Theneehead-1

   Vol:17                                                                                                                               10.10.2018

பத்திரிகைகளுக்கானசெய்தி

9.10.2018


கடந்த 2000ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றவடமாகாண முஸ்லிம்களின் அமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபாகத்தலைவர் மர்கூம் அஸ்ரப் அவர்களுடன் 2000 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மர்கூம் நூர்தீன் மசூர் அவர்கள் அத்தேர்தலில் எமது அமைப்பு சார்பாக போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார்.

வடமாகாண முஸ்லிம்களின் அமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற புரிந்துணர்வு உடன்படிக்கை;கு அமைவாக ஸ்தாபகத ;தலைவரின் திடீர் மரணத்தின் பின்னர் இன்றைய தலைவரால் வன்னிப் புனர்வாழ்வு அமைச்சு மர்கூம் மசூர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இவ் வடமாகாண முஸ்லிம்களின் அமைப்பின் கூட்டம் கடந்த 7.10.2018 ஞாயிறு காலை 10 மணிக்கு கொழும்பு மருதானை 10,  டேவிட் மாவத்தையில் இலக்கம் 5 அமைந்துள்ள காரியாலயத்தில் இவ் அமைப்பின் பிரதித்தலைவர்களில் ஒருவரான ஆரம்பகால உறுப்பினரான டாக்டர். யு.டு தஸ்தகீர் தலமையில் நடைபெற்றது. அமைப்பின் செயளாலர குவைதிர்கான், உதவிசெயளாலர்களான கைசர்கான் (முல்லைத்தீவு), சிராஜூதீன் நிப்ராஸ் (முசலி) ,பிரச்சார செயளாலரானர். ஆநியாஸ் (மன்னார்),உறுப்பினர்களான  காமால்தீன், ாகீர், நவ்ஷாத் சகாப்தீன், தாகீர் சஹ்ரான், சகீர்தீன் போன்றவர்ளின் பங்களிப்புடன் கூட்டம் மதியம் இரண்டுமணிவரையும் நடைபெற்று சிலதீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

வடமாகாணத்தில் இருந்து 1990ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டுநாட்டின் பலதிசைகளிலும் வாழ்ந்துவரும் முஸ்லிம்களின் நிரந்தமான துரிதமீள்குடியேற்றம் ,மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களின் அடிப்படைஅத்தியாவசியமான தேவைகளையும் அத்தோடு இது வரை விடுவிக்கப்படாத முஸ்லிம்களின் காணிகள், அத்தோடு சிலாபத்துறை கடற்படைமுகாம் அகற்றப்பட்டவேண்டுமென ரசுக்கும் முஸ்லிம் பாராளுமன்றஉறுப்பினர்களுக்கும் அழுத்தம் கொடுத்து மேற்சொன்ன விடயங்களுக்கு தீர்வைப்பெறறுறக் கொடுக்க முயற்சிகளை மேற்கொள்ளல்.

வடமாகாண முஸலிம்கள் ஒட்டுமொத்தமாக பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிகழ்வை ஞாபகமூட்டி எந்தவொரு சமூகத்துக்கும் இப்படியான ஒருநிகழ்வு எதிர்காலத்தில் இடம்பெறக்கூடாது எனவும் சகல சமூகமும் ஒன்றினைந்து சகலருக்கும் சமமான சகலஉறிமையுடன் வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்ப அதற்கான முயற்சிகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளுவதுடன்,  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை முன்கொண்டு செல்லுவதற்கு வடமாகாணத்தைச் சேர்ந்த ஐந்துமாட்டங்களிலும் இருந்து இளைஞர் சமூகத்தை ஊக்குவித்து செயல்பட வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுவது எனவும் ஏகமானதாக தீர்மானித்து கூட்டம் 2 மணிக்கு இனிதேநிறைவுபெற்றது.

இவ்வண்ணம்.


சு.ஆ.குவைதிர்கான்


கௌரவசெயளாலர்(அமைப்பின் ஸ்தாபகர்)
0715730378