Theneehead-1

   Vol:17                                                                                                                                09.07.2018

 70 களில் அரச அடக்குமுறையின் வடிவம் – லயனல் போபகே

பகுதி 1

    தோழர் லயனல் போபகேஇப்போது 74 வயதைக் கிட்டுகிறார். 70களில் அவர் ஒரு முக்கிய போராளி. ஜே.வி.பியின் பொதுச் செயலாளராக இருந்தவர். 71 கிளர்ச்சியின் போ70-jvp-bopageது கைது செய்யப்பட்டு அவ்வழக்கின் இரண்டாவது குற்றநபர். வருடக்கணக்கில் சிறையில் இருந்து மீண்டவர். ஜே.வி.பியில் இருக்கும் போதே தமிழ் மக்களில் சுய நிர்ணய உரிமைக்காக உட்கட்சிப் போராட்டத்தை முன்னெடுத்தவர். அது பற்றி தனியான நூலையும் அக்காலத்தில் எழுதியவர். அது சாத்தியமாகாத நிலையில் அவர் அக்கட்சியில் இருந்து வெளியேறியவர். அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து அங்கு இப்போது பொறியியலாளராக பணியாற்றிவந்த போதும் இலங்கை அரசியலில் தொடர் அவதானிப்பையும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருபவர். அன்றைய அரச பயங்கரவாதத்தின் வடிவத்தைப் பற்றிப் பேசும் இந்த முக்கிய கட்டுரையை “நமது மலையகம்” வாசகர்களுக்காக வழங்குகிறோம்.


ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க ஏகாதிபத்திய ஆட்சி மற்றும் இராணுவ அடக்கு முறை ஆட்சியே நடைபெற்றது. அல்லது ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வந்தன. இலட்சக்கணக்கான கம்யூனிஸ்டுகளை கொன்று குவித்து, இந்தோனேஷியாவில் சுகர்னோவின் ஆட்சியைக் கவிழ்த்து ஜெனரல் சுகர்தோவின் தலைமையில் இராணுவ ஆட்சியை உருவாக்கியமை, பொதுவாக இடதுசாரித்துவத்துக்கும் விசேடமாக மக்கள் விடுதலை முன்னணியாக பின்னர் உருவான ”அமைப்புக்கும் மிகவும் ஆழமான அனுபவமாக இருந்தது. அத்துடன் மிகுந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தியது.

இதற்கிடையில் அமெரிக்காவுக்கு சார்பான பெட்டிஸ்டா ஆட்சிக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்ற கியூபா விடுதலைப் போராட்டமும், ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க முன்னெடுக்கப்பட்ட பல்வேறு விதமான விடுதலைப் போராட்டங்களும் அக்காலத்தில் தாம் சமூகவாதிகள் என இனங்கண்ட முற்போக்கு சமூக சக்திகள் மற்றும் நாடுகளும் எமக்கு முன்னோடியாக விளங்கின.

தேசிய ரீதியில் 1964ல் லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தனவாதத்துக்குள் பிரவேசித்தன. இதே வகையில் மக்கள் ஐக்கிய முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாளித்துவத்துக்குள் பிரவேசித்தது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளிருந்த முதலாளித்துவ தரப்பு, விசேடமாக அதில் நிதி அமைச்சராகவிருந்த ஜே.ஆர். ஜயவர்தன, புதிய ஏகாதிபத்திய தேவைகளை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கையின் தேர்தல் வரைபடத்தை இருபது ஆண்டுகளுக்கு முடக்கி வைக்கப் போவதாக தெரிவித்தார். அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவந்தார்.

1968ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன இணைந்து ஐக்கிய முன்னணியொன்றை ஆரம்பித்தன.

