பொறியும் அரச கட்டமைப்பு மாற்றம் கோரும் வரலாறு!

சிறிதரன் (சுகு)

(2)

 

யுத்தத்தை காரணம் காட்டி தமது அரசியலை நடத்தி வந்த சக்திகள் யுத்தத்திற்கு பிந்திய ஆண்டுகளில் மக்களின் ஜீவாதார நலன்களை முகம் கொடுக்கமுடியாத நிலைக்கு சென்Sritharan-eprlf1றடைந்தன. வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் இன்றளவில் 16 வீதத்திற்கு அதிகமானது ராணுவ செலவினம். சமூகங்கள் தாமாக எழுந்து நிற்க கூடிய விதமாக வேலைவாய்ப்புக்களை உருவாக்கும்  சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமான ஊழலற்றதான குறைந்த பட்ச நீதி சமத்துவம் உள்ளதாக நிகழ்வுகள் அறிகுறிகள் காணப்படவில்லை.

மனித உரிமைகள் -ஜனநாயக கட்டமைப்புக்கள் -இன சமூகங்களின் சமத்துவம் சமூக நீதிக்கான செயற்பாடுகள் பேச்சளவில் மாத்திரம் தான். இந்த நாட்டின் பொருளாதாரத்தில் இன்றளவில் முதுகெலும்பாக இருக்கும் மலையக தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் நில உரிமை தொடர்பான விடயங்கள் மீது முடிவில்லாததொடர்ச்சியான அலட்சியம்.

அரசியலமைப்பில் இலங்கையின் பல்லினப்பாங்கை உறுதி செய்யும் விதமாக மாற்றங்களை செய்ய விருப்பமின்மை. அனைத்து இன சமூகங்களையும் உள்வாங்கும் பக்குவமின்மை, மதநிறுவனங்களின் நீதியற்ற கோரிக்கைகளுக்கு செவி மடுத்தல் பயங்கரவாத தடைச்சட்டங்கள் நீடித்து நிலவுதல்.அதிகார துஸ்பிரயோகத்ததுக்கு பழக்கப்பட்டநிர்வாக யந்திரம்உத்தரவுக்கு கீழ்படிந்து செயற்பட வேண்டிய படைத்துறையும்  சட்டமும் ஒழுங்கும் இதர நிர்வாக யந்திரம் என்பன அரசியல் சமூக விடயங்களில் தலையிடுவது போன்ற நிகழ்வுகள்.

இவையெல்லாம் இந்த நாட்டின் 22 மில்லியன் மக்களின் நலன்களை விட்டு அந்நியப்பட்டு மக்களின் பேரிலான இலங்கையின் ஆளும் தரப்புக்கள் வேறொரு கிரகத்தில் சஞ்சரிப்பது போன்ற நிலை இன்று  உருவாகி உள்ளது.

 இன்றைய காப்பிரேட்உலகம் வியாபிக்கும்  அதேவேளை அதன் அக்கம்பக்கமாக  அதிதீவர தேசியவாத சர்வாதிகார அரசுகளும் உருவாகின்றன.மத்திய கிழக்கு மேற்காசியா மனித குல வாழ்வும் வழமும் சூறையாடப்பட்டு உருக்குலைக்கப்பட்டன.மீண்டெழ முடியாதளவிற்கு வாழ்வு அலங்கோலப்படுத்தப்பட்டிருக்கிறது. வறுமை -மத்திய கிழக்கு பேரழிவுகள் மக்கள் கண்டம் விட்டு கண்டம் தாண்டுதல-; வேலை வாய்ப்புக்களை தேடிச் செல்லுதல்  ஐரோப்பா வட அமெரிக்காவில் அதிதீவிர தேசியவாத  சக்திகளை வலுப்படுத்தியுள்ளது.பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகியது. மற்றும் அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம் இன் விபரீத அரசியல்.உலகைச் சூறையாடிக் கொண்டும் தம்மை சுற்றி வேலி அடைத்துக் கொண்டும் வாழலாம் என்ற கனவு .

