ஸ்ரீலங்காவில் நெருக்கடி: அரசியல் ரீதியாக அசாத்தியமானது எதுவோ, அது அரசியல் ரீதியாக தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது

பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவுடன் ஒரு நேர்காணல்

                                             சி.ஏ.சந்திரபிரேம

டொலருக்கு ஈடான ரூபாயின் பெறுமதி 173 ஐத் தொட்டுவிட்டது மற்றும் எரிபொருட்களின் விலை இந்த வருடம் ஐந்தாவது முறையாக அதிகரிக்கப் பட்டுள்ளது. தtissa vitaranaங்களுக்கான ஆட்சிக்காலம் முடிவடைந்துவிட்டதால் ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டுவரும் மாகாணசபைகளுக்கான தேர்தல்களை ஏன் நடத்தமுடியாமல் இருக்கிறது என்பதை விளக்குவதற்காக, தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மற்றுமொரு கூட்டத்தை நடத்தியுள்ளார். மத்திய மற்றும் வட- மத்திய மாகாணசபைகளின் ஆட்சிக்காலம் இந்த மாத ஆரம்பத்துடன் முடிவடைந்து விட்டன. வடக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலமும் அடுத் பத்து நாட்களுக்குள் தானாகவே கலைந்துவிடும் நிலையில் உள்ளதினால், மாகாணசபைகள் செயலாற்றாமல் உள்ள மாகாணங்களின்  எண்ணிக்கை ஆறு ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி என்கிற கட்சியின் தலைவரான மைத்திரி குணரட்ன, கட்சிகளின் தலைவர்களுடனும் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுடனும் நடைபெற்ற கூட்டத்திலிருந்து வெளியே வந்த பின்பு, மாகாண சபைகளுக்கான தேர்தல் இந்த வருடமோ அல்லது அடுத்த வருடமோ நடைபெறாது என்று தான் நம்புவதாகத் தெரிவித்ததுடன், மற்றும் அரசாங்கமும் மற்றும் சுதந்திரமான தேர்தல் ஆணைக்குழு என்று சொல்லப்படுவதும் அடுத்த வருடமும் மற்றும் அதற்கடுத்த வருடமும் வரவேண்டிய ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களைக் கூட நடத்துமா என்று தனக்குச் சந்தேகம் தோன்றுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த உறுதியற்ற சூழ்நிலையில், சண்டே ஐலன்ட், லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் மற்றும் நாட்டிலுள்ள மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவுடன் ஸ்ரீலங்காவைச் சூழவிருக்கும் நெருக்கடிகளைப் பற்றிப் பேசியது.

  • கேள்வி: நாட்டிலுள்ள மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராக இருப்பதினால், நாட்டில் இப்போது நாம் அனுபவிக்கும் வகையான ஒரு சூழ்நிலையை கடந்த காலத்தில் எப்போதாவது அனுபவித்ததுண்டா என்பதை நினைவுகூர முடியுமா?

பதில்: ஒருபோதும் இப்படியான நிலை ஏற்பட்டதில்லை. 1977ல் ஜே.ஆர். ஜெயவர்தனா நாட்டைப் பொறுப்பேற்றதின் பின்னர் ஸ்ரீலங்காவுக்கு அறிமுகப்படுத்திய முறைமைகளின் வேர்களில் எற்படும் நிகழ்வுகளின் மாற்றம்தான் இது, அவர் பொறுப்பேற்றதின் பின் படிப்படியாக ஏற்றத்தாழ்வுகளின் மூலம் கணத்தாக்கங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இன்று தற்போதைய அரசாங்கத்தால் நவ - தாராளவாத கொள்கைகள் மிகத் தீவிரமாக ஸ்ரீலங்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன, மற்றும் அதன் விளைவுகளை நடைமுறையில் எமது சமூகத்தின் அனைத்து பிரிவினரும் உணர்ந்து வருகின்றனர் அத்துடன் தற்போதைய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு அது வழிவகுத்துள்ளது.

