டொலர் - ரூபா புதிர் மற்றும் ஒரு சமநிலைப் பொருளாதார கொள்கைக்கான தேவை

                                               - லக்சிறி பெர்ணாண்டோ

இந்த வருடத்தின் கடந்த ஒன்பது மாதங்களிலும் (ஜனவரி - செப்ரெம்பர் 2018),ரூபாவின் மதிப்பிறக்கம் கிட்டத்தட்ட 10 விகிதமாக உள்ளது, மற்றும் அது அரசாங்கம் மdollar-rsற்றும் மத்தியவங்கி என்பனவற்றை சில நடவடிக்கைகளை (கடைசி நேரத்தில்) மேற்கொள்ளத் தூண்டியது. மேலும் அரசாங்கத்தின் தாராளமயமாக்கல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் என்பனவற்றின் சாதக பாதகங்கள் பற்றிய ஒரு சூடான விவாதத்தையும் அது தூண்டியுள்ளது. நிலமையின் ஈர்ப்புத்தன்மையை சுட்டிக்காட்டும் வகையில் கடந்த வருடம் இதே காலப் பகுதியில் ரூபாவின் வீழ்ச்சி 5 விகிதத்தைத் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அயல் நாட்டு நாணயப் பரிமாற்ற விகிதத்துக்கு ஏற்ப மாற்றமடையும் ரூபாவின் பெறுமதி, நாட்டின் அல்லது மக்களின் பொருளாதார நிலமைகளை மட்டுமல்ல, ஆனால் பொருளாதார மற்றும் வியாபார நம்பிக்கைகளையும் பாதிக்கிறது. ஒரு நாட்டின் நாணயம் இந்த விடயத்தில் ரூபா என்பதுகூட மக்களின் பெருமையாகும். அதன் வீழ்ச்சி, சில பொருளாதார கோட்பாட்டாளர்களுக்கு முக்கியமற்ற ஒன்றாக இருக்கலாம், ஆனால் மக்களுக்கு இல்லை. உடனடி நடவடிக்கைகள் மற்றும் அதேபோல நீண்டகால நோக்குடைய புத்திசாலித்தனமான கொள்கைகள் மூலம் இந்த நிலமை முறையாக மேம்படுத்தப் படாவிட்டால், கடுமையான நிலமைகள் உருவாகலாம்.

டொலரின் மதிப்பேற்றம்

சுதந்திரமடைந்த காலந்தொட்டு வருடந்தோறும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகிறது மேலும் மற்றைய நாடுகள் மற்றும் அவற்றின் நாணயங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பாக மேற்கு மற்றும் இப்போது இந்தியா மற்றும் சீனா, ஒரு குறிப்பிட்;ட அளவுவரை ஸ்ரீலங்காவுக்கு ஏற்படக்கூடிய பலவீன மற்றும் பாதிப்படையக்கூடிய நிலமை தவிர்க்க முடியாத ஒன்றாகும். சுதந்திரமடைந்த 1948ல் ஒரு டொலரை 3.32 ரூபாவுக்கு கொள்வனவு செய்யக்கூடியதாக இருந்தது மற்றும் ஒப்பீட்டளவில் 30 வருடங்கள் அது நிலையாக இருந்தது. இப்போது அது சுமார் 170 ரூபாவாக உயர்ந்துள்ளதுடன் இன்னும் மதிப்பிறங்கி வருகிறது. எனினும் பொதுவான போக்கு, தவிர்க்க முடியாத காரணங்களான (உள்நாட்டு யுத்தம், இடைவிடாத இயற்கைப் பேரழிவுகள், தீவிரமான சர்வதேசப் போட்டிகள் போன்றவை) மற்றும் தவிர்க்கக் கூடிய காரணங்கள் (அளவுக்குமீறிய அரசியல் செலவினங்கள், ஊழல்கள், நிர்வாகச் சீர்கேடு, ஆர்வம் குறைந்த கலாச்சாரம் போன்றவை)  ஆகிய இரண்டினாலும் ஸ்ரீலங்காவின் அபிவிருத்தியில் வேகக் குறைவை பிரதிபலிக்கின்றன.

