Theneehead-1

Vol: 14                                                                                                                                                06.01.2017

வில்பத்து விவகாரம் ஊடகங்கள் வாயிலாக திரிவுபடுத்தப்படுகின்றது

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் "வில்பத்து தொடர்பான எமது நிலைப்பாடு" எனும் தலைப்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (05) காலை கொழும்பு ரேனுகா ஹோட்டலில் இடvilpadம்பெற்றது.

அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன், இராஜாங்க ஏ.எச்.எம்.பௌசி, பிரதியமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான், தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் அசாத்சாலி உள்ளிட்ட பிரதிநிதிகள், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் N.M. அமீன் தலைமையில் இங்கு ஒன்றுகூடினர்.

"வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இலங்கை நாட்டவர்கள். இவர்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அல்லது மாலைத்தீவில் இருந்து வந்தவர்களல்ல. இவர்கள் கள்ள தோணிகள் அல்ல. இவர்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறும் போது ஆக்கிரமிப்பு செய்வது போல் சூழலியலார்கள் காட்டுகின்றனர்.

30 வருடங்களாக தமது சொந்தக் காணிகளில் வளர்ந்திருக்கும் பற்றைக்காடுகளை அழித்துக்குடியேறும் போது இவர்கள் காடுகளை அழிப்பதாக காட்ட முயற்சிக்கின்றனர்" என இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.

அமைச்சர் ரிஷாட் கூறும் போது, "வில்பத்து விவகாரம் ஊடகங்கள் வாயிலாக திரிவுபடுத்தப்படுகின்றது என்றும், சிங்கள ஊடகங்கள் முஸ்லிம்களையும், முஸ்லிம் அமைச்சர்களையும் நாட்டிற்கு அநியாயம் இழைக்கின்ற நிலைப்பாட்டில் வைத்துக் காட்டுவதாகவும் கூறினார்.

"இது அமைச்சர் ரிஷாத்தின் பிரச்சினையல்ல, முஸ்லிம்களின் பிரச்சினையல்ல, இது தேசிய பிரச்சினை. இதற்கு அரசாங்கத்தின் மூலமாகவே தீர்வு கிடைக்க வேண்டும். முஸ்லிம்கள் அரசிடம் அபிவிருத்திகளை கோரவில்லை. நாமே அதை செய்துகொண்ட நிலையிலும், அரசு எம் மீது பலி போடுவது தகுமா? இன நல்லுறவை பேணும் முஸ்லிம்களுக்கு, நன்றி சொல்ல அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது." என்று இந்நிகழ்வில் உரையாற்றிய அசாத் சாலி கூறினார்.

dantv