Theneehead-1

   Vol:17                                                                                                                                11.07.2018

ஹிட்லர் வேண்டுமா - எல்.ரீ.ரீ.ஈ இனை திரும்பக் கொண்டுவர வேண்டுமா? ஆனால்செய்தியைச் சொன்னவர்களைச் சுட்டுவிட வேண்டாம்

வண. உபாலி தேரோ மற்றும் அமைச்சர் விஜயகலா பற்றிப் புரிந்து கொள்ளல்

                                       கே.கே.எஸ்.பெரேரா

  • கெட்ட செய்தியைச் சொன்னவர்மீது குற்றம் சாட்டுதல் அல்லது அந்தச் செhitler1ய்தியை விட்டொழிப்பது ஒரு மூலோபாய நகர்வாக இருக்கலாம்.
  • -வடக்கிலுள்ள தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையைத் தீர்க்க உதவி செய்யவில்லை என்பதற்காக அவர் ஜனாதிபதி சிறிசேனவை குற்றம் சாட்டினார்
  • -இந்த நாட்டைக் கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களான ஆண்களும் மற்றும் பெண்களும் இன ரீதியிலான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுவதற்குப் பொறுப்பாக இருந்து தொடர்ந்து அதைச் செய்துவருகிறார்கள்.
  • -அவர் கல்வியறிவு பெற்றவராக இருந்திருந்தால் இதை இராஜதந்திர முறையில் செய்திருக்கலாம்: மன அழுத்தம், பதற்றம் மற்றும் உணர்வுபூர்வம் என்பன அதற்கான ஒரு சாட்டு இல்லை

தெற்கிலுள்ளவர்களுக்கு ஹிட்லர் வேண்டும் மற்றும் வடக்கிலுள்ளவர்களுக்கு எல்.ரீ.ரீ.ஈ திரும்பவும் வரவேண்டும்! இது இப்படியே போனால் இரு தரப்பினருக்கும் நிச்சயமாகத் அவர்கள் விரும்பும் தகுதியுள்ள தலைவர்கள் கிடைப்பார்கள். உண்மை என்னவென்றால் பெரும்பான்மையான மக்களுக்கு ஹிட்லரோ அல்லது திரும்பவும் பிரபாகரன் வருவதோ தேவையில்லை. வண. உபாலி தேரோ மற்றும் அமைச்சர் விஜயகலா ஆகிய இருவரும்,: பெப்ரவரி 10ல் உருவாக்கப்பட்ட யகபாலனயவுக்கு விலைமதிப்பற்ற ஒரே இயல்பான மக்களின் அறிவிப்பையே ஒரு செய்தியாகச் சொல்லியுள்ளார்கள். இந்தச் சொற்பொழிவு ஒரு உருவகம், சொல்லாட்சிக் கூற்றுக்கான மற்றொரு கருத்தை வெளிப்படையாகக் குறிப்பிடுகிறது.

அன்ரிகோனில் சொபெக்ளீஸ் சொல்லுவது, “ கெட்ட செய்தியைக் கொண்டுவரும் தூதுவரை யாரும் விரும்புவதில்லை” என்று.

செய்திகள் தெரிவிப்பதின்படி ஒரு வாரத்திற்கு முன்னர், கோட்டபாய ராஜபக்ஸவின் வீட்டில் வைத்து அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர், வண.வாதுருவே உபாலி தேரோ, கோட்டாவிடம் உரையாற்றியபோது, “ சிலபேர் உங்களை ஹிட்லர் என்று விவரித்துள்ளார்கள்”, அத்துடன் அவர் சேர்த்துச் சொன்னது, “ஒரு ஹிட்லராகவே இருங்கள் இராணுவத்துடன் சென்று இந்த நாட்டின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுங்கள்” என்று. ஒரு உபதேசம், அது மிகவும் துரோகத்தனமானதும் மற்றும் ஒழுக்க ரீதியாக மிகவும் மோசமானதுமான ஒரு பகிரங்க அறிவிப்பு. இதைச் சொன்ன தூதர்களுக்குத் தெரியும் இந்த அரசாங்கம் பலவீனமானதாகவும் அதன் எதிர்காலத்தைப் பற்றி சந்தேகமானதும் மற்றும் நிச்சயமற்றதுமான ஒரு நிலையில் உள்ளது என்று பெரும் பகுதி மக்கள் கருதுகிறார்கள் என்று.