 2 ஆம் உலகமகாயுத்தகால  பாசிச சாயலுடன் கருத்துக்களுடன்  இயக்கங்கள் தலையெடுத்துள்ளன. நவ தாராளவாத உலகில் தேசியவாத -மதவாத அரசுகள் முதலாளித்துவ ஜனநாயகத்தின் எச்ச சொச்சங்களையும் நீர்த்துப்போக செய்வதையும் காண முடியும். ஆனாலும் சமூக ஜனநாயகத்திற்கான இயக்கங்கள் எழுந்து கொண்டு தான் இருக்கின்றன.நவ தாராளவாத உலகம் மக்கள் மீது கரிசனை இல்லாத அதிகார வர்க்க நலன் சார்ந்த அரசுகளை கீழை மேலைத் தேசங்களில் உருவாக்கி உள்ளது. இந்த காப்பிரேட் சார் அரசுகள்  மனித முகமற்றவை. சமூக பாதுகாப்பு சேவைத்துறைகளை வெறுப்பவை. இவை அனைத்து சமூக விடயங்களையும் நிதிசார் உறவுகளாக பணப்பட்டுவாடாவாக கருதுபவை.நிறவாதம் மதவாதம் மேலாதிக்க மற்றும் குறுந்தேசியவாதம் இராணுவவாதம் எல்லாமே இதன் கருவிகள் 

 ஒரு நாடு என்னும் போது இலங்கைக்கும்  அது பொருந்தும். இந்த நவ தாராளவாத உலகத்திலிருந்து இந்த நாட்டை இன்றைய உலக சூழ்நிலையில் பிரித்துப்பார்க்க முடியாது 1978 இற்கு பிந்திய மத்தியப்படுத்தப்பட்ட அரசு முறையின் கீழ் 40 வது ஆண்டை அடைந்து விட்ட நாம் மரணங்களையும்- இடம்பெயர்வுகளையும-; வறுமையையும-; அவலங்களையும் அறமற்ற ஊழல் நிறைந்த அரசியல் அதிகார வர்க்கத்தையுமே பார்த்திருக்கிறோம்.

அதிகார போதை தலைக்கேறும் போது மாகாணங்களின் அதிகாரங்கள் பொருட்படுத்தப்படுவதில்லை. திவிநெகும தொடர்பான முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவின் தீர்ப்பு இலங்கையில் இரண்டு சட்டவாக்க சபைகள் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தியது. ஆதற்காகவே பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான ஒருதலைபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவர் பதவியிலிருந்து தூக்கப்பட்டார். தற்போது மீண்டும் விசேட அதிகாரம் நீதித்துறை பாராளுமன்றத்திற்கிடையே கடுமையான உரசல்கள் ஏற்பட்டுள்ளன.இலங்கையில்விசேட அதிகாரம்- மத்தியில் அதிகார குவிப்பு என்பன

ஜனநாயகம்- சமூக பொருளாதார அபிவிருத்தி-இன சமூகங்களின் சமத்துவம் என்பவற்றிற்கு சவாலாகவே அமைந்துள்ளது என்பது நடைமுறை அனுபவமாகும்.பரஸ்பரம் அனுசரித்து இயங்குவதற்கான பொறிமுறைதேவைப்படுகிறது. ஜே.ஆரில் இருந்து மைத்திரி வரை சந்திரிகா ராஜபக்ச அடங்கலாக விசேட அதிகாரத்தின் சௌகரியத்தை அனுபவித்தவர்கள்.


ஜனாதிபதி பாராளுமன்றம் மாகாண சபை உள்ள+ராட்சி சபைகள் நெகிழ்வுத்தன்மையுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கான பொறிமுறைகள் அவசியப்படுகின்றன.அரசியல் அதிகாரம் இவ்வாறு அதீத ஏற்றத்தாழ்வுடன் அலைவுறும்; போது அதிகார நிர்வாக யந்திரத்திலும் அதிகார மமதையும் ஒன்றையொன்று செயற்படவிடாத தன்மையும் தான்தோன்றித்தனமும் அதிகரிக்கிறது.

இலங்கையின்மாகாண சபையுடனான அரசாங்க நடைமுறைகள் பிரதேச செயலக மட்டத்துடன் தொடர்பு பட்டதும் அதற்கு மேலேயும் கீழேயும் ஒருங்கிணைப்பில்லாமல் அந்தரத்தில் தொங்குகிறது.மாகாண முதல்வருக்கு மாவட்ட செயலகம் மீதோ அல்லது கிராம சேவகர் மீதோ எந்த அதிகாரமும் இல்லை.அதிகாரப்பகிர்வு தேவைப்பட்ட இன சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைத்துவங்கள் கூட கொழும்பு அரசியலில் தான் அதீத ஈடுபாடு கொண்டுள்ளன.அதிகாரப்பகிர்வு இவர்களின் பிரக்ஞையில் கிடையாது. சமூகங்களிடையே பெரும்படியாக நல்லுறவு நிலைநாட்டப்படவில்லை. பரஸ்பர சந்தேகங்கள் இனப்பதட்டத்துடனயே நாடு நகர்கிறது.

