‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’- புதியஅரசியல் கூட்டுஉதயம்

கிழக்குத் தமிழர்ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழர்விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஈழமக்கள் ஜனநாயக்கட்சி, தமிழர்சமூக ஜனநாயகக்கetoட்சி, அகிலஇலங்கை தமிழர்மகா சபை ஆகிய ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளும் 05.10.2010 அன்றுஒன்று கூடி ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரில் புதியஅரசியல் கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன.

எதிர்வரும் கிழக்குமாகாணசபைத் தேர்தலில் கிழக்குமாகாணத் தமிழர்களின் சார்பில் அதிஉச்சபட்சஉறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒருபொதுச் சின்னத்தின் கீழ் ஓரணியில் போட்டியிட வைப்பதற்காகக் கிழக்குத் தமிழர்ஒன்றியம் எடுத்துக் கொண்டமுயற்சியின் ஒரு முக்கியகட்டமாக இந்த அரசியல் கூட்டணி உருவாகியுள்ளது.

இந்தமுயற்சியின் முதற்கட்டமாக அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் கிழக்குத் தமிழர்ஒன்றியம் தனித்தனியே சந்தித்துப் பேசியது. அடுத்தகட்டமாக 22.08.2018 அன்று களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரிடத்தி;ல் கூட்டிக் கலந்துரையாடியது. இக் கலந்துரையாடல் கூட்டத்தில் எட்டப்பெற்ற தீர்மானத்திற்கமைய கிழக்குத் தமிழர்ஒன்றியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைத் தயாரித்து அதன் நகல் வடிவத்தினை அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளினதும் பார்வைக்கு அனுப்பிவைத்து அவற்றின் பின்னூட்டல்களைக் கோரியிருந்தது. இந்தப் பின்னணியிலேயே தங்கள் சம்மதத்தைத் தெரிவித்த மேற்படி ஐந்துகட்சிகளும் கொழும்பில் கிழக்குத் தழிழர்ஒன்றியத்தின் திருகோணமலைமாவட்டச் செயற்குழுவின் தலைவர் திரு. பூ.உகநாதன் இல்லத்தில் ஒன்றுகூடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தினையிட்டு விரிவாகக் கலந்துரையாடி அதன் நகல் வடிவத்தில் அவசியமான திருத்தங்களை மேற்கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை இறுதிப்படுதியுள்ளன.

எனினும் இதுவரை தங்கள் சம்மதத்தைத் தெரிவிக்காத தமிழ் அரசியல் கட்சிகளான இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்,ஈழமக்கள் புரட்சிகரவிடுதலைமுன்னணி, ஜனநாயக மக்கள் விடுதலைமுன்னணி, தமிழீழவிடுதலை இயக்கம் ஆகிய ஐந்துகட்சிகளுக்கும் தங்கள் நிலைப்பாடுகளைத் தெரிவிக்க நல்லெண்ண அடிப்படையில் 17.10.2018 வரைகால அவகாசம் வழங்கும் கடிதங்களைக் கிழக்குத் தமிழர்ஒன்றியம் அனுப்பிவைத்துள்ளது.

மேலும், தேர்தல் திணைக்களத்தினால் இதுவரை அங்கீகரிக்கப்படாத ஆனால் தமிழ் மக்களிடையே அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தமிழர்ஐக்கியசுதந்திரமுன்னணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி, புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கட்சிஎன்பன கிழக்குத் தமிழர்ஒன்றியத்தின் அரசியல் செயற்பாட்டிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன. அடுத்தகட்டமாக இத்தகைய இதுவரை தேர்தல் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத தமிழ் அரசியல் கட்சிகளுடனும் தேசியக் கட்சிகளில் இணைந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தனிநபர்களுடனும் மிகவிரைவில் நல்லெண்ணப் பேச்சுவார்த்தைகளில் கிழக்குத் தமிழர்ஒன்றியம் ஈடுபடவுள்ளதாகத் தெரியவருகிறது.

எதுஎப்படியிருப்பினும் குறிப்பிட்டகாலச் சட்டகத்திற்குள் ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’எனும் புதிய இவ் அரசியல் கூட்டணியைதேர்தல் திணைக்களம் அங்கீகரித்துஅதற்கெனப் புதியசின்னம் ஒன்றினைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டியுள்ளதால் எதிர்வரும் 20.10.2018அன்றுதமிழ் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டக்களப்பில் கைச்சாத்திடப்படுவதுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக தேர்தல் ஆணைக்குழுவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுமுள்ளது எனஅறியக் கிடக்கிறது.

