Theneehead-1

Vol: 14                                                                                                                                                02.01.2017

ஸ்ரீலங்காவின் இனவாத அரசியல் காரணமாக 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மரணம் மற்றும் அழிவு ஏற்பட்டுள்ளது

                                                லத்தீப் பாரூக்

இனவாத அரசியல் 200 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மரணங்கள் மற்றும் farookஅழிவுகளை ஏற்படுத்தியுள்ளது: இருந்தும் இனவாத அரக்கன் அதன் அசிங்கமான தலையை உயர்த்த ஆரம்பித்துள்ளான், மற்றும் நாடும் அநேக மக்களும் அது இன்னும் மற்றொரு அழிவை நோக்;கி முன்னேறுவதாக அச்சம் அடைந்துள்ளார்கள்.

இருநூறு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது விசேடமாக சிறந்த இயற்கைச் செல்வங்களால் ஆசீர்வதிக்கப்பட்டதும் மற்றும் படிப்பறிவுள்ள மக்களைக் கொண்டதுமான ஸ்ரீலங்கா போன்ற சிறிய ஒரு நாட்டுக்கு மிகப் பெரிய ஒரு தொகைப் பணமாகும். ஒரு டொலர் ரூபா 145 என்ற விகிதத்தில் அதை மாற்றீடு செய்தால்கூட அது கிட்டத்தட்ட 29,000 மில்லியன் ரூபாவுக்கு சமமாகும்.

இந்த தேசிய செல்வம், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தவும், உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய, தொழில் மற்றும் வியாபார நிறுவனங்களை அமைக்க, தொழில்களை உருவாக்க, வறுமையை ஒழித்து மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பயன்படுத்தப்பட்டிருக்குமானால் இந்த நாடு எல்லா வகையிலும் இன்று சொர்க்கபுரியாக மாறியிருக்கும். அது 1948ல் எங்கள் நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்ததைப் போல மூன்றாம் உலக நாடுகளுக்கு ஒரு பிரகாசமான உதாரணமாகத் திகழ்ந்திருக்கும்.

துரதிருஷ்டவசமாக இந்த பெருந்தொகையான பணம், எல்லா தரப்பையும் சேர்ந்த பிரதான பகுதி அரசியல் கட்சிகளின் அழிவுப்பாதையிலான இனவாத அரசியலின் நேரடிப் பின்விளைவு காரணமாக ஏற்பட்ட தேவையற்ற ஒரு இனப்போராட்டத்திற்காக வீணடிக்கப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு செயலர் மற்றும் வெளிநாட்டு செயலர் பதவிகளை வகித்த சிவசங்கர் மேனன் தனது “தெரிவுகள்: இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையை உருவாக்;குவதின் உட்புறம்” என்கிற தனது புத்தகத்தில் வெளிப்படுத்தியிருப்பது, மூன்று தசாப்பதங்கள் நீண்ட இந்த போருக்கான செலவின் மதிப்பீடு சுமார் 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று. இந்த மதிப்பீட்டில், ஒரு காலத்தில் துரித வளர்ச்சியடைந்து வந்ததும் மற்றும் தெற்காசியாவில் மிகவும் திறந்த பொருளாதாரத்தை கொண்டிருந்ததுமான ஸ்ரீலங்காவின் “வாய்ப்புச் செலவுகள்”  உள்ளடக்கப்படவில்லை.

அவரது கூற்றப்படி, 1983 மற்றும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட மரணங்கள் 80,000 முதல் 100,000 வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது, இதில் தங்கள் உயிர்களை பலி கொடுத்த பொதுமக்கள் மற்றும் இருதரப்பு போர்வீரர்கள் உட்படுவார்கள். அவர்களில் 30,000 முதல் 50,000 வரையானவர்கள்  பொதுமக்கள், 27,693 எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள், 23,790 ஸ்ரீலங்கா இராணுவ வீரர்கள் மற்றும் 1,155 இந்திய அமைதி காக்கும் படை (ஐபிகேஎப்) துருப்புக்கள் ஆவர்.

