Theneehead-1

   Vol:17                                                                                                                                10.07.2018

வாக்களிப்பு ஒரு உரிமை மற்றும் ஒரு பொறுப்பு

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் சில மாதங்களுக்கு முன்பு ஒரு நீண்ட தாமதத்தின் பின்னர் நடந்தேறியது, இந்த தாமதத்துக்கான காரணத்தில் தொழில்நுட்ப பிரvotingச்சினைகளைக் காட்டிலும் அதிகாரப் போராட்டமே வெளிப்படையாக அதிகமானதாக இருந்தது. மாகாணசபைத் தேர்தல்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தொழில்நுட்பக் காரணங்களைக் காட்டிலும் அரசியற் பிரச்சினைகள் அதிகம் இருப்பதின் காரணமாக மீண்டும் ஒருமுறை அதில் தாமதம் ஏற்படும் என வதந்திகள் உலாவுகின்றன. இதற்கிடையில் தேர்தல்கள் ஆணைக்குழு “ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள்  தங்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்  என்பதைப் புரிந்து கொள்வதுடன் மற்றும் அதற்காக எழுந்து நின்று குரல்கொடுக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டி வாக்களிப்பு உங்கள் உரிமை” என்கிற கோஷத்தின் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் கூற்றுப்படி, ஸ்ரீலங்காவில் உள்ள இளைய தலைமுறையினர் மத்தியில் தேர்தல் நடைமுறைகள் பற்றிய ஆர்வம் குறைவாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பல காரணங்களுக்காக அரசியல் நடவடிக்கைகளினால் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள எனத் தோன்றுகிறது என்று அவர் சொன்னார்.

இந்த ஏமாற்றம் மற்றும் விரக்தி என்பன இளைஞர்களுக்கு மட்டும் என மட்டுப்பட்டிருக்கவில்லை. நாடெங்கிலும் உள்ள மக்கள் மற்றும் சமூகங்களில் உள்ள வெவ்வேறு வயதுடையவர்கள் தேர்தல் முறையை விட அரசியல்வாதிகள் மீதே தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை அடைவது கடினமாக இருப்பதற்குக் காரணம் அரசியல்வாதிகள்தான் என்று சில மனிதர்கள் அரசியல்வாதிகளைக் குற்றம் சாட்டுகிறார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தையல்காரர், அரசியல்வாதிகள் மற்றும் நாட்டின் எதிர்காலத்தின்மீது அவர்கள் செலுத்தும் தாக்கம் என்பன பற்றி பின்வருமாறு தெரிவித்திருந்தார்.“…… எங்கள் நாட்டில் இனங்களுக்கு இடையில் பிரச்சினைகள் இருக்குமானால், எங்கள் நாட்டின் வளர்ச்சி முற்றாக முடக்கப்பட்டுவிடும். அந்தக் கசப்பான அனுபவம் மீண்டும் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் இன, மத, சார்பில்லாமல் ஒருமித்து வாழவேண்டும். கிளர்ச்சி ஏற்படுத்தும் பிரச்சினைகளை மேற்கொள்வதை அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும். அவர்களது சொந்த இலாபங்களுக்காக அவர்கள் நடத்தும் பேச்சுக்கள் மற்றும் திட்டங்கள்தான் இனங்களுக்கு இடையில் பதட்டங்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்”.
அவர் மேலும் சுட்டிக்காட்டியது, சமூகங்களில் உள்ள கணிசமான பகுதியினர் மத்தியில் ஒரு பொதுவான கருத்து உள்ளது, ஆனால் அரசியல்வாதிகள் தங்கள் சொந்த மோதல்களுக்காக மக்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று

அப்படியான ஒரு சமூகத்தில், மக்கள் அரசியல்வாதிகளை நோக்கி ஒரு குறிப்பிட்ட ஏமாற்றத்தை வளர்ப்பது இயல்பானதே.

பங்குபற்றும் உரிமை

பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற கடந்த எழுபது ஆvoting1ண்டுகளில் ஸ்ரீலங்கா பல எண்ணிக்கையிலான அரசியல் எழுச்சிகளைக் கண்டுள்ளது. இதற்கான ஒரு காரணம் குறிப்பிட்ட சில பிரிவுகளில் உள்ள மக்களுக்கு ஜனநாயக நடவடிக்கைகளில் பங்குவற்றுவதற்கான சந்தர்ப்பம் குறைவாக இருந்ததுவே. மாத்தறை மாவட்டம் அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த ஜினதாஸ என்பவர் இவ்வாறு விளக்கமளித்தார்.

