Theneehead-1

   Vol:17                                                                                                                               12.19.2018

எமிரேட்ஸின் வெற்றியும் ஸ்ரீலங்கனின் தோல்வியும்

                                        லத்தீப் பாறுக்

1985ன் முற்பகுதியளவில், டூபாயை தளமாகக் கொண்டியங்கிய ஆங்கிலமொழி பத்திரிகையான டெய்லி காலிஜ் டைம்ஸில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம், டூபாய் அரசாஙEmirates்கம் ஒரு சர்வதேச விமான சேவையை ஆரம்பிக்கும் திட்டத்தைப் பற்றிய ஊகங்கள் இருந்தன. அது வெறும் ஆசைப்படும் ஒரு சிந்தனை எனப் பலரும் அதை நிராகரித்தார்கள். எனினும் அது ஒரு வெற்றிகரமான கதையாக மாறக்கூடும் எனச் சிலர் சொன்னார்கள். டூபாய் தேசிய விமானப் பயண முகவர் நிறுவனத்தின் அப்போதைய மேலாளராக இருந்த மொரிஸ் பிளானகானிடம் இது பற்றிக் கேட்டேன் பின்னாளில் அவர் எமிரேட்ஸ் விமானசேவையின் நிறுவனர் மற்றும் பொது முகாமையாளராக மாறினார்.

அவர் அதை உறுதிப் படுத்தியதுடன் மற்றும் 25 மார்ச் 1985ல் எமிரேட்ஸ் விமானசேவை, பாகிஸ்தான் சர்வதேச விமானசேவையிடம் இருந்து குத்தகைக்குப் பெற்றுக்கொண்ட இரண்டு விமானங்களில் இருந்து அதன் ஆரம்ப விமான சேவைகளை முதலில் லாகூருக்கு ஆரம்பித்தது. ஆரம்ப முதலீடாக அரசாங்கத்தின் மானியத்துடன் சுயாதீனமாக இயங்குவதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்பட்டது. பாகிஸ்தான் சர்வதேச விமானசேவை எமிரேட்ஸ் விமானக் குழுவினருக்கு தேவையான பயிற்சி வசதிகளை தனது விமானப் பயிற்சி அகாடமி மூலம் வழங்கியது.

இன்று மத்திய கிழக்கில் இதுதான் பெரிய விமான சேவை, வாரத்துக்கு 3,600 விமானப் பயணங்களை அதன் மையமான டூபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 81 நாடுகளில் உள்ள 140 நகரங்களுக்கு நடாத்தி வருகிறது. மார்ச் 2016 முதல் பெப்ரவரி 2017 வரையான காலப்பகுதியில் எமிரேட்ஸ் அதன் மிக நீண்ட இடைநிறுத்தலற்ற வர்த்தக விமானப் பயணத்தை டூபாயிலிருந்து ஓக்லாந்துக்கு நடத்தியது.

எமிரேட்ஸ், ஏயர்பஸ் மற்றும் (எமிரேட்ஸினைத் தவிர்த்து) வெகு சில விமான நிறுவனங்களே இயக்கும் அகலமான உடலைக்கொண்ட விமானமான  போயிங் என்பனவற்றின் கலவையான விமானசேவைகளை இயக்கிவருகிறது நவம்பர் 2017 வரை எயார்பஸ் ஏ380 ஜ இயக்குவதில் எமிரேட்ஸ் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது, தற்போது 103 விமானங்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதுடன் மேலும் 42 விமானங்கள் வாங்குவதற்கு  உத்தரவிடப் பட்டுள்ளது. ஏயார்பஸ் ஏ380 அறிமுகப்படுத்தப் பட்டதுடன் அது எமிரேட்ஸ் விமானசேவையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது, குறிப்பாக நீண்டதூர விமானப் பாதைகளுக்கு. மேலும் எமிரேட்ஸ் உலகின் மிகப்பெரிய போயிங் 777 விமானங்களையும் இயக்குகிறது, அதன் விமான சேவையில் இத்தகைய விமானங்கள் 151 உள்ளன.

