Theneehead-1

   Vol:17                                                                                                                               11.10.2018

போரில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கும் சட்டம்: நிறைவேற்றம்

 

இலங்கையில் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வகை செய்யும் சட்டம், அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.srilanka war

இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நீடித்து வந்த உள்நாட்டு போர் கடந்த 2009}ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இப்போரில் உயிரிழந்துவிட்டனர். போரின் இறுதி மாதங்களில் மட்டும் 40,000 தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் தாக்குதல்களில் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இலங்கை அதிபராக மைத்ரிபால சிறீசேன பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகியும், பெரும்பான்மை மக்களான சிங்களர்கள், சிறுபான்மையினரான தமிழர்கள் இடையிலான பாகுபாடு நீடிப்பதாக சர்வதேச பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். அதிபராக பொறுப்பேற்றபோது, போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்படும்; போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று சர்வதேச சமூகத்திடம் சிறீசேன உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், போரில் பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வகை செய்யும் முக்கியமான சட்ட மசோதா, நீண்ட தாமதத்துக்கு பிறகு அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 59 வாக்குகளும், எதிராக 43 வாக்குகளும் பதிவாகின. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் ஆதரவு உறுப்பினர்கள், இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.

முன்னதாக, போரில் காணாமல் போனோரை கண்டுபிடிப்பதற்காக பிரத்யேக அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வந்த நிலையில், அந்த அலுவலகத்தை இலங்கை அரசு கடந்த மார்ச்சில் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.