Theneehead-1

   Vol:17                                                                                                                               08.10.2018

பத்திரிகைகளுக்கானஅறிக்கை– 06-10-2018

பிரதேச செயலக நிலப்பரப்புகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபைகளின் அனுமதியில்லாமல்  மாற்றியமைக்கப்படக் கூடாது

அ. வரதராஜா பெருமாள்

வடக்குமாகாணமும் கிழக்குமாகாணமும் கொண்டிருந்த தமிழர்களின் நிலத் தொடர்ச்சியை இல்லாதுசெய்யும் திட்டமிட்ட நோக்குடனேயே முன்னர் வெலிஓயா என ஆரம்பிகvarathar2்கப்பட்ட அரசின் திட்டமிட்ட சிங்களகுடியேற்றத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்தவிடயம் யுத்தத்தின் காரணமாக அரசினால் தொடரமுடியாமற் போய்விட்டது. இப்பொழுது திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் கணிசமானஅளவு நிலப் பகுதிகளை ஒருங்கிணைத்தவகையில் ஓருவிரைந்த திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் நடைபெற்றுவருவது அனைவரும் அறிந்ததே. இந்தப் பகுதிகள் அரசின் குடியியல் நிர்வாகங்களின் கீழில்லாமல் அரசபடைகளின் கட்டுப்பாட்டிலேயேஉள்ளன.

1983க்கு முதல் ஒருசிறிய அளவிலேயே சிங்களவர்கள் வெலிஓயா திட்டத்தில் குடியேற்றப்பட்டிருந்தனர். ஆனால் 2009க்குப் பின்னர் அரசபடையினரின் பாதுகாப்புடனும் துணையுடனும் மிகப் பெருந் தொகையில் தென்னிலங்கை மாவட்டங்களிலிருந்து சிங்களவர்கள் அழைத்துவரப்பட்டு, தேவையானஉதவிகள் அனைத்தையும் அரசுவழங்கி விவசாயமற்றும் குடியிருப்புநில உறுதிப் பத்திரங்களையும் கொடுத்து குடியேற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன் முழு விபரங்களையும் பெறமுடியாத அளவுக்கு அப்பகுதிகள் அரசபடைகளின் பாதுகாப்புவலயங்கள் போல் நிர்வகிக்கப்படுகின்றன என்பதும் உண்மை.

அப்பகுதிகளில் யாருக்கும் நிலம் வழங்கப்படவில்லை–வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி அண்மையில் கூறியுள்ளார். ஆதனை உண்மைஎன ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. ஜனாதிபதியின் தலைமையில் அமைந்துள்ள வடக்குகிழக்கு மாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் கடந்த கூட்டத்தில் ஜனாதிபதி, அப்பகுதிகளில் தமிழர்கள் சட்டப்படியாககொண்டிருந்த நிலங்கள் மீண்டும் அவர்களுக்கு வழங்கப்படும் எனஉறுதியளித்திருக்கிறார். குறிப்பிட்ட தமிழர்கள் சட்டப்படிகொண்டிருந்த காணிகள் அவர்களுக்கு மீளவழங்கப்படுதல் என்பது ஒருவிவகாரமே. அதற்கும் மேலாக,

  • •அரசாங்கத்தின் பாரிய அரசஉதவியுடனான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமும்,
  • •வடக்கு கிழக்கு மாகாணங்களின் தொடர்ச்சியை இல்லாமல் செய்வதுவும்,
  • •குறிப்பிட்ட மூன்று மாவட்டங்கிளனதும் இணைந்தபெரும் நிலப்பரப்பை வடக்குகிழக்கிலிருந்து துண்டாடி வடமத்தியமாகாணத்தோடு இணைக்கும் முயற்சிகளுமே

இவ்விடயத்தில் உள்ளபிரதானமான பிரச்சினைகளாகும்.

வடமத்தியமாகாணத்தில் காலம் காலமாக விவசாயம் செய்துவந்துள்ள சிங்களவர்களில் நிலமற்றோர் தாங்களாக தங்களதுமாவட்டத்துக்கு அண்மித்த மாவட்டங்களை நோக்கி தமது பொருளாதார வாழ்வுக்காக இடம் பெயர்ந்து குடியேறிகாட்டுநிலங்களை களணிகளாக்கி தமது இருப்பைஅமைத்துக் கொள்வது வேறுவிடயம். எனினும், இவ்வாறான ஒன்றைதமிழர்கள் மேற்கொள்கிறபோது அரசபடைகள் அனுமதிப்பதில்லை. அரசநிலங்களெல்லாம் அரசபடைகளுக்கும் சிங்களவர்களுக்குமே சொந்தமானவை என்பதுபோல அரசபடைகள் நடந்துகொள்ளும் விடயத்தில் அரசாங்கம் தலையிடுவதுமில்லை.

