ஹம்பாந்தோட்டை விவகாரம்: மேலும் 32 பேர் விளக்கமறியலில், பிணை கோரி போராட்டம்

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மேலும் 32 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி இவர்களை எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவத்தின் போது, பௌத்த பிக்கு மற்றும் பிரதேச மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம்சாட்டி, வீரவில பிரதேசத்தில் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திஸ்ஸ - மாத்தறை பிரதான வீதியை மறித்து வீரவில சந்தியில் இருந்து அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் கடந்த 07ம் திகதி நீதிமன்ற உத்தரவை மீறி பிக்குகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

மேலும், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை பலர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பிணை வழங்குமாறும் இன்று ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Theneehead-1

Vol: 14                                                                                                                                                10.01.2017

dantv