11 தமிழர்கள் கடத்தப்பட்ட விவகாரம்- முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான ஆதாரங்கள்


கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் முக்கிய சந்தேக நபராக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொடவும் காணப்படுகின்றார் எனvasantha இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் கருதுகின்றனர் இதனை அவர்கள் நீதிமன்றத்திற்கும் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட விடயம் குறித்து முன்னாள் கடற்படை தளபதிக்கு நன்கு தெரிந்திருந்தது என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த ஆதாரங்களை அவர்  ஒழிக்கின்றார் முக்கிய சாட்சியை கூட மௌனமாக்கியுள்ளார் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள்  திருகோணமலையில் உள்ள கடற்படை தளத்தின் இரகசிய வதை முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் இது குறித்து முன்னாள் கடற்படை தளபதிக்கு நன்கு தெரிந்திருந்தது ஆனால் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்ட இளைஞர்களிற்கும் விடுதலைப்புலிகளிற்கும் எந்த தொடர்புமில்லை என தெரிவித்துள்ள விசாரணையாளர்கள் அவ்வேளை கடற்படை பேச்சாளராக காணப்பட்ட டீகேபி தசனாயக்க மற்றும் சுமித் ரணசிங்க என்ற முக்கிய அதிகாரி ஆகியோரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த முகாம்களிலேயே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து வசந்த கரணாகொடவின் செயலாளர் சேர்மல் பெர்ணாண்டோ இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தார் என தெரிவிக்கும் குற்றப்புலனாய்வு பிரிவினர் சேர்மல் பின்னர் இது குறித்து கடற்படை தளபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார் எனவும் தெரிவிக்கின்றனர்.

எனினும் தமிழ் இளைஞர்களை விடுவிப்பதற்கோ அல்லது  அவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கோ கரணாகொட எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நன்கு அறிந்துள்ள அதிகாரிகளிற்கு வாக்கு மூலங்களை வழங்கியுள்ள கடற்படையிரை முன்னாள் தளபதி உன்னிப்பாக கண்காணித்து வருகின்றார் எனவும் சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து 11 தமிழ் இளைஞர்கள் விவகாரத்தில் முன்னாள் கடற்படை தளபதியும் முக்கிய சந்தேகநபராக மாறியுள்ளார்.

 

Theneehead-1

   Vol:17                                                                                                                               08.10.2018