Theneehead-1

Vol: 14                                                                                                                                                08.01.2017

கனடா: கிழக்கில் 'எமது சமூகம்" பற்றிய கலந்துரையாடல் 1


கிழக்கிலங்கையில் நமதுபாரம்பரியமான  காணி, வியாபாரம், கல்வி, சுகாதாரம் என்பனவற்றுடன் வறிய மக்களுக்கும்   விதவைகளுக்கான   பொருளாதார  அபிவிருத்தி, பின்தங்கிய  பிரதேச  கல்விவளர்ச்சி  இடம்பெயர்ந்து அடிப்படை வசதியின்றி வாழும்மக்கள் போன்றவற்றுடன்  கலாசாரசீரழிவும்  மிகப்பெரிய  பிரச்சனைகளாக  உள்ளன என்பது நீங்கள் அறிந்ததே.

தொடராக நம்மண்ணில் இடம்பெற்றுவரும்  இப்பிரச்சனைகளை  தடுக்கும் நோக்கத்துடன் கிழக்கில்வாழும்  உயர்பதவியில் உள்ளவர்கள், கல்விமான்கள், வர்த்தகர்கள், சமூகசேவையாளர்கள்,விவசாயிகள், சமயக்குருமார்கள் எனச்சுமார் 750ற்கு மேற்பட்டவர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அண்மையில் மட்டக்களப்பில் நமக்கு எதிராக நடைபெறவிருந்த சிலஅசம்பாவிதங்களையும் காணி அத்துமீறல்களையும்  இவர்கள்  தடுத்து வெற்றிகண்டுள்ளனர்.

'எமதுசமூகம்"  என்னும்  பெயரில்  இயங்கும்  இவ்அமைப்பின்  திட்டமிடல்  மற்றும்  ஆலோசனைப்பிரிவிலும்  அடிமட்ட  தொண்டர் சேவையிலும் பலகல்விமான்களும் உயர்அதிகாரிகளும் ஆர்வத்துடன் செயல்படுகின்றனர். வைத்தியர்கள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், ஆணையாளர்கள் இயக்குனர்கள். பேராசிரியர்கள்போன்றோர் அங்கம் வகிக்கின்றனர்.  இக்குழுவினர் தங்கள் தொழில்நேரம் தவிர்ந்து சனி, ஞாயிறு மற்றும் வேலைநாட்களிலும் மிகவும் அர்ப்பணிப்புடன் நமது மக்களுக்காக எந்தவித பிரதிபலனும்பாராமல் அவர்கள்  நன்மைகருதி செயல்படுகின்றனர்.

அப்படியாக  மிகஅக்கறையுடன் செயல்படுபவர்களில்  ஒருவர்தான்  Dr.இ.முரளீஸ்வரன்.   கல்முனை  ஆதாரவைத்தியசாலையின்  பிரதமவைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றும்   Dr.இ.முரளீஸ்வரன் அவர்கள் அவ்வைத்தியசாலையினை இலங்கையின் ஒருமுதல்தர வைத்தியசாலையாக  மாற்றியவர்.  அவர் நமது பிரதேசத்தில்  அடையாளம்

காணப்பட்ட மிகவும்முக்கியமான திட்டங்களை நடைமுறைபடுத்தும் நோக்குடன் தன்நேரத்தினனயும் அவரது இளம்குடுமப தேவைகளையும்

தியாகம்செய்து ஒருகுறுகியகால அழைப்பினை ஏற்று Dr. முரளி கனடா வந்துள்ளார்.  மட்டக்களப்பில் இயங்கிவரும் "எமதுசமூகம்" பற்றியும் கிழக்கில்

இடம்பெறும்  அத்துமீறல்கள் கலாசாரசீரழிவுகள் மற்றும் போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்டவர்கள்  பற்றியும் அவர் நம்முடன் கலந்துரையாடவுள்ளார். 


நமக்காக தனது முக்கிய பொறுப்புக்ளையும் தவிர்த்து நம்முடன் கலந்துரையாடவரும்  Dr.முரளி அவர்களுக்கு நமது நன்றியினை தெரிவிக்கும் அதேவேளை நீங்களும்   இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி தயவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். நம்மண்ணிலும்,மக்களிலும் மிகுந்த அக்கறையுடனும் கரிசனையுடனும்செயலாற்றும்

உங்கள் ஒவ்வொருவரின் வருகையானது இக்கலந்துரையாடலை பயனுள்ளதாக்கும் என்பது எனது நம்பிக்கை. தயவுசெய்து உங்கள் நண்பர்களுக்கும் இந்த அழைப்பினைத் தெரியப்படுத்தவும்.      http://www.karaitivurep.com/view.php?newsID=1759

 

 காலம்:       Jan. 14- 2017           இடம்:    Etobicoke Civic Centre,    # 399 - The West Mall (427 &  Burnhamthope) Etobicoke     நேரம்:      11.00 AM                                                    

நன்றி வணக்கத்துடன்

அஜந்தா ஞானமுத்து

416 707 2589

dantv