ஈழவிடுதலைப் பயணத்தில் கலைஞரின் கனவுகள் நனவாகும் - முருகேசு சந்திரகுமார் சமத்துவம்இ சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு

தமிழர்களின் பெருந்தலைவர் கலைஞர் மு. கருணாநிதியின் மறைவு உலகத் தமிழர்களையும் இந்திய தேசத்தையும் ஆழ்ந்த துயரத்திலாழ்த்தியுள்ளது. எழுபது ஆண்டுகchandrakumar1218ளுக்கு மேலாக அரசியலிலும் சினிமாவிலும் இலக்கியத்திலும் தமிழ் வளர்ச்சியிலும் தமிழ்ப்பண்பாட்டிலும் பெரும் பங்களிப்பைச் செய்த கலைஞர் இறுதி விடைபெற்றுள்ளார். பன்முக ஆற்றலாளராக விளங்கிய கலைஞர் இறுதிவரையில் முழு இந்தியாவிலும் மதிப்புப்  பெற்ற அரசியல் தலைவராக விளங்கினார். தன்னுடைய அரசியல் வாழ்வில் சவால்களையும் நெருக்கடிகளையும் சந்தித்துக் கொண்டே பல புதிய முன்னுதாரணங்களை உருவாக்கி வரலாற்று நாயகனானார். தமிழகத்தில் மட்டுமல்லாது ஈழத்தமிழர்களுடைய அரசியல் உரிமைக்கான போராட்டத்திலும் கலைஞரின் பங்களிப்புகள் வரலாற்றுப் பதிவுக்குரியவை. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுகாலம் வாழ்ந்த கலைஞரின் மறைவு தமிழ்ச்சமூகத்துக்குப் பேரிழப்பாகும்.

எமது ஈழ விடுதலை அரசியலில் 1958 இலிருந்தே அக்கறையோடு செயற்பட்டு வந்த கலைஞர் எப்போதும் ஈழத்தமிழர்களுக்கு நேச சக்தியாகவே விளங்கினார். இலங்கையில் 1956 இல் தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது அதை எதிர்த்து தி.மு.கவின் சிதம்பரம் மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்த கலைஞர்இ 1983 இல் இலங்கையில் நடந்த இன வன்முறையைக் கண்டித்து சட்டமன்றத்தில் பதவியைத் துறந்திருந்தார். 

1983 க்குப் பிறகு ஈழப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பரிணமித்தவேளையில் தி.மு.கவும் கலைஞரும் இயக்கங்களுக்கு பேருதவியாக இருந்தமை மறக்க முடியாதவை.

1986 இல் டெஸோ மாநாட்டை ஈழவிடுதலைக்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்தியத்தலைவர்களின் பங்கேற்போடு மதுரையில் நடத்திஇ ஈழப்போராட்டத்தையும் இலங்கையின் இன ஒடுக்குமுறையையும் இந்திய அளவில் வலுவூட்டினார்.

இப்படிப் பல்வேறு நிலைகளில் பெரும் பங்களித்த முதுபெரும் தமிழ்த்தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இழப்பு ஈழத்தமிழர்களுக்கும் உலகத்தமிழர்களுக்கும் பே.ரிழப்பாகவே அமைந்துள்ளது. கலைஞரின் இழப்பினால் துயரடைந்திருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் தி.மு.க வினருக்கும் கலைஞரின் கோடி மக்களுக்கும் எங்கள் ஆறுதலையும் ஆழந்த கவலையையும் வெளிப்படுத்துகிறோம். கலைஞருக்கு சமத்துவம்இ சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தனது இறுதி அஞ்சலியைச் செலுத்துகிறது.

ஈழத்தமிழர்களுடைய விடுதலைப் பயணத்தில் கலைஞரின் கனவு நனவாகும்.

 

Theneehead-1

   Vol:17                                                                                                                                10.08.2018