நூற்றாண்டு தமிழ் சினிமாவில்   கிராம சித்தரிப்புகள்

- அஜயன்பாலா

(1)

70 – பதுகளில் இந்தியா முழுக்க எதிரொலித்த பேர்லல் சினிமா கா16லக்கட்டத்தில்  இந்து வங்காளம் மலையாள மொழிப்படங்களில் கம்யூனிச கருத்துள்ள படங்களே அதிகம் வந்தன.

அதே தமிழில் அந்த பேர்லல் இயக்கம் பதினாறுவயதினிலேவுக்குப் பிறகு தோன்றிய போது அது அழகியல்  உறவு சிக்கல்கள் மற்றும் எதார்த்த சித்தரிப்புகளுக்கு  கொடுத்த முக்கியத்துவத்தை முற்போக்கு கருத்தியலுக்கு அல்லது கதையாடலுக்கு வழங்க தவறியது.

தன்ணீர் தண்ணீர் , கண் சிவந்தால் மண் சிவக்கும், ஏழாவது மனிதன் , க என ஒரு சில படங்களுக்கிளேயே அது நின்று போனது.

கால மாற்றத்தில்  அதுவும் நக்சலைட்டாக சித்தரிக்கப்பட்டு இறுதியில்  போலீசாரால் சுட்டுக்கொல்லப்படுபவனாக முடிந்தது  மவுன ராகம் துவங்கி குருதிப்புனல் வரை ஒரு துன்பியல் தருணம்

2000-க்கு பின் சில மாறுதல்கள் உண்டானது குறிப்பாக அது இயக்குனர் எஸ். பி. ஜனநாதன் எனும் சித்தாந்தத்தை முழுமையாக கைக்கொண்ட கலைஞனால் இயற்கை, ஈ, பேராண்மை  போன்ற படங்களால்  மக்களின் அரசியல் முன்னெடுக்கப்பட்டு வெற்றியும் பெற்றது

குறிப்பாக பேராண்மை படத்தில் நாயகன் ஜெயம் ரவி மூலமாக மனித உழைப்புக்கும் மனிதனுக்குமான விகிதாச்சராத்தையும் முதலாளித்துவம் மனித வளத்தை எப்படி சுரண்டுகிறது என்ற அயோக்கியத்தனத்தையும் நேரடி வசனமாக துணிச்சலாக அமைத்த காட்சிகள் தமிழ்சினிமாவின் சித்தாந்த சாதனை என்றே கூறலாம்

நடுகல் தொட்டு பிம்ப வழிபாட்டிற்கே முக்கியத்துவம் கொடுக்கும் நம் மிகை உணர்ச்சி சமூகத்தில் கம்யூனிஸம் போன்ற உயர்ந்த தத்துவங்கள் பேசி மக்களிடையே கைதட்டல் பெறுவது அத்தனை சாதாரண விடயமில்லை .

அவர் தொடுத்த பாதையில் மக்கள் அரசியலை சுசீந்தரன், ரஞ்சித், ராஜூ முருகன், கோபி நயினார் போன்ற இயக்குனர்கள் செயல்படுவது போற்றுதலுக்குரியது.

இதில் ஜோக்கர் மற்றும் அறம் போன்ற திரைப்படங்கள்  தமிழ் அரசியல் படங்களில் மிகபெரிய சாதனை என்றே கூறலாம் .

அதே சமயம் தமிழ் சினிமா சில பண்பாட்டு சாதனைகளையும் செய்து வந்திருப்பது மறக்க முடியாதது.

உலகம் முழுக்க வணிக சினிமா பெரும்பாலும் நகர வாழ்க்கை சித்தரிப்புகளையே மையமாக கொண்டு இயக்குகின்றன. கிராம சினிமாக்கள் பெரும்பாலும் கலைபடைப்பாக இருக்கிறதே ஒழிய வணிக சினிமாக்களில் அவை பயன் படுத்தப் பட்டதில்லை.

ஆனால் தமிழ்  சினிமாவில் மட்டும்தான் தொடர்ந்து கிராமத்து வாழ்க்கைக்கும் கிராமத்து மனிதர்களும் வணிக சினிமாவில் சித்தரிக்கப் பட்டு வருகின்றனர்.

