Theneehead-1

   Vol:17                                                                                                                                07.08.2018

3 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை - ஜன்னலில் பார்த்த பாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி


நொச்சியாகம பகுதியில் தனது 3 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தந்தையின் தாய் மற்றும் 3 வயது மகள் ஆகிய மூவருமே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

குறித்த நபரின் மனைவி பிரிதொரு நபரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்

சந்தேக நபரின் சகோதரிகள் இருவர் குழந்தைகள் காப்பகத்தில் வசிக்கின்றனர்.

சந்தேக நபரின் தாய் குறித்த சகோதரிகளை பார்வையிட குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய போது வீடு உள்ளே தாழிடப்பட்ட நிலையில் குழந்தை அழுகும் சத்தம் கேட்டுள்ளது.

வீட்டின் கதவினை நீண்ட நேரம் தட்டிய பின்னர் வீட்டினை திறக்காமையினால் சந்தேக நபரின் தாயான பாட்டி ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.

இதன்போது குறித்த நபர் தனது 3 வயது மகளை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திக்கொண்டிருப்பதனை பார்த்து அதிர்ச்சியில் பாட்டி சத்தமிட்டுள்ளார்.

பின்னர் குறித்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு சிறுமியை அவரிடமிருந்து பிரித்து தூக்கிக்கொண்டு பாட்டி ஓடியுள்ளார்.

பாட்டியின் சத்தத்தை கேட்ட அயலவர்களை சந்தேக நபரை மடக்கி பிடித்து தாக்கியுள்ளனர்.

காவல் துறைக்கு குறித்த நபர் தொடர்பில் தகவல் வழங்கியதும் காவல் துறையினர் 28 வயதான குறித்த நபரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

சந்தேக நபரை நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.