நவ தாராளவாத நிறுவலின் தந்தையான மில்ரன் பிரெயிட்மான், சொTissa_Vitharanaல்லியிருப்பது நெருக்கடிகள் நேரும்போது அரசியல் ரீதியாக அசாத்தியமானது எதுவோ அது அரசியல் ரீதியாக தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது என்று. மோசமான நெருக்கடிகள் ஒரு ஜனநாயகமற்ற வலயத்தை உருவாக்கி விடுகின்றன, அதன் பின்னர் பொதுமக்களின் அபிப்ராயங்களுக்கோ அல்லது சம்மதத்துக்கோ அங்கு அவசியம் இல்லை. பின்னர் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை வெளிக்காட்ட தெருவில் இறங்கவேண்டியிருக்கும். இது இராணுவ சர்வாதிகாரத்துக்கு அல்லது எனது கருத்துப்படி ஸ்ரீலங்காவில் ஒரு வெளிநாட்டு தலையீட்டுக்குக்கூட வழிஏற்படுத்திவிடும். இந்த வகையான ஒரு சூழ்நிலையில் நாங்கள் எங்கள் மதிப்புகள் மற்றும் விதிமுறைகளின் மொத்த முறிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

சமூகம் சரிந்து கொண்டிருக்கிறது. பாதாளஉலக செயற்பாடுகளில் ஒரு எழுச்சி தோன்றியுள்ளது, போதைமருந்துக்கு அடிமையாகும் நிலை இளைஞர் மத்தியில் பரவிக்கொண்டிருக்கிறது மற்றும் எங்கள் சமூகம் அதனுள்ளேயே சிதைந்துபோகும் நிலையை அவர்கள் உருவாக்கி வருகிறார்கள். இந்த அரசாங்கம் நிலைமையை மாற்றுவதை என்னால் காணமுடியவில்லை, எனவே கூடிய விரைவில் அதை மாற்றியமைக்க வேண்டும் மற்றும் தேசிய பொருளாதார அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட நல்லறிவான கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

  • கேள்வி: 1970களில்,எரிபொருள் நெருக்கடி, உலக உணவு நெருக்கடி மற்றும் பல வகையான நெருக்கடிகளை நாங்கள் அனுபவித்தோம், அவை ஒன்றின் பின் ஒன்றாக எம்மைத் தேடிவந்தன. இருந்த போதிலும் இந்த வகையான ஒரு மோசமான சரிவு எமது நாணயத்துக்கு ஏற்பட்டதில்லை. மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் இவ்வளவு தொகையாகக் குவிந்ததில்லை. இதில் உள்ள வித்தியாசம் என்ன?

பதில்: கலாநிதி. என்.எம். பெரேரா அப்போது நிதியமைச்சராக இருந்தார் மற்றும் டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமானத்தை ரூபா. 8.30 ஆக அவரால் நிலைநிறுத்த இயN.M.Pereraலுமாக இருந்தது. 1977க்கு முன்பு டொலர் எட்டிய மிக உயர் பெறுமானம் அதுவாக இருந்தது. ஆரம்பத்திலிருந்தே என்.எம். தனது நிகழ்ச்சி நிரலில் பொருளாதார சுதந்திரத்துக்கு முதலிடத்தை வைத்திருந்தார். சுதந்திரமடைந்ததின் பின்னரும் காலனித்துவ பொருளாதாரக் கொள்கையை தொடர்ந்ததினால் அது வெளிநாட்டு நாணயத்தின் இருப்புக்கு குறைவை ஏற்படுத்தியதுடன் கடன்களை அதிகரிக்கவும் வழி வகுத்தது. என்.எம். அவரது காலத்தில் வெளிநாட்டுக் கடன்களை குறைந்த மட்டத்திற்கு குறைக்க முடிவுசெய்தார். அவர் வரவு செலவு திட்டத்தை தொடர்ந்து சமநிலையில் வைத்திருந்தார் மற்றும் சுமைகள் சாதாரண மக்களை சென்றடையாமலிருப்பதை உறுதி செய்ய அவரால் இயலுமாக இருந்தது. அப்போது ஒரு உணவுப் பங்கீட்டுத் திட்டம் இருந்தது. ஒரு அளவு அரிசி இலவசமாக வழங்கப்பட்டதுடன் மற்றைய அளவு சந்தை விலைக்கும் குறைவாக நுகர்வோருக்கு வழங்கப்பட்டது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் வரி விலக்கு வழங்கப்பட்டது. நுகர்வோர் கூட்டுறவு மற்றும் அதேபோல தயாரிப்பாளர் கூட்டுறவு ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய ஒரு நல்ல கூட்டுறவு அமைப்பு உருவாக்கப்பட்டது. உலகளாவிய வரட்சி மற்றும் உணவுப் பற்றாக்குறை நிலவிய அந்த நேரத்தில் மற்றைய நாடுகளில் பட்டினியால் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து கொண்டிருந்தார்கள் ஆனால் ஸ்ரீலங்காவில் ஒருவர் கூட பட்டினியால் மரிக்கவில்லை. அதற்கான காரணம் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையான அடிப்படை அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக் கொண்டதுதான்.