எமிரேட்ஸ் விமானசேவை ஆரம்பிக்கப்பட்டபோது, அப்போது ஏயார் லங்கா என அழைக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன் மிகவும் வெற்றிகரமான ஒரு மூன்றாம் உலகநாட்டு விமானசேவை என்று குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றத்தைக் கொண்டிருந்தது. ஸ்ரீலங்கா அரசாங்கம் திவாலான நிலையில் இருந்த எயார் சிலோன் நிறுவனத்தை மூடியபோது, ஸ்ரீலங்கா கொடியை ஏந்திச்செல்லும் விமானசேவையாக எயார் லங்கா நிறுவப்பட்டது.  1998ல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் நிருவாகத்தின் கீழ் 70 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 40 விகித ஸ்ரீலங்கா பங்குகள் விற்பனை செய்யப்பட்டன, பின்னர் அது 43.6 விகிதமாக அதிகரிக்கப்பட்டது, மற்றும் பல வருடங்களாக அது நட்டம் ஈட்டியதன் காரணமாக அதன் நிருவாகத்தை நடத்தும் பொறுப்பு எமிரேட்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆயினும் 2008க்குப் பிறகு எமிரேட்ஸ், இந்த விமானசேவையில் இருந்து வெளியேறியது, அத்துடன் அதன் பங்குகளை அரசாங்கத்துக்கு விற்பனையும் செய்தது. எமிரேட்ஸ் எயார்லைன் உடனான முகாமைத்துவ சேவை முடிவுக்கு வந்த வருடமான 2008ல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 4.4 பில்லியன் ரூபாய்களை இலாபமாக ஈட்டியது, அது முதல் 107 பில்லியன் ரூபாய்களை  நட்டமாக இழந்துள்ளது.

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸின் ஆபத்தான நிலமையை வெளிச்சம்போட்டுக்கsrilankan airlines1ாட்டிய பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரட்ன 24 மார்ச் 2016ல் சொன்னது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ எமிரேட்ஸ் எயார்லைனை விரட்டியடித்தபிறகு  அரசாங்கத்தால் நடத்தப்பட்டுவந்த ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ்  மாபெரும் இழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது, மற்றும் ஒரு கேள்விக்குரிய விமானக் கொள்வனவு ஒப்பந்தம் ஒரு தேசிய நிதிக் குற்றமாகும் என்று.

முன்னாள் ஜனாதிபதியின் பெரிய பரிவாரங்களை ஒரு ஒற்றை விமானத்தில் கொண்டு செல்லும்போது அவர்களுக்கு இடமளிக்கும் விதமாக போதுமானளவு பணம் செலுத்திப் பயணிக்கும் பிரயாணிகளைச் நீக்கவில்லை என்கிற காரணத்தால் ராஜபக்ஸ நிருவாகம்  பிரதான நிறைவேற்று அதிகாரி பீற்றர் ஹில்லின் விசாவை இரத்துச் செய்தது.

“பிரதம நிறைவேற்று அதிகாரி சொன்னது. இந்தப் பயணிகள் அனைவரும் இந்த நாட்டுப் பிரஜைகளாக இருப்பதால் எங்களால் அவர்களை இறக்கிவிட முடியவில்லை மற்றும் அவர்கள் அனைவரும் பணம்செலுத்திப் பயணம் செய்பவர்கள் அதற்கான ஒரு ஒப்பந்தம் உள்ளது” என்று விக்கிரமரட்ன பாராளுமன்றில் தெரிவித்தார். “மறுநாளே அவரது விசா இரத்துச் செய்யப்பட்டது, அதுமுதல் அது ஒரு நட்டம் ஈட்டும் விமானசேவையாக மாறியது. அது மாபெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அது ஏற்படுத்தியுள்ள நட்டம் சுகாதாரம் மற்றும் கல்வி என்பனவற்றுக்காகச் செலவிடும் தொகையைவிட அதிகமானது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2015ம் ஆண்டளவில் ஏற்பட்ட இழப்பு 128 பில்லியன் ரூபாய்களாகும், கடன் 76 ரூபாய்களும் (542 மில்லியன் டொலர்) மற்றும் அதன் இருப்புநிலை பத்திரத்தில் துண்டுவிழும் தொகை 74 பில்லியன் ரூபாய்களாகும். இருப்பு நிலைப் பத்திரத்தில் ஏற்பட்டுள்ள இந்த குறைவு, மக்களிடம் இருந்து வரிகள் மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தை திறைசேரி இதில் மூலதனமாகச் செலுத்தியதைவிட மிக அதிகமாகும். ஒவ்வொரு வருடமும் இழப்புகளை ஈடு செய்வதற்காக திறைசேரி ஸ்ரீலங்கா விமானசேவைக்கு 100 மில்லியன் ரூபாய்களைச் செலுத்தி வந்துள்ளது. அப்போது ஸ்ரீலங்கா விமானசேவை  ஒரு ஏ330 மற்றும் ஏ350 விமானங்களை கொள்வனவு செய்வதற்கு பொறுப்பற்ற விதத்தில் முடிவு செய்தது என விக்கிரமரட்ன குற்றம் சாட்டினார். எயார்பஸ் ஏ350 - 900 விமானம் தொடர்ச்சியாக 17 மணித்தியாலங்கள் பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது, அப்போது ஸ்ரீலங்கன் விமானசேவையின் மிக நீண்ட நேரடிப் பயணம் சுமார் 11 மணித்தியாலங்களாகவே இருந்தது.

