கிளிநொச்சி ஊடகவியலாளர்கள் தொடர்பில் பிரதம ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதப்போவதாக கரைச்சி தவிசாளர் அறிவிப்பு


கிளிநொச்சியில் உள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பில் அவர்கள் பணிkaraich1யாற்றுகின்ற ஊடக நிறுவனங்களின் பிரதம ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதப் போவதாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ. வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

இன்று(10-09-2018) கரைச்சி பிரதேச  சபையின்  ஏழாவது அமர்வில் தலைமைத்தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்

சபை நடவடிக்கைகளை விமர்சிக்கின்ற மற்றும் சபையினை  சீராக கொண்டு செல்வதிற்கு இடையூறாகவும், சில ஊடகவியலாளர்கள் காணப்படுகின்றனர். மேலும் தவறான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குகின்றனர்,  ஊடகங்களின் பெயர்களில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக செயற்படுகின்றனர் எனவே இவர்களின் நிலைப்பாடு தொடர்பில் அவர்கள் பணியாற்றுகின்ற ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களுக்கு கடிதம் மூலம்  தெரியப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
karaichi
இது தொடர்பில் சபைக்கு வெளியே ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த கபையின் உறுப்பினர்களான இளங்கோ, சர்மிளா, செல்வராணி,லோறன்ஸ்   உட்பட பலர் இதுவரை சபை நடவடிக்கைகள் தொடர்பிலும், ஏனைய விடயங்கள் தொடர்பிலும் ஊடகங்களில் வெளிவந்த எந்த செய்தியும் உண்மைக்கு புறம்பானது அல்ல எனவும், சபை நடவடிக்கைகள் பல சந்தர்ப்பங்களில் ஒரு கட்சி சார்ந்து காணப்பட்டமையினை

ஊடகங்கள் சுட்டிக்காட்டியது எனவும், ஊடகங்கள் காரணமாகவே சபை ஓரளவுக்காவது நியாயமான முறையில் நடத்தப்படுகின்றது என்றும் தெரிவித்தனர்.

 

Theneehead-1

   Vol:17                                                                                                                               11.19.2018