யுத்தத்திற்கு பிந்திய நாட்களில் இந்த நாடு படிப்பினைகளை எடுத்துக் கொண்டு முன் செல்வதற்கான வழிவகைகளுக்கு மாறாக அதே இனவாதப் பயணத்தையே மேற்கொண்டது.2015 ஜனவரியில் நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஆனால் இன்று நாட்டில் அரசாங்கமுறை ஸ்தம்பிதம் அடைந்திருக்கிறது.பாராளுமன்றம் வன்முறைக்களமாக மாறியிருக்கிறது
மக்களின் நேரம் -பொருளாதார வாழ்வு- இயக்கம் எல்லாமே வீணடிக்கப்பட்டு ஸ்தம்பிதமடைய செய்யப்பட்டிருக்கிறது.

அரசாங்க பொறிமுறை பொறிவு கண்டுள்ள நிலையில் தமிழரசு கட்சி  தலைமைத்துவம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை புறந்தள்ளிய இந்த அமைப்பிற்கு முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
 பேரழிவை சந்தித்த சமூகதத்தின் தலைமைத்துவத்தின் கடப்பாடு என்னவாக இருந்திருக்க வேண்டும். முட்டுக் கொடுப்பதற்கான இந்த அநீதியான செயலற்ற  அரசாங்கமுறைமையை காப்பாற்றுவதற்கான கடப்பாடு எதுவும் நொந்து போன சமூகத்திற்கு கிடையாது.

இன்றைய நெருக்கடிக்கான காரணம் இந்த நாடு  எழுந்து நிற்க முடியாதிருப்பதற்கு காரணம் இந்த நாட்டின் ஆட்சி முறைமையே என்பதை தெருவில் இறங்கி மக்களுக்கும் உலகத்திற்கும் சொல்லி இருக்க வேண்டும்.

இந்த நாட்டில் சமூகங்கிடையே ஒற்றுமையையும் சமத்துவத்தையும் நிலை நாட்டுவதற்கும்; இன மதவாத இராணுவவாத நிலையில் இருந்து விடுபட்டு பிரச்சனைகளை தீர்க்க யார் தயாராயிருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கவேண்டும்.

அதிகாரம் என்று வரும்போது மக்கள் அடையாளமற்றவர்களாகி முக்கியத்துவம் இழந்தவர்களாகி இரண்டாம் மூன்றாம் பட்சமாகி விடும் நிலையை சுட்டிக்காட்டியிருக்கவேண்டும். மக்களின நிதி வளங்கள் நாடு பற்றிய பொறுப்புணர்வு பற்றிய கேள்வி இந்த மாதிரி இருந்து கொண்ட சமூக பொருளதார அபிவிருத்தி சாத்தியமா என்றகேள்வி

அரசியலமைப்பை மீறிவந்த வரலாற்று மரபும் நாம் எப்படியும் நடந்து கொள்ளலாம் என்ற அகங்காரம் தொடர்பான கேள்வி இந்த அராஜகத்துக்குள் இலங்கையின் அனைத்து இனமக்களுக்கும் எதுவும் கிட்டுமா ,சமூக நீதி நிலை நாட்டப்படுமா என்ற கேள்வி எழுப்பப் பட்டிருக்கவேண்டும்.


இலங்கையை பல்லின நாடாக தக்கவைப்பதில் இலங்கையின் பாராளுமன்றம் விசேட அதிகாரத்தின் போதாமையை உலகுக்கு அம்பலப்படுத்தியிருக்கவேண்டும்.

ஆனால் தேர்தல் காலங்களில் உணர்ச்சி பொங்க  மக்கள் நலன் பேசுபவர்கள் இந்த நாட்களில் மக்கள் நலனை விட்டு பொறியும் அரசாங்கமுறைக்கு கேள்விக்குரிய அரசாங்கமுறைக்கு முட்டுக் கொடுப்பவர்களாக அதன் பங்குதாரர்களாக  மாறினார்கள் .