ஆகவே முக்கியமாக எழும் கேள்வி என்னவென்றால், ஸ்ரீலங்கா ரூபாவின் பெறுமானத்தைச் சமாளிப்பது உட்பட, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் அல்லது பொருளாதாரத்தின் வெளிப்புறத் துறைகளை நிர்வகிப்பதற்கும் ஏற்றதான முடிந்தவரை இரு கட்சிகள் சார்ந்த அடிப்படையில் முறையான பொருளாதாரக் கொள்கைகள் அல்லது திட்டங்களை எப்போதாவது கொண்டிருந்ததா என்பதுதான். வித்தியாசமான அரசாங்கங்களால் ‘தாரளமயமாக்கல் மற்றும் பாதுகாப்புவாதம்” என்பனவற்றில் கடைப்பிடிக்கப்பட்ட முரண்பாடான கொள்கைகள் நன்மையை விட தீமையையே அதிகம் ஏற்படுத்தியுள்ளன.

முதன்மையாக அமெரிக்க ஜனாதிபதியின் பாதுகாப்புவாத கொள்கைகளின் விளைவாக டொலரின் மதிப்பு  ஏற்றமடைந்து வருகிறது, உதாரணத்துக்கு கடந்த ஒன்று ஒன்றரை வருடங்களாக தங்க விலைக்கு எதிராக. இது கிட்டத்தட்ட 12 விகிதம் ஆகும். எனினும் ஏப்ரல் முதல் சிறிது மாற்றமடைந்துள்ளது (“அமெரிக்க டொலர் குறைவடைந்ததால் தங்கம் உயர்வடைந்தது” சிஎன்பிசி, 5 செப்ரெம்பர்) மற்றும் புதிய போக்கு இன்னும் காணப்பட வேண்டும்.

உள்ளகக் காணங்கள்?

இந்தக் காலப்பகுதியில்தான் (ஏப்ரல் - செப்ரம்பர்) சரியாக ரூபாவின் பெறுமதியில் கூர்மையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, இதற்கான காரணங்கள் முற்றிலும் வெளிப்புறத்தில் இருந்து வந்ததா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏப்ரல் 9ல் டொலரின் பெறுமதி 154.95 ரூபாவாக இருந்தது, ஆனால் 4 ஒக்ரோபரில் அது 170.06 ஆக உயர்ந்துள்ளது. நாங்கள் பெரும்பாலும் தாராளமயமாக்கப்பட்ட சுதந்திர சந்தையில் இருப்பதினால் ஊகங்கள் இதில் முக்கிய பாத்திரத்தை வகித்திருக்கக்கூடும். வீழ்ச்சி ஏற்பட்ட காலப்பகுதியில் எற்றுமதி மூலம் வருமானம் பெறுபவர்கள் தங்கள் டொலர்களை விடுவிக்காமல் பிடித்து வைத்திருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது, இருப்பினும் இது பற்றிய சரியான எண்ணிக்கை கிடைக்கவில்லை. கடந்த ஆறுமாதங்களில் ரூபா மேலும் சிறிது சரிவடைவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது.dollar-rs1

மற்றொரு காரணி பங்குச் சந்தை, திறைசேரிப் பத்திரங்கள் மற்றும் ஏனைய நிதிச் சந்தைகளில்  இருந்து வெளியேறும் மூலதன வெளியேற்றம். இந்த வருடத்தின்போது சுமார் 1 பில்லியன் டொலர் வெளியேறிய அதேசமயம் மிகச் சிறிய அளவிலேயே புதிய உள்வரவுகள் கிடைத்துள்ளன. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. முதலீட்டு வெளியேற்றமானது இருப்புகள் மற்றும் ரூபாவின்மீது அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளது. இதற்கான காரணம் குறைவான பொருளாதார வளர்ச்சியாக மட்டுமாக இருக்க முடியாது, எனவே பொருளாதாரத்தின்மீது நம்பிக்கை குறைவு ஏற்பட்டுள்ளது, ஆனால் அரசியலின் உறுதியற்ற தன்மைகூட இதற்கான காரணம்.

