Theneehead-1

   Vol:17                                                                                                                               12.19.2018

ஆயுர்வேத மருத்துவத்தை ஏற்றுக் கொண்ட முதல் மேற்கத்திய நாடு சுவிட்ஸர்லாந்து: மக்களிடையே பலத்த வரவேற்பால் முறைப்படுத்தத் திட்டம்

மேற்கு நாடுகளாக இருந்தாலும் கீழைநாடுகளாக இருந்தாலும் Ayurveda111அலோபதி மருத்துவச் சிகிச்சையின் காலனியாதிக்கம் மக்களைக் கடுமையாக சுரண்டி, அழித்து அதில் கொழுத்து வளரும் கார்ப்பரேட் மருத்துவமனைகள், கார்ப்பரேட் மருந்து உற்பத்தி நிறுவனங்களை அசுர வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும் நிலையில் மேற்கத்திய நாடான சுவிட்ஸர்லாந்து முதன் முதலில் மாற்று மருத்துவ முறையான ஆயுர்வேதத்தை அங்கீகரித்துள்ளது, மக்களிடையே பலத்த வரவேற்பும் கிடைத்துள்ளது.

மேலும் மாற்று சிகிச்சை முறைகளை மோசடி என்றும் நம்பத்தக்கதல்ல என்றும் கார்ப்பரேட் மீடியாக்கள் மூலம் உலகம் முழுதும் அலோபதி சார்ந்த நிறுவனங்கள் பொய்ப் பிரச்சாரத்தைப் பரப்ப ஏகப்பட்ட தொகையினையும் செலவிட்டு வருகின்றன.

ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையாளர்கள் மற்றும் ஆயுர்வேத மருந்துகள் முறையை மேலும் ஒழுங்குபடுத்த சுவிட்ஸர்லாந்து அரசு கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது.

2015-ல் ஆயுர்வேத மருத்துவ முறை மற்றும் மருந்துகளை ஏற்றுக் கொண்ட ஒரே மேற்கத்திய நாடானது சுவிட்ஸர்லாந்து.

இது குறித்து சுவிஸ் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ-யிடம் கூறும்போது, “இங்கு ஆயுர்வேத மருத்துவத்துக்கும் மருந்துகளுக்கும் பெரிய வரவேற்பு இருக்கிறது. எனவே இதனை முறைப்படுத்தி ஒழுங்கு முறைக்குள் கொண்டுவர அரசு கமிட்டி ஒன்றை உருவாக்கியுள்ளது. மருத்துவர்களுக்கு முறைப்படி சட்ட அனுமதி, விற்கக் கூடிய மருந்துகளுக்கான சட்ட அனுமதி ஆகியவற்றை தீர்மானிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

மருத்துவர்களுக்கு அனுமதி அளிக்க கல்விமுறை, பாடத்திட்டங்கள் தேவை. தேர்வு முறையும் தேவை என்று அரசு உணர்கிறது.

அங்கு பல விடுதிகளில் ஆயுர்வேத மசாஜ்கள் அவர்களது ஸ்பா பேக்கேஜ்களில் இடம்பெற்றுள்ளன. பல ஆயுர்வேத மருத்துவர்கள் குறைந்த தகுதியையும் அனுபவமுமே கொண்டுள்ளனர்.

“எனவே மக்களிடம் வரவேற்பு உள்ளது, ஆனால் நம்பகத்தன்மைஉம் அங்கீகாரமும் இல்லாததால் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் ஆயுர்வேத மருத்துவத்துக்கான காப்பீட்டுத் தொகையை அளிக்க மறுத்து வருகின்றனர். இந்த விவகாரங்களைத் தீர்க்கவே இப்போது முறைப்படுத்துவதற்காக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது” என்று பெயர் கூற விரும்பாத அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

2009-ம் ஆண்டு அந்நாட்டு மக்கள் தங்கள் நாட்டுச் அரசமைப்புச் சட்டத்தில் மாற்று மருத்துவ முறை, சிகிச்சை, மருந்துகளை அங்கீகரிக்கும் பிரிவை உருவாக்க ஆதரவளித்து வாக்களித்தனர்.

இதனையடுத்து தங்களது சுகாதார, மருத்துவ ஒழுங்கமைப்புக்குள் ஆயுர்வேதத்தையும், மாற்று சிகிச்சை முறைகளையும் அனுமதித்த முதல் மேற்கத்திய நாடாகத் திகழ்கிறது.

2010-ல் உலகச் சுகாதார அமைப்பு ஆயுர்வேத மருத்துவத்திற்கான தொழில்முறைப் பயிற்சி குறித்த விதிமுறைகளை வெளியிட்டது, இந்தியாவில் உள்ளது போல் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சைக்கான இளங்கலைப் பட்டப்படிப்புக்கான பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டது இது.

The Hindu Tamil