1980கள் ஸ்ரீலங்கா வரலாற்றில் ஒரு இருண்ட காலமாக இருந்தது. 1983க்கு முன்னர் ஜினதாஸ ஜனதா விமுக்தி பெரமுனவில் (ஜே.வி.பி) ஒரு அங்கத்தவராக இருந்தார். 1983ம் ஆண்டு கறுப்பு ஜூலையைத் தொடர்ந்து அரசாங்கம் மூன்று அரசியல் கட்சிகளை வன்முறைகளுக்கு அவைகள்தான் காரணம் என்பதின் பேரில் அவற்றைத் தடை செய்தது. சிறிது காலத்தின் பின்னர் இரண்டு கட்சிகள் மீதான தடை நீக்கப்பட்ட அதேவேளை ஜேவிபி தொடர்ந்தும் தடை செய்யப்பட்டிருந்தது. ஜனநாயக நடைமுறைகளில் பங்கேற்பதற்கான வழிவகைகளை இழந்த நிலையில், ஜேவிபி ஆயுதங்களை எடுத்தது. ஜனநாயக வழிமுறையில் பங்கேற்பதற்கான உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் மீண்டும் வன்முறையில் இறங்கியிருக்க மாட்டார்கள் என ஜினதாஸ கூறுகிறார்.

ஜனநாயக நடைமுறையில் பங்கேற்பதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பது சமூகத்தின் சில பிரிவினர் வன்முறையை நோக்கி நகர்வதற்கான வழியினை ஏற்படுத்துகிறது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோண் எப். கென்னடி இதைப் பல தசாப்தங்களுக்கு முன்பே கண்டார்,  “அமைதியான புரட்சியை ஏற்படுத்துவதற்கு சாத்தியமில்லாது போனால் வன்முறையான புரட்சி ஏற்படுவது தவிர்க்க முடியாதது” என அவர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

பல்வேறு அரசியல் பிரிவுகளும் ஜனநாயக வழிவகைகளில் பங்கேற்பதற்கு ஸ்ரீலங்கா வாய்ப்பு வழங்குகிறது.சில அரசியற்கட்சிகள் நிதியளவில் மற்றவைகளை விட வலுவான நிலையில் இருப்பதினால் இந்த வாய்ப்பு சமமாக இருப்பதில்லை என்பது உண்மையே. இருப்பினும் இந்த விடயத்தில் உள்ள முக்கியத்துவம் என்னவென்றால் வித்தியாசமான குரல்களும் மற்றும் கருத்துக்களும் கேட்கப்பட வேண்டும்.தற்சமயம் பதிவு செய்யப்பட்ட 70 அரசியற் கட்சிகள் தேர்தல் ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா போன்ற சிறிய ஒரு நாட்டிற்கு இது மிகப் பெரிய ஒரு தொகை என சிலர் வாதிடலாம், மறுபுறத்தில் அது நாட்டின் அரசியல் நடைமுறையில் உயிர்த்துடிப்பு உள்ளதற்கான அடையாளம் என வேறு சிலர் வாதிடலாம்.

பெண்களின் பிரதிநிதித்துவம்

சமீபத்தில் பெண் பிரதிநித்துவம் பற்றிய விவாதம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேர்தல் நடைமுறையுடன் புதிய ஒரு மட்டத்தை அடைந்துள்ளது. அதன்படி voting3மக்களின் வாக்குகளால் தேர்வு செய்யப்படும் உள்ளுராட்சி அங்கத்தவர்களின் எண்ணிக்கையில் 25 விகிதமானவர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்பதாகும். எனினும் தேர்தல் நடைமுறையில் உள்ள ஓட்டைகள் காரணமாக அது எப்பொழுதும் 25 விகித பெண் பிரதிநிதித்துவத்துக்கான உத்தரவாதத்தை வழங்குவதில்லை. இருப்பினும் இந்த விதி காரணமாக பெண்களின் பிரதிநிதித்துவத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