கெட்ட செய்தியைச் சொன்னவர்மீது குற்றம் சாட்டுதல் அல்லது அந்தச் செய்தியை விட்டொழிப்பது ஒரு மூலோபாய நகர்வாக இருக்கலாம். டெய்லி மிரர் பத்திரிகையில் வெளிவந்த செய்தியின்படி, சிறுவர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சராகவுள்ள பெண் அங்கத்தவரான மகேஸ்வரன் “ வடக்கு மற்றும் கிழக்கில் எல்.ரீ.ரீ.ஈ யினை மறுசீரமைப்புச் செய்யவேண்டியது மிகப் பெரிய தேவையாகத் தெரிகிறது” என்று ‘ஜனாதிபதி நில மெகேவர’ நிகழ்வில் உரையாற்றிபோது அவர் இதனைத் தெரிவித்தார். என்று.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இரண்டு அமைச்சரவை அங்கத்தவர்கள் கலந்துகொண்ட விழாவில் வைத்து அவர்கள் முன்னிலையிலேயே அவர் அரசாங்கத் தலைமைகளைத் தோலுரித்துக் காட்டியுள்ளார். “இப்போது வடக்கிலுள்ள ஏராளமான பெண்கள் கடினமான சிமங்களை எதிர்கொள்கிறார்கள். சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு ஆறுவயதுச் சிறுமி கோரமாகக்; கொலை செய்யப்பட்டுள்ளாள். இந்த நேரத்தில் எல்.ரீ.ரீ.ஈ எங்களுடன் இருந்திருந்தால் இது நடந்திருக்காது” என்று அவர் சொன்னார். ஒரு பேச்சாளர் தனது கருத்தை அல்லது அபிப்ராயத்தை கூடியிருக்கும் பார்வையாளர்களை நம்ப வைப்பதற்கு ஏற்ற ஒரு கருவியாக எவ்வாறு  செயல்படுவது என்பதற்கு ஒரு உருவகத்தைப் பயன்படுத்துகிறார், இது குறியீட்டு உருவகம் என அழைக்கப்படுகிறது.

முன்னாள் இந்து விவகார அமைச்சர் காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் விதவையான விஜயகலா, எல்.ரீ.ரீ.ஈ இனை மீளக்கட்டமைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார் - ‘நாங்கள் உயிர்வாழ வேண்டுமானால், நாங்கள் சுதந்திரமாக நடமாட வேண்டுமானால், எங்கள் பிள்ளைகள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கவேண்டுமானால்…. எங்கள் பிரதான நோக்கம் எல்.ரீ.ரீ.ஈ இனை திரும்பக் கொண்டுவருவதாக இருக்கவேண்டும்”.

வடக்கிலுள்ள தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையைத் தீர்க்க உதவி செய்யவில்லை என்பதற்காக விஜயகலா ஜனாதிபதி சிறிசேனவை குற்றம் சாட்டினார். “அவர் தனது கட்சியைப் பலப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். வடக்கிலுள்ளவாகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர் முயற்சி செய்யவில்லை. தமிழ் மக்களைக் காப்பாற்றுவதில் அவர் தோல்வி கண்டுள்ளார்” என இராஜாங்க அமைச்சர் சொன்னார்.

எவ்வாறாயினும் விஜயகலா, நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்கு சீன நிறுவனம் பங்களிப்புச் செய்துள்ள அமெரிக்க டொலர் 7.6 மில்லியன் மற்றும் பிணைப் பத்திர ஊழல் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட அலோசியசின் மென்டிஸ் சாராயத் தொழிற்சாலையின் வெளிப்படுத்தப்படாத  காசோலைகள் 118 காணாமற்போயிருப்பதாகச் சொல்லப்படுவது போன்ற குற்றங்களைச் செய்தவர்களுக்கும் மற்றும் புதிய மற்றும் பழைய இலஞ்சம் மற்றும் ஊழல் பேய்களுக்கும் தற்காலிக நிவாரணத்தை வழங்கியுள்ளார்.