  • கேள்வி: ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடையத் தொடங்கியபோதே எதிர்க்கட்சிகள், நாங்கள் இப்போது தீப்பெட்டி தொடக்கம் சவப்பெட்டி வரை இறக்குமதி செய்வதைச் சுட்டிக் காட்டினார்கள். இப்போது அரசாங்கம் இறக்குமதிகளை கட்டுப்படுத்தும் சிந்தனையற்ற ஒரு அவசர முடிவில் இறங்கியுள்ளது ….. ?

பதில்: அரசாங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்துவது என்கிற முடிவுக்கு வரும்போது,;  ஒருவர் இறக்குமதிக்கான கடன் கடிதத்தை திறக்கும்போதே அவர் அதன் முழுப் பெறுமதியையும் செலுத்தவேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மேல்தர நடுத்தர வகுப்பினர் அந்த மாதிரி பணம் வைத்திருப்பவர்களுக்கு பொருள் வரும்வரை காத்திருக்காமல் பணத்தை செலுத்த இயலும். ஒருவேளை விநியோகஸ்தர்களுக்கு அவ்வாறு முன்கூட்டியே பணத்தைச் செலுத்துவது பிரச்சினையாக இருக்கும் ஆனால் அதில் ஒரு குறிப்பிட்ட அளவு விலைக் குறைப்பு இருக்கும், இருப்பினும் இந்த வழிகளினால் அரசாங்கம் எதிர்பார்க்கும் அளவுக்கு அவர்களுக்கு இறக்குமதியை குறைக்க முடியாமலிருக்கும். 1970 களில் மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறை தொழிற்சாலைகளுக்கு இறக்குமதி மாற்றீட்டு வழிகளை வழங்குவதாக இருந்தது. என்.எம் இனது காலத்தில் ஏராளமான நேரடி வெளிநாட்டு முதலீடுகள் இடம்பெற்றன.

லீவர்ஸ் மற்றும் நெஸ்லே போன்ற பல்வேறு நிறுவனங்கள் அநcostofliving்த நேரத்தில்தான் வந்தன. இறக்குமதி மாற்றீட்டினை தொழிற்துறைகளுகுக்கு வெற்றிகரமாக அபிவிருத்தி செய்ய முடியாமலுள்ள பகுதிகளில் அவர்கள் உள்நுழைந்தார்கள். உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைதல் எனும் கருப்பொருளுக்கு உயர்ந்தபட்ச முன்னுரிமை வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் இடம்பெற்ற உலக உணவு நெருக்கடி பற்றிய ஒரு யோசனையை உங்களுக்குத் தெரிவிக்க பின்வரும் உதாரணத்தைக் கூறுகிறேன், 36 முதல் 38 ஸ்ரேலிங் பவுண் விலையாக இருந்த ஒரு தொன் சீனியின் விலை 600 பவுண்கள் வரை உயர்வு பெற்றது. அப்படித்தான் உலகில் உணவு பற்றாக்குறை நிலவியது. இதையும் மீறி சமநிலை படுத்தப்பட்ட ஒரு வரவுசெலவுத் திட்டம் ஸ்ரீலங்காவில் இருந்தது, எங்களது வெளிநாட்டுக் கடன்கள் இயன்றளவுக்கு குறைக்கப்பட்டிருந்தது, வர்த்தகப் பற்றாக்குறையும் குறைக்கப் பட்டிருந்தது அத்துடன் ஸ்திரமான ஒரு பொருளாதாரம் அங்கிருந்தது.