ஆவணங்களின்படி மூன்று வருடங்களின் பின் விமானங்களை கையகப்படுத்தவதற்கு அரசாங்கத்தின் உதவியாக 780 மில்லியன் டொலர்களே தேவையாக இருந்தது என்றும் ஒரு 80 மில்லியன் வைப்புத்தொகை செலுத்தப்பட்டிருந்தது என்றும் அவர் சொன்னார். “விமானப் போக்குவரத்து நிபுணர்கள் எங்களிடம் தெரிவித்தது,குத்தகை ஒப்பந்த விதிகள் சாதாரணத்தை விட 25 விகிதம் விலையுயர்ந்ததாகக் காணப்படுகிறது இதைப் பற்றி கவனிக்கவேண்டும் என்று. அடுத்த 12 வருடங்களுக்கு இந்த குத்தகைக் கடனின் தற்போதைய மதிப்பு 1.5 பில்லியன் டொலர்கள் ஆகும்”. “இது ஒரு நிதியியல் குற்றம் இதை நாங்கள் விசாரணை செய்ய வேண்டும்”.

உள்ளுர் ஊடகங்கள் தெரிவிப்பதின்படி உறுதியான மற்றும் நிலையான மறுசீரமைப்பை அடைய முடியாவிட்டால், ஸ்ரீலங்கன் விமானசேவை மூடப்படும் நிலமை ஏற்படும் என்று. இதற்கிடையில் 7 செப்ரம்பர் 2018 வெள்ளிக்கிழமை டெய்லிமிரர் தெரிவிப்பது, அமைச்சர் சம்பிக ரணவக்க வெளிப்படுத்தியிருப்பது, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை எமிரேட் எயார்லைன்ஸிடம் இருந்து அரசாங்கம் கையேற்றபோது, அது 80 பில்லியன் ரூபாய்களை இலாபமாகப் பதிவு செய்திருந்தது. அதன்பின் அரசாங்கம் மிகின் எயார் விமானசேவையை ஸ்ரீலங்காவுக்கான பிராந்திய சேவையாக நிறுவியது. இன்று இரண்டு விமான சேவைகளும் ஒரு பிரமாண்டமான இழப்பாக ரூபா 200 பில்லியன் நட்டத்தை ஏற்படுத்தியதுடன் திறைசேரிக்கு கடனாளியாகவும் ஆகியுள்ளன. நாட்டிற்கே சாபக்கேடாக மாறியுள்ள இந்த இரண்டு விமானசேவைகளினதும் செலவை ஈடு செய்வதற்கு நாட்டிலுள்ள ஒவ்வொரு ஸ்ரீலங்காவாசியும் வருடாந்தம் 10,000 ரூபாவினை செலுத்தவேண்டியுள்ளது.

