Theneehead-1

Vol: 14                                                                                                                                                07.01.2017

குளியாப்பிட்டிய மோட்டார் வாகன தொழிற்சாலை வருமானத்தை இல்லாமற்செய்யும்: இறக்குமதியாளர்கள் சங்கம்

குளியாப்பிட்டியவில் நிர்மாணிக்கப்படும் மோட்டார் வாகனங்களைப் பொருத்தும் தொழிற்சாலை, நாட்டிற்கு வருமானத்தை இல்லாமல் செய்யும் மற்றுமொரு திட்டமாக அமையலாம் என மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.senok

உதிரிப்பாகங்களாகக் கொண்டு வரப்பட்டு பொருத்தப்படும் மோட்டார் வாகனங்களை, இலங்கையில் சந்தைப்படுத்துவது நாட்டிற்கான வருமான மார்க்கம் அல்ல என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தமது குறியீட்டு நாமத்தில் எவ்வித முதலீடுகளையும் இதுவரையில் இலங்கையில் மேற்கொள்ளவில்லை என, Volkswagen நிறுவனம் நேற்று நியூஸ்பெஸ்ட்டுக்கு உறுதிப்படுத்தியது.

மின்னஞ்சல் ஊடாக இரண்டு விடயங்கள் தொடர்பில் Volkswagen நிறுவனத்திடம் இன்று நியூஸ்பெஸ்ட் வினவியது.

2015 செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் இலங்கையில் தொழிற்சாலை ஒன்றை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதா?

Volkswagen நிறுவனத்தின் முதலீடுகளைத் தடுக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் உத்தியோகப்பூர்வ அறிவித்தலொன்றை விடுத்ததா?

இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலேயே வினவப்பட்டது.

இலங்கையில் தமது குறியீட்டு நாமத்தில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என Volkswagen நிறுவனத்தின் தொடர்பாடல் பிரிவைச் சேர்ந்த கெத்தரின் ஹோமன் பதிலளித்தார்.

குளியாப்பிட்டிய தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்காக Senok Automobiles நிறுவனத்துடன் முதலீட்டு சபை ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைக்கு அமைய மூன்று வருட காலத்திற்கு உள்நாட்டு சந்தையில் மோடடார் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும்.

முதல் வருடத்தில் 500 வாகனங்களையும் இரண்டாவது வருடத்தில் 750 வாகனங்களையும் மூன்றாவது வருடத்தில் 1000 வாகனங்களையும் உற்பத்தி செய்வதற்கு இந்த உடன்படிக்கை ஊடாக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

நான்காவது வருடம் 1500 வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு இவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதுடன், அவற்றில் 75 வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

அதன் பிரகாரம், Senok Automobiles நிறுவனத்திற்கு சர்வதேச நேரடி முதலீடாக எந்த அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படுகின்றது என்பதே தற்போது எழுந்துள்ள சிக்கலாகும்.

அதிகளவிலான தொழில் வாய்ப்புகள் ஏற்படும் என கூறியுள்ள போதிலும் முதலீட்டு சபை மற்றும் குறித்த நிறுவனத்திற்கு இடையிலான உடன்படிக்கையில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், தேவை ஏற்படின் அனுமதியைப் பெற்று வெளிநாட்டவர்களை சேவையில் ஈடுபடுத்த முடியும் என அந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

dantv