இறுதிக்கட்ட போர் 300,000 ;சற்று அதிகமான அகதிகள் அல்லது உள்ளக இடம் பெயர்ந்தவர்களை (ஐடிபி) உருவாக்கியது. அந்தப் போர் மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மகாணங்களில் 1.6 மில்லியன் நிலக்கண்ணி வெடிகளையும் விட்டுச் சென்றது.

ஆனால் போரின் உண்மையான இழப்பு ஸ்ரீலங்காவின் ஒட்டு மொத்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கே, எல்.ரீ.ரீ.ஈ மற்றும் சிங்கள பேரினவாதிகள் இதற்கு சமமாக பொறுப்பு ஏற்கவேண்டும் எனக்குறிப்பிட்டுள்ள மேனன், அநேகமாக நாட்டின் ஒவ்வாரு சாத்தியமான பகுதியிலும் ஏற்பட்ட இழப்பு மற்றும் அழிவுகளைப்பற்றிய முழு விபரங்களையும் அதில் தந்துள்ளார்.

இராணுவ ரீதியாக 2009 மேயில் எல்.ரீ.ரீ.ஈ தோற்கடிக்கப்பட்டது.bodu palasena

மரணம் மற்றும் அழிவு என்பன நிச்சயமாக எந்த ஒருவரையும் பேரினவாதம் மற்றும் இனவாதம் என்கிற புற்றுநோயை பற்றி கவனம் சிந்த வைக்கும், கடந்தகால தவறுகளில் இருந்து பாடம் படிக்கவும் மற்றும் பிளவுபட்ட சமூகங்களை நல்லிணக்கப்படுத்தி அனைவருக்கும் ஏற்ற சிறந்த எதிர்காலத்தை நோக்கி முன்னேற வழிதேடவும் வைக்கும்.

நாட்டுக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஏற்பட்ட துரதிருஷ்டமாக மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் காயப்பட்டு உருக்குலைந்த தமிழ் மக்களை கைவிட்டது. அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவர் தனது கவனத்தை தீவில் ஆதரவற்ற, குரல் கொடுக்க முடியாத, எற்கனவே போரில் எண்ணற்ற இடர்களை அனுபவித்த முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பினார். உண்மையில் பேரினவாதிகள் எப்போதும் கோரிக்கை விடுப்பது: “முதலில் நாங்கள் தமிழர்களை ஒரு கை பார்ப்போம் மற்றும் பின்னர் முஸ்லிம்களை கவனிப்போம்” என்று.

அதன்படி மகிமை பொருந்திய ராஜபக்ஸ அரசாங்கம் இருந்த நேரத்தில் பேரழிவுக்கு உட்பட்டிருந்த முஸ்லிம்கள் மீது தகுந்த காரணம் எதுவுமின்றி முன்னெப்போதுமில்லாத வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. உலகத்தின் ஒவ்வொரு மூலையையும் துடைத்துவிட்டிருந்த உலகளாவிய பொருளாதார மாற்றங்களின் கீழ், உலகம் முன்னேறிக் கொண்டிருந்த வேளையில், இங்கு இந்த தீவில் சில நூற்றுக்கணக்கான சிங்கள இனவாதிகள் நாட்டை இருண்ட யுகத்துக்கு பின்னோக்கி எடுத்துச் சென்றார்கள்.

முஸ்லிம் விரோத சிங்கள இனவாத அமைப்பான பொதுபல சேனா என்கிற அமைப்பு, மசூதிகள், மத பாடசாலைகள், முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிறுவனங்கள், அவர்களது பாரம்பரிய உடைகள்  என்பனவற்றை தாக்கியது, சுருக்கமாகச் சொல்வதானால் ஒரு சமூகமாக அவர்கள் உயிர்வாழ்வதையே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியபோது, ராஜபக்ஸ அரசாங்கம் அதைக் கண்டும் காணாததுபோல பாராமுகமாக இருந்தது.

ராஜபக்ஸ அரசாங்கம் அத்தனைக்கு கீழாக வளைந்து கொடுத்ததுடன், அதற்கும் மேலாக பொதுபல சேனா, இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது போர் பிரகடனம் செய்வதற்காக, மியான்மாரில் முஸ்லிம்களை கசாப்பு செய்த தண்டனைக்குரிய குற்றவாளியான அஸ்வின் விராத்துவை, வழக்கமாக நாட்டின் தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் செங்கம்பள வரபேற்பை அளித்து வரவேற்கவும் அனுமதி வழங்கியது.