மலையாள வணிக சினிமாக்கள் கிராமங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கினாலும் அவை பெரிதும் நாயர் மேனன் என உயர் குடும்ப மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டே இயங்கியது .

அவ்வகையில் தமிழ் சினிமா  கிராமப் படங்கள் மூலமாக தொடர்ந்து தன்னை பண்பாட்டு சிதைவுக்கு ஆளாக்காமல் மக்களை போராடி காத்து வருவதும் குறிப்பிட்ட சாதனை .

உண்மையில் தமிழ் சினிமா என்றாலே கிராம சினிமாக்கள் தான்.

தமிழ் சினிமாவின் கிராமங்கள்

1954-பராசக்திக்கு முன்பான தமிழ் படங்கள் பெரும்பாலும் புராண இதிகாச படங்களின் ஆதிக்கத்திலேயே இருந்தன . தமிழ் பண்பாட்டிலிருந்து விலகி கரparasakthi்நாடக சங்கீதம் பிராமண பாஷை என குறிப்பிட்ட சமூகத்தின் ரசனையை மட்டுமெ பெரிதும் பிரதிபலித்தன.

சுதந்திரத்திற்குப் பின்  திராவிட இயக்க எழுத்தாளர்களான அண்ணா, கருணாநிதி ஆகியோரின் வரவு தான் சமூக வாழ்வையும் தமிழர் பண்பாட்டையும்  பிரதிபலிப்பதாக அமைந்தன.  வேலைக்காரி ,ஓர் இரவு . பராசக்தி , ரத்தக்கண்ணீர் ஆகிய படங்களின் வெற்றிமூலம் வசனம் தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் பெற துவங்கியது. .

சமூக படங்கள் என்றால் அவை நகர வாழ்க்கையை பிரதிபலித்தாலும் தமிழரின் கிராம மனோபாவ அடிப்படையிலிருந்து அவை பிசகியதில்லை.

தேவர் பிலிம்ஸ் எம்.ஜி.ஆரின் இன் த வரிசை படங்களாகட்டும்  பீம்சிங் சிவாஜியின் ப வரிசை படங்களாகட்டும் கிராம மனோபாவ நிலௌடமை சித்தரிப்பு   கதைகளே பெரிதும் விளங்கின.

குறிப்பாக  பாசமலர், தெய்வ மகன், புதிய பறவை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் அனைத்தும் வேற்று மொழியில் உருவாக்கப்பட்ட கதைகள் என்பதும் நாம் கவனிக்கத்தக்கது.

70-துகளில் இந்தி சினிமாக்கள் ஷோலேவுக்கு பிறகு ஹம் கிஸிசே கம் நகி, குர்பானி , ஷான் , டான் என அகண்ட திரையில் நகர பாவத்துக்கும் பகட்டான  அரங்க அமைப்புக்கும் மாறியபோது கூட   தமிழ் சினிமா கிராமத்தை நோக்கி தீவிரமாகியது.

அன்னக்கிளி. பதினாறு வயதினிலே போன்ற படங்கள் அந்த தடத்தை அழுத்தமாக  ஊன்றசெய்தன

பதினாறு வயதினிலே

பதினாறு வயதினிலே-யில்தான் நிலவுடமை  மனோபாவம் தாண்டி வாழ்க்கை சித்தரிப்பு நிலவியல் பரப்பு ஆகியவை முதன்மைப்படுத்தப்பட்டன .அதுவரையிலான கிராமப் படங்களில் பண்ணையார் இருப்பார் அவளுக்கு ஓரு மகன் அல்லது மகள் இருப்பார்  என துவங்கி நில பிரபுத்துவ குணங்களை இறுதியில் காப்பாற்றுவதாக முடியும்.

விவசாயமில்லாத வேட்டை சமூகத்தின் கிராம வாழ்வு இதில் புலப்பட்டது. கிராமத்தின் எளிய மனிதர்கள் மைய பாத்திரங்களாக  உருமாற்றமாகினர்.

ஆனால் அதன் பிறகு  அவரே கூட அசலான கிராமத்தை மண்வாசனையிலதான் மீட்க முடிந்தது.