எல்.ரீ.ரீ.ஈ மீள் ஒழுங்கமைக்கப்படுவதற்கான அடையாளங்கள் பற்றிய தொடர்ச்சியான சமீபத்தைய அறிக்கைள்  வெளிவருவதின் விளைவு, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்கள் தங்கள் இதயங்களில் இருந்து எல்.ரீ.ரீ.ஈ இனை அகற்ற விரும்பவில்லை என்பதேயாகும்.

பல்வேறு இனக்குழுக்களுக்கு மத்தியில் நல்லெண்ணம்; மற்றும் சமாதானமான சகவாழ்வு ஏற்படுவதற்கு இடையில், அரசியல்வாதிகள் எல்.ரீ.ரீ.ஈ இனை மீண்டும் கொண்டுவருவது பற்றிப் பேசினால், சமாதான சகவாழ்வு என்கிற கருணைமிக்க கருத்து எதனை நோக்கிச் செல்ல முடியும். இந்த நாட்டைக் கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களான ஆண்களும் மற்றும் பெண்களும் இன ரீதியிலான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுவதற்குப் பொறுப்பாக இருந்து தொடர்ந்து அதைச் செய்துவருகிறார்கள்.

சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள், தேசியவாதிகள், மற்றும் பிற இனவாத சக்திகள் மற்றும் மீதமுள்ளவர்கள் இதனுடன் நகரத்துக்குச் சென்று எல்.ரீ.ரீ.ஈ யின் புத்துயிர்ப்பு பற்றி தாங்கள் சொன்னவற்றை நியாயப்படுத்த முயல்வார்கள். அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஒரு அரசியல்வாதி மக்கள் மனதில் அச்சத்தை உருவாக்கும் இந்தமாதிரியான விஷயங்களைக் கூறுவது வருத்தமளிக்கிறது.

இரண்டு பெருந்தலைவர்களும் சர்ச்சைக்குரிய விடயங்களில் முட்டி மோதிக்கொள்வது மட்டுமன்றி ஆனால் ஒருவர் மற்றவர்மீது பழி கூறிச் சிறுமைப்படுத்தவதற்கான சிறிய ஒரு வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் - ஒருவர் அதை வெளிப்படையாகச் செய்யும் அதேவேளை மற்றவர் தனது கீழுள்ளவர்களை அதற்கு இரகசியமாகப் பயன்படுத்துகிறார், நாடு அராஜகத்துக்கு தலைமை தாங்குகிறது. அதிகாரப் பகிர்வுக்கான அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் நிரந்தரமாக பின் இருக்கைக்கு தள்ளிவிடப்பட்டிருப்பதுடன், தமிழ் இளைஞர்களிடையே அமைதியின்மை மற்றும் போராட்டங்களை உருவாக்கி விஜயகலாவை இத்தகையை ஆபத்தான அறிவிப்புகiளை கூற வைத்துள்ளது.;

 ஊழல் மற்றும் வீண்விரயங்கள் பரவலாக இடம்பெறுகிறது.  நேர்மையற்றமை தொடர்பான குற்றச்சாட்டுகள், மோசடி, சர்வாதிகாரப்போக்கு என்பனவற்றை தங்கள் ஆட்சியில் செயல்படுத்திய போதிலும் ராஜபக்ஸக்கள் படிப்படியாகவும் மற்றும் நிலையாகவும் பிரபலம் பெற்று வருகிறார்கள். ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் டெய்லி மிரர் பத்திரிகைக்காக கெலும் பண்டார வினால் நேர்காணல் செய்ப்பட்டார், அப்போது வடக்கின் அரசியல் மற்றும் ஜனாதிபதி தேர்தல்பற்றி அவர் பேசும்போது “ பொதுவாக தமிழர்கள் சாத்தியமான வேட்பாளரான கோட்டாவுக்கு எதிரானவர்கள், இருப்பினும் சில தமிழர்கள் அவரது செயல்திறன் கண்டு வியப்படைகிறார்கள்” எனச் சொன்னார் வடக்கிலோ அல்லது தெற்கிலோ உள்ள மக்கள் செயல்திறன் மிக்கவர்களைக் கண்டுதான் பாராட்டுவார்களே தவிர வெற்றுப் பேச்சாளிகளை கண்டல்ல.