ராஜபக்ஸவின் ஊழலும், குற்றமயமும் மற்றும் வணிகமயமுமான சர்வாதிகார ஆட்சியில், சட்டம் மற்றும் ஒழுங்கு கிட்டத்தட்ட சீர்குலைந்த நிலைக்கு ஆளானதுடன், பொருளாதாரம் உற்சாகமின்றித் திணறிக் கொண்டிருந்தது, மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தார்கள், மொத்தத்தில் அங்கு ஒரு அச்சம் நிறைந்த சூழலே உருவாகியிருந்தது.

அத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015, ஜனவரி 8ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் அச்சமூட்டிய மகிந்த ராஜபக்ஸவை தோற்கடித்தார்.

ஜனாதிபதி சிறிசேன, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவேன், சுதந்திரத்தை உறுதிப் படுத்துவேன், சமூக நல்லிணக்கத்தை நோக்கி முன்னகர்வதுடன் குற்றம் மற்றும் ஊழல் இல்லாமல் நாட்டை சுத்தப்படுத்துவேன் என்கிற சுலோகத்துடன் பதவிக்கு வந்ததால் நாட்டின் சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களிடையே பெரிய நம்பிக்கை உருவானது. அதன்படி ஓர் இரவுக்குள் நிலமை மாறியது. எல்லா இடத்திலும் ஒரு புதிய நம்பிக்கை பிறந்தது. அச்சம் இல்லாத புதிய மனநிலையில் இருந்த மக்கள், மிகவும் சரியான முறையில், தாங்கள் ஒரு அமைதியான சிறந்த எதிர்காலத்தை அடையப்போகிறோம் என எதிர்பார்த்தார்கள்.

எனினும் ஒவ்வொருவருக்கும் அந்த அதிர்ச்சிதரும் உண்மையை புரிந்துகொள்ள அதிக காலம் எடுக்கவில்லை.

ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா ஆகியோர் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதால், இரண்டு வருடங்களுக்குள் நாங்கள் திரும்பவும் பழைய இடத்துக்கே வந்துள்ளோம். பெரியளவு ஊழல் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு தண்டிக்கப்படாமல் அவர்கள் சுதந்திரமாகத் திரிகிறார்கள், அரசாங்கம் அவர்களைப் பாதுகாத்து காப்பதைப் போலத் தோன்றுகிறது.

இவை அனைத்துக்கும் மேலாக அதே பழைய பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞ}னசார தேரரினால் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுத்தனமான வன்முறை பிரச்சாரங்கள் மீண்டும் எழுந்துள்ளன. பதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் அவர் அடங்கி இருந்தது, தனது அசிங்கமான இனவாத தலையை மீண்டும் உயர்த்தி முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர் மனங்களில் நஞ்சை விதைத்து தனது உள்ளுர் மற்றும் வெளிநாட்டு எஜமான்களின் நிகழ்ச்சி நிரலின்படி ஜூலை 83 போன்று  ஒரு முஸ்லிம் விரோத கலவரத்தை உருவாக்கும்  எண்ணத்துடன் மட்டுமே. இயல்பான சூழ்நிலையின் கீழ் அங்கு ஒரு சட்டத்தின் ஆட்சி இருக்குமானால், அவரது வெறுப்பு பிரச்சாரங்களுக்கும் மற்றும்  அழுத்கம, பேருவல, தர்கா நகர், மற்றும் பேருவல ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அவருக்கு இருந்த பங்கிற்கும் அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இதிலுள்ள சோகம் என்னவென்றால் அவரது தீவிர ஆபத்தான அழிவுப் பாதைக்கும் மற்றும் அவரது சட்ட விரோதமான நடவடிக்கைகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் மறுத்து வருவதுதான். அதற்கு மாறாக அவர் பாதுகாக்கப் படுகிறார் மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ அவர்களே அரசாங்கம் அவரைக் கைது செய்ய முடியாது எனக்கூறுகிறார். அமைச்சர் விஜயதாஸ பொதுபலசேனாவின் பாஷையில் சிறுபான்மையினருக்கு விசேடமாக முஸ்லிம்களை பகைத்துப் பேசத் தொடங்கியிருப்பது, நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.bbs