இடையில் வந்த படங்களில டவுன் எனப்படும் சிற்றூர்கள் தான் அதிகம் கி போ ரயில்.  ,புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை ஆகியவை  கிராமத்துப் படமாக இருந்தாலும் அவற்றின் பாத்திரங்கள் வழக்கமான சினிமா பாணி கதைகளை சார்ந்திருந்தன.

பதினாறு வயதினிலே தவிர மற்ற கிராமத்துப் படங்கள் அனைத்துமே நிலப்பரப்பை  தொலைத்து வழக்கமான நிலவுடமை வகையறாப் படங்களாக கணக்கிடலாம்.

பதினாறு வயதினிலேவுக்கு பிறகு  வந்த மகேந்திரனின் உதிரிப்பூக்கள் பாலு மகேந்திராவின் அழியாதகோலங்கள்  ஆகியவை கூட  நகரத்து மனிதர்களின் பார்வையிலான கிராமங்களாகவே இருந்தன.Alaigal-Oivathillai

பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் முற்போக்கான  கிராமப் படமாக இருந்தபோதும் இயல்பிலேயே அதிலிருந்த  நாடகத்தன்மை   மற்றும் சமூக அரசியல்  ஆகியவை அதன் எதார்த்த தன்மையிலிருந்து விலக்கிவைத்தன.

தமிழ் சினிமாவில் ஏ.வி.எம்மின் சகலகாலாவல்லவன் பல வகையில் தமிழ் சினிமாவில் பல வகையில் பண்பாட்டுப் புரட்சி ?!யை உண்டாக்கிய  திரைப்படம் .

டிஸ்கோ நடனம் முதற்கொண்டு பள பள அரங்க நிர்மானம் தொடர்ந்து ஜட்டி பிராவுடன் கிளப் நடனம் ஆகியவை மசாலா அயிட்டமாக மாறின  சில்க், அனுராதா ,டிஸ்கோ சாந்தி போன்றவர்கள் தமிழ்ர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாகிப்போயினர் . இதில் சில்க் உண்மையில் தமிழர்களின் அக்காலத்தின் கலாச்சார பிம்பமாக மாறிப்போகும் அளவுக்கு தமிழர்களின் வாழ்க்கையில் அங்கமாகிப் போனார். தமிழர்களின் செக்ஸ் வறட்சியை போக்க வந்த வாராது வந்த மாமணி அவர்.

தொடர்ந்து இக்காலத்தில் ரஜினி கமல் படங்களுக்கு இயக்குனர் எஸ் பி முத்துராமன் இந்த மசாலாவை உற்பத்தி செய்வதில் விற்பன்னராக இருந்தார். அவரும் புவனா ஒரு கேள்விக்குறி , உள்ளிட்ட பல படங்களை இயக்கி நல்ல பெயர் எடுக்க விரும்பினார் ஆனாலும் அந்த காலகட்டத்தில் மசாலாவை உற்பத்தி செய்வதில் அவரை விட விற்பன்னர் யாரும் வராத காரணத்தால் அவருக்கு அதுவே சிறந்த பணியாகவும் வாய்க்கப்பட்டது .

பிற்பாடு ராஜசேகர் அந்த இடத்தை நிரப்பினாலும் சொற்ப காலத்திலேயே அவர் மரணித்தும் போனார்.

இந்த காலாத்தில் மோகன் நகர நாகரீகத்தை ஓரளவுக்கு மைக் பிடித்து மென்னுணர்வுகளை காப்பாற்றி வந்தார்.

இந்த நகர நாகரீகத்துக்கு முடிவு கட்ட ஒருவர் உதயமானார் அவர்தான் ராமராஜன்

ராமராஜன் யுகம்

80-பதுகளில் ரஜினி கமல் படங்கள் பெரும்பாலும் நகரத்துப் படங்களாக இருந்த காரணத்தால் 90 சதவீத கிராமத்து மனோபாவம் கொண்டரசிகர்கள் ஏக்கத்தில் karakattakaranதவித்த காரணத்தினால்தான் டவுசருடன் ராமராஜன் அசலான கிராமத்தவனாக ஒடி வந்தபோது மக்கள் அள்ளிக்கொண்டனர் அதனாலேயே அவர் மக்கள் நாயகன் அந்தஸ்தைபெற்றார்.

