கல்வி அமைச்சின் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்த பின்னரும் அரசியல்வாதிகளின் தடையால் விரகத்திக்குள்ளான அதிபர்

கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த காலத்தில் அதிபராக கடமைPerumal Ganesanயாற்றி பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டு ஒரு பாடசாலையில் பிரதி அதிபராக பணியாற்றி வந்த ஒருவருக்கு  புதிய பாடசாலை ஒன்றின்  அதிபராக பொறுப்பேற்குமாறு வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்த பின்னரும் மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்ல வேண்டாம் என தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது 01-07-2016 திகதியிடப்பட்ட வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் அவர்களின் கையொப்பத்துடன் பெருமாள் கணேசன் எனும் பிரதி அதிபருக்கு 07-07-2016 அன்று கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தை பொறுப்பேற்குமாறு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெருமாள் கணேசனை தொடர்பு கொண்டு குறித்த பாடசாலைக்கு செல்ல வேண்டாம் எனவும் தான் கொழும்பிலிருந்து வந்த பின்னர் பேசி ஒரு தீர்மானத்தை மேற்கொள்வோம் எனவும் தடைவிதித்துள்ளார்

இதேவேளை தற்போது சாந்தபுரம் பாடசாலையில் கடமையாற்றிக்கொண்டிருக்கும் அதிபருக்கும் மேற்குறித்த திகதியில் கிளிநொச்சி பன்னங்கண்டி பாடசாலையின் அதிபராக பொறுபேற்குமாறு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் உத்தியோகபூர்வ இந்த அறிவிப்பை உதாசீனம்செய்து தடையை ஏற்படுத்தியுள்ளார் குறித்த அரசியல்வாதி. புதிய அதிபருக்கு எதிராக சாந்தபுரம் கிராம மக்களையும், தற்போது கடமையில் உள்ள அதிபரையும் ஓய்வுப்பெற்ற அதிபர் ஒருவரும்;, பிரதேச அரசியல் செயற்பாட்டாளர்களும் பயன்படுத்திவருவதாக கல்விச் சமூகம் விசனம் தெரிவித்துள்ளது.

பெருமாள் கணேசன் பாராதிபுரத்தில் அதிபராக இருந்த போது திடிரென அந்தச் சமூகத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் அக்கராயன் மகா வித்தியாலத்திற்கு பிரதி அதிபராக மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் தற்போது சாந்தபுரம் பாடசாலை வழங்கப்பட்டும் அதுவும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பெருமாள் கணேசன் விடயத்தில் பிரதேசவாதம் மோசமாக கையாளப்படுகிறது எனபதோடு ஓய்வுப்பெற்ற அதிபர் ஒருவரும் இதன் பின்னணியில் இருந்து செயற்படுவதாகவும் கல்விச் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது.

எனவே பிரதேசவாதங்களை கடந்து நியாயமான முறையில்  அரசியல் தலையீடுகள் அற்ற கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கிளிநொச்சியின் கல்விச் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Online newspaper in Tamil                                          vol. 16                                                                                       09.07.2016

Mixed feeling among refugee returnees

    T. RAMAKRISHNAN

Stateswoman” Sirimavo Made History As World’s First Woman Prime Minister

By D.B.S.Jeyaraj

China, Sri Lanka issue joint statement on cooperation

The Panama Papers

a_Pen
theneehead
dan-logo