Theneehead-1

   Vol:17                                                                                                                               11.10.2018

வாழ்வை எழுதுதல் - அங்கம் 06

சிங்கள சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து அற்பாயுளில் மறைந்த நல்லிணக்கத் தூதுவர்

இன்று விஜயகுமரணதுங்கவின் ( 1945 - 1988)  பிறந்த தினம்

மறைகரங்களினால்  அழிக்கப்பட்ட மனிதநேயவாதி

                                                                           முருகபூபதி

(2)

1978 இல் நடந்த ஜனாதிபதித்தேர்தலில் ஶ்ரீல.சு.கட்சியின் சாMGR Vijayakumaraர்பில் ஹெக்டர் கொப்பேகடுவ போட்டியிட்டபோது அநுரா பிரசாரங்களுக்கு வரவில்லை. விஜயகுமாரணதுங்க  யாழ்ப்பாணம் உட்பட நாடெங்கும் சென்று கட்சிக்காகவும் ஹெக்டர் கொப்பேகடுவவுக்காகவும் தீவிரமாக பிரசாரம் செய்தார். மைத்திரி - அநுரா வசம் கட்சி சென்றபோது, வீட்டில் அணிந்திருந்த சாரத்துடனேயே தனது ஆதரவாளர்களுடன் ஓடிவந்து மருதானை டார்லி வீதியிலிருந்த கட்சியின் தலைமையகத்திற்கு முன்னால் போராட்டம் நடத்தினார்.

சரிந்துகொண்டிருந்த கட்சியை நிமிர்த்துவதற்கு பாடுபட்ட விஜயகுமாரணதுங்க,  இறுதியில் அக்கட்சியிலிருந்து வெளியேறி மக்கள் கட்சியை தொடங்கி தனிவழிசென்றார். சந்திரிக்காவும் ஒஸி அபேகுணசேகராவும் அவருக்கு பக்கபலமாக நின்றனர்.

அன்றைய ஜே. ஆர். தலைமையிலான ஐ.தே. கட்சி 1977 இல் பதவிக்கு வந்த  காலம் முதல்  1977 - 1981 - 1983  முதலான ஆண்டுகளில் இலங்கையில் இனக்கலவரம் வந்தது.  1977 இல் நடந்த கலவரத்தின்போது  " போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்"  என்ற பிரகடனம் செய்த ஜே.ஆர். 1978 முதல் 1989 வரையில் ஜனாதிபதியாக பதவியில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலத்தில்தான் இலங்கை பாரிய நெருக்கடிகளை சந்தித்தது. 

1983 இல் கொழும்பிலும் புறநகரங்களிலும் தமிழர்கள் கொல்லப்பட்டபோதும், தமிழர்களின் உடைமைகள் அழிக்கப்பட்டபோதும் விஜயகுமராணதுங்க அன்றைய ஆட்சியின் மீது கடும் கோபமுற்றிருந்தார். வத்தளை ஹெந்தளையில் அமைந்திருந்த சினிமாஸ் குணரத்தினத்தின் விஜயா ஸ்ரூடியோ எரிக்கப்படும் தகவல் அறிந்து அவ்விடத்திற்கும் ஓடிச்சென்று, திரைப்படச்சுருள்களை பாதுகாப்பதற்கு போராடினார்.

ஹெக்டர் கொப்பேகடுவ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, அக்கட்சியின் ஆதரவாளர்கள் அரிசிக்கூப்பன் அச்சிட்டு விநியோகித்து பிரசாரம் செய்தனர். இதனால் ஜே.ஆரின் உத்தரவுக்கு அமைய பொலிஸார் விஜயகுமாரணதுங்கவையும் அவரது தோழர் ஒஸி அபேகுணசேகரவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். . இரண்டுவாரங்களுக்கு மேல் தடுத்துவைக்கப்பட்டார்.OCabaya gunasegara

இதுவிடயமாக ஜே.ஆரை. நேரில் சந்தித்து  கணவனின் விடுதலை பற்றி சந்திரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியபோது, அதுகுறித்து பேசுவதை தவிர்த்த ஜே.ஆர்,  - விஜயகுமாரணதுங்க  நடித்த திரைப்படங்கள்  பற்றி பேசியிருக்கிறார்.

இதன் மறைமுக அர்த்தம்: " உனது கணவனுக்கு ஏன் அரசியல்? சினிமாவுடன் நின்றிருக்கலாமே" என்பதுதான். பின்னாளில் சந்திரிக்கா, ஜே.ஆரை, "நரி" என வர்ணித்ததற்கும், இத்தாலிய அரசியல் மேதை "நிக்கோலோ மாக்கியாவெல்லி" க்கு   ஒப்பிட்டுப்பேசியதற்கும் இதுபோன்ற காரணங்கள் அநேகம்.

