சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் 1997ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் திகதி இணைத்துக் கொண்டது. (அமெரிக்கா விடுதலைப் புலிகள் அமைப்பை விஷேட சர்வதேச பயங்கரவாதிகள் அமைப்பாக (Specially Designated Global Terrorist) 2.11.2001 ல் பிரகடனம் செய்து தடை செய்துள்ளது) 1998ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளை தடை செய்தது. (இந்தத் தடையை புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 2002 செப்டெம்பர் 4ம் திகதி நீக்கிய போதும், 2009ம் ஆண்டு ஜனவரி 7ம் திகதி மீண்டும் புலிகள் மீதான தடையை நடைமுறைப்படுத்தியது) மேலும் 24.04.15

_____________________________________________________________________________________________

வரவேண்டாம் என்று சொல்லியும் வந்தான்

'எனது சகோதரன் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருக்கும் போது, அவரைத் தொடர்புகொண்டு நான் கதைத்தேன். அப்போது, இலங்கைக்கு மீண்டும் வர வேண்டாம், அவ்வாறு வந்தால் கைது செய்வார்கள் என்று நான் அறிவுறை கூறினேன்' என்று முன்னாள் ஜனாதிபதியும் பசில் ராஜபக்ஷவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இருப்பினும், 'நான் களவு செய்யவில்லை. நான் வராமளிருப்பது மஹிந்த அண்ணான உங்களுக்கு அவமானம். அதனால் நான் இலங்கைக்கு வருவேன்' என்று அவர் எனக்கு பதிலளித்தான். ஆனால், நான் அவனிடம் சொன்னது போலவே நடந்தேறிவிட்டது' என்று மஹிந்த கூறினார். 'இருப்பினும் பரவாயில்லை. நானும் 3 மாதங்கள் சிறையில் இருந்தவன் தான். நாடாளுமன்ற உறுப்பினரொருவர் ஓரிரு மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து வந்தால் தவறில்லை' என்றும் மஹிந்த ராஜபக்ஷ தனது சகோதரன் தொடர்பில், மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது குறிப்பிட்டார்.

_____________________________________________________________________________________________

சாட்சியமளிக்க கோட்டாவுக்கு 90 நாள் அவகாசம்

இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த Gotabaya-Rமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு உரிய ஆவணங்களுடன் சாட்சியமளிப்பதற்கு மேலும் 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் மற்றும் அவன்ட் கார்ட் பாதுகாப்பு சேவை நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து சாட்சியமளிப்பதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய நேற்றுக் காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு சமுகமளித்திருந்தார். கோத்தபாய விசாரணைக்கு அழைக்கப்பட்டமைக்கு எதிராக ஆணைக்குழு முன்னிலையில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள் வதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. பிவித்துரு ஹெல உறுமய இதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டிருந்தபோதும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு எதிராக பொலிஸார் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவைப் பெற்றிருந்தனர். இருந்தபோதும் நேற்றுக் காலை ஆணைக்குழுவை சுற்றி பெரும் எண்ணிக்கையிலான கலகம் அடக்கும் பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். இது மாத்திரமன்றி வீதித் தடைகளும், தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனமும் பொலிஸாரால் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட போதும். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தனது சட்டத் தரணிகள் சகிதம் ஆணைக்குழுவிற்கு சமுகமளித்தார். கோத்தாவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்த்தன, டலஸ் அழகப்பெரும, உதித்த லொக்கு பண்டார எம்.பி, மேல்மாகாணசபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்பன்பில, பொதுபலசேனாவின் செயலாளர் ஜானசார தேரர் உள்ளிட்ட பலர் அடங்கியிருந்தனர். குற்றச்சாட்டுக்கள் குறித்து உரிய ஆவணங்களுடன் சாட்சியமளிக்க ஆணைக்குழு 90 நாட்கள் காலஅவகாசம் வழங்கியிருப்பதாக அவருடைய சட்டத்தரணி தெரிவித்தார்.

