எல்.ரீ.ரீ இனது அச்சமூட்டும் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் இன்னமும் உயிரோடு உள்ளார் – முன்னாள் மூத்த எல்.ரீ.ஈ தலைவர்

மே 2009 யுத்தத்தின் இறுதி நாட்களில் புலிகளின் புகழ்பெற்ற அச்சமூட்டக் கூடிய உளவுப் பிரிவுத்தலைவரான பொட்டு அம்மான் அனைவரும் நம்புகின்றபடிkaruba -pottu இறக்கவில்லை, ஆனால் இன்னமும் உயிரோடு நலமாக உள்ளார்.

2009 செப்ரெம்பரில் ஸ்ரீலங்கா பிரதி சொலிசிற்றர் ஜெனரல் கப்பில வைத்தியரத்ன, கொழும்பு உயர் நீதிமன்றில் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் மே 2009ல் கரைத்துறைப்பற்று பிரதேசத்தில் வைத்து கொல்லப்பட்டு விட்டதாகவும் மற்றும் கதிர்காமர் கொலைவழக்கு குற்றச்சாட்டில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க பிரபாகரனுடன் சேர்த்து பொட்டு அம்மான் பற்றிய மாற்றங்களுக்கு அனுமதி வழங்கி பொட்டு அம்மானின் மரணத்தை நீதிமன்றம் மூலமாக உறுதி செய்தார்.

மார்ச் 2010ல் ஸ்ரீலங்கா அரசாங்கம் பொட்டு அம்மானை மிகவும்  வேண்டப்படுபவர்கள் பட்டியலில் இருந்து நீக்குமாறு இன்ரர் போலிடம் கேட்டுக் கொண்டது.

ஒக்ரோபர் 2010ல் இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறையினர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஜோடி இறந்துவிட்டதாக ஒரு அறிக்கையை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

மேற் குறிப்பிட்ட அறிக்கைகளுக்கு நேர் எதிராக எல்.ரீ.ரீ.ஈ இனால் பொட்டு அம்மான் என்று அழைக்கப்பட்ட சண்முகலிங்கம் சிவசங்கர் நோர்வேயில் உயிரோடு நலமாக இருப்பதாகவும் மற்றும் மறைந்து வாழ்வதாகவும் ஒரு முன்னாள் எல்.ரீ.ரீ,ஈ தலைவர் சிங்கள மொழி வாரப்பத்திரிகைக்கு கொழும்பில் வைத்து தெரிவித்துள்ளார்.

அவர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆவார், இவர்தான் பொட்டு அம்மானின் விவாகத்தை கிரானில் ஏற்பாடு செய்தவர்.

எல்.ரீ.ரீ.ஈ யின் முன்னாள் தலைவரான கருணா அம்மான் எல்.ரீ.ரீ. தலைவர் பிரபாகரனுடைய  அணியில் இருந்து வெளியேறியதின் மூலம் பிரபலமானவர், கொழும்பில் சிங்களப் பத்திரிகையான ரிவிர வுக்கு தெரிவித்தது: ”அவர் நோர்வேயில் வாழ்கிறார். அவர் அங்கு தன்னை மிகவும் இரகசியமாக வைத்துள்ளார்” என்று.

19 மே 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளினை(எல்.ரீ.ரீ,ஈ)  முடிவுக்கு கொண்டுவருவதற்கு பொறுப்பாக இருந்த ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூட சமீபத்தில் ஒருமுறை  ஒரு செய்தியாளர் மாநாட்டில் பொட்டு அம்மானது மரணம் உறுதிப்படுத்தப் படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

2009 மேயில் யுத்தம் முடிவடைந்த பின்பு பல்வேறு சமயங்களில் பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் வெளியாயின, ஆனால் அவற்றைச் சரிபார்க்க முடியவில்லை.

இப்போதுதான் முதல் முறையாக முன்னாள் மூத்த எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களில் ஒருவர் வெளிப்படையாகவும் மற்றும் நம்பிக்கையாகவும் எல்.ரீ.ரீ.ஈ இனது உயர்மட்ட உளவுப்பிரிவு தலைவரது இருப்பிடம் பற்றித் தெரிவித்துள்ளார். உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் 18 மே 2009ல் நந்திக்கடலேரியில் வைத்து இறுதிக்கட்டப் போரின்போது கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது – ஆனால் அவரது இறந்த உடலை ஒருபோதும் யாரும் கண்டுபிடிக்கவில்லை.

கலைக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் சிங்களப் புலனாய்வுப் பிரிவினரின் திறமையில் ஏற்பட்ட தொய்வு காரணமாக எல்.ரீ.ரீ.ஈ இற்கு புத்துயிர் அளிக்கும் முயற்சிகள் உருவாகி வருகின்றன.  மட்டக்களப்பில் இரண்டு காவல்துறையினரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ இனரே. அரசாங்கம் இதில் கவனம் செலுத்தவில்லை” என்று கருணா அம்மான் மேலும் தெரிவித்தார்.

Theneehead-1

   Vol:17                                                                                                                               04.12.2018