பெண்களின் பிரதிநிதித்துவ முறையில் உள்ள ஓட்டைகள் மற்றும் குழப்பங்கள் காரணமாக பெண் பிரதிநிதித்துவ ஒதுக்கீடு ஒரு தவறான யோசனை என்று சிலர் வாதிடுகிறார்கள், ஒரு ஆங்கில மொழிப் பத்திரிகையின் ஆசிரியர், பெண் பிரதித்துவ ஒதுக்கீட்டை யாரும் விரும்பவில்லை மற்றும் சில தொண்டு நிறுவனங்களின் வலியுறுத்தல் காரணமாகத்தான் அது சேர்க்கப்பட்டுள்ளது என வலியுறுத்துகிறார். எனினும் இப்படி வாதிடுபவர்கள் எண்ணிக்கையில் சிறிய அளவினரே மற்றும் தேர்தல் ஆணையம் மற்றும் இதர கட்சிகள் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பின் முக்கியத்தை பாதுகாப்பதற்கு முன்வந்துள்ளார்கள்.

தேசிய சட்ட மன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் என்று வரும்போது ஸ்ரீலங்கா அதில் மோசமான ஒரு விடயமாக இருப்பதே உண்மையாகும். ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் உள்ள பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் கவனத்தில் கொள்ளும்போது 189 தேசிய சட்ட மன்றங்களுக்குள் ஸ்ரீலங்கா பாராளுமன்றம் 180வது இடத்தைப் பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா வாக்காளர்களில் 52 விகிதமானவர்கள் பெண்களாக உள்ளதை கருத்தில் கொள்ளும்போது இந்த விடயம் மிகவம் துரதிருஷ்டமான ஒன்றாகும்.

பெண்கள் விஷயத்தில் ஆர்வம் குறைவாக இருப்பதால் விரக்தி அடைந்துள்ள சலம்பன் கிராமத்தில் உள்ள ஒரு பெண், அனைத்து அரசியல்வாதிகளையும் நிராகரித்துவிட்டு ஒரு பெண்கள் குழுவுடன் ஒன்றுசேர்ந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு முடிவு செய்தார். “எல்லா அரசியல்வாதிகளும் உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து நாங்கள் அதைச் செய்கிறோம் மற்றும் அதைச் செய்கிறோம் என்று சொல்வார்கள், ஆனால் அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் பின்னர் ஒருபோதும் நாங்கள் அவர்களைப் பார்க்க முடியாது. எங்கள் வாக்குகளைப் பெற்றதின் பின்னர் அவர்கள் எங்களை திரும்பியும் பார்க்க மாட்டார்கள் இது இப்படியே இருந்துவிடக் கூ;டாது” என்று அந்தப் பெண்மணி வலியுறுத்தினார்.

2018 உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கந்தளே பிரதேச சபைக்கு அனைத்தும் பெண் அங்கத்தவர்களைக் கொண்ட சுயேச்சைக்குழு ஒன்று போட்டியிட்டதைக் காணமுடிந்தது. கிழக்கு மகளிர்; அமைப்பைச் சேர்ந்த பெண்களினால் இந்தக் குழு நிரப்பப்பட்டது, இதில் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பெண்கள் அடங்கியிருந்தார்கள். அந்தக் குழுவின் தலைவரான ஆர்.ஜே. பொடி மெனிக்கா என்பவர் தாங்கள் ஏன் போட்டியிட முடிவு செய்தார்கள் என்பதை விளக்கினார். “நாங்கள் எந்தக் கட்சியுடனும் இணையாததுக்கான காரணம் என்னவென்றால் நாங்கள் அப்படிச் செய்தால் அவர்களின் வேலைத்திட்டத்தின்படி நாங்கள் நடக்கவேண்டி இருந்திருக்கும்”.

சவால்களைச் சமாளிப்பதற்கான பங்கேற்பு

உலகளாவிய வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாடுகளில் ஸ்ரீலங்காவும் ஒன்றாகும். ஆகவே அரசியல் செயல்பாட்டின் முழுமையான புரிந்துணர்வோடு voting4அதை முன்னேற்றுவது மிகவும் முக்கியமானதாகும். செயல்முறையை வெறுமனே நிராகரிப்பது அதை மாற்றுவதற்கு உதவாது. முதலாவதும் மிகவும் முக்கியமானதும் ஒருவர் வாக்களிக்க வேண்டும் என்பதாகும், மற்றது சில புரிந்துணர்வுகளோடு வாக்களிக்க வேண்டும் என்பதாகும்.

