Theneehead-1

Vol: 14                                                                                                                                                04.01.2017

இந்தியா, சீனா மற்றும் மகிந்த ராஜபக்ஸவின் புதிய அரசியல் திட்டம்

                                                    லசந்தா குருகுலசூரிய

மைத்திரி - ரணில் ஐக்கிய அரசாங்கம் தனது பதவிக்காலத்தின் இரண்டாவது வருட நிறைவை அண்மித்துக் கொண்டிருக்கும்போது, கூட்டரசாங்கத்தின்மீது பொங்கிவரும் எரிச்சலை அடக்கமாட்டாத முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ திரும்பவும் வருவதற்கான முயற்சிகளை வேகமாக இயக்கி வருகிறார்.mahinda R

உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தன்னுடனே உள்ளது, அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வரும் தனியார் மயமாக்கும் முயற்சிகளை தான் எதிர்ப்பதாகவும் மற்றும் கட்சியையும் அதன் நிறுவனர்களின் மதிப்பையும் தான் மீள நிலைநிறுத்தப் போவதாகவும் கூறும் அவர், போர்க்குணத்துடன் இருக்கிறார். கொழும்பை தளமாகக் கொண்ட வெளிநாட்டு நிருபர்களுடன் வியாழன் அன்று தனது அலுவலகத்தில் வைத்து விரிவான வீச்சில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த அவர் நிருபர்களிடம் வலியுறுத்தியதைப் பார்க்கும்போது ஒரு முற்றுகையை ஆரம்பிப்பதற்கான சந்தோஷத்தில் இருப்பதாகத் தோன்றியது.

குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மகிந்த ராஜபக்ஸ,கலந்துரையாடலுக்காக தனது குரலைச் சரிப்படுத்திக் கொண்டு முதலாவது கேள்விக்கான தனது பதிலை, தான் புதிய வருடத்தில் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவதாகக் கூறிக்கொண்டு புன்னகையுடன் ஆரம்பித்தார். (19வது திருத்தத்தில் அறிமுகப்படுத்தப் பட்டதின்படி ஜனாதிபதியின் பதவிக்காலம் மட்டுப்படுத்தப் பட்டிருப்பதால்) அவரால் நாட்டின் தலைவராக முடியாது என்பதைச் சுட்டிக்காட்டியபோது, வேறு வழிகளில் செல்வாக்கைப் பிரயோகிக்க இடமிருப்பதால் தனக்கு அது தேவையில்லை என்று அவர் nதிரிவித்தார் (மறைமுகமாக பிரதம மந்திரி பதவியை குறிப்பிட்டிருக்கிறார்).

கலந்துரையாடல் மன்றத்தில் அம்பாந்தோட்டை சம்பவம் சிறப்பாக இடம் பிடித்துக் கொண்டது ஆச்சரியம் தரவில்லை. அவரது சொந்த இடமான அம்பாந்தோட்டை மாவட்டம், இந்த நாட்களில் உள்ளுர் மற்றும் சர்வதேசங்களின் கவனத்தில் குறிப்பிட்ட இடத்தைப் பிடித்திருந்தது. ஒருவேளை இது உள்நாடு மற்றும் சர்வதேசம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதாலோ என்னவோ!

அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பாக மகிந்த ராஜபக்ஸ, கடும் எதிர்ப்பை தெரிவித்தார், இதன்மூலம் அரசாங்கம் 80 விகிதமான கட்டுபாட்டு பங்கினை சீன நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டும் மற்றும் ஒரு கைத்தொழில் வலயம் அமைப்பதற்காக சீனர்களுக்கு 1,500 ஏக்கர் நிலமும் ஒதுக்க வேண்டும். “15,000 ஏக்கர்களை எப்படி நீங்கள் கொடுக்க முடியும?”; எனக் கேள்வி எழுப்பிய அவர், தற்போதைய அரசாங்கத்தின் இந்த திட்டம் அவர் ஆரம்பித்ததின் ஒரு தொடர்ச்சிதான் என்பதை ஆவேசமாக மறுத்தார்.

“ஒரு கைத்தொழில் பூங்கா அமைப்பதற்காக நாங்கள் 75 ஏக்கர் நிலத்தை கொடுக்கவேண்டி இருந்தது. அவர்கள் 1000 ஏக்கர் கேட்டார்கள், நான் இல்லை என மறுத்து விட்டேன். அது மக்களின் காணி” என அவர் வலியுறுத்தினார். சீனர்களோ, இந்தியர்களோ அல்லது அமெரிக்கர்களோ முதலீடு செய்வதற்காக இங்கு வருவதை அவர் எதிர்க்கவில்லை, ஆனால் விவசாய நிலம் கொடுக்கப் படுவதையும் மற்றும் தனியார் மயம் இதில் சம்பந்தப் பட்டிருப்பதையும் தான் எதிர்ப்பதாக அவர் சொன்னார். நாட்டின் அபிவிருத்திக்கே அவரது முன்னுரிமை.

சீனாவை வரவழைத்தது அவருடைய தவறுதான் என்பதையும் அவர் நிராகரித்தார். “ நான் இந்தியர்களை முதலில் வரவேற்றேன். இங்கு வந்து துறைமுகத்தை நிர்மாணிக்கும்படி நான் இந்தியாவை வரவேற்றேன்… ஆனால் அவர்கள் அதைச் செய்ய விரும்பவில்லை. பின்னர் எனக்கு வேறு யாரையாவது தேடவேண்டி ஏற்பட்டது. பின்னர் சீனர்கள் வந்தார்கள்” என்று அவர் சொன்னார். முந்தைய வியாபாரத் திட்டத்தின் கீழ் ஸ்ரீலங்கா துறைமுக அதிகார சபையே இதைக் கட்டுப்படுத்துவதாக இருந்தது, ஆனால் இப்போது ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு இந்த திட்டத்தின்மீது கட்டுப்பாடு இல்லை, அதன் பாதுகாப்பு பொறுப்புக்கூட இல்லை என்று அந்தக் கூட்டத்தில் சமூகமளித்திருந்த மகிந்த ராஜபக்ஸவின் புதிதாக அமைக்கப்பட்ட கட்சியான ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன என்கிற கட்சியின் தலைவரான பேராசிரியர். ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.


சீனா சார்பான அவரது பக்கச்சாய்வு காரணமாக வெளிநாட்டு உறவுகளின் சில பகுதிகளைக் கைவிட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி சமீபத்தில் சினாவுக்கு தான் மேற்கொண்டிருந்த நல்லெண்ண விஜயம் பற்றி விளக்கினார். அவரது விஜயத்தின்போது அவர் சந்தித்த சீன முதலீட்டு நிறுவனம் பற்றிய அறிக்கையை கேட்டபோது, “நான் ஒவ்வொருவரையும் சந்தித்தேன்” என அவர் சொன்னார். அவர்கள் செல்லும் வழி தவறானது என்று அவர்களிடம் அவர் சொல்லியுள்ளார். பேராசிரியர் பீரிஸ் மேலும் சொன்னது, சீனா மேர்ச்சன்ட்ஸ் அன்ட் போட் ஹோல்டிங் நிறுவனம் மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினை மற்றும் சமூக ஸ்திரத்தன்மை என்பன பற்றி உணர்வுபூர்வமாக உள்ளது, என்று.


அம்பாந்தோட்டை துறைமுகம் அதன் ஆரம்பம் முதலே புயலின் மையமாக இருந்தது - பிரதானமாக இந்தியாவின் அக்கறைகள் பற்றிய பகுதி காரணமாக. பிராந்திய சக்தியான இந்தியா பொதுவாக சீனாவின் கடல்சார் எல்லைகள் விரிவாக்கப் படுவதையிட்டு எச்சரிக்கை அடைந்தது, சீனாவின் பாதச்சுவடுகள் இந்து சழுத்திரப் பிராந்தியத்தில் வளர்வதையிட்டு அதற்காக மேலும் கவலையடையடைந்தது. மகிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது பதவிக் காலத்தின்போது, 2014 செப்ரம்பரில், சீன நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது, இந்தியா - ஸ்ரீலங்கா உறவுகளில் ஒரு கரும்புள்ளியாக அமைந்தது. தற்போதைய முதலீட்டு திட்டத்தின் கீழ் மிகப் பெரியதொரு சீன இருப்பு இங்கு இடம்பெறுவதையிட்டு இந்தியா அமைதியாக இருப்பது தொடர்பாக, இந்தியாவை சீண்டிப்பார்ப்பதை அவரால் தவிர்க்க முடியவில்லை.


“அந்த நாட்களில் என்னுடன்  இந்திய நண்பர்கள் கோபமாகச சத்தம் போட்டார்கள் - நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புக்கு வந்தபோது அவர்கள் அதிகம் கவலையடைந்தார்கள் --- இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் இந்த நபர்கள் எல்லோரும். இப்போது அவர்கள் சுண்டெலிகளைப் போல பதுங்கி விட்டார்கள்” என்று அவர் சொன்னார். அவர்கள் இப்போது கவலையடையவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும் என்று அவரிடம் கேட்டதற்கு, அவர்கள் முன்பு சொன்னதைப்போல இப்போது வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை என அவர் பதிலளித்தார். மற்றொரு விரிவான பக்கத்தில் அவர் மேலும் தெரிவித்தது, இந்தியர்களுக்கும் கூட திருகோணமலை துறைமுகம், அல்லது பலாலி விமானத்தளம் அல்லது காங்கேசன்துறை துறைமுகம் போன்ற எதாவது ஒன்று கிடைக்கக்கூடும் என்று.

நீர்மூழ்கி கப்பலின் வரவு பற்றி முன்கூட்டியே வெளிப்படையாக அறிவிக்காதது பற்றிய இந்தியாவின் அதிருப்தி தொடர்பாக, அவர் சொன்னது இநது சமூத்திரத்திற்குள் தாங்கள் வந்தால் அதுபற்றி பீஜிங் எப்போதும் இந்தியாவுக்கு அறிவிக்கும் “அப்படியில்லாமல் அவர்கள் வரமாட்டார்கள்” என்று.


எல்.ரீ.ரீ.ஈ யினை தோற்கடிப்பதற்கு அவருக்கு உதவிய இந்தியா, எப்படி அவரது அரசியல் எதிரிகளின் பக்கம் திரும்பியது எனக் கேட்டதற்கு, மகிந்த ராஜபக்ஸ சொன்னது, அவை அனைத்தும் தவறான புரிந்துணர்வுகள் என்று. “அமெரிக்கர்கள் அவர்களிடம் செல்வாக்கு செலுத்தியிருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் சொன்னார். கலந்துரையாடலின் மற்றொரு கட்டத்தில் அவர் சொன்னது இந்தியாவின் பங்கு என்னவென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று.

கடந்த தேர்தலில் அவரது சொந்த சுகாதார அமைச்சரான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பக்கம் நின்று கூட்டு வேட்பாளராக போட்டியிடுவதற்கு பிரிந்து சென்றபோதே, ஆய்வாளர்கள் இந்தியா மற்றும் மேற்கத்தைய சக்திகளின் பங்கு இந்த முன்னுவமையில்லாத மாற்ற நிகழ்வுகளின் திருப்பத்தில் இருக்கலாம் என ஊகித்திருந்தன. அந்தக் காட்சியில் ஸ்ரீலங்காவின் உள்ளக அரசியல் முறுகல்கள் வெளிச் சக்திகளால் அவர்களது சொந்த மூலோபாய இலக்குகளை அடைவதற்கு எவ்வாறு பயன்பட்டன என்பதைக் காட்டக்கூடியதாக இருந்தது. எனினும்,” எலிகள் மற்றும் மனிதர்களால் சிறப்பாகத் தீட்டப்படும் திட்டங்கள் அடிக்கடி கோணலாகப் போவதுண்டு” என்கிற பழமொழிப்படி புதிய அரசாங்கம் அவர்களது மேற்கத்தைய நண்பர்களைப் போலல்லாது சீனர்களிடம் கொடுப்பதற்கு விருப்பமுள்ள அதிகம் செல்வம் உள்ளது என்பதை புரிந்து கொண்டுள்ளது, முரண்பாடாக சீன செல்வாக்கு முன்பைவிட அதிகம் வலிமையாக மாறுவதை இன்று நாங்கள் காண்கிறோம்.

2015ல் அவரது தோல்விக்குப் பங்களிப்பு செய்த பிரதான காரணிகளை குறிப்பிடும்படி மகிந்த ராஜபக்ஸவிடம் கேட்டதற்கு, ‘அவர்களின் பிரச்சாரம்’தான் என்று சொன்னார், மைத்திரிபால சிறிசேனவின் பிரச்சாரத்தில் அமெரிக்கர்கள், இந்தியர்கள் மற்றும் இந்திய உளவுப் பிரிவான றோ என்பன செல்வாக்கு செலுத்தின என அவர் பரிந்துரைத்தார். “அது எங்களுக்கு மிகவும் அதிகம். உள்ளே (கட்சிக்குள்) என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை நாங்கள் அறியவில்லை. எங்களின் சொந்தக் கூட்டமே எனக்கு எதிராக வேலை செய்தது. அவர்கள் கட்சிக்கு உள்ளேயே இருந்துகொண்டு எனக்கு எதிராக வேலை செய்தார்கள்”.

30 வருட போரை முடிவுக்கு கொண்டு வருவதில் நீங்கள் வெற்றியீட்டி உள்ளீர்கள் என்றபோதிலும் நாட்டை ஒற்றுமைப் படுத்துவதில் நீங்கள் தவறிவிட்டீர்கள் என்று அவரிடம் சொன்னபோது, முந்தைய வலிமையான மனிதர் அதில் சில உண்மைகள் இருப்பதை ஒப்புக் கொண்டார். “மக்கள் முதலில் அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பெறவேண்டும் என்று நான் நினைத்தேன். யாழ்ப்பாணத்தில் அவர்களிடம் எதுவுமே இருக்கவில்லை - மின்சாரம் இல்லை, வீதிகள் இல்லை, தண்ணீர் இல்லை, மருத்துவமனைகள் இல்லை, பாடசாலைகள் இல்லை. எனவே இந்த விடயங்களை முதலில் வழங்கவேண்டும் என நான் நினைத்தேன். ஒருவேளை யுத்த முடிவில் ஒரு மீள் உறுதிக்கான அவசியம் வேண்டும் என்பதை அவர் தவறாக கணித்து விட்டரா மற்றும் தாங்கள் இராணுவத்தால் அடக்கப் பட்டிருக்கிறோம் என்கிற ஒரு உணர்வு (வடக்கில்)அங்கு இருந்தது என்பதை அவரிடம் சொன்னபோது, மகிந்த ராஜபக்ஸ, அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “ஒரு யுத்தத்தின் பின் - அதைப்போல அபிவிருத்தி அடைந்த வேறு ஒரு நாட்டைச் சொல்ல முடியுமா?” எனக்கேட்டார்.

தேனீமொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
 

dantv