அரசாங்கத்தின் இனவாதமே அழிவுகளுக்கு காரணம், ஆகவே அரசாங்கம் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்   ; ஜே.வி.பி


யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு  எந்த கால எல்லைக்குள் முழுமையாக  இழப்பீடு வழங்கப்படும்.  வடக்கு கிழக்கில் மக்களுக்கு மிகவும் இலகுவாக இலபjvpீடுகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி சபையில் கோரிக்கை விடுத்தது.

அரசாங்கத்தின் இனவாதமே அழிவுகளுக்கு காரணம், ஆகவே அரசாங்கம் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் ஜே.வி.பி சபையில் சுட்டிக்காட்டியது.

இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்.

வடக்கில் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள மக்களை தமிழர்கள் பாதுகாத்து அனுப்பிய சம்பவங்களும் பல உள்ளது. தெற்கிலும் அவ்வாறே  பல சம்பவங்களும் உள்ளது. இந்த இனவாதத்தை சட்டத்தின் மூலமாக தீர்க்க முடியாது.

நீதிமன்றம் மூலமாக தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாது. வடக்கில் நடப்பவை குறித்து சிங்கள பத்திரிகை இனவாதத்தை தூண்டுவதும் சிங்கள செய்திகளை தமிழ் பத்திரிகைகளில் இனவாதமாக சித்தரிப்பதும் மிகவும் கேவலமான ஊடக கலாசாரமாகும்.

தீர்வுகளை குழப்பும் முதல் காரணி இங்கேயே உள்ளது. வடக்கிலும், கிழக்கிலும் தெற்கிலும் இனவாதத்தை தூண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.  வடக்கில் சிங்கள முஸ்லிம் மக்களுக்கு சம உரிமை உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் கூறியதை நன் கேட்டுள்ளேன்.

மீண்டும் இதனை உறுதிபடுத்துங்கள். வடக்கில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது என்பதை மீண்டு சம்பந்தன் கூற வேண்டும். அதுவே சிங்கள இனவாதிகளின் முகங்களில் சேறு பூசும் வகைகள் அமையும் எனக் குறிப்பிட்டார்

Theneehead-1

   Vol:17                                                                                                                               11.10.2018