Theneehead-1

   Vol:17                                                                                                                               06.10.2018

மகாவலி எல் வலய நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

மகாவலி எல் வலயம் தொடர்பிலான நடவடிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டmahavaliமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

கடந்த வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணி குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இது குறித்து அறிவுறுத்தலை விடுத்தார் என அவர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

இதேவேளை, மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவை உறுப்பினர்களுக்கும் - ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான சிரேஷ்ட மனித உரிமை ஆலோசகருக்கும் இடையில் முல்லைத்தீவில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இன்று முற்பகல் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான சிரேஷ்ட மனித உரிமை ஆலோசகர் Juan Fernandez jardon மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலைமாறு கால நீதிக்கான ஆலோசகர் Estelle askew Renaut ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, மகாவலி அபிவிருத்தித் திட்டம் தொடர்பாகவும், தொல்பொருள் திணைக்களம், வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் முதலான திணைக்களங்களின், அதிகாரசபைகளின் நில அபகரிப்பு தொடர்பாக அவர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டதாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பாக அரசிற்கு அழுத்தம் கொடுப்பதாக ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் உறுதி அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.