உண்மையாகவே உணவுப் பொருட்களைப் பெறுவதற்காக வரிசைகள் இடம்பெற்றது அதைக் கேலி செய்வதாக அமைந்தது. அப்பொழுது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தவறு என்னவென்றால் பங்கீடடுப் பொருட்களை விநியோகிக்கும் உரிமையை தனியார் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு வழங்காமல் விட்டதுதான். ஆனாலும் இந்த முறைகளினால் பெருமளவு மக்களால் நியாயமான வாழ்க்கையை வாழமுடிந்தது. தொடக்கம் முதலே 1970ம் ஆண்டு இருந்த அரசாங்கம் விஞ்ஞானத்துக்கும் மற்றும் தொழில்நுட்பத்துக்கும் அதிகளவு முன்னுரிமை வழங்கியிருந்தது, மற்றும் ஸ்ரீலங்கா விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தில் என்.எம் பேசும்போது, நாங்கள் ஏழ்மை நிலையில் இருந்து வெளியே வந்தால் நாங்கள் எங்கள் சொந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி ஒரு தொழிற்றுறை நாடாக மாறிவிடுவோம் என்று சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 விகிதத்தினை அவர் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்துக்கு செலவு செய்வதற்கு ஒதுக்கி அதன் ஒதுக்கீட்டளவினை அதிகரித்தார். இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1 விகிதமே அதற்காகச் செலவிடப் படுகிறது.

இப்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா சொல்கிறார், இறக்குமதிக்கான செலவு ஏற்மதியில் இருந்து பெறும் வருமானத்தை விட இரண்டு மடங்காகியுள்ளது, வெளிநாட்டு இருப்பின் பற்றாக்குறை மற்றும் குறைவுகளை ஈடுகட்டுவதற்கு நிதியளிப்பதற்கு ஏராளமான கடன்கள் வாங்கவேண்டிய தேவை உள்ளது, போன்றவைதான் தற்போதைய நெருக்கடிக்கான முக்கிய காரணம் என்று. நாங்கள் இவை அனைத்திலிருந்தும் விடுபடுவதற்கு எங்கள் ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார். அவசியமாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் என்னவென்றால் ஸ்ரீலங்காவில் உள்ள உயர் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்களை இங்கு அறிமுகம் செய்தலே ஆகும். நான் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சராக இருந்தவேளையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நானா தொழில்நுட்பம் என்பன எங்கள் மூலப்பொருட்களுக்கு உயர் பெறுமதி சேர்ப்பதற்கு ஏதுவாக எங்கள் தொழிலதிபர்களுக்கு கிடைக்கக்கூடியதாக இருந்தது.

இந்த நடைமுறைகளை செயற்படுத்திய நான்கு வருட காலத்தில் 10,000 கpetrol்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கிராமப்பகுதிகளில் இருந்து வந்தார்கள். எனக்கு இன்னும் ஞாபகம் உள்ளது, அவர்களில் 17 பேர்களுக்கு அவர்களது உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு எற்றுமதி செய்ய இயலுமாக இருந்தது, 64 பேர்கள் கார்கில்ஸ் மற்றும் ஏனைய சில்லறை உணவுப் பொருட்களை விற்பவர்களுக்கு தங்கள் உற்பத்திகளை வழங்கினார்கள் மற்றும் 57 பேர்கள் ஹோட்டல் சங்கிலிகளுக்கு வழங்கினார்கள். நாங்கள் ஒவ்வாரு நிருவாகப் பிரிவுகளிலும் விதாத்தா மையங்களை ஆரம்பித்தோம்.  விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக ஒரு ஒருங்கிணைப்பு செயலகத்தை நான் அமைத்தேன். விஞ்ஞானிகள் மற்றும் தொழிலதிபர்கள் இடையே பல்துறை சார்ந்த ஒத்துழைப்புகள் இருந்ததினால் வெளிநாட்டுச் சந்தைகளில் உயர் பெறுமதிகளை அடையும் வாய்ப்பினை எங்கள் உற்பத்திப்பொருட்கள் பெறும் நிலைக்கு நாங்கள் வந்தோம். தற்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் அந்த செயற்பாட்டை நிறுத்திவிட முயற்சிப்பதாக நான் கேள்விப்பட்டேன். ஆகவே அவாகள் ஏற்றுமதிக்குத் தேவையான உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் என்று பேசும்போது, அது பொருத்தமற்ற ஒன்றாக ஒலிக்கிறது.

  • கேள்வி: ரூபாயின் பெறுமதி சரிவடைவதற்குச் சற்று முன்னதாக, அரசாங்கம் திடீரென மோட்டார் வாகனங்கள், மதுசாரம் மற்றும் புகையிலை ஆகியவற்றின் மீதான தீர்வைகளை அதிகரித்தது. மறைமுக வரிவிதிப்பு என்று வரும்போது இவை நிலையான விருப்பத்துக்குரியவையாக உள்ளன. இப்போது அரசாங்கம் அந்த முனையில் உள்ள சாத்தியங்கள் அனைத்தையும் இழந்து விட்டதைப் போலத் தோன்றுகிறது. ஆகவே வருவாயை உயர்த்துவதற்கான தெரிவு என்ன?

பதில்: உயர்ந்தளவு நேரடி வரிவிதிப்பு இருந்தால் எங்கள் இறக்குமதிக்கான செலவுகள் கணிசமானளவு குறையும் ஆகவே பணக்காரர் வீணாக்கும் பணம் குறைக்கப்படும். வருமான வரிக்கான உயாந்தபட்ச அடுக்கினை 70 விகிதம் வரை உயர்த்தி என்.எம். இறக்குமதிகளை மிகவும் திறமையான முறையில் கட்டுப்படுத்தினார். ஐரோப்பாவில் சராசரியாக 45 விகிதமே உள்ளது மற்றும் சில ஸ்கன்டிநேவியன் நாடுகளில் இது 60 விகிதத்துக்கு கிட்டவாக உள்ளது. ஸ்ரீலங்காவில் உயர்ந்தபட்ச அடுக்காக இப்போது 24 விகிதமே உள்ளது. ஆகவே ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துகொண்டு ஆடம்பர வாகனங்களையும் மற்றும் ஆடம்பரப் பொருட்களையும் வாங்கும் பெருமளவிலான தீவிர பணக்காரர்கள் இங்கு உள்ளார்கள், இவர்கள் எங்கள் அந்நியச் செலாவணியில் பற்றாக்குறையைச் சேர்க்கிறார்கள்.

நான் ஒரு அமைச்சராக இருந்தபோது, சில தொழில் நிறுவனங்களிTax1ல் பணத்தை முதலீடு செய்தால் அவர்களுக்கு வரி விலக்கு உண்டு; இல்லையேல் கிடையாது  எனும் நிலைப்பாட்டை எடுத்திருந்தேன். நவ தாராளவாத கொள்கை நலன்புரி நடவடிக்கைகளை வெட்டுவதுடன் மற்றும் அதற்கு மேலதிகமாக எங்கள் சொத்துக்களை வெளிநாட்டு பல்தேசிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவும் தூண்டுகிறது, அவை படிப்படியாக எங்கள் பொருளாதாரத்தின்மீது தமது கட்டுப்பாட்டுகளை மேற்கொள்கின்றன. பணம் எங்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு திறமையான கட்டுப்பாடு கிடையாது மற்றும் இங்கு எது செய்யப்பட்டாலும் அது காலனித்துவ காலத்தில் இருந்தது போல வெளிநாடுகளுக்கு அனுப்பப் படுகின்றது.