இந்திய ரூபாவும் இதேமாதியான மதிப்பிறக்கத்துக்கு முகம் கொடுத்திருந்தாலும், 7 விகிதமான வளர்ச்சி விகிதத்துடன் கூடிய நாட்டின் வலுவான பொருளாதாரம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை என்பனவற்றின் காரணமாக அதன் எதிர்விளைவுகள் குறைவாக உள்ளன. 2017ம் ஆண்டில் ஸ்ரீலங்காவின் வளர்ச்சி விகிதம் எந்தக்காலத்திலும் இல்லாத அளவு குறைவாக 3.1 விகிதமாக இருந்தது. 2016ம் ஆண்டில் அது 4.5 விகிதமாக இருந்து. இந்த வருடம் வளர்ச்சி; 5 விகிதமாக இருக்கும் என்று அரசாங்கம் எதிர்வு கூறியபோதிலும், சர்வதேச நாணய நிதியம் அல்லது ஏனைய முகவர்கள் அந்தளவு நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை, 4 விகிதத்திலும் குறைவாகவே அவர்கள் மதிப்பிட்டுள்ளார்கள், அநேகமாக அது கிட்டத்தட்ட 3.5 விகிதமாக நிலைத்திருக்கும்.

வர்த்தக பற்றாக்குறை

ரூபாவின் மதிப்பிறக்கத்துக்கு மிகவும் பொருத்தமான காரணம் அரசாங்கத்தின் பக்கமிருந்து செயல்திறனுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் மோசமடைந்துவரும் நாட்டின் வர்த்தக பற்றாக்குறையே. மத்திய வங்கியில் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் 2018ன் ஆறுமாத வர்த்தக பற்றாக்குறையை 2017ன் ஆறுமாதங்களுடன் ஒப்பிட்டால் கிடைக்கும் ஒப்பீட்டுப் படம் பின்வருமாறு இருக்கும்:

 

dollar


இந்த இரண்டு வருட காலத்தில் ஏற்றுமதி 6.2 விகிதம் அதிகரித்த போதிலும் இறக்குமதி அந்தப் பெறுமதியிலும் இரண்டு மடங்கு அல்லது 12.7 விகிதம் அதிகரித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. உண்மையில் வருடத்தின் முதல் ஆறுமாதங்களில் வர்த்தகப் பற்றாக்குறை 2017ம் ஆண்டில்4.7 பில்லியன் டொலர்களாகவும் இந்த வருடத்தில் 5.7பில்லியன் டொலர்களாகவும் உள்ளன. வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுப்பும் பணம் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருமானம் என்பன இந்தப் பற்றாக்குறையின் பெரும்பகுதியை ஈடு செய்ய முடியும், எனினும் அதிகம் சமநிலைப்படுத்தப்பட்ட வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையினால் அந்த வருமானங்களை சிறப்பான அபிவிருத்தி நோக்கங்களுக்காக சேமிக்க முடியும். வெளிநாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் அனுப்பும் சுமார் 7 முதல் 8 வரையான பில்லியன் அமெரிக்க டொலர்கள், சில குறிப்பிட்ட பகுதியினருக்காக இறக்குமதி செய்யப்படும் தீர்வையற்ற சொகுசு மோட்டார் வாகனங்கள்,உட்பட அதிகரித்துவரும் இறக்குமதிக் கட்டணங்களை  சமப்படுத்த உதவுகிறது என்பதை இங்கு கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

துணைச் சுங்க வரிப் பட்டியலை அகற்றுவது?

ஸ்ரீலங்காவின் சுங்க வரிப் பட்டியல் இதனைப் போன்ற ஏனைய நாடுகளுடன் (சிங்கப்பூர்,மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள்) ஒப்பிடுகையில் மிகவும் உயர்வாக உள்ளது என்பதில் கேள்விக்கு இடமில்லை, குறிப்பாக இறக்குமதி விடயத்தில். இன்னமும் சராசரி விகிதம் கிட்டத்தட்ட 22 ஆகவே உள்ளது. சமீபத்தில் அமெரிக்கா ஏனைய நாடுகள்மீது விதித்துள்ளதுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவானதாகும். இறக்குமதி செய்யப்படும் சில குறிப்பிட்ட முதலீட்டுப் பொருட்களுக்கான சுங்க வரி 0 விகிதமாகக் கூட உள்ளது மற்றும் உயர்வான விலையுள்ள ஆடம்பரப் பொருட்களுக்கான வரி 37 விகிதத்தை தாண்டவில்லை. எங்கள் எல்லோருக்கும் தெரிந்தபடி ஆடம்பர சொகுசு மோட்டார் வண்டிகள் முற்றிலும் தீர்வை இல்லாமல் சில குறிப்பிட்ட வகையான நபர்களுக்கு வழங்கப்படுகிறது, இதன்படி மற்றைய நாடுகளின்  பொருட்களை ஸ்ரீலங்காவுக்கு ஏற்றுமதி செய்வதை ஊக்குவிப்பதே அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது.

