இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம்: முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் சரண்


மட்டக்களப்பில் உள்ள ஒரு காவலரணில் வைத்து இரண்டு காவல்துறையினரை கொன்று அவர்களது ஆயுதங்களை எடுத்துச் சென்றது தொடர்பாக ஒரு முன்னாeiள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் நேற்று காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக  நேற்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார். சந்தேகநபர் கிளிநொச்சி வட்டக்கச்சியை வதிவிடமாகக் கொண்ட 48 வயதான இராசநாயகம் சர்வானந்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார், இவர் கிளிநொச்சி காவல்நிலையத்தில் மட்டக்களப்பு வவுணதீவில் இடம்பெற்ற கொலைகளுக்கு தானே பொறுப்பு என்றுகூறி சரணடைந்துள்ளார். இரண்டு காவல்துறை காவலர்களும் வெள்ளிக்கிழமை காலை துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டார்கள். எனினும் சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

மட்டக்களப்பு மற்றும் காலியைச் சேர்ந்த இரண்டு காவல்துறை காவலர்களான தினேஸ் கணேஸ் மற்றும் நிரோசன் இந்திக்க ஆகிய இருவரையும் அவர்கள் இறப்புக்குப் பின்னர் சார்ஜன் தரத்துக்கு பதவி உயர்த்தி உள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் ரி. கணேசானந்தன்  சண்டே ரைம்ஸிடம் கடந்த ஞ}யிறன்று தெரிவித்தார். சந்தேக நபர்  எதுவித ஆயுதங்களும் இன்றியே சரணடைந்துள்ளதாகவும் மற்றும் அவரை இந்த விசாரணைகளுக்கு பொறுப்பாகவுள்ள புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பதற்கு முன்பாக அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆரம்ப காவல்துறை விசாரணைகள் வெளிப்படுத்துவது, மட்டக்களப்பைச் சேர்ந்த சந்தேகநபர் எல்.ரீ.ரீ.ஈ இல் இருந்தபோது கிளிநொச்சியில் ஒரு பயிற்சியளிப்பவராக இருந்ததாகவும் மற்றும் அதே இடத்தைச் சேர்ந்த பெண்ணை மணமுடித்து நான்கு பிள்ளைகளுடன் அங்கேயே வாழ்ந்து வருகிறார். வெள்ளியன்று காலை காலஞ்சென்ற காவல்துறையினரது கடமைகளைப் பொறுபு;பேற்க வந்த அவர்களது இரண்டு சகாக்களும் இறந்தவர்களது உடலைக் கண்டதுமே உடனடியாக அதிரடிப்படையினரது துணையுடன் காவல்துறையினர் சந்தேக நபர்களைத் தேடி வேட்டையில் இறங்கினார்கள். காவலர்களில் ஒருவர் காவலரணுக்கு வெளியிலும் மற்றவர் உள்ளே ஒரு கட்டிலிலும் இறந்து கிடக்கக் காணப்பட்டார்கள்.

அந்த பிரதேச காவல்துறை அதிகாரிகள், கடந்தவாரம் வாகரையில் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ போராளிகளைப் புதைத்த சேமக்காலையில் புதிதாக நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நினைவுச் சின்னங்கள் போரில் இறந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களை நினைவுகூரும் முகமாக நடத்தப்படும் விழாவுக்கு முன்னதாக காவல்துறையினரால் அகற்றப்பட்டன. காவல்துறையினரின் அந்த செயற்பாட்டுக்கு எதிராக பழிவாங்கும் முகமாக இந்தக் கொலைகள் நடத்தப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்திலும் தாங்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்கள்.

சரணடைந்த சந்தேகநபரும் கூட இந்த மாவீரர் நினைவு நாளை நினைவுகூரும் நிகழ்வினை கிழக்கு மாகாணத்தில் ஒழுங்கு செய்வதில் ஈடுபட்டிருந்தாரா என்று காவல்துறை நேற்று விசாரணையில் ஈடுபட்டிருந்தது.

குறைந்தது நான்கு நபர்களின் நடமாட்டங்கள் ஒரு சி.சி.ரீ.வி கமராவில் பதிவாகியிருந்ததால் அவர்களையும் விசாரணைகளுக்கு உட்படுத்திய பின்னர் விடுதலை செய்ததாக தெரிவிக்கப்பட்டது. கண்காணிப்பாளர் நாயகம் (ஐ,ஜி.பி) பூஜித ஜயசுந்தர மற்றும் சி.ஐ.டி பிரிவு மூத்த உதவிக் கண்காணிப்பாளர் நாயகம் (டி.ஐ.ஜி) ஒருவர், ஆகியோரும் மற்றும் சில அதிகாரிகளும் குற்றம் நடைபெற்ற இடத்துக்கு வெள்ளின்று விஜயம் செய்திருந்தார்கள். விசாரணைகளில் இரண்டு சி.ஐ.டி குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

இதற்கிடையில் பிரேதப் பரிசோதனைகள் மட்டக்களப்பு மருத்துவமனையில் நடத்தப்பட்டன. ஆரம்ப அவதானிப்புகள,; அவர்கள் மிக அருகில் வைத்து சுடப்பட்டுள்ளார்கள் என்றும் மற்றும் இரண்டு காவல்துறையினரும் வெட்டுக் காயங்களுக்கு ஆளாகியுள்ளார்கள் என்றும் வெளிப்படுத்தின.

மட்டக்களப்பு நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி வெள்ளியன்று சம்பவம் நடந்த இடத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

Theneehead-1

   Vol:17                                                                                                                               04.12.2018