இந்த ஐக்கிய முன்னணி அடுத்த தசாப்தத்தில் முதலாளித்துவ சக்தியாக உருவெடுத்தது. சம்பிரதாயபூர்வமான இடதுசாரிகளின் சீர்குலைவு, புதிய இடதுசாரிகளாக உருவான "அமைப்பு”க்கு சம்பிரதாயபூர்வமான இடதுசாரி தரப்புகளுக்குள் பிரவேசித்து அவர்களது உறுப்பினர்கள் அதேபோல் நெருங்கியவர்களையும் அமைப்பு”க்குள் ஈர்ப்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. "அமைப்பு” தெற்கில் பல பிரதேசங்களில் மிக வேகமாகப் பரவியது. சம்பிரதாய பூர்வமான இடதுசாரிகளை முந்திக் கொண்டு முன்னோக்கி பயணித்தது. அன்றளவில் அமைப்பு” க்குள் சம்பிரதாய பூர்வமான இடதுசாரி தரத்தில் பிரவேசித்தவர்களே "அமைப்பில் அதிகமாக இருந்தனர்.

இதனால் சம்பிரதாயபூர்வமான இடதுசாரிகளுக்கும் அமைப்புக்குமிடையே எதிரான அரசியல் போக்கே காணப்பட்டது. சம்பிரதாயபூர்வ இடதுசாரிகளுக்குள் முன்னால் வந்த அவர்கள், ஒன்றாக அறிமுகமாகியிருந்த, அரசியலில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நபர்களை உள்ளடக்கிய புதிய இடதுசாரி தலைமைத்துவத்துக்கு எதிராக, இளைஞர் அமைப்பின் தலைமைத்துவத்துக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து தூற்றி சேற்றை வாரி இறைக்க ஆரம்பித்தனர். வதந்திகள் மூலம் அதேபோல் "அத்த" மற்றும் "சமசமாஜய" போன்ற அவர்களது ஊடகங்களைப் பயன்படுத்தி அமைப்பின் இளைய சமூகத்தினரை வலைத்துப் பிடிப்பதற்காக உருவாக்கப்பட்ட CIA ஐப்போல தீவிரமாக பிரசாரத்தை மேற்கொண்டு முறையற்ற வகையில் நடந்து கொண்டதன் மூலம் தெளிவாகின்றது.

"அமைப்பு தொடர்பாக அரச இயந்திரம் முதன் முதலாக இதன் மூலம் தனது கவனத்தை செலுத்தியது. முதலாவதாக ரோஹண விஜேவீர சகோதரரையும், மேலும் அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலரையும் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சகோதரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடுக்க முன்வந்தது மற்றும் ஆதரவாகவிருந்தது. லங்கா சமசமாஜ் கட்சியின் ஆனந்த பிரேமசிங்க, மார்ஷல் பெரேரா மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சரத் முத்தெட்டுவேகம் போன்ற சில சகோதரர்களே MI5 (Military Intelligence 5 ) போன்ற அரச புலனாய்வு சேவைகள் ஆச்சரியத்துக்குள்ளாகியிருந்தன. அவர்களால் புலனாய்வு செய்த இந்த அமைப்பு” குறித்து ஆச்சரியமடைந்தனர். இந்த அமைப்பின் அளவு, தரம் குறித்து அவர்கள் அறிந்திருக்கவில்லை . இதன் காரணமாக அரச புலனாய்வு சேவையும், செய்தி ஊடகங்களும் எமது "அமைப்பை” ”சேகுவேரா” என்றழைக்க ஆரம்பித்தன.

இக்காலத்தில் ”அமைப்பின்” பிரதான நோக்கமாகவிருந்தது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அமெரிக்க சார்பான ஏகாதிபத்திய அரசாங்கம் அமைவதைத் தடுப்பதாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட அன்று இருந்த இந்த அபாயத்தின் போக்கை புரிந்து கொண்டிருந்ததை அதன் தலைமைத்துவம் பகிரங்கமாக விமர்சித்ததிலிருந்து தெரிய வந்தது.