இப்போதுள்ள கேள்வி என்னவென்றால் இந்தப் பேரழிவுக்கு பொறுப்பானவர்கள் யார் என்பதே. 1948ல் ஸ்ரீலங்கா சுதந்திரம் பெற்றபோது அது அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை, உயர்மட்டத்திலான இலவசக்கல்வி, இலவச சுகாதார சேவைகள் மற்றும் இன நல்லிணக்கம் என்பனவற்றைக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு வளர்ச்சியடைந்த மூன்றாம் உலக நாடாகத் திகழ்ந்தது என்பதை நினைவிற்கொள்ளுவது மதிப்பானது. அந்த நேரத்தில் டூபாய் என்கிற தேசத்தைப்பற்றி அறிந்ததோ கேள்விப்பட்டதோ கிடையாது அதன் சனத்தொகை சில ஆயிரங்களாக மட்டுமே இருந்தது. அவர்கள் தீவிர வறுமையும் கல்வியறிவற்றவர்களாகவும் இருந்தார்கள். அங்கு பாடசாலையோ, மருத்துவமனையோ மின்சாரமோ அல்லது குடிதண்ணீரோ இருக்கவில்லை. அவர்கள் உயிர்வாழ்வதற்கான ஒரே மார்க்கமாக இருந்தது சீறும் புயலில் கொந்தளிக்கும் கடலில் மீன்பிடித்து வியாபாரம் செய்வது. எண்ணெய் வளத்தின் எழுச்சியுடன் அபிவிருத்திக்கான வாய்ப்பு அவர்களத் தேடிவந்ததும் ஆட்சியாளர்களும் மற்றும் அதேபோல மக்களும் இருகரம் நீட்டி அதைப் பற்றிப்பிடித்து இந்தப் பாலைவனத்தை அதி நவீன நகரமாக உருவாக்கினார்கள்.

எமிரேட்ஸ் உலகெங்கிலும் இருந்து ஆட்களை இன, மத, மொழி, கலாச்சாரம் அல்லது தேசியம் என்கிற பேதமின்றி பணிக்கமர்த்தியுள்ளது. நன்றாகப் பணியாற்றி  விமானசேவையின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தவர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன, அதேவேளை ஏனையவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள்.

எங்கள் நாட்டைப் பொறுத்தவரை, தீவில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த மற்றும் இப்போதும் ஆட்சி செய்துகொண்டிருக்கிற  அரசாங்கங்களான ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய இரண்டுமே இந்த நிருவாகச் சீர்கேட்டுக்கான முக்கிய பொறுப்பாளிகள். உதாரணத்திற்கு, சமீபத்தைய கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா விமானசேவையின்மீது ஊழல் குற்றச்சாட்டு மற்றும் முன்னாள் தலைவர் நிசாந்த விக்கிரமசிங்க விமானப் பணிப்பெண்களுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டது. ஒரு விமானசேவையின் தலைவராக இருப்பதற்கு ஏற்ற முறையான கல்வியறிவோ அல்லது அனுபமோ விக்கிரமசிங்காவிடம் குறைவாகக் காணப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஒக்ரோபர் 2015ல், மோசடி, ஊழல், அதிகாரம்,அரச வளங்கள் மற்றும் சலுகைகளை துஸ்பிரயோகம் செய்தல்; போன்ற தீவிர செயற்பாடுகளை ஆராய்ந்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, விமானசேவையில் ஏற்பட்டுள்ள பல்வேறு முறைகேடுகளைப்பற்றி விசாரணை செய்வதற்காக விக்கிரமசிங்காவுக்கு அழைப்பாணை அனுப்ப முயற்சிசெய்தது, ஆயினும் அதனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை, மற்றும் மூன்று வருடங்களாக அவர் வீட்டுக்கே வரவில்லை என்று அவரது மனைவி சொன்னார், அவரது இருப்பிடம் அவரது மனைவிக்குத் தெரியவில்லை. பின்னர் அவர் விசாரணைக்குழுவிற்கு அறிவித்தது தான் வெளிநாட்டில் இருப்பதாகவும் தன்னால் வர இயலாது என்றும். இதுதான் இந்த நாட்டில் நடக்கும் மோசமான அரச விவகாரங்கள் அதில் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் பாதுகாக்கிறார்கள்.
இது தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வருவதற்காக வாக்களித்த பின்னர், மூன்றரை வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்: