ஜனாதிபதி ஊடகப் பிரிவின் விசேட அறிவித்தல்

ஜனாதிபதியை படுகொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் சதித்திட்டம்

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய புலனாய்வு சேவை ஒன்றுடன் தொடர்புபடுத்தி கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாக வெளியிடப்பட்டுள்ள உள்ளூர் மறslprasident்றும் சர்வதேச ஊடகப் செய்திகள் தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதி முயற்சியில் இந்திய உளவுத்துறையின் எந்தவொரு ஈடுபாடு குறித்தும் ஜனாதிபதி இதன்போது கருத்து தெரிவிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதியை படுகொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் சதித்திட்டம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

படுகொலை சதி முயற்சி குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

தேசிய பொருளாதாரத்தின் நன்மைக்கு, இலங்கை ஆழ்கடல் துறைமுக முனையம் ஒன்றினை கொண்டிருக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி இதன்போது விளக்கமளித்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேநேரம், இன்று முற்பகல் இந்திய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்தபோது, இதனுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களும் தெளிவுபடுத்தப்பட்டதுடன், இருதரப்பு உறவுகளும் உறுதிப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகளுக்கும், இரு தலைவர்களுக்கும் இடையிலான சிறந்த தனிப்பட்ட தொடர்புகளுக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் சில உள்நோக்கம் கொண்ட தரப்புக்களினால் இத்தகைய திரிபுப்படுத்தப்பட்ட விடயங்கள் பரப்பப்படுவது கவலைக்குரியதாகும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலைசெய்வதற்கான சதியொன்றில் இந்திய புலனாய்வு சேவை தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படும் செய்தி தொடர்பில் வெளியான ஊடக அறிக்கைகள் அடிப்படையற்றவை என்றும் தவறானவை என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் விளக்கமளித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவுகள், இந்திய அரசாங்கத்தின் உயர்மட்டங்கள் மற்றும் உளவுத்துறை பரிமாற்றங்கள் உட்பட பல்வேறு துறைகளை உள்ளடக்கியவாறு பலமாகவுள்ளது.

எனவே, ஜனாதிபதியின் கருத்துக்களில் இருந்து ஒருபகுதியை மாத்திரம் மேற்கோள்காட்டி திரித்துக்கூறப்பட்ட உண்மைக்குப் புறம்பான ஊடக அறிக்கையானது, ஏனைய ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களில் பரவுவதற்கு வழிவகுத்திருப்பதும் பொது மக்களிடையே புரியாத ஓர் அச்சத்தினை ஏற்படுத்தியிருப்பதும் வருத்தமளிப்பதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இன்று காலையில், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருடன் இடம்பெற்ற கூட்டத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான அரசாங்கத்தின் அனைத்து உயர் மட்டங்கள் உட்பட நெருங்கிய மற்றும் ஒழுங்கான தொடர்பை பேணும் வகையில் ஜனாதிபதி, கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Theneehead-1

முதற்பக்கம்

இணையங்கள்

பூமரங்

இலங்கை மாணவர் கல்வி நிதியம்

முன்னைய பதிவுகள்

   Vol:17                                                                                                                               18.10.2018