Theneehead-1

Vol: 14                                                                                                                                                05.01.2017

இஸ்தான்புல் இரவு விடுதியில் தாக்குதல் நடத்திய நபரை அடையாளம் கண்டுள்ளதாக துருக்கி தகவல்


துருக்கி தலைநகரான இஸ்தான்புல் நகரையொட்டி, ஐரோப்பிய கண்டத்தையும்,istanpul ஆசிய கண்டத்தையும் பிரிக்கும் பாஸ்பரஸ் ஜலசந்தி பகுதியில் ஆர்ட்டாக்கோய் மாவட்டத்தில் உள்ள அந்த பிரபல இரவு விடுதி, உள்நாட்டினரும், வெளிநாட்டினரும் அடிக்கடி ஒன்றுகூடி விருந்து நிகழ்ச்சிகளை நடத்தும் பிரசித்தி பெற்ற இடமாகும்.கடந்த முதல்தேதி பிறந்த புத்தாண்டை வரவேற்க இந்த இரவு விடுதியில் சுமார் 500 பேர் திரண்டு, மகிழ்ச்சியுடன் காத்திருந்தனர்.

நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் உச்சகட்ட உற்சாகத்தில் அவர்கள் திளைத்திருந்தபோது, இரவு சுமார் 1.30 மணியளவில் தானியங்கி ரக துப்பாக்கியுடன் உள்ளே புகுந்த ஐ.எஸ். பயங்கரவாதி ஒருவன், எதிர்பட்டவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான்.

இதில் 35 பேர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர், 70-க்கும் அதிகமானவர்கள் குண்டு காயங்களுடன் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்தது. இவர்களில் 15 பேர் வெளிநாட்டினர் என்றும் அவர்களில் இருவர் இந்தியர்கள் என்பதும் பின்னர் தெரியவந்தது.

தாக்குதல் நடத்தப்பட்ட மறுநாளான திங்கள் கிழமை ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றது. துருக்கியில் இத்தகைய தாக்குதல் நடத்துவது இதுதான் முதல் தடவையாகும். இந்த நிலையில், இந்த தாக்குதல் நடத்திய ஐ.எஸ் பயங்கரவாதி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி மேவ்லுட் கேவுஸோக்லு தெரிவித்துள்ளார். ஆனால், பயங்கரவாதியின் பெயரோ அல்லது வேறு ஏதேனும் தகவல்களோ எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால்,  இஸ்தான்புல் நகரில் தாக்குதல் நடத்துவதற்கு முன் மத்திய நகரான கோன்யாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு இருந்ததாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

dantv