Theneehead-1

Vol: 14                                                                                                                                                08.01.2017

உள்ளக இடம் பெயர்ந்த முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தல் மற்றும் வில்பத்து பிரச்சினை

                                        முகமட் ஷரீப் அசீஸ்

வட மாகாணத்தில் இருந்து எல்.ரீ.ரீ.ஈ யினால் முஸ்லிம்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு 27 ஆன்டுகளாகி விட்டன, மற்றும் அவர்கள் புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல உள்ளக இடம் பெயர்ந்தவர்கDr.-Mohamed-Shareefளுக்கான முகாம்களில் மிகவும் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். மே 2009ல் முடிவடைந்த மோதல் இந்த உள்ளக இடம் பெயர்ந்த முஸ்லிம்களுக்கு மீள் குடியேற்றம் பற்றிய ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கியது. எனினும் ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகம் மீள் குடியமர்த்தலில் உள்ளக இடம் பெயர்ச்சிக்கு ஆளான தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கியதுடன் உள்ளக இடம் பெயர்ந்த முஸ்லிம்களை அதிலிருந்து ஓரங்கட்டியது. இது சில உள்ளக இடம் பெயர்ந்த முஸ்லிம்களை தாமாகவே தங்கள் சொந்த இடங்களுக்கு செல்வதற்கு வழி அமைத்தது.

முன்னாள் மீள் குடியேற்ற அமைச்சர் றிசாட் பதியுதீனால் சில முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்த இயலுமாக இருந்தபடியால் அவர்கள் இந்த ஓரங்கட்டப்பட்ட உள்ளக இடம் பெயர்ந்த முஸ்லிம்களுக்கு சில வீடுகளை வழங்கச் சம்மதித்தார்கள். 2012ல் மன்னார் மாவட்டம், மறிச்சுக்கட்டியில் வாழ்ந்த முஸ்லிம்கள் கட்டார் அறக்கட்டளையின் உதவியுடன் அங்கு தங்கள் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை ஆரம்பித்தார்கள். அப்போது முதல் சில புத்த பிக்குகள் மற்றும் ஊடகக் குழுக்கள் என்பன அது ஒரு சட்டவிரோத நடவடிக்கை மற்றும் வில்பத்து தேசிய வனத்துக்குள் நடக்கும் அத்துமீறல் என அவர்களின் மீள்குடியேற்றத்தை குற்றம்சாட்ட தொடங்கின. முஸ்லிம்களின் கண்ணோட்டத்தில் இது மோதல் ஆரம்பமாவதற்கு முன்னரே அவர்கள் 100 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்த பூமி மற்றும் அதன் உரிமையை நிரூபிக்கும் காணி உறுதிகள் (சட்டப்படியான ஆவணங்கள்)அவர்களிடம் உள்ளன மற்றும் அவர்களின் சொந்த இடங்களில் வாழும் உரிமை அவர்களுக்கு உள்ளது.