பி.ஏ.எல் (துறைமுகம் மற்றும் விமான நிலையம் அபிவிருத்தி தீர்வை) என்கிற வடிவத்திலுள்ள  துணை - வரிப்பட்டியல்,  செஸ், வாற் மற்றும் என்பிரி( தேசிய கட்டிட வரி) என்பனவற்றை ஒருங்கிணைத்தது, இது எளிதில் கையாள முடியாததாகவும் மற்றும் சிக்கலானதாகவும் உள்ளதால் வர்த்தகத்தை ஊக்கம் இழக்கச் செய்கிறது, எனவே இவை எளிதாக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். எனினும் ஸ்ரீலங்காவைப் போன்ற ஒரு நாட்டுக்கு, ஏற்றுமதியை மேம்படுத்தி அதேவேளை உள்ளுர் கைத்தொழில்கள் மற்றும் விவசாயம் என்பனவற்றைப் பாதுகாப்பதற்கு இறக்குமதி வரி மிகவும் அவசியமானது. முக்கியமாக கடந்த வரவு செலவு திட்டம் வரை அரசாங்கம் இந்த துணை வரிப்பட்டியலை அகற்றுவதற்கும் மற்றும் விலககுவதற்குமான ஒரு வழிமுறையை ஆரம்பித்திருந்தது மற்றும் இந்த தாராளமயமாக்கல் முறை எந்தளவுக்கு தற்போதைய ரூபாவின் இக்கட்டான நிலைக்கும் அதற்கும் மேலாக அமெரிக்க டொலரின் பெறுமதி ஏற்றத்துக்கும் காரணமாக இருந்தது என்பது பற்றி இன்னமும் nதிளிவாகத் தெரியவில்லை

முரண்பாடாக, ஓகஸ்ட் மற்றும் செப்ரம்பர் மாதங்களில் நிதியமைச்சின் பக்கத்திலிருந்து மிகவும் அச்சம் தரும் பிரதிபலிப்பு தோன்றியுள்ளது, பெண்களின் பயன்பாட்டுக்குரிய சுகாதாரத் துடைப்புகள் உட்பட சில பொருட்களுக்கான இந்த துணை வரிப்பட்டியலை மீண்டும் அமல்படுத்துவதற்காக கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட அறிவுறுத்தல்கள் சுங்கப்பகுதியினருக்கும்  மற்றும் ஏனையவர்களுக்கும் வழங்கப்பட்டன. அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் வணிக கொள்கைகள் இன்று எதை நோக்கிச் செல்கின்றன என்பது தெளிவற்று உள்ளது.

அலட்சியப் படுத்தப்படும் உள்ளுர் வியாபார கருத்துக்கள்

அரசாங்கத்தின் முறையாக நிருவகிக்கப்படாததும் மற்றும் மட்டுப்படுத்தப்படாததுமான தாராளமயமான கொள்கைகள் சரி அல்லது தவறு என்று அநேகமான வியாபாரத் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்கள். எனினும் அந்தக் கருத்துக்களை கேட்டு உள்வாங்கி குறைந்தபட்சம் ஒரு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப் பட்டிருக்கவேண்டும். டி.எஸ்.ஐ குழுமத்தின் நிருவாக இயக்குனர் குலதுங்க ராஜபக்ஸ, 250 பொருட்களுக்கான துணை வரிப்பட்டியல் அகற்றப்பட்டதற்கு (சண்டே ஒப்சேவர் 10, டிசம்பர் 2018) கவலை தெரிவிக்கிறார், அவர் பாதணி தொழிலைப்பற்றி மட்டும் பேசவில்லை, ஆனால் ஏனையவற்றையும் பற்றிக் குறிப்பிடுகிறார். உதாரணத்துக்கு உப்பு, யோகர்ட் மற்றும் பட்டர் போன்றவற்றுக்கும் வரிப்பட்டியல் அகற்றப்பட்டது ஏன் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