2017 செப்ரெம்பர் ஜேர்மனியின் பொதுத் தேர்தல்களுக்கு முன்னர் ஜனாதிபதி பிராங் வோல்ட்டர் ஸ்ரெயின்மியர் வாக்களிப்பின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டினார்.“வாக்களிப்பது ஒரு குடியியல் கடமை. போ போய் வாக்களி” என்று முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர், ‘பில்டாம் சொண்ட்டாக்’ செய்திப்பத்திரிகையில் எழுதிய கருத்துக் கட்டுரையில் தெரிவித்திருந்தார்.“ஒவ்வொரு வாக்கும் எண்ணப்படும் - உங்கள் வாக்கும் எண்ணப்படும்”, என்று ஸ்ரெயின்மியர் சொன்னார். “ வாக்களிக்காத மக்கள் எங்கள் நாட்டின் எதிர்காலத்தை மற்றவர்கள் முடிவு செய்வதற்கு அனுமதிக்கிறார்கள்”.

தனிநபர்களாக மக்கள் தங்கள் வாக்குகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். வாக்குகளின் முக்கியம் பற்றிய இந்த யோசனை  பரவலாக வெளிப்படுத்தப்பட வேண்டும். விழிப்புணர்வை உருவாக்குதல் மற்றும் ஊக்கமளிக்கும் செயல்திறன் என்பன வாக்களிப்பதற்கு மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்துவதுடன் மற்றும் அரசியல் ரீதியாக அதிகம் விழிப்புணர்வுள்ள  வாக்காளர்களையும் உருவாக்க உதவும்.

பலப்பிட்டியாவில் உள்ள ஒரு இளைஞர் குழு, தங்கள் பகுதியை முன்னேற்றுவதற்கான ஒரு திட்டம் தங்களிடம் உள்ளது எனக்கூறி 2018 உள்ளுராட்சித் தேர்தல்களில் போட்டியிட்டதின் மூலம் அடுத்த கட்ட மாற்றத்துக்கான உந்துதலை மேற்கொண்டது. அவர்கள் பெற்றது ஒரு சிறிய சத விகிதமாக இருந்த அதேவேளை, அவர்களால் உருவாக்கப்பட்ட அந்தக் குரல் புதிய ஆரம்பத்துக்கான  ஒரு புதிய நம்பிக்கையை வழங்கியது, இங்கு இளைஞர்கள் மாற்றத்துக்கு அழைப்பு விடுக்கும்போது அது  நிலையான வளர்ச்சி மற்றும்  நல்லெண்ணம் என்பனவற்றுக்கான இடைவெளியை உருவாக்குகிறது.

மீண்டும் ஒருமுறை இது எங்களை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தேசப்பிரியாவின் ஆரம்ப அவதானிப்புகளுக்கு இட்டுச் செல்கிறது. பொதுவாக வாக்களிக்கும் உரிமைகளுக்காக இளைஞர்கள்  வெளிப்படையான ஆர்வக் குறைவுகளை காண்பிக்கும்போது காலப்போக்கில் இந்த அணுகுமுறையை மாற்றுவதற்கான ஒரு செயல்முறை இருக்க வேண்டும். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் நம்பிக்கை விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலேயே தங்கியுள்ளது. வாக்குகளின் சக்தி மற்றும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் என்பன பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதின் மூலம் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் பொறுப்புணர்வுடன் வாக்களிப்பதற்காக ஊக்குவிக்கப்படுவார்கள்.

குறிப்பாக நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் தொடர்பான விரக்தி காரணமாக சிலர் தங்கள் வாக்குகள் மதிப்புமிக்கவை அல்ல எனும் எண்ணத்தில் உள்ளார்கள். எனினும் அவர்கள் வாக்குகள் மூலமாகத்தான் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்பதை முதலில் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே தங்கள் வாக்குகளின் சரியான மதிப்பை அறிந்து வாக்காளர்களை மிகவும் பொறுப்புடன் வாக்களிப்பதற்கு  ஊக்கப்படுத்த வேண்டும்.

(இந்தக் கட்டுரை “சமூக நினைவுத் திட்டம்” மூலம் வழங்கப்பட்டது)