_____________________________________________________________________________________________

கொஸ்லந்தை இன்னும் அழுகிறது

- கமெலியா நாதானியேல்

மீரியபத்தை கொஸ்லந்த பேரழிவு நடந்து ஆறு மாதங்களாகி விட்டன, koslandaஅங்கு ஒரு ராட்சச மண்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கு மேற்பட்ட மக்களின் உயிர் காவு கொள்ளப்பட்டது, அங்கு அவர்கள் உயிரோடு மண்ணில் புதையுண்டதுடன் ஆயிரக் கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டதுடன்,அவர்களில் சிலர் இன்னும் தற்காலிக முகாம்களிலேயே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் அநேகர் தாங்கள் அணிந்திருந்த உடைகளைத் தவிர தங்களிடம் இருந்த அனைத்துப் பொருட்களையும் இழந்திருக்கிறார்கள், நம்பிக்கையின் காட்சி கண்ணுக்கு எட்டாததால் அவர்களின் சங்கடங்கள் இன்னும் தொடர்கதையாகவே உள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு புத்தாண்டு உதயமாகியுள்ள போதிலும், எல்லாவற்றையும் இழந்துவிட்ட இந்த மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பது, தங்கள் தலைக்கு மேல் ஒரு கூரை அமையும் அங்கு சீரழிந்த தங்கள் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பலாம் என்கிற உறுதியான நம்பிக்கையை புதுவருடம் கொண்டு வரும் என்கிற நம்பிக்கைதான். அம்பிட்டிய மாகந்த தற்காலிக முகாமில் 300 க்கு மேற்பட்ட மக்கள் 10 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட 55 அறைகளில் நெருக்கியடித்து வாழும்படி நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளார்கள். சிறு பிள்ளைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் உதவியற்றவாகளாய் இருக்கிறார்கள் மற்றும் தங்கள் பிள்ளைகளின் அடிப்படை தேவைகளைக்கூட வழங்குவதற்கு வசதியற்ற நிலையில் பரிதவிக்கிறார்கள்.  மேலும் 23.04.15

_____________________________________________________________________________________________

100 நாட்களின் அஸ்திரத்துக்கும் ஆப்பு

- அழகன் கனகராஜ்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் Ranil-Maithri-Chandrila-Fonseka-1100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கடைசி உறுதிமொழியும் புஸ்வாணமாகிவிட்டதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், 100 நாட்கள் வேலைத்திட்டம் 2015ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி ஆரம்பமானது. அதன் 100 ஆவது நாள் நாளை வியாழக்கிழமையுடன் (23ஆம் திகதி) நிறைவடைகின்றது. இந்த நூறு நாட்களுக்குள் செய்து முடிப்பதாக புதிய அரசாங்கத்தினால் 24 உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. அந்த உறுதி மொழிகளில் பல நிறைவேற்றப்படாமைலேயே கிடப்பில் உள்ளன. இந்நிலையில், புதிய அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளில் மிகவும் முக்கியமானதாக பேசப்பட்டது, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலமாகும். அந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் கடும் பிரயத்தனம் செய்தபோதிலும் அதனை 100 நாட்களுக்குள் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. மேலும் 23.04.15

_____________________________________________________________________________________________

மெல்பன்  பாரதி பள்ளியின் 20  ஆவது  ஆண்டு நிறைவு விழா

  குழந்தைகளின் உளவியலை  புரிந்துகொண்டு இயங்கிவரும் கல்விச்சாலை

   எதிர்வரும்  26  ஆம் திகதி   ஞாயிறன்று    மெல்பனில் தமிழ்ச்சிறார்களின்    ஒன்றுகூடல்

                                              முருகபூபதி

பல  படிமுறை வளர்ச்சிகளின் ஊடாக வளர்ந்தோங்கும் Bharathi Academy Dandenong Campusஇன்றைய கல்வி  முறையானது ஊருக்கு ஊர் தேசங்களுக்குத் தேசம் மாறுபட்டிருந்தாலும் - தொடக்கப்பள்ளி,   ஆரம்பப்பள்ளி,  முன்பள்ளி, கனிஷ்ட   பாடசாலை,   உயர்தரப்பாடசாலை,   கல்லூரி, பல்கலைக்கழகம்   என்று பிள்ளைகளின் வயது - கல்வி - வளர்ச்சிக்கு ஏற்ப மாறிக்கொண்டிருப்பது. முன்னைய  காலங்களில் தமிழ் சமூகத்தில் திண்ணைப்பள்ளிக்கூடங்களும் குருகுல கல்வி   முறையும்  நடைமுறையில்  இருந்தன.   பின்னாளில் பல்வேறு மாற்றங்களுடன் பாடசாலைகள் அரசுடமையானதுடன் தனியார் பாடசாலைகளும் மதம் சார்ந்த கல்லூரிகளும் உருவாகின. இன்று   சர்வதேச பாடசாலைகள் உருவாகியிருக்கிறது. அவுஸ்திரேலியாவும்  பல்தேசிய கலாசார நாடாகவும் தமிழர்களின் புகலிட   நாடாகவும் இருக்கின்றமையினால், எமது பிள்ளைகள் தாய்மொழி   தமிழையும் பிறமொழிகளையும் கற்பதற்கும் வாய்ப்பு

முன்னைய பதிவுகள்

pen-and-mouse

yaarl oli

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள்
துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்

LTTE_Chambers1