Theneehead-1

   Vol:17                                                                                                                                08.07.2018

கனடாவில் இரண்டு இலங்கை தமிழர்கள் உட்பட்ட பலரை கொலை செய்தவருக்கு சொந்தமான காணியில் இருந்து பல மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

கனடாவில் இரண்டு இலங்கை தமிழர்கள் உட்பட்ட பலரை கொலை செய்தவருக்கு சொந்தமான காணியில் இருந்து மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.bruce-mcarthur
 
பல தொடர் கொலைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 58 வயதான மெக்ஆத்தர் கைது செய்யப்பட்டு  தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
 
அவர் மீது தற்போதுவரை 8 கொலைக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
 
இந்த நிலையில் அவரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான காணிப்பகுதிகளில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
 
இதன்போதே மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன
 
நேற்று முன்தினம் அந்தப் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
 
இதனையடுத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது மேலும் பல மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 
எனினும் அந்த மனித எச்சங்கள் யாருடையவை என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
 
இந்த நிலையில், அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதியில் மோப்ப நாயின் உதவியுடன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
அத்துடன், கனேடிய காவல்துறையினர் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.