Theneehead-1

Vol: 14                                                                                                                                                03.01.2017

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் வேலைவாய்ப்பு  கோரி ஒன்றுதிரண்ட முன்னாள் போராளிகள்

 சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் திங்கள் (02.01.2017) காலை கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள  exltteபடையினரின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு முன்னால்  ஒன்றுதிரண்டனர்.

காலை 10.30 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களுமாகத் திரண்ட விடுதலைப் புலிகளின் முன்னாள்  போராளிகள்,  தாங்கள் புனா்வாழ்வுப்  பெற்று வெளியில் வந்த காலம் முதல் நிரந்தர தொழில் இன்றி பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் வாழ்ந்து வருவதாகவும், புனா்வாழ்வு  பெற்றக்  காலத்தில் தங்களுக்கு பண்ணைகளில் வேலை செய்யும் பயிற்சியே வழங்கப்பட்டது என்றும் எனவே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பண்ணைத்திட்ட வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரிநின்றனா்.

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு புதிதாக ஆட்கள் எடுப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது என்று தெரித்த போராளிகள், அதனடிப்படையில்,  தேசிய அடையாள அட்டை மற்றும் புனா் வாழ்வு  பெற்று விடுதலையான கடிதம் ஆகியவற்றுடன் வருமாறு தகவல் வெளிவந்தது. அதற்காகவே இங்கு வந்திருகின்றோம்.  எனவே  எங்களுக்கு வேலைவாய்ப்பை தாருங்கள் என சிவில் பாதுகாப்புத் திணைக்கள  கிளிநொச்சிக்கான  கட்டளை அதிகாரி  மேஜர்  சாகர வீரசிங்கவிடம் கோரிநின்றனா்.

ஆரம்பத்தில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் வேலைவாய்ப்புக்கு ஆட்கள்  உள்வாங்கப்பட்ட போது பெரும்பாலான முன்னாள் போராளிகள் தடுப்பில் இருந்து வெளிவரவில்லை. வெளிவந்தவா்களில் பலா் அப்போது இணைந்துகொள்வதில் விருப்பம் தெரிவிக்கவும் இல்லை.காரணம்,   புதிதாக படையினருக்கு ஆட்கள் சேர்க்கின்றாா்கள் என்று அப்போது தமிழ் ஊடகங்களிலும் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளினாலும் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதனால் நாங்கள் அப்போது அந்த வேலை வாய்ப்பில் இணைந்து கொள்ளவில்லை.  ஆனால் இப்போதுதான் நாங்கள் பாா்க்கின்றோம், மாதாந்தம் முப்பதாயிரம் ரூபாவுக்கு மேலதிகமான சம்பளத்துடன் பண்ணைகளில் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு பலர் பயன் பெற்று வருகின்றமையை.   இதன் மூலம் அந்தக் குடும்பங்கள் நிம்மதியாக  வாழ்கின்றன. எனவே  அ்வவாறானதொரு நிம்மதியான வாழ்க்கையை  ஏனைய முன்னாள் போராளிகளும் பெற்றுக்கொள்ள எங்களுக்கும்  சexltte-1ிவில் போதுகாப்புத் திணைக்களத்தில் வேலை தாருங்கள் எனத் தெரிவித்தனா்.

மேலும்  வெளியில் நாங்கள் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு கோரினால் முன்னாள் போராளிகளுக்குதானே சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் வேலை இருக்கிறது  என்கிறார்கள்.  ஆனால் இங்கு முன்னாள் போராளிகளான எங்ளுக்கு வேலைவாய்ப்பு தருவதற்கு இப்போது முடியாது என்கிறீர்கள்  எனவும் முன்னாள்  போராளிகள் குறிப்பிட்டனா். எங்களுடைய கோரிக்கையை அரசியல் தலைவர்களிடத்தில் எல்லாம் விடுத்தும் எந்த விதமான பதில்களும் எமக்குக் கிடைக்கவில்லை. எனவேதான் இன்று இங்கே எல்லோருமாகக் கூடியிருக்கிறோம் என்றனர்.

இது தொடா்பில் சிவில் பாதுகாப்புத் திணைக்கள  கிளிநொச்சி கட்டளை அதிகாரி  மேஜர்  சாகர வீரசிங்க கருத்து தெரிவித்த போது

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்குப் புதிதாக ஆட்கள் எடுப்பதாக வெளியான தவறான தகவலை அடிப்படையாக கொண்டு நூற்றுக்கணக்கான முன்னாள்  போராளிகள்  ஒன்று கூடியுள்ளனா். சிவில்  பாதுகாப்புத் திணைக்களத்தைப்  பொறுத்தவரை தற்போதைக்கு   புதிதாக ஆட்கள் எவரையும் உள்வாங்கும்  நிலையில் இல்லை. இந்த முன்னாள் போராளிகளைப் பாா்க்கின்ற  போது கவலையாகவே இருக்கின்றது. ஆனால் இந்த விடயத்தில் எங்களால் இப்போது எதுவும்  செய்ய முடியாது. கொழும்பில் உயர் மட்டத்தில் உள்ள உயரதிகாரிகளால் தீர்மானிக்கப்படுகின்ற விடயம் இது எனவும்  குறிப்பிட்டாா்.

இதனையடுத்து அங்கிருந்து வெளியேறிய முன்னாள் போராளிகள் இரணைமடுச் சந்தியில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் வேலைவாய்ப்பு  கோரி கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

இதன் போது சில பெண் முன்னாள் போராளிகள் குழந்தைகளுடன்  வேலைவாய்ப்பு கோரி காத்திருந்த பரிதாபமான சம்பவங்களும் இடம்பெற்றது.

இதேவேளை 170 போ் கையொப்பம் இட்டு  வேலைவாய்ப்பு கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை  கிளிநொச்சி அரசாங்க அதிபா் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளித்துள்ளனா

exltte-2
exltte-3
exltte-4
exltte-5
dantv