1983ல் ஸ்ரீலங்கா இராணுவத்துக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ க்கும் இடையே ஆரம்பித்த நீண்ட ஆயுதப் போராட்டம் 90,000 மக்களின் உயிhகளைக் குடித்ததுடன் மற்றும் மூன்று இனங்களையும் சேர்ந்த 1 மில்லியனுக்கும் மேற்பட்ட உள்ளக இடம் பெயர்ந்தவர்களையும் உருவாக்கியது, அதில் தமிழர்கள் 82மூ, முஸ்லிம்கள் 14மூ மற்றும் சிங்களவர்கள் 4மூ,( 2009,ஐநா அகதிகள் உயர் ஸ்தானிகராலய அறிக்கையின்படி) ஆகும். 1990ல் எல்.ரீ.ரீ.ஈ வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் ஏறக்குறைய 15,000 முஸ்லிம் குடும்பங்களை கட்டாயமாக வெளியேற்றின: அதில் யாழ்ப்பாணம் 3,475, மன்னார் 8,200, வவுனியா 1,800, முல்லைத்தீவு 1,000, மற்றும் கிள்pநாச்சி 525 (அதே 2009 யு.என். எச்.சி.ஆர் அறிக்கை). அப்போது முதல், இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் பிரதானமாக புத்தளம் மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்து அங்கு உருவாக்கப்பட்ட உள்ளக இடம் பெயர்ந்தோருக்கான முகாம்களில் வாழ்ந்து வந்தார்கள். இந்த உள்ளக இடம் பெயர்ந்தவர்கள் முகாம் எனப்படும் ஐ.டி.பி முகாம்களில் வாழ்க்கையானது மிகவும் பரிதாபகரமான நிலையில் இருந்ததுடன் நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. இந்த ஐ.டி.பி முகாம் வாழ்க்கை ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் மற்றும் வயதானவர்கள் என அனைவரையும் நெறி பிறழ வைத்ததுடன், உடல், உள, சமூக, பொருளாதார, மற்றும் கல்வி ரீதியாக அவர்களை வெகுவாக பாதிப்படையவும் வைத்தது.

மே 2009 ல் முடிவடைந்த மோதல் இந்த உள்ளக இடம் பெயர்ந்த முஸ்லிம்களுக்கு மீள் குடியேற்றம் பற்றிய ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கியது. எனினும் ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகம் மீள் குடியமர்த்தலில் உள்ளக இடம் பெயர்ச்சிக்கு ஆளான தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கியதுடன் உள்ளக இடம் பெயர்ந்த முஸ்லிம்களை அதிலிருந்து ஓரங்கட்டியது. இது சில உள்ளக இடம் பெயர்ந்த முஸ்லிம்களை தாமாகவே தங்கள் சொந்த இடங்களுக்கு செல்வதற்கு வழி அமைத்தது. முன்னாள் மீள் குடியேற்ற அமைச்சர் றிசாட் பதியுதீனால் சில முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்த இயலுமாக இருந்தபடியால் அவர்கள் இந்த ஓரங்கட்டப்பட்ட உள்ளக இடம் பெயர்ந்த முஸ்லிம்களுக்கு சில வீடுகளை வழங்கச் சம்மதித்தார்கள்.

 2012ல் மன்னார் மாவட்டம், மறிச்சுக்கட்டியில் வாழ்ந்த முஸ்லிம்கள் கட்டார் அறக்கட்டளையின்(அல் - ஜாசிம்) உதவியுடன் அங்கு தங்கள் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை ஆரம்பித்தார்கள். அப்போது முதல் சில புத்த பிக்குகள் மற்றும் ஊடகக் குழுக்கள் என்பன அது ஒரு சட்டவிரோத நடவடிக்கை மற்றும் வில்பத்து தேசிய வனத்துக்குள் நடக்கும் அத்துமீறல் என அவர்களின் மீள்குடியேற்றத்தை குற்றம்சாட்ட தொடங்கின. முஸ்லிம்களின் கண்ணோட்டத்தில் இது மோதல் ஆரம்பமாவதற்கு முன்னரே அவர்கள் 100 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்த பூமி மற்றும் அதன் உரிமையை நிரூபிக்கும் காணி உறுதிகள் (சட்டப்படியான ஆவணங்கள்)அவர்களிடம் உள்ளன மற்றும் அவர்களின் சொந்த இடங்களில் வாழும் உரிமை அவர்களுக்கு உள்ளது. இந்த பிரச்சினை சிறிது சிக்கல் நிறைந்ததாக உள்ளதுடன் மற்றும் வில்பத்துவில் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி அநேகருக்கு சரியான புரிந்துணர்வு இல்லை.

