தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் நிலைப்பாடு இராஜதந்திரமா, அல்லது ஓர் சரணாகதி அரசியலா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் நிலைப்பாடு இராஜதந்திரமா, அல்லது ஓர் சரணாகதி அரசியலா என்ற கேள்வியினை எழுப்பி உள்ளது என வடக்கு மாகாணthavarasa (1) சபையின் முன்னாள்  எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களின் நலன்களினை முன்னிலைப்படுத்தி தமிழ்தேசியக் கூட்டமைப்பு  செயற்படுவதே இன்றைய காலத்தின் தேவையாக அமைகின்றது.

தற்போது இலங்கையின் அரசைத் தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது. 15 பாராளுமன்ற உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டுள்ள தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைத்திருக்கும் இவ் வாய்ப்பானது சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களிற்குக் கிடைத்திருக்கும் ஓர் அரிய சந்தர்ப்பம் ஆகும்.

இச் சந்தர்ப்பத்தைச் தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சாதுரியமாகப் பாவித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவர்களின் தலையாய கடமை ஆகும்.

ஆனால் இக் காலகட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் நிலைப்பாடு இராஜதந்திரமா, அல்லது ஓர் சரணாகதி அரசியலா என்ற கேள்வியினை எழுப்பி உள்ளது.

நேற்யை தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களினால் கையெழுத்திடப்பட்டு ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட கடிதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச்  சேரந்த பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் கடந்த 26 ஆம் திகதிக்கு முன்னர் இருந்த ஐ.தே.மு  தலைமையிலான அரசாங்கத்தினை மீளமைப்பதற்கு ஆதரவளிப்போம் என்பதோடு ஐ.தே.முன்னணியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினைப் பெறக் கூடியவர் என நீங்கள் கருதும் நபரைப் பிரதமமந்திரியாக நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அவர்களின் செயற்பாடு இதுதான் முதற் தடவை அல்ல. கடந்த ஏப்ரல் மாதத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இதே போல ஓர் சந்தர்ப்பம் கிடைத்தது. அச் சந்தர்ப்பத்திலும் கூட அது தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்திச் செயற்பட்டதா என்பதும் கேள்விக் குறியாகவே இருக்கின்றது.

இச் சூழலைப் பாவித்து எமது அடிப்படை அரசியற் பிரச்சினையைதத் தீர்ப்பதற்கான ஓர் அரசியலமைப்பு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான உறுதிப்பாட்டினை  மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Theneehead-1

   Vol:17                                                                                                                               01.12.2018