கொழும்பில் நடைபெற்றசந்திப்பில் தமிழர்விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகம் திரு.வீ.ஆனந்தசங்கரி, ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர்நாயகம் கௌரவ டக்ளஸ் தேவானந்தாபா.உ மற்றும் அவருடன் ஊடகச் செயலாளர் முருகன் (ஸ்டாலின்), தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் துணைத் தலைவர் திரு.க.யோகவேள், தமிழர்சமூக ஜனநாயகக்கட்சியின் தலைவர் திரு.தி.சிறிதரன் மற்றும் அகில இலங்கைத் தமிழ் மகாசபையின் தலைவர் கலாநிதிகா.விக்கினேஸ்வரன் ஆகியோர்கலந்துகொண்டனர்.

கிழக்குத் தமிழர்ஒன்றியத்தின் சார்பில் அதன் ஸ்தாபகர்களில் ஒருவரும் மாகாண இணைப்பாளர்களில் ஒருவருமான செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன், மட்டக்களப்பு மாவட்டச்; செயற்குழுத்தலைவர் பேராசிரியர்மா.செல்வராசா, கலாநிதிசு.சீவரெத்தினம், மட்டக்களப்பு மாவட்டமுன்னாள் பாராளுமன்றஉறுப்பினரும் கிழக்குமாகாண சபை உறுப்பினருமான திரு.ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை),கிழக்குத் தமிழர்ஒன்றியத்தின் அம்பாறை மாவட்டச் செயற்குழுத் தலைவரும் ஆலையடிவேம்பு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளருமான இரா.நடராசா, கிழக்குத் தமிழர்ஒன்றியத்தின் திருகோணமலை மாவட்டச் தலைவர் திரு.பூ.உகநாதன் மற்றும் பொருளாளர் திரு.தி.ஹரிஸ்ரன் ஆகியயோர் கலந்துகொண்டனர்.

புரிந்துணர்வுஒப்பந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் இணைப்பாளராகச் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் நியமிக்கப்பபெற்றார். அத்துடன் கிழக்குத் தமிழர்ஒன்றியத்தினால் முன்வைக்கப்பெற்றபின்வரும் வேண்டுகோள்களும் பங்காளிக்கட்சிகளினால் ஒருமனதாகஏற்றுக் கொள்ளப்பெற்றன.

•இந்தஅரசியல் கூட்டுஅணியின் (கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு) செயற்குழுவுக்கான உறுப்பினர்களைப் பங்காளிக் கட்சிகள் நியமிக்கும்போது அந்தந்தக் கட்சிகள் கிழக்குத் தமிழர்ஒன்றியத்தின் உறுப்பினர்களைத் தங்கள் கட்சிஉறுப்பினர்களாக்கி அவர்களை ஐம்பதுவீதத்துக்குக் குறையாமல் தெரிவுசெய்யும் போது இந்தஅரசியல் கூட்டுஅணியின் கட்டுப்பாட்டையும் பொறுப்புக்கூறலையும் பொதுமக்களிடம் கொண்டு செல்வதற்;கு கிழக்குத் தமிழர்ஒன்றியத்திற்குச் சாதகமானதாகஇருக்கும்.

•இந்தஅரசியல் கூட்டுஅணியின் (கிழக்குதமிழர் கூட்டமைப்பு) பதவியாளர்கள் கிழக்குத் தமிழர்ஒன்றியப் பிரதிநிதிகளாக இருப்பதுநல்லது. ஆகக் குறைந்தபட்சம் தலைவர் அல்லது செயலாளர்பதவிகளையாவது கிழக்குத் தமிழர்ஒன்றியப் பிரதிநிதிக்குவழங்குதல் பொருத்தப்பாடுடையதாகும்.

•வேட்பாளர்கள் தெரிவின் போது ஒவ்வொரு பங்காளிக் கட்சிகளும் பொதுமக்களிடமிருந்து வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான ஒருபொறிமுறையைஉருவாக்கி அதன்படி செயற்படுவது எமது இலக்கை இலகுவாக்கும்.
 

Theneehead-1

   Vol:17                                                                                                                               10.10.2018