அரசநிலங்களில் எந்தவொரு துண்டையேனும் எந்தவொரு நபருக்கு வழங்குவதாயினும் அதனைத் தீர்மானிப்பது மாகாணசபையே என்பதுதான் இலங்கையின் அரசியல் யாப்புவழங்கியிருக்கும் அதிகாரம். ஆனால் இது மத்திய அமைச்சர்களாலும் மதிக்கப்படுவதில்லை. எந்தவொரு ஜனாதிபதியாலும் இதுவரை மத்திக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்மைப்பினரும் சரிமாகாணசபைகளும்; சரி அதுபற்றி எந்தவொருகுரலையும் உரிய அரங்கங்களில் இதுவரை எழுப்பியதில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இங்கு அடுத்துவரும் தேர்தல்களுக்கான வாக்குவேட்டைக்காக சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிரானவர்கள் போல் வீதிஅரசியல் நாடகங்களை அரங்கேற்றுகிறார்களே தவிர, மாகாணசபைகளுக்கு அரசநிலங்கள் மீது அரசியல் யாப்புபூர்வமாக உள்ள அதிகாரங்களை நிலைநாட்டி தமிழர் பிரதேசங்களின் தனித்துவத்தை நிலைநாட்டுவதற்கான எந்தவொருமுயற்சியும் தமிழர் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்படவில்லை என்பது துரதஸ்டமான ஒன்றாகும்.

  • •வடக்குகிழக்கு மாகாணங்களின் தொடர்ச்சி பாதிக்கப்படாமல், இந்தமாகாணங்களின் நிலப்பரப்புகள் ஏனைய மாகாணங்களுடன் எதிர்காலத்தில் இணைக்கப்படும் நிலைமை ஏற்படவிடாமல் தடுப்பது அவசியம்.
  • •அதற்கு அரசியல் யாப்புபூர்வமாக இப்போதுள்ள மாகாணஎல்லைகள் மாற்றியமைக்கபடாமல் இருப்பது அவசியம்.
  • •மேலும், பிரதேசசெயலக நிலப்பரப்புகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணசபைகளின் அனுமதியில்லாமல் மாற்றியமைக்கப்படக் கூடாது என்பதை உறுதிசெய்தல் வேண்டும்.
  • •அத்துடன் அரசகாணிகளை வழங்குவது தொடர்பாக அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தில் மாகாண ஆட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறையில் உறுதிப்படுத்துதல் வேண்டும்.

இதங்கான கோரிக்கைகளை பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மற்றும் ஜனாதிபதி மற்றும் பிரமருடனான பேச்சுவார்த்தைகள் மூலமும் வலியுறுத்தி அரசுசட்டபூர்வமாக இவற்றை நடைமுறைப்படுத்துவதை தமிழர் தரப்பு உறுதிப்படுத்தவேண்டும் இதற்கு தமிழர் தரப்பிலுள்ள அனைத்து பிரதானமான அரசியற் சக்திகளும், அமைப்புரீதியான சமூகசக்திகளும் இணைந்து காத்திரமாக செயற்படுவதுகாலத்தின் அவசியமாகும் என்பதை வலியுறுத்துகிறோம்.

இதேவேளை, ஜனாதிபதியும், பிரதமரும்,அமைச்சர்களும், அத்துடன் அரசநிர்வாக மற்றும் அரசபடைகளின் அதிகாரிகளும் தமிழர்களின் பிரதேசங்களை சிங்களமயமாக்க முயற்சிப்பது இந்தநாட்டில் அரசியல் அமைதியை நிலைநாட்டாது. அது தேசியநல்லிணக்கம் மற்றும் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை ஆகியவற்றிற்கு எதிரானது என்பதை உணர்ந்துபோரினால் வலிகளை சுமந்து நிற்கும் தமிழ் மக்களுக்கு அரசின் மீதும் நாட்டின் சட்டங்களின் மீதும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறோம்.

இவ்வறிக்கையைவெளியிடுபவர்
அ. வரதராஜா பெருமாள்
கட்சிஅமைப்புசெயலாளர் - தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி
முன்னாள் வடக்கு-கிழக்குமாகாணமுதலமைச்சர்