சர்வதேச மட்டத்தில் இடம்பெற்ற, இடம்பெற்று வந்த அரசாங்கங்களை கவிழ்ப்பது, அரசியல் அமைப்புகளை அழிப்பதும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமைத்துவத்தால் இலங்கையில் புதிய ஏகாதிபத்திய ஆட்சியை உருவாக்க முயற்சியை "அமைப்பு” கவனத்தில் கொண்டது. புதிய ஏகாதிபத்தியவாத ஆதரவு மற்றும் அனுசரணையுடன் அமைக்கக் கூடிய அதுபோன்ற இராணுவ ஆட்சிக்கு ஆயுதம் தாங்குவதன் மூலமே முகம் கொடுக்க முடியுமென ”அமைப்பு” தீர்மானித்திருந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன இணைந்த முதலாளித்துவ ஐக்கிய முன்னணி கூட்டு பலமிக்க முதலாளித்துவத்துக்கு எதிரான கொள்கைகளை முன்வைத்து 1970 பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. "அமைப்பின் ஆதரவைப் பெற்ற ஐக்கிய முன்னணி கூட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்றது. இருந்தும் அதிக காலம் செல்வதற்கு முன்னரே ஐக்கிய முன்னணி கூட்டு முன்வைத்த ஏகாதிபத்திய விரோத கொள்கைகளை குறுகிய காலத்திலோ அல்லது முழு ஆட்சிக் காலத்திலுமோ நிறைவேற்ற முடியாதென முன்னணியின் குறிப்பாக லங்கா சமசமாஜ கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அமைப்பின்" சகோதரர்கள் பிற்காலத்தில் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டனர். 1970 ஜூலை மாதத்தில் அமைப்பு நடத்திய முதலாவது பகிரங்க சொற்பொழிவு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி ஆகியன முன்வைத்த CIA போன்ற குற்றச்சாட்டுக்கள் சேறு பூசுவதற்கு பதிலளிப்பதாகவிருந்தது. பொதுத் தேர்தலில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை கைவிட்டு மக்களுக்கு எதிரான பழைய கொள்கைகளையே செயற்படுத்துவது தொடர்பாக, 1970 இறுதிக் காலப் பகுதியில் மக்களின் அதிருப்தி எழுந்தது. இந்த அதிருப்தியின் மத்தியில் மக்கள் விடுதலை முன்னணி அப்போது சிறியதாக இருந்த போதும், நாட்டின் பிரதான இடதுசாரி சக்தியாக கட்டியெழுப்ப முடியுமாகவிருந்தது. 1970 ஓகஸ்ட் 10ம் திகதி நடத்தப்பட்ட முதலாவது கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி பொதுத் தேர்தலில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதென்றால் அரசுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தது.

ஆனால் அன்றைய தினமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் செயலாளர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையொன்றை பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன. அந்த அறிக்கையில் மக்கள் விடுதலை முன்னணி பின்போக்கு சக்தியென்றும் மக்கள் அதற்கெதிராக போராட வேண்டுமென கேட்கப்பட்டிருந்தது. அக்காலத்தில் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் நிரந்தர செயலாளர் ஆத்தர் ரட்னவேல் மக்கள் விடுதலை முன்னணி மக்களின் முதலாவது எதிரியென்றும் அதை முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டுமென்று தெரிவித்திருந்தார்.

1971 முற்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியை முக்கிய அச்சுறுத்தலாகக் கருதிய கூட்டரசாங்கம் அதை ஒழித்துக் கட்டுவதற்காக திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தது. மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக தொடர்பை மேற்கொள்ள இராணுவம் மற்றும் பொலிஸ் "கிளர்ச்சிக்கு எதிரான பிரிவுகளை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு முக்கிய பங்களிப்பை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதய செயலாளராகவிருந்த பீட்டர் கெனமன் வழங்கினார். முதலாளித்துவ கூட்டு அரசாங்கத்தின் வீடமைப்பு தொடர்பான அமைச்சராகவிருந்த அவர் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அரசியல் குழுவின் தலைவராகவும் செயற்பட்டார்.

அதிகரித்து வரும் இப்போக்கை நிறுத்துவதற்கு மக்கள் விடுதலை முன்னணி சில முயற்சிகளை மேற்கொண்டது. எனக்கு ஞாபகமுள்ள ஒரு உதாரணம் என்னவென்றால் சகோதரர் ரோஹண விஜேவீர சுனேத்ரா பண்டாரநாயக மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும்படி கேட்டார். எமக்கு தேவைப்பட்டது என்னவென்றால், கூட்டரசாங்கத்தின் பகுதியாக சம்பிரதாய இடதுசாரியான மக்கள் விடுதலை முன்னணியை ஒடுக்குவதற்கு தங்கள் சக்தியை பயன்படுத்துவதை தெளிவுபடுத்தி அரசியல் ரீதியாக இடைகருவில் சமாதானத்துக்கு நுழையாததுடன், இந்த அச்சுறுத்தலை நிறுத்துவதற்கே பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பம் கோரப்பட்டது. இருந்தும் பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. வேறு வழிகளிலும் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை நான் அறிவேன்.

அதுமட்டுமல்ல, இங்கு சபையிலுள்ள பொரளை ஒஸ்மண்ட் சகோதரரின் தாய் காலஞ்சென்ற சகோதரி சீலவதி, லங்கா சமசமாஜக் கட்சியின் மகளிர் அமைப்பின் தலைவியாகவிருந்து மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்த தலைமை சகோதரியும், மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி அந்த சகோதரியின் தலைமையிலான சபையும், லங்கா சமசமாஜக் கட்சியின் தலைமைத்துவ சபையும் பேச்சுவார்த்தை நடத்தி புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இருந்தும் அந்தப் பேச்சுவார்த்தையில் CIA அமைப்பு மக்கள் விடுதலை முன்னணிக்கு அனுப்பி வைத்த காசோலையொன்று அவர்களிடம் இருப்பதாக அப்போதைய நிதி அமைச்சரான கலாநிதி என்.எம். பெரேரா தெரிவித்தார். அந்தக் காசோலையை பத்திரிகைகளில் பிரசுரிக்கும்படி சகோதரி சீலவதி அந்த பேச்சுவார்த்தையின் போது என்.எம். பெரேராவுக்கு சவால் விடுத்த போதும் இன்று வரையில் அதுபோன்ற காசோலையொன்றை பார்க்கக் கிடைக்கவில்லை. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சபை மற்றும் மத்திய செயற் குழுவிலுள்ள சில சகோதரர்களுடனும் தாம் இந்நிலை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இதுபோன்ற பேச்சுவார்த்தைகளில் நாம் எதிர்பார்த்த வகையில் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.

அக்காலத்தில் மக்கள் விடுதலை முன்னணிக்கு கிடைத்திருந்த தகவல்களின்படி சட்டமா அதிபர் மக்கள் விடுதலை முன்னணியை ஒழித்துக் கட்டுவதற்கு தேவையான விசேட சட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தார்.

''சட்டம் மற்றும் ஒழுங்கு" பாதுகாக்கும் பெயரில், பொலிஸ் மற்றும் நீதிமன்றங்கள் போன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் முறையான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இளைஞர் அமைப்புகளுக்கிருந்த உரிமைகளை மீறிச் செயற்பட்டன. பொதுக் கூட்டங்கள் மற்றும் சொற்பொழிவுகளை நடத்துதல், தனிப்பட்ட அரசியல் கலந்துரையாடல்களை மேற்கொள்ளல், கட்சிப் பத்திரிகை மற்றும் கையேடுகளை அச்சிடல், விற்பனை செய்தல் மற்றும் விநியோகித்தல், சுவரொட்டிகளை ஒட்டுதல், கட்சியின் பிரசார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகள் இடம்பெற்றன.

1971 மார்ச் 6ம் திகதியன்று, "மாவோ இளைஞர் முன்னணி" மக்கள் விடுதலை முன்னணிக்கு CIA யின் நிதியுதவி கிடைப்பதாகவும் அதை உடனடியாக நிறுத்தும்படி அழுத்தம் கொடுத்து அமெரிக்க தூதரகத்தின் முன்னால் ஊர்வலமொன்றை நடத்தியது. அதில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்தார். இந்த ஊர்வலத்தின் தலைவர்கள் மற்றும் கூட்டு அரசாங்கத்தின் இடையிலிருந்த அரசியல் தொடர்பு குறித்து மக்கள் விடுதலை முன்னணிக்கு அறிந்து கொள்ளக் கிடைத்தது. இச்சம்பவத்துடன் எதுவித சம்பந்தமும் இல்லையென்று மக்கள் விடுதலை முன்னணி உடனடியாக அறிவித்தது. இருந்தும் கூட்டரசாங்கம் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவசர காலநிலையை பிரகடனப்படுத்தியது. மக்கள் விடுதலை முன்னணி தடை செய்யப்பட்டது. 1971 மார்ச் 13ம் திகதி சகோதரர் ரோஹண விஜேவீர, கெலி சேனநாயக உட்பட சில சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

தொடரும்