வெளிநாட்டுக் கடன் மற்றும் மனித உரிமைகள் பற்றிய ஐநாவின் சுயாதீன நிபுணர் ஜூவான் பப்லோ பொகோஸ்லாவஸ்கி ஸ்ரீலங்காவை விட்டுச் செல்வதற்கு முன்பு சொன்னது, அனைத்துப் பொருட்களின் மீதான வாற் வரியை 15 விகிதத்துக்கு மேல் உயர்த்துவது ஒரு மனித உரிமைகள் மீறல்,  ஏனென்றால் அதன் சுமைகள் அனைத்து மக்களுக்கும் ஒரேமாதிரியாக உள்ளது என்று. பணக்காரர்கள் சுமையை உணர்வதில்லை மற்றும் அவர்கள் தொடர்ந்து வீணான செலவுகளைச் செய்வது, எங்கள் அந்நியச் செலாவணி; மற்றும் ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி உட்பட  இந்த தொடர்ச்சியான முழு நிகழ்வுகளும் சமநிலையற்ற தன்மை தொடர வழிவகுக்கிறது. இதற்கு மேலதிகமாக,பணவீக்கத்தில் பிரச்சினை காரணமாக அரசாங்கம் நாணயத்தாள்களை ஒரு விகிதத்தில் அச்சிடுகிறது மற்றும் இவை அனைத்தும் பொருளாதார நிலையை நெருக்கடிக்குள் தள்ளிவிடுகிறது.

  • கேள்வி: ஊடகவியலாளர்கள் அமைச்சரவைப் பேச்சாளர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோரிடம் 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு மற்றும் எரிபொருட்கள் விலைகளில் குறைவு ஆகியவற்றை தற்போதைய அரசாங்கம் 2015ல் வழங்கியதுதான் இந்த நெருக்கடியைக் கிளப்பிவிட்டது இல்லையா, என்று கேட்பதை நீங்கள் கவனித்திருக்கக் கூடும். தாங்கள் அந்தச் சலுகைகளை வழங்குவது ஏழைகள் மற்றும் வறியவர்கள் நன்மை அடைவதற்காக என்று அரசாங்கம் கூறிக்கொண்டது. ஒரு சோஷலிச அரசியல் கட்சியின் தலைவர் என்கிற வகையில், மக்களுக்கு சலுகைகள் வழங்கும் அந்த நடவடிக்கையை எவ்வாறு காண்கிறீர்கள் மற்றும் நிதி நிலை நம்பகத்தன்மை மற்றும் இந்தந் சலுகைகள் என்பவற்றுக்கு இடையில் ஒருவரால் எப்படிச் சமநிலையை ஏற்படுத்த முடியும்?

பதில்: அங்கு குறிப்பிட்ட சில பொருளாதார அளவுகோல்கள் உள்ளன அவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும். உதாரணமாக நாங்கள் எங்கள் அந்நியச் செலாவணி பற்றாக்குறையை இயலுமானளவு குறைக்க வேண்டும் மற்றும் நாங்கள் சமநிலை படுத்தப்பட்ட ஒரு வரவு செலவுத்திட்டதusasrilanka்தை நோக்கி வேலை செய்ய வேண்டும். வளர்ச்சியை உறுதிப்படுத்துவதுடன் வாழ்க்கைச் செலவை குறைந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பன அடிப்படை பொருளாதாரக் கொள்கைகள். சம்பளம் மற்றும் படிகளை அதிகரிப்பது அந்தக் கட்டமைப்புக்குள் இடம் பெறலாம். அது முழுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் அது ஒரு தொடர்ச்சியான நிலையில் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

தற்போதைய அரசாங்கத்தின் விஷயத்தில், அவர்கள் அதிகாரத்துக்கு வந்தபோது, மேற்குலகம் அளவற்ற நிதியுடன் தங்களுக்கு உதவிக்கு வரும் என்கிற உணர்வில் இருந்தார்கள். லங்கா சமசமாஜக் கட்சி பரிந்துரைப்பது என்னவென்றால், வருமானவரியின் அடுக்கினை அதிகரித்து அதனை குறைந்தது 50 விகிதமாக உயர்த்த வேண்டும். அந்தக் கட்டமைப்புக்குள் அவர்கள் சம்பள அதிகரிப்பு, படிகள் போன்றவற்றை வழங்குவது குறித்து முடிவு செய்யலாம். ஆனால் இங்கு திட்டமிடுவதில் முழுதான பற்றாக்குறை நிலவுகிறது. அந்த சம்பள உயர்வினைப் பெற்ற அரசாங்க ஊழியர்கள் கூட இப்போது வாழ்க்கைச் செலவு அதிகரித்ததின் காரணமாக தங்களால் சமாளிக்க முடியவில்லை என்று புகார் தெரிவிக்கிறார்கள். இந்த நடவடிக்கைகள் எந்தவித தொலைநோக்கு கண்ணோட்டமும் இல்லாது அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டன.