உண்மையில் கிராமங்களான மறிச்சுக்கட்டி, கரடிக்குழி, பாலக்குழி, கொண்டச்சி என்பன மன்னார் மாவட்டத்தின் சில எல்லைக் கிராமங்களாக உள்ளதுடன் விலபத்து தேசிய வனத்துக்கு மிக சமீபமாக அமைந்துள்ளன. மோதல் மற்றும் மக்கள் குடியிருக்காமை காரணமாக இந்தக் கிராமங்கள் காடுபற்றிப்போய் ஒரு பெரிய வனத்தைப் போல காட்சியளிக்கின்றன. 2012ல் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா வில்பத்து வனப்பிரதேசத்தின் நீளத்தை விரிவாக்கியதோடு, இந்த அண்மைக் கிராமங்களும் வில்பத்து வனப்பகுதியின் ஒரு பகுதி என அறிவித்தார். அப்போது முதல் வன இலாக, சுற்றுச்சூழல் நபர்கள் மற்றும் சில ஊடக நபர்கள் ஆகியோர் இந்த மீள்குடியேற்றம் வில்பத்து வனத்துக்குள் நடைபெற்ற அத்துமீறல் எனக் குற்றம்சாட்ட ஆரம்பித்தார்கள். இதற்கிடையில் சட்டபூர்வமான காணி உறுதிகளை வைத்திருந்த மக்கள் இது எங்களின் சொந்த இடம் மற்றும் இங்கு வாழ்வதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது என வாதாடத் தொடங்கினார்கள். உண்மையில் இது பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் உள்ள ஒரு சட்டப் பிரச்சினை.

மீள்குடியேற்றத்தில் உள்ள சவால்கள்

வட பகுதி உள்ளக இடம் பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இன்னமும் தீர்க்கப்படாமலே உள்ளது. அதற்கு தற்போதைய நிலமையிலுள்ள பல காரணிகள் வலியுறுத்தப்படுகின்றன. நாலு பிரதான சவால்கள் அவர்களது மீள்குடியேற்றத்தை தடுக்கின்றன. முதலாவது, அவர்களது மீள்குடியேற்றத்திற்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கணிசமானளவு திட்டங்கள் இல்லை. இரண்டாவது, வட மாகாண முஸ்லிம்களுக்கு சொந்தமான முக்கியமான பகுதியளவு காணிகள் மோதலின்போது எல்.ரீ.ரீ.ஈ யினால் கைப்பற்றப்பட்டு தமிழ் மக்களிடம் வழங்கப்பட்டு விட்டன. மூன்றாவது, வீடமைப்பு உதவிகள் பொதுமானதாக இல்லை, உண்மையில் இந்திய அரசாங்கம் 50,000 வீடுகளை உள்ளக இடம் பெயர்ந்த மக்களுக்காக ஒதுக்கியுள்ளது, ஆனால் அதில் எத்தனை வீடுகள் உள்ளக இடம் பெயர்ந்த முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பது தெளிவு இல்லை. இறுதியாக, ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றும் சர்வதேச அமைப்புகளால் பராமரிக்கப்படும் மோதலுக்குப் பின்னான மீள்குடியேற்றத் திட்டங்களின் பயனாளிகளாக உள்ளக இடம் பெயர்ந்த முஸ்லிம்களை இலக்கு வைத்து செயற்படும் முயற்சிகள் பற்றாக்குறையாக உள்ளன. உண்மையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றும் சர்வதேச அமைப்புகள் என்பன உள்ளக இடம் பெயர்ந்த தமிழர்களின் மீள்குடியேற்றத்திற்கே பிரதான கவனம் செலுத்துகிறது. ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கருத்து, முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைக் காட்டிலும், தமிழ் ஐ.டி.பிக்களின் மீள்குடியேற்றமே மிகவும் முக்கியமானது, யுத்தத்தில் சிங்கள மற்றும் தமிழ் இனக் குழுக்களே பிரதானமாக பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களின் பதற்றத்தை முதலில் தணிக்க வேண்டும் என்பதாகும். இதற்கு சமாந்தரமாக சர்வதேச அமைப்புகள் மற்றும் நன்கொடையாளர்கள் தமிழ் ஐ.டி.பிக்களை மீள்குடியேற்றுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றன. அதைத் தவிர இந்த விடயத்தில் எந்தவித ஊடக பிரச்சாரமோ அல்லது சிவில் சமூகம் மற்றும் ஊடகக் குழுக்கள் என்பனவற்றிடம் இருந்து எந்தவிதமான அழுத்தங்களும் மேற்கொள்ளப் படுவதில்லை.

மறிச்சுக்கட்டியில் மீள்குடியேற்றம்

மறிச்சுக்கட்டி மிகவும் புரதான கிராமங்களில் ஒன்று, அது மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. 1989ல், அந்தக் கிராமத்தில் கிட்டத்தட்ட 200 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. 1990ல் அவர்கள் எல்.ரீ.ரீ.ஈயினால் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு புத்தளத்துக்கு நகர்ந்தார்கள், மற்றும்  கடந்த இரண்டு தசாப்தங்களாக அங்கு அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். 2012ல் சில முஸ்லிம் ஐ.டி.பிக்களான 73 குடும்பங்கள் தங்கள் சொந்த இடத்துக்குத் திரும்பி கட்டார் அறக்கட்டளையுடன் தங்கள் வீடுகளைக் கட்டத் தொடங்கியதுடன், விவசாய செய்கையிலும் ஈடுபட ஆரம்பித்தார்கள். மறிச்சுக்கட்டி கிராமத்தில் முஸ்லிம் ஐ.டி.பிக்களினது மீள்குடியேற்றம் ஒரு ஊடகத்தில்(ஹிரு தொலைக்காட்சி) ஒரு சட்ட விரோத குடியேற்றம் மற்றும் வில்பத்து தேசிய வனப்பகுதிக்குள் நடக்கும் அத்துமீறல் என்கிற ரீதியில் காண்பிக்கப்பட்டது. எனினும் முன்னாள் மீள்குடியேற்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் அங்கு எந்தவித சட்ட விரோதக் குடியேற்றமும் இடம்பெறவில்லை அல்லது வில்பத்து தேசிய வனப் பகுதிக்கும் ஒரு ஒற்றை அத்துமீறலும் இடம்பெறபெறவில்லை என தொடர்ச்சியாக மறுத்து வந்தார். மேலும் அவர் வெளிப்படையாகவே, யாராவது அது சட்ட விரோத குடியேற்றம் அல்லது வில்பத்து வனப்பகுதியில் நடந்நத அத்துமீறல் என நிருபித்தால் தற்போதைய அரசாங்கத்தில் தான் வகித்துவரும் அமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயார் என்றுகூட அறிவித்திருந்தார். எப்படியாயினும் ஊடகங்களினாலோ அல்லது அதனுடன் தொடர்புடைய நபர்களாலோ இதுவரை அப்படியான எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப் படவில்லை. ஆனால் எந்தவித அடிப்படையும் இல்லாமல் விமர்சனம் மட்டும் தொடர்கிறது.

களப் பார்வைகள்

இந்த கட்டுரை எழுத்தாளர் இரண்டு முறை அந்த இடத்துக்கு விஜயம் செய்து அங்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளார். மறிச்சுக்கட்டியில் உள்ள தங்களின் முந்தைய வீடுகளுக்குத் திரும்பிச் சென்ற முஸ்லிம் ஐ.டி.பிக்கள், மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரம் தொடர்பாக ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். நூறாண்டுகளுக்கு மேலாக அவர்களது மூதாதையருக்குச சொந்தமான அவர்களது சொந்த நிலத்தில் கூட மீள்குடியேற்றம் நடத்துவது மிகவும் சவாலான ஒன்றாகவே உள்ளது. அங்கு மீந்திருக்கும் சில கட்டிடங்கள் (பழைய மசூதி, பாடசாலை மற்றும் சில உடைந்த வீடுகள்) அங்கு முன்பு ஒரு முஸ்லிம் குடியேற்றம் இருந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றன. அதற்கு மேலும் கிட்டத்தட்ட எல்லா மறிச்சுக்கட்டி கிராமத்தார்களும் சட்டபூர்வமான தங்கள் காணி உறுதிகளை வைத்திருக்கிறார்கள், அவை, அவர்களது வீடுகளில் வசிப்பதற்கு அவர்களுக்கு சட்டபூர்வமான உரிமை உள்ளதைக் காட்டுகிறது. உண்மையில் ஊடகங்கள்pன் குற்றச்சாட்டு மற்றும் வன இலாக அதிகாரிகள் தரும் தொந்தரவுகள் என்பன மறிச்சுக்கட்டி மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். மறிச்சுக்கட்டியை சேர்ந்த ஒரு முஸ்லிம் ஐடிபி குறிப்பிடுகையில், அவர் மறிச்சுக்கட்டியில் உள்ள தனது வீட்டுக்கு 25 வருடங்களுக்கு பின்னர் திரும்பிச் சென்றபோது அந்த இடம் முற்றாக கடற்படையினரால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்ததாம் மற்றும் கடற்படையினர் அவரது வீட்டை அவர் வாழ்வதற்காக திரும்பக் கொடுக்க மறுத்துவிட்டார்களாம். மேலும் அவர் சுட்டிக்காட்டியது, கடற்படையினர் தங்கள் மத வழிபாட்டுக்காக அவரது காணிக்குள்  ஒரு சிறிய பௌத்த கோவிலையும் கட்டியிருந்தார்களாம், ஆனால் எதிர்காலத்தில் சமீபத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவிலை ஆதாரமாக வைத்து கடந்த காலத்தில் இங்கு சிங்கள குடியேற்றம் இருந்தது என்றும் அவர்கள் கோரிக்கை எழுப்பக்கூடும் என்றும் அவர் சொன்னார். இதேபோல சமாதானமான மீள்குடியேற்றம் தொடர்வதற்கு கலந்துரையாடி தீர்க்கப்படுவதற்கான வேறு பல பிரச்சினைகளும் உள்ளன.

தீர்மானம்

இந்தக் கட்டுரையின்படி ஒட்டுமொத்த தீர்மானமாக மேற்கொள்ளவேண்டியது, மறிச்சுக்கட்டியில் உள்ள முஸ்லிம் உள்ளக இடம் பெயர்ந்தவர்களது மீள்குடியேற்றம் ஊடகங்கள் மற்றும் சில பௌத்த பிக்குகளால் மோசடியாகவும் மற்றும் தவறாகவும் வழி நடத்தப்பட்டுள்ளது என்பதே. தனது சொந்த மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கமானது இந்தப் பிரச்சினையில் முஸ்லிம் ஐ.டி.பி க்களைப் பாராமுகமாக ஒதுக்கித் தள்ளியுள்ளது. வனவிலங்கு இலாகா அதிகாரிகள் மற்றும் முன்னாள் மீள்குடியேற்ற அமைச்சர் றிசாத் பதியுதீன்( மறிச்சுக்கட்டி கிராமத்தவர்கள் சார்பாக) ஆகியோர் இடையே பதற்றமும் சொல்லாட்சியும் வளர்ந்து வருகின்றன. அதற்கு மேலும் கட்சி அரசியலும்கூட இந்த பிரச்சினையில் உள்ளது, இதுவரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர் கௌரவ. அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆகியோரைத் தவிர வேறு எந்த முஸ்லிம் அரசியல் கட்சியினாலும் எதுவிதமான அறிக்கைகளோ அல்லது நடவடிக்கைகளோ இந்த விடயத்தில் மேற்கொள்ளப் படவில்லை.

(கலாநிதி.மொகமட் ஷரிப் அசீஸ் - கொழும்பு பல்கலைக்கழக பட்டப்படிப்புகள் பீட விரிவுரையாளர் ஆவார்)

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
 

dantv