அவர் மேலும் வினாவுவது,அனைத்து மூலப்பொருட்களையும் இறக்குமதி dollar-rs2செய்து பாதணிகளைத் தயாரிக்க ஒரு இந்திய நிறுவனத்தக்கு (வி.கே.எஸ்) அனுமதி வழங்கியிருப்பது பகுத்தறிவான செயலா என்று, அதேவேளை அது  உள்ளுரில் பாதணிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது, இத்தகைய நிறுவனங்களில் சுமார் 300,000 பேர் வேலை செய்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்த அந்நிய நேரடி முதலீடு (எப்.டி.ஐ) வெறும் 250,000 டொலர்கள் மட்டுமே என அவர் வாதிடுகிறார்.இப்போது ஜேர்மனியில் இருந்து ஒரு ரெயில் முதலீட்டாளர் வந்துள்ளார், அவர் தீர்வையற்ற உலங்கு வானூர்தி, கப்பல்கள், சொகுசு வாகனங்கள், மானிய விலையில் மின்சாரம் மற்றும் 4,000 எக்கர் நிலம் என்பனவற்றைக் கேட்கிறார், அவரது முதலீடு வெறும் 488 மில்லியன் யுரோக்கள் மட்டுமே (எகானமிநெக்ஸ்ட், 6 ஒக்ரோபர்).

தோட்ட உரிமையாளர்கள் சங்கத் தலைவரான சுனில் பொகொலியகொடவும் மற்றும் பலரும் இதேபோன்ற கருத்துக்களை வெளியிட்டார்கள். சில உள்நாட்டு தொழிலதிபர்களும் மற்றும் தோட்ட உரிமையாளர்களும் போட்டியான சந்தை நிலவரத்துக்கு பொருத்தமற்ற அதிகமான பாதுகாப்பை கோருவதற்கான சாத்தியம் இருக்கலாம். உள்நாட்டு இயற்கை றப்பர் உற்பத்தியாளர்கள் உள்ளுர் தொழிற்சாலைகளுக்கும் மற்றும் இயற்கை றப்பர் ஏற்றுமதியாளர்களுக்கும் குறைந்த விலையில் றப்பரை வழங்குகிறார்கள், அதேவேளை முதலீட்டுச்சபை (பி.ஓ.ஐ) வலயத்தில் உள்ள தொழிற்சாலைகள் கூடிய விலைக்கு (288 மில்லியன் டொலர்) இயற்கை றப்பரை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றன.

முற்றுமுழுதான ஒரு கோட்பாட்டின் கண்ணோட்டத்தில் இந்த வழியில்தான் சந்தை இயங்க முடியும் என ஒருவர் வாதிடலாம். எனினும் நாங்கள் இங்கு மனிதர்கள் மற்றும் அவர்களது வாழ்வாதாரங்கள் பற்றிப் பேசுகிறோம், ஆகவே நாட்டில் உள்ள இயற்கை றப்பர் உற்பத்திக்கும் மற்றும் ஏற்றுமதிக்காக விலை கூடிய றப்பரைப் பயன்படுத்தும் தொழில்களுக்கும் இடையில் ஒரு பாலம் ஏற்படுத்தப்பட்டு ஒற்றுமையான ஒரு நல்லுறவு ஏற்படுவதற்கான சாத்தியம் இருக்கவேண்டும்

இதற்காகத்தான் எங்களிடம் ஜனநாயகம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மற்றும் தேவையான ஆராய்ச்சி பின்துணையுடன் கூடிய பொறுப்புள்ள அரசாங்க அதிகாரிகள் உள்ளார்கள். இயற்கை றப்பரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் அதிகமான நன்மை கிடைக்காது. அதேவேளை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள ‘ஸ்ரீலங்கா றப்பர் தொழிலின் பாரிய திட்டம் (2017 -2026)’ பாராட்டப்படவேண்டிய ஒன்று. மேற்கண்ட இடைவெளிக்கு பாலம் அமைப்பதற்கு பிரதான கொள்ளை முன்னுரிமை வழங்கவேண்டும். இது ஒரு உதாரணம் மட்டுமே.

முடிவுரை

வெளிப்படையாக ரூபாயின் பெறுமானம் சரிவடைவதற்கு வேறு சில காரணிகளும் உள்ளன. வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை அதிகரித்தல் முக்கியமாக உயர் பாதுகாப்பு மற்றும் அரசியல் செலுவுகள் அதனுடன் இணைந்த வெளிநாட்டுக் கடன்கள், மேலும் வர்த்தகப் பற்றாக்குறையைச் சந்திக்க மேற்கொள்ளப்பட்ட காரணிகள் நிலமையை மேலும் மோசமாக்கின. எல்லா விடயங்களும் இங்கு ஆராயப்படவில்லை. அதேவேளை வெளிநாட்டுக் கடன்கள் 2015ல் உயர் மட்டத்தில் இருந்தது, அப்போது முதல் 20 பில்லியன் டொலருக்கும் மேற்பட்ட தொகை, அதற்கான வட்டியைச் செலுத்துவதற்காகவும், கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காகவும் மற்றும் அந்நியச் செலவாணி பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காகவும் மேலும் கடன் வாங்கப்பட்டது. அதனால்தான் எப்படியோ சுமார் 9 பில்லியன் டொலர் இருப்பு பேணப்பட்டது.