  • கேள்வி: பொருளாதார நெருக்கடிகளுக்கு அப்பால், சமாந்தரமான அரசியல் நெருக்கடி ஒன்றும் உள்ளது, அரசாங்கம் தேர்தல்களை நடத்துவதற்கு தயக்கம் காட்டுவதன் காரணமாக ஜனநாயக நிறுவனங்களுக்கு குழி பறிக்கப்பட்டுள்ளது என்பதுதான் அது. கடந்த காலத்தில் தேர்தல்களைப் ஒத்தி வைப்பது அல்லது தாமதப் படுத்துவது என்பனவற்றுக்கு ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஐதேக ஆகிய இரண்டுமே குற்றவாளிகள். இது 1975ல் ஸ்ரீ.ல.சு.க வின் கீழும் மற்றும் 1982ல் ஐதேக வின் கீழும் நடைபெற்றது. தற்போதைய தேர்தல்கள் தாமதத்தை முந்தைய சம்பவங்களுடன் எவ்வாறு ஒப்பிடுவது, அரசாங்கம் உள்ளுராட்சித் தேர்தல்களை கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் தாமதப்படுத்தியது. இப்போது மாகாணசபை தேர்தல்களைக் கூட நடத்தாமல் நழுவ முயற்சிக்கிறது.

பதில்: 1975ல் என்ன நடந்தது என்றால் 1970 தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஏகாதிபத்தியத்துடனான  நம்முடைய தொடர்புகளைத் துண்டிக்க வேண்டியது அவசியம் மற்றும் இந்த நோக்கத்துக்காக ஒரு புதிய அரசியலமைப்பு பிரகடனப்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. அதற்காக ஒரு அரசியலமைப்பு சட்ட சபை உருவாக்கப்பட்டு அது ஒன்று முதல் இரண்டு வருடங்கள் வரை தனியாகக் கூடியது. இந்த இரண்டு வருட காலமும் அரசாங்கத்தின் ஏனைய செயற்பாடுகள் கிட்டத்தட்ட நகராத ஒரு நிலையில் இருந்தன ஏனென்றால் இந்த புதிய அரசியலமைப்பை வலியுறுத்தி ஸ்ரீலங்காவை முற்றிலும் இறையாண்மையுள்ள ஒரு சுதந்திர நாடாக மாற்றுவது என்பது அதன் நோக்கமாக இருந்தது. இதன் காரணமாக அன்றிருந்த அரசாங்கம் தாங்கள், தங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவாறு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஏழு ஆண்டுகள் பதவி வகிக்க உரிமையுள்ளவாகள் என்று கூறியது. அதனால்தான் அவர்கள் காலத்தை நீட்டினார்கள். இன்று நடந்தது என்னவென்றால் இந்த அரசாங்கம் தனது தவறான கொள்கைகளினால் மக்கள்மீது அவர்கள் சுமைகளை ஏற்றியுள்ளார்கள், பொருளாதாரத்தை அவர்கள் தவறாக நிர்வகித்த காரணத்தால் ஆட்சியின் முழு நடவடிக்கைகளும் முறிவடைந்து பொதுமக்களின் ஆத்திரத்தை பெருமளவு தூண்டியுள்ளது மற்றும் மக்கள் தங்கள் சீற்றத்தை வெளிக்காட்ட விரும்புகிறார்கள். உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாணசபைகளுக்கு எப்போது தேர்தல் வரவேண்டும் என்று எங்கள் சட்டங்கள் குறிப்பிட்டுள்ளன.  நானும் ஒரு அங்கத்தவராக இருந்த மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான முந்தைய அரசாங்கம், யுத்தம் முதலான பிரச்சினைகளுக்கு இடையிலும் தேர்தலை சரியான நேரத்தில் நடத்தியது.

அமிