Theneehead-1

Vol: 14                                                                                                                                                04.01.2017

மாகாணசபையின் பெயரால் ...........

-    வடபுலத்தான்

அரசியல்ல ரண்டு வகையிருக்கு. சனங்களுக்குச் சேவை செய்யிற அரசியல் ஒண்டு. சNPCனங்களை வைச்சுப் பிளைக்கிறது அரசியல் இன்னொண்டு. தமிழ்த்தேசியவாத அரசியல் அநேகமா ரண்டாவது வகையைச் சேரும். (இதுக்குள்ள இயக்க அரசியலைக் கொண்டு வந்து செருகப்பிடாது).

இந்த ரண்டாவது வகை அரசியலைச் செய்யிறதில தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்களுக்கு நிகரில்லை. இப்ப எம்பி மாராக இருக்கிறவையாகட்டும் மாகாணசபை உறுப்பினர்களாக இருக்கிறவையில முக்கால்வாசிப்பேராகட்டும், பிரதேச சபை உறுப்பினர்கள், நகரசபை, மாநகரசபை உறுப்பினர்களாக இருந்தவையாகட்டும் எல்லாரும் சனங்களை வைச்சுப் பிழைக்கிற அரசிலைத்தான் செய்து கொண்டிருக்கினம்.

இதில நம்பர் 01, நம்பர் 02, நம்பர் 03 எண்டெல்லாம் தரவரிசையும் இருக்கு. ஒண்ணாம் நம்பர்காரர் செய்கிற அட்டகாசங்கள் இதில உச்சம். அதில ஒராள் வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை. இவர் நடிப்பில பெரிய விண்ணன். அந்தக் காலத்தில இருந்து இந்தக் காலம் வரையில எல்லா மேடைகளிலயும் அந்த மாதிரி நடிக்கிற மகா கெட்டிக்காரன். பொச்சுமட்டையோட தேங்காயைப் பிழிஞ்சு பாலெடுக்கக்கூடிய ஆள்.

இப்பிடியான ஆள் மாகாணசபையில உறுப்பினராக இருக்கிறதெண்டால் சும்மாவே! முந்தி விதானையாராக வேலை செய்கிற காலத்திலயும் வேலை செய்யாமலே சம்பளம் எடுத்த விண்ணனெல்லோ... இப்ப இவரும், முந்தி விதானையா இருந்து கள்ளச் சான்றிதழ் காட்டி வேலை எடுத்ததால உத்தியோகம் பறிபோன விதானை, வேழமாலிகிதனுமாச் சேர்ந்து ஊரில, உலகத்தில செய்கிற அட்டகாசம் கொஞ்ச நஞ்சமில்ல.

தெருவில நிண்டு கொண்டு போற வாற ஆட்களை மறிச்சு இல்லாத பொல்லாத கதைகளைச் சொல்லி மண்டையக் கழுவிறதிலயும் பொதுச் சொத்துகளைத் தங்கட சொத்தாக மாத்திறதிலயும்தான் கண்ணும் கருத்துமாக இருக்கினம். இதெல்லாம் ஏனெண்டால், தங்கட சுத்துமாத்துகளை மறைக்கிறதுக்குத்தான். ஒரு சின்னக்கதை. மாகாணசபை உறுப்பினர்கள் தங்கட பகுதிகளில அலுவலகத்தைத் திறக்கோணும் எண்டு அறிவிப்பு வந்தபோது, பசுபதிப்பிள்ளை தன்ரை வீட்டுக்குப்பக்கத்தில ஒரு கடைக் கட்டிடத்தை எடுத்துக் கந்தோரைத் திறந்தார். ரண்டு மூண்டு மாசம் இடைக்கிடை அந்தக் கந்தோர் திறந்து மூடப்பட்டது. பிறகு கொஞ்ச நாள் திறக்கப்படாமல் மூடப்பட்டே இருந்திது. போன கிழமை சத்தம் சலாரில்லாமல் அந்தக் கந்தோரை மூடி, அங்க இருந்த கந்தோர் தளபாடங்களையும் போட்டோக்கொப்பி மிசின், கொம்பியுட்டர் எல்லாத்தையும் வீட்ட கொண்டுபோய்ச் சேர்திட்டார் சிங்கன்.

வீட்டில, மகள்மாருக்கு இதெல்லாம் தேவையெல்லோ.

ஏனெண்டால், பசுபதிப்பிள்ளையின்ரை ஒரு மகள் அக்கராயன் பள்ளிக்கூடத்தில வேலை செய்தவா. அந்தப் பிள்ளையை தான் மாகாண சபை உறுப்பினர் எண்டு சொல்லி செல்வாக்கைப் பயன்படுத்தி, இப்ப பக்கத்தில இருக்கி பள்ளிக்கூடத்துக்கு மாத்திப்போட்டார். அந்தப் பிள்ளை அநேகமா வீட்டிலதான் நிற்குது. அதுக்கு இந்தப் பொருட்கள் எல்லாம் பயன்படுமல்லோ.

இதெல்லாம் அக்கம் பக்கத்தில இருக்கிற சனங்களுக்குத் தெரியும். ஆனால், தெரிஞ்சும் என்ன செய்யேலும் அவவையளால. தங்களுக்குள்ள கொதிச்சுப்போட்டு இருக்க வேண்டியதுதானே.

இதை மறைக்கிறதுக்காக ஆள் இப்ப புதுக்கதை ஒண்டை அவிழ்த்து விட்டிருக்கு. ஆளின்ரை வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற ஒரு பொதுக்கட்டிடத்தை மாகாணசபை எடுத்துச் சீரழிக்க வேணுமாம். அதுவும் மாகாணக் கல்வி அமைச்சு அந்தப் பொதுக்கட்டிடத்தைப் பொறுப்பேற்க வேணுமாம். மாகாணக் கல்வி அமைச்சின்ரை பொறுப்பில இருக்கிற பள்ளிக்கூடங்கள் எல்லாம் சீரழிஞ்சு கொண்டிருக்கு. இதைப்பற்றி ஏராளம் முறைப்பாடுகளும் செய்திகளும் பேப்பர்களிலயும் நெற்றிலையும் வந்து கொண்டேயிருக்கு. சனங்கள் விக்கினேஸ்வரனிட்ட நேத்தி வைச்சும் ஒரு காரியமும் நடக்கேல்ல. இந்தச் சீரில இப்ப ஒழுங்கா நடந்து கொண்டிருக்கிற ஒரு பொதுச் சேவை நிலையத்தையும் பறிச்செடுத்துச் சீரழிக்க வேணும் எண்டு அடம்பிடிக்கிறார் பசுபதிப்பிள்ளை. இது விசர்க்குணம் இல்லாமல் வேற என்ன?

அந்தப் பொதுக்கட்டிடத்தைப் புலிகள் இயக்கம் முந்தி வைச்சிருந்தது. அதைப் பிறகு ஆமி வைச்சிருந்தது. ஆமியிட்ட இருந்து சந்திரகுமார் எம்பி மீட்டு, பொது அமைப்பொண்டிட்டக் குடுத்தார். அதோட அந்தக் கட்டித்தைத்திருத்தி, அதில இலவசமாக கொம்பியுட்டரும் இங்கிலிசும் கணிதமும் விஞ்ஞானமும் படிப்பிக்கிறார்கள். தையற்பயிற்சியும் நடக்குது. இதில ஒரு எழுநூறு பேருக்கு மேல படிச்சு வெளியேறியிருக்கினம் எண்டு அந்த நிலையத்தைச் சேர்ந்த நிர்வாகியள் சொல்லுகினம். ஆனால், இதை இப்ப குழப்ப வேணும் எண்டு அடம்பிடிச்சுக் கொண்டிருக்கினம் பென்சன் விதானையும் வேலை பறிபோன விதானையும்.

பொதுச் சேவைக்குப் பயன்படுத்திறதுக்கு எண்டு குடுத்த கொம்பியுட்டரைத் தன்ரை வீட்டுக்குக் கொண்டு போனதும் போதாமல் பொதுப் பயன்பாட்டுக்கெண்டு பயற்சி குடுத்துக் கொண்டிருக்கிற கொம்பியுட்டர்களையும் பயற்சியையும் முடிக்கிறதுக்கும் பாடுபடுகிற ஆட்கள்தான் அரசியல் பிரமுகர்களாக இருக்கினம். இவையளத்தான் சனங்களும் நல்ல சேவையாளர் எண்டு தெரிஞ்சிருக்கினம்.

பசுபதிப்பிள்ளை இந்த இடத்தில செய்யிறதுக்கு எவ்வளவோ காரியங்கள் இருக்கு. அவற்றை வீட்டுக்குப் பக்கத்தில கரைச்சிப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கு ஒரு அரை ஏக்கர் காணி இருக்கு. அதை இன்னொருத்தர் அடாத்தாகப் பிடிக்க முயற்சிக்கிறார். அதை மீட்டுச் சங்கத்துக்குக் குடுக்கலாம். அதைப்போல புலிகள் இயக்கம் கட்டின கட்டிடங்கள் அவற்றை வீட்டைச் சுற்றி இருக்குது. அதுகளை பொதுச் சொத்தாக்கி, பொதுப் பயன்பாட்டுக்கு விடலாம். ஆனால், அதைச் செய்ய மாட்டார் ஆள். ஏனெண்டால் அதெல்லாத்தையும் சுட்டு வைச்சிருக்கிறது பசுபதிப்பிள்ளையின்ரை சொந்தக்காரலெல்லோ.. அதுகளில கை வைச்சால் தன்ரை மடியில வைச்ச மாதிரி இருக்கும் எண்டு, ஆரோ பாடுபட்டு உருவாக்கிய அமைப்பை பறிச்செடுக்கப் பாடுபடுகிறார்.

பசுபதிப்பிள்ளையும் அவற்றை கூட்டாளிகளும் உருப்படியாக எதையாவது இனியாவது செய்ய வேணும் எண்டால், அழகியல் கல்லூரி என்ற பெரிய நிறுவனத்தின் கட்டிடத்தை ஆமி வைச்சிருக்கு. ஒரு சேதமும் இல்லாமல் உருப்படியாகத்தான் அந்தக் கட்டிடம் இருக்கு. அதின்ரை தலைவரா இப்ப மாகாணக் கல்வி அமைச்சராக இருக்கிற குருகுலராஜாதான் இருந்தவராம். அந்தக் கட்டிடத்தை மீட்டுக் கலையையும் பண்பாட்டையும் வளர்க்கலாமே.

அதைப்போல கல்வி கலாச்சார அமைச்சை வைச்சு ஒரு கலாச்சார மண்டபத்தைக்கூடக் கட்டலாம் எண்டும் சொல்லுகினம் ஆட்கள். இதைப்பற்றி கொஞ்ச நாளைக்கு முந்தி பேஸ்புக்கிலயும் ஆரோ எல்லாம் எழுதியிருந்தினம். இருந்தாலும் இதையெல்லாம் விட்டுத்தள்ளிப்போட்டு ஆற்றையும் காலுக்கிடையில கையை விட்டுப்பாக்கிறதிலதான் பிரியமா இருக்கினம் இந்த விதானைமார்.

இந்த வருத்தத்துக்கு எங்க மருந்தெடுக்கிறது எண்டுதான் தெரியேல்ல.

dantv