முதியோர் இல்லத்தில் சேர்க்க முயன்ற மகனை சுட்டுத்தள்ளிய தாய்!


முதியோர் இல்லத்தில் சேர்க்க முயன்றதற்காக தனது 72 வயது மகனை 92 வயதுடைய தாய் சுட்டுத்தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Anna_Mae_Blessing

அமெரிக்காவின் அரிசோனா மாகாாணத்தில் உள்ள ஃபௌன்டைன் ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள மரிகோபா கௌன்டி என்ற இடத்தில் இருக்கும் வீட்டில் ஜூலை 2-ஆம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் 72 வயதுடையவரின் உடல் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக அவரின் 92 வயது தாய் கைது செய்யப்பட்டார். போலீஸார் அவரை கைது செய்து அழைத்துச் சென்ற போது, 'நீ என் வாழ்க்கையை பறித்தாய், அதனால் நான் உன் வாழ்க்கையை பறித்துவிட்டேன்' என்று கூறியவாறு இருந்தார். பின்னர் நீதிமன்றத்தில் தனது மகனை கொலை செய்தததை ஒப்புக்கொண்ட அந்த முதியவர், அதற்கான காரணத்தை கூறியது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அன்னா மே பிளெஸ்ஸிங் (வயது 92), ஆகிய என்னை சரியாக கவனித்துக்கொள்ள முடியாத காரணத்தால், என்னுடைய 72 வயதுடைய மகன், அருகிலிருக்கும் முதியோர் இல்லத்தில் சேர்க்க முயன்றார். இதுதொடர்பாக இவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பெரிதானது. அப்போது என்னிடம் வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு எனது மகனை சுட்டேன். இதில் அவருக்கு கழுத்து மற்றும் தாடைப் பகுதிகளில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இந்த துப்பாக்கி எனது கணவரால் கடந்த 1970-ஆம் ஆண்டு எனக்கு வாங்கித் தரப்பட்டது. எனது இந்தச் செயலுக்கு எனக்கு மரண தண்டனை தாருங்கள் என்று நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், தனது மகனின் 57 வயது பெண் தோழியையும் சுட முயன்றுள்ளார். இதில் சுதாரித்துக்கொண்ட அந்தப் பெண், முதியவரிடம் இருந்த துப்பாக்கியை தூக்கி வீசிவிட்டு உடனடியாக அவரை ஒரு அறையில் அடைத்துவிட்டு போலீஸுக்கு தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து கடத்தல் மற்றும் கொடூரத் தாக்குதலின் அடிப்படையில் அந்த முதியவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. மேலும், பிணையத் தொகையாக 500,000 அமெரிக்க டாலர்கள் விதிக்கப்பட்டது.

 

Theneehead-1

   Vol:17                                                                                                                                06.07.2018