அப்படியான ஒரு அரசில் சூழ்நிலையில் ஜனாதிபதி சிறிசேன மதங்களின் தலைவர்களுக்காக கூட்டிய ஒரு கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டிருக்கிறார். மக்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள். அவாகளது நம்பிக்கைகள் சிதறிவிட்டன. எந்தப் பக்கம் திரும்புவது என்று தெரியாத நிலையில் அவர்கள் தவிக்கிறார்கள்.

இந்த முஸ்லிம் விரோத பிரச்சாரம், தற்பொழுது நிலவும் உள்ளுர் மற்றும் உலக அரசியல் சூழ்நிலையின் பார்வையில் பல தசாப்தங்கள் மீள்வதற்கு சாத்தியமற்ற ஒரு கொலைக் களத்திற்குள் இந்த தீவினைத் தள்ளிவிடுவதற்கான சகல மூலகங்களையும் தன்னுள் கொண்டுள்ளது.

வழக்கமாக எழும் கேள்விகள், யார் இந்த இனவாதிகள்? அவாகள் எங்கிருந்து தோன்றுகிறார்கள்? யார் அவர்களுக்கு நிதி உதவி வழங்குகிறார்கள்? ஏன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை?  அரசாங்கம் முன்வந்து சாத்தியமான மற்றொரு இனப்படுகொலையில் இருந்து நாட்டைக் காப்பாற்ற இன்னும் நேரம் வரவில்லையா? என்பனதான். இதுவரை முஸ்லிம் சமூகம்; மற்றும் பிரதான நீரோட்டத்திலுள்ள சிங்கள சமூகம் என்பனவற்றில் இருந்து இந்த சமூக விரோதச் செயல்களை நிறுத்தும்படி விடுக்கப்பட்ட அனைத்து முறையீடுகளும் செவிடன் காதில் சங்கு ஊதியதைப் போலாகிவிட்டது.

இன்று இந்த இனவெறி கிளப்பும் கும்பல் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டுள்ளார்கள். அவர்கள் பகிரங்கமாக சட்டத்தை மீறுகிறார்கள், அரசாங்கம் தங்கள் நிகழ்ச்சித் திட்டத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறி,முஸ்லிம்களை தொந்தரவு செய்து இழிவு படுத்துகிறார்கள்.

இந்த வெறுப்பும் மற்றும் அச்சமும் நிலவும் சூழலில், முஸ்லிம்கள் முற்றுகையின் கீழ் வாழ்கிறார்கள். அவர்கள் தாங்கள் அரசாங்கத்தால் கைவிடப்பட்டு விட்டதாகவும் மற்றும் தங்கள் சொந்த அரசியல்வாதிகளே தங்களைக் காட்டிக் கொடுத்துவிட்டதாகவும் உணர்கிறார்கள். இந்த இன மத பாசிசத்தைப் பற்றி அரசாங்கத்துக்கு அவர்கள் சமாப்பித்த விண்ணப்பம் செவிடன் காதில் விழுந்தவையாகவே போய்விட்டன. முஸ்லிம்கள் இப்பொழுது தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அரசாங்கத்தை விட்டு விலகி முஸ்லிம்களை அவமானப் படுத்துவதை நிறுத்தும்படி முறையிட்டு வருகிறார்கள்.

மே 2009ல் யுத்தம் முடிவடைந்ததில் இருந்து இடம்பெற்று வரும் முன்னேற்றங்களை ஆராயும்போது, எந்த ஒரு பாடமும் கற்றுக்கொள்ளப் படவில்லை என்கிற முடிவுக்குத்தான் ஒருவரால் வர முடியும், மற்றும் நாடு மற்றொரு பேரழிவினை நோக்கி முன்னேறுகிறது என்று பலரும் அச்சப்படுகிறார்கள்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
 

dantv