விஜயகுமாரணதுங்க, இலங்கையில் சமாதானத்தை விரும்பியவர். அதற்காக எவருடனும் எந்த நிபந்தனைகளும் இன்றி பேசுவதற்கும் தயாராகவிருந்தவர். பேசியவர். சென்னைக்கு மனைவி சந்திரிக்காவுடன் சென்று, இலங்கை இனப்பிரச்சினைத்தீர்வு தொடர்பாக முதல்வர் எம்.ஜீ.ஆர், அமிர்தலிங்கம் மற்றும் புளட் உமா மகேஸ்வரன், டெலோ செல்வம்  அடைக்கலநாதன் ஆகியோருடனும் பேசினார்.

விடுதலைப்புலிகள் இராணுவத்திலிருந்து இரண்டுபேரை பிடித்து தடுத்துவைத்திருந்தபோது அவர்களை விடுவிப்பதற்காகவும் சென்றவர். அச்சந்தர்ப்பத்தில் கிட்டு, ரVK and ltteஹீம் ஆகியோருடன் பேசியவர். சிலதடவைகள் வடக்கிற்கு நல்லெண்ணத் தூதுவராகச்சென்றார். இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பரவலாக்கல்தான் சரியான அர்த்தமுள்ள தீர்வு என்று தொடர்ந்து வலியுறுத்திவந்தார்.

இலங்கையில் இடதுசாரிகளும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் வலுவிழந்திருந்த காலப்பகுதியில் தனது மக்கள் கட்சியின் மூலம் சகல தரப்பினரையும் கவர்ந்திருந்தார். ஜே.ஆரும் அரசியலிலிருந்து ஒதுங்கியதையடுத்து,  மக்கள் விடுதலை முன்னணி தலைமறைவாகியதையடுத்து, பிரேமதாசவுக்கு சவாலாக இருந்தவர் அவரைப்போன்று சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து அரசியலுக்கு வந்திருந்த விஜயகுமாரணதுங்க மாத்திரமே.

அவரது வசீகரமான முகமும் அவரது அரசியல் எதிரிகளுக்கு வெறுப்பூட்டியது.  இலங்கை - இந்திய ஒப்பந்தத்தையும் அவர் ஆதரித்தார்.  தமிழர் தரப்பிலும் நல்லெண்ணத்தை அவர் சம்பாதித்திருந்தமையால்,  இலங்கையின்  எதிர்காலத்தில் புதிய அதிபராக வரக்கூடிய சாத்தியமும்  அவருக்கிருந்ததை  சில மறைகரங்கள் அவதானித்தன.

அதன்  விளைவுதான் 1988 இல்  அவர் மீதான கொடூரத்தாக்குதல். அவரது வீட்டு வாசலில்  அவரது பெண்குழந்தையின் முன்பாகவே கொலையாளிகள் அவரைச்சுட்டனர். அவரது வசீகரமான முகத்தை தொடர்ச்சியாகச்சுட்டு சிதைத்தனர்.

சினிமாவிலிருந்து அவர் அரசியலுக்கு வந்ததை அவரது சினிமாத்துறை நண்பர்களும் சிநேகிதிகளும் விரும்பவில்லை. தனது சினிமா விளம்பரத்தை மூலதனமாகவைத்துக்கொண்டு அவர் அரசியல் தலைவனாகவுமில்லை.

அவர் இன்றில்லை! ஆனால், அவரது  உறவினர்களான முன்னாள் சினிமா நடிகர்கள் ஜீவன் குமாரணதுங்க, ரஞ்சன் ராமநாயக்க, மற்றும் நடிகைகள் மாலினி பொன்சேக்கா, கீதா குமாரசிங்க ஆகியோர் நாடாளுமன்றத்திற்குள் எளிதாகப் பிரவேசித்தனர்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து முன்னுரை எழுதியவரின் வாழ்வு, சினிமாvk chandrikaவிலும் பல அத்தியாயங்களை கண்டு,   அரசியலிலும் பல அத்தியாயங்கள் தொடர்ந்து, வீதியில்  முடிவுரையை கண்டது.

அவரது உற்ற நண்பர் ஓஸி அபேகுணசேகர அவரது மறைவுக்குப்பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து,  காமினி திஸாநாயக்காவுடன் விடுதலைப்புலிகளின் தற்கொலைத்தாக்குதலில் மேல் உலகம் சென்றதும், அவரது காதல் மனைவி சந்திரிக்கா, தனது பதவிக்காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியை  இணைத்ததும், பின்னாளில் ரணில் - மைத்திரி கூட்டுக்கு சூத்திரதாரியானதும் அரசியலில் நாம் காணும் முரண் நகை!

இந்தப்பதிவின் இறுதியில் வரும் இந்த  இணைப்பில் விஜயகுமாரணதுங்கவும் ஒஸி அபே குணசேகரவும் , விடுதலைப்புலிகளை 1986 இல் சந்தித்துப்பேசிய காணொளிக்காட்சியை பார்க்கலாம்.

https://www.youtube.com/watch?v=wP9_KwmI4vI