பாதுகாப்புப் பிரிவினரின் சமீபத்தைய கண்டுபிடிப்புகள் பரிந்துரைப்பது, வடக்கிலுள்ள தமிழ் இளைஞர்கள் மத்தியில் வெறுப்புணர்விற்கான வெளிப்படையான அறிகுறிகள் தென்படுவதாக. முதலமைச்சர் மற்றும் சில மாகாணசபை அங்கத்தவர்களும் இளைஞர்களை தம்பக்கம் இழுப்பதில் வெற்றி பெறுவதற்காகப் பிரச்சாரம் நடத்துகிறார்கள். ஒருவேளை விஜயகலாவும் இந்தப் பட்டியலில் புதிதாக இடம்பிடித்துள்ளார் போலும். நிலமை கைமீறிப் போவதற்குள், இந்த நிலமையைக் கையாள்வதற்காக அரசாங்கம் மிதவாத ரி.என்.ஏ உடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றவேண்டும்.

சமூகம் என்கிற துணியை 30 வருடப் போர் கிழித்துச் சின்னாபின்னமாக்கிவிட்டது. வடக்கிலுள்ள மக்களுக்கு மனக்குறைகள் உள்ளன மற்றும் இதில் உள்ள உண்மை என்னவென்றால் அரசாங்கம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, நாட்டை குற்றவாளிகளிடமிருந்து விடுவிப்பதில் தோல்வி கண்டுள்ளது. பொருளாதார சிரமங்களில் கிடந்து அல்லல்படும்வரை மக்கள் நல்ல வேலைகளைப் பாராட்ட மாட்டார்கள். ஆனால் கொடூரமான ஒரு பயங்கரவாத குழுவுடன் ஒப்பிடுகையில் அழிந்து விட்ட அதற்குப் புத்துயிர் கொடுக்க அழைப்பு விடுப்பது தீங்கினையே ஏற்படுத்தும். விஜயகலாவின் வார்த்தைகளின் இலட்சியம் வடக்கில் முறையான சட்டம் ஒழங்கினை நடைமுறைப்படுத்த வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துவதாகும். அவர் சுட்டிக்காட்டுவது எல்.ரீ.ரீ.ஈ இனது காலத்தில் கேள்விப்படாமல் இருந்த பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை போன்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கை தேவை என்பதையே. வரிகளுக்கு இடையில் வாசித்தால் அவர் ஒரு தனிநாட்டையோ அல்லது அரசாங்கத்துக்கு எதிராகப் போராட ஒரு ஆயுதக்குழுவை அமைப்பதற்கோ அழைப்பு விடுக்கவில்லை.

ஸ்ரீலங்காவில் வாழும் சில தீவிரவாதிகள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் ஓரளவு பெரும்பான்மையான புலம் பெயர்ந்தவர்கள், போன்றவர்கள் ஆயுதப்படைகள் மற்றும் தெற்கில் வாழும் சில பிரிவு நபர்கள்மீது காழ்ப்புணர்வு கொண்டுள்ளார்கள், இவர்கள்தான் எல்.ரீ.ரீ.ஈ மீள் எழுச்சி பெறுவதைக் காண விரும்புகிறார்கள். இன்று வடக்கு, மக்கள் சமாதானம் மற்றும் நல்லெண்ணத்துடன் வாழும் அழகான ஒரு இடமாகும். விஜயகலாவின் பேச்சு மற்றும் அனுநாயக்க தேரரின் வார்த்தைகள் என்பனவற்றை சரியான கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இன்று வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என எல்லா இடத்திலும் வாழும் அனைத்து ஸ்ரீலங்காவாசிகளும் நாட்டில் மோசமடைந்துவரும் சட்டம் ஒழுங்கு நிலமையினைக் குறித்து கவலை கொண்டுள்ளார்கள். தீவு முழுவதிலும் ஒரே விகிதத்தில் சிறுவர்கள் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இதற்குப் பதில் சொல்லவேண்டிய சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளார்கள். ஆறு வயது பெண்குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும்போது, நடக்கமுடியால் படுக்கையில் வீழ்ந்து கிடக்கும் கணவரின் கண்முன்னாலேயே 59 வயதான பெண் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு இரையாகும்போது, யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களோ அல்லது உலகின் எந்தப் பகுதியில் உள்ளவர்களோ இதே உணர்வுக்கு ஆளாவார்கள் என்பது இயல்பான ஒன்று.