நகரத்து சினிமா ரசிகர்களால் ராமராஜனின் திடீர் வெற்றியை ஏற்றுக்கொள்ளவே முடியவில்ஸை. பலர்  கேலிசெய்தனர்.ஆனால்  தமிழ் நாட்டின் அசலான கிராம மனோபாவம் அவரை உச்சத்துக்கு அழைத்துச்சென்றது.

நம்ம ஊரு , நல்ல ஊரு எங்க ஊரு பாட்டுக்காரன், , செண்பகமே செண்பகமே  போன்ற படங்களின் தொடர் வெற்றி அவரை திரையுலகில் ரஜினி கமல் ஆகியோருக்கு இணையாக வைத்து பேசப்படும் அளவுக்கு கொண்டு போனது .

இதற்கு முக்கிய காரணாம் தமிழ் சினிமாவின் கிராமத்து மனோபாவம் . அக்காலத்தில் மேற்கத்திய வரவான் டிஸ்கோ இசை கொடிகட்டி பறந்த காலம், சுசுகி யமஹா போன்ற பைக்குகள் மூலம் உலக மயமாக்களின் முதல் காற்று வீசத்துவங்கிய காலம்  உலகமே நகர வாழ்க்கைக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில் ராமராஜனின் வெற்றியை வெறும் சினிமாவோடு மட்டுமே வைத்து அளவிட முடியாது

தமிழர்களின் நெஞ்சங்களில் ஊறிக்கிடந்த பண்பாட்டு அடையாளங்களின் பிம்பம் ராம ராஜன்

டவுசர் போட்டுக்கொண்டு மாடுமேய்த்த ஞாபகத்திலிருந்து தமிழன் மீளவில்லை தன் அடையாளங்களை தன் நிலப்பரப்புககளை இதன் மூலம் தன் வாழ்க்கையை உறவுகளை மீண்டும் திரையில் பார்க்க விழைந்த போது  ராம ராஜன் மூலமாக அது நிகழ மக்கள் அவரை கொண்டாடி தீர்த்தனர்.

இந்த கொண்டாட்டத்தின் உச்சமே கரகாட்டக்காரன்.கரகாட்டக்காரன்

கங்கை அமரனின்  கிராமத்துப் படங்கள் வழக்கமான பண்ணையார் மைய நிலபிரபுத்துவ படங்களே. அவை  பாரதிராஜாவினுடையது போல அழுத்தமான நிலப்பரப்பு மற்றும் அடையாளங்களைக் கொண்டிரா விட்டாலும்  அதே சமயம்  அதுவரை காண்பிக்கப்படாத வித்தியாசமான கிராமத்து மனிதர்கள்  பார்க்க முடிந்தது அவரது வெற்றிக்கு முக்கிய காரணம். கரகாட்டக்காரனில்  சமூகத்தின் இன்னொரு மனிதர்களின் வாழ்க்கை சித்தரிப்பு அழகாக சொல்லப்பட்டதின் காரணமாகவும் தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் தொன்மங்களில் ஊறிக்கிடந்த இசையை மீட்டு புத்துருவாக்கம் செய்த காரணங்களுக்காகவும்  அது வணிக படம் என்பதை தாண்டி தமிழ் சினிமாவின்  முக்கியத்துவம் வாய்ந்த படமாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டது.

படத்தின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்தது இளையராஜாவின் இசை . அதில் வரும் துடும்பு உடுக்கை நையாண்டி மேளம் போன்ற தமிழரின் ஆழ் மனங்களில் உறங்கிக்கிடந்த  இசை புதைந்துகிடந்த தொன்மங்களை கிளறி பூதகரமாக கிளப்பிவிட்டது . அந்த இசை ஒவ்வொருவர் உடலையும் அசைத்தது  தியேட்டரில் இறுதிகாட்சிக்கு பலரும் சாமியாடினர் . அதற்குகாரணம் பலரும் பக்தி என தவறாக நினைத்துக்கொண்டனர் .அனைவரையும் ஆட வைத்தது அவர்களது ஆதி வேரின் ஞாபகங்கள் . இளையராஜாவின் இசை அவர்களது உடலுக்குள் ஊடுருவி மூதாதையர்களை வெளிக்கொணர்ந்தது என்றும் கூறலாம்

 

(தொடரும்)
 

Theneehead-1

   Vol:17                                                                                                                               05.12.2018