அதனால்தான் மத்தியவங்கி (அல்லது அரசாங்கம்) ரூபாவைக் காப்பாற்றுவதற்காக அந்த இருப்பை விடுவிக்கலாமா அல்லது அதலிருந்து ஒதுங்கி ரூபாவை மேலும் சரியவிட்டால் அது இயல்பாகவே ஏற்றுமதியை ஊக்குவித்து இறக்குமதியை குறைக்கும் என்கிற குழப்பத்தில் உள்ளது.; இதுவரை நிதி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட நிதி (வரி) நடவடிக்கைகள் மிகக் குறைவானவை. இந்த தாராள பொருளாதார கொள்கை காரணமாக ரூபாவுக்கு அதிகம் ‘இயற்கையான விலை’ (அதன் கருத்து அதிகம் மதிப்பிறக்கம் செய்யப்பட்ட ரூபா) கிடைக்கும் இது சுதந்திர வர்த்தகத்துக்குச் சிறந்தது. இந்த கோட்பாட்டாளர்கள் சந்தையின் தன்மையை அதிகம் நம்புகிறார்கள் அதேவேளை சந்தைகள் மற்றவர்களால் பல்வேறு நோக்கங்களுக்காகவும் மற்றும் நலன்களுக்காகவும் கையாளப்படுகிறது. இத்தகைய பின்னணியில் சர்வதேச நாணய நிதியம் உலகம் மற்றொரு நிதியியல் உருகலின் விளிம்பினை அல்லது ஒரு பெரும் பொருளாதாரச் சோர்வினை அடையப்போகிறது என்று எச்சரிக்கை செய்துள்ளது.

நிதி நெருக்கடியை முன்கூட்டியே எச்சரிக்கும் ‘நொமுரா எச்சரிக்கை’ யிலிருந்து தப்ப முடியுமானால் ஸ்ரீலங்கா அதிர்ஸ்டசாலிதான், நாடானது தென்னாபிரிக்கா, ஆர்ஜன்ரீனா, பாகிஸ்தான் எகிப்து போன்ற நாடுகளைப்போல நெருக்கடியான ஒரு நிலையில் மட்டும் இருக்கவில்லை ஆனால் நெருக்கடி எந்த நேரமும் எழலாம் என்கிற ஒரு கட்டத்தில் உள்ளது. இது ஒரு மிகைப்படுத்தலாக இருக்கலாம் ஆனால் நிலமை பிரதானப்படுத்திக் காண்பிப்பது, நாட்டின் பொருளாதாரத்தை சமநிலையான ஒரு பொருளாதாரக் கொள்கையினால் கையாள்வதற்கான பொறுப்பு குறைவாக இருப்பதையே.

அதேவேளை ஸ்ரீலங்கா ஏற்றுமதிகளை உயர்ந்த பட்சம் மேம்படுத்தி முடிந்தளவுக்கு திறந்துவிட வேண்டும் என்பது உண்மை என்றாலும் அது உள்ளுர் கைத்தொழில்கள் மற்றும் விவசாயம் என்பனவற்றை பாதிக்கும் வகையில் செய்யக்கூடாது, அத்துடன் மக்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் என்பன ஒரு கொள்கைக்கு பொருத்தமான வகையில் அல்லது சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியினரை திருப்திப்படுத்தும் வகையில் இருக்கவேண்டும். திடீரென உலகளாவிய வழங்கல் சங்கிலியின் ஒரு பாகமாக மாற்றுவதற்கு ஸ்ரீலங்கா ஒரு றோபோ நிலம் அல்ல ஆனால் மரபுகள், வாழ்க்கைப்பாணி, மற்றும் வாழ்வாதார முறைகள் என்பனவற்றைக் கொண்ட கிட்டத்தட்ட 22மில்லியன் மக்கள் வாழும் புராதனமான ஒரு நாடு.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
 

Theneehead-1

   Vol:17                                                                                                                               10.10.2018