“எங்கள் பகுதிகளில் என்ன அபிவிருத்திகள் நடந்துள்ளன என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஒரு நல்ல விஷயத்திற்காக மட்டும் நான் அரசாங்கத்தைப் பாராட்ட விரும்புகிறேன், அது எங்கள் நிலத்தை திரும்பவும் எங்களிடம் தந்ததுக்காகவே. இதைத் தவிர அரசாங்கம் வேறு எதையும் எங்களுக்குச் செய்யவில்லை” என்று விஜயகலா சொன்னார்.  நேரடியாக அவரது வேலையைப் பறித்து ஒரு பயங்கரவாதக் குழுவை ஊக்குவித்ததுக்காக நாட்டின் உயரிய சட்டத்தின் மூலம் அவர்மீது வழக்குத் தொடரவேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். சரியான உணர்வுடன் விஜயகலா இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர் கல்வியறிவு பெற்றவராக இருந்திருந்தால் இதை இராஜதந்திர முறையில் செய்திருக்கலாம்: மன அழுத்தம், பதற்றம் மற்றும் உணர்வுபூர்வம் என்பன அதற்கான ஒரு சாட்டு இல்லை. அவர் எரியும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுகிறார். நூற்றுக்கணக்கான சிறுவர் போராளிகளை ஆட்சேர்ப்பு செய்து ஆயுதம் ஏந்த அவர்களை நிர்ப்பந்திப்பதுக்காகவா எல்.ரீ.ரீ.ஈ இனை மீண்டும் கொண்டு வரவேண்டும்?

தேசத் துரோகம் இழைத்ததுக்காக அவரை பதவி நீக்கம் செய்து தண்டிக்கக் கூடாது, அவரை மன்னிக்க வேண்டும், தனது நிலைப்பாட்டுக்காக அவர் மனம் வருந்தி மாறவேண்டும். அவர் பேசியது தெற்கிலும் கூட நடைபெறக் கூடும். வடக்கிலும் மற்றும் கிழக்கிலும் உள்ள சிறிய விகிதத்தினரான இளைஞர்கள்  தங்கள் மனங்களிலிருந்து எல்.ரீ.ரீ.ஈ இனை கைவிடத் தயாராக இல்லை என்பது ஓரளவு சாத்தியமானதாகும். நாங்கள் விரும்பினாலோ அல்லது விரும்பாவிட்டாலோ இதுதான் உண்மை. நாட்டில் வெகு வேகமாக மோசமடைந்துவரும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து அனைத்து ஸ்ரீலங்காவாசிகளும் மிகவும் கவலையடைந்துள்ளார்கள்.

அரசாங்கத்தின் இரண்டு மூத்த அமைச்சர்களின் முன்பாக இராஜாங்க அமைச்சர் ஒருவர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் ஒன்றுக்கு புத்துயிரளிக்கவேண்டும் என்று பேசியுள்ளார். அரசாங்கம் தனது பின்வரிசையாளர்களின் முட்டாள்தனமான பேச்சுக்கள் மூலமாக ராஜபக்ஸ ஆதரவாளர்களை அல்லது மகேஸ்வரன் மாதியான சொல்லாட்சிகளை நிறுத்தலாம் என எண்ணினால் அதற்கு முன்பாகவே மக்கள் தேர்தல் பற்றிப் பேசுவார்கள்.

கோட்டா பற்றி தேரர் சொன்னதையே விஜயகலா திருப்பிச் சொல்லியுள்ளார், மக்களுக்கு ஒழுங்கு கற்பிப்பதற்கு ஹிட்லரைப்போல ஆட்சி நடத்தவேண்டும் என்று. ஒருவேளை தவறு செய்பவர்களை  சட்டபூர்வமற்ற ஒரு கங்காரு நீதிமன்றில் தண்டிப்பதற்கு அவர்களுக்கு எல்.ரீ.ரீ.ஈ மற்றும் ஹிட்லர் தேவையாக உள்ளளனர் போலும்?

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்