இவர்களிடம் இருக்கும் பிரதிநிதித்துவ பலத்திற்கு இன்று இவர்கள் ரணிலுக்கு முட்டுக் கொடுப்பதற்கு எடுத்த முயற்சியில் சிறிதளவவாது மக்களின் நிலங்களை மீட்பதில், சிறையில் உள்ளவர்களின் விடுதலையில,;; புனர் நிர்மாணப்பணிகளை மேற்கொள்வதில், பெண்கள் மாத்திரம் தலைமை தாங்கும் குடும்பங்களின்; நலன்களை  வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதில், கல்வி சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவதில்,வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைப்பதில,; பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதில,; 13வதன் அதிகாரங்களை முழுமையாக மாகாணங்களுக்கு கிடைக்க செய்வதில் எடுத்திருந்தால் சமூகம் நிமிர்ந்தெழுவதற்கான அடிப்படைகள் உருவாக்கப்பட்டிருக்கும்.

மைத்திரி- ரணில் -மகிந்த என்கிற தனிமனித விம்பங்களுக்கபால் விசுவாசங்கள் நம்பிக்கைகளுக்கு வெளியே மக்கள் நலன் சார்ந்து இயங்கியிருக்கவேண்டியது தான் பேரழிவை சந்தித்த சமூகத்தின் தலைமைத்துவத்தின் கடமை.

ஆனால் அவர்கள் அந்த சமூக கடமையை ஆற்றவில்லை.

மாறாக மூன்றரை வருடங்களாக சொற்சிலம்பமாடிய வெட்டித்தனம் தொடர்வது தமது செயலற்ற தன்மைக்கும் தமது சொந்த தனிப்பட நலன்களுக்கும் ஏற்புடையது என்றவாறு நடந்து கொண்டார்கள்.  அவர்கள் அப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்பது அவர்களின் கடந்த கால வரலாறும் கூட.இங்கு மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தான் பிரச்சனை. மக்கள் ஆணையை தமது தனிப்பட்ட விவகாரமாக சொத்தாக அதனை துஸ்பிரயோகம் செய்யலாம் எனக்  கருதும்  இந்த அதிகாரசக்திகளை தெரிவு செய்வதில் இருந்து வெளியே வரவேண்டும்.சமூக ஜனநாயக சக்திகள் இனிமேலும் இந்த அதிகார சக்திகளில் தொங்கிக் கொண்டு காலம் தள்ளமுடியாது.

இலங்கைக்குரிய ஆட்சி கட்டமைப்பு பிராந்தியங்களுக்கு மக்களுக்கு கிட்டவாக  அதிகாரங்கள் பகிரப்பட்டதாக அமைய வேண்டும் . சுவிற்சலாந்து எமக்கு முன்மாதிரயாக இருக்கலாம்.“மாண்பு மிகு அதி உத்தம” எல்லாம் மக்கள் முன் கேள்விக்குள்ளாகியுள்ளன. ஆனால் 1977 இன் பின்னர் தொழிலாளவர்க்க இயக்கங்களுக்கு எதிரானதும் தேசிய ஒடுக்குமுறை சார்ந்ததுமான ஆட்சி முறை பாரம்பரியம் இங்கு கடந்த 40 ஆண்டுகளில் வெகுஜன தொழிலாளி வர்க்க இயக்கங்களை நலிவடையச் செய்தது.இன்றைய நிலையில் இலங்கையில் ஆட்சி முறை எவ்வாசு அமைய வேண்டும் என்பதை மக்கள்  நிர்ணயிக்க வேண்டும்.அப்படியான வெகுஜன கிளர்ந்தெழுகை எதுவும் பெரிதாக நிகழவில்லை.மக்களிடம் இன்றைய நிலைமைகள் தொடர்பாக கோபம் இருக்கிறது. அது வெகுஜனநடவடிக்கையாக பிராவாகம் எடுக்கவில்லை. அந்த பாரம்பரியம் மீட்டெடுக்கப்பட வேண்டும்.
 

Theneehead-1

முதற்பக்கம்

இணையங்கள்

பூமரங்

இலங்கை மாணவர் கல்வி நிதியம்

முன்னைய பதிவுகள்

   Vol:17                                                                                                                               03.12.2018