வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனினால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு  நிராகரிப்பு

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனினால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.vignes2

முன்னாள் வட மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் பதவி நீக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் அவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் குறித்த பதவி நீக்க கட்டளைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.

அத்துடன் டெனீஸ்வரனை மீண்டும் அவர் வகித்த அமைச்சு பொறுப்பில் இருத்துமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.

எனினும் இந்த உத்தரவை தமது அதிகார எல்லையை காரணம் காட்டி சீ.வி.விக்னேஸ்வரன் மறுத்து வந்ததுடன் அதற்கு சவால் விடுத்து உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்றைய தினம் ப்ரியன்த ஜயவர்த்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகிய நீதியரசர்கள் குழாமினால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது, டெனீஸ்வரனை மீண்டும் பதவியில் அமர்த்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை சவாலுக்கு உட்படுத்த முடியாது என்று தெரிவித்து அந்த மனுவை நிராகரிப்பதாக நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.

இதவேளை, சீ.வி.விக்னேஸ்வரன் மேன்முறையீட்;டு நீதிமன்றின் உத்தரவை ஊதாசீனம் செய்ததாக தெரிவித்து பா.டெனீஸ்வரனினால் அவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட்டுள்ளது.

Theneehead-1

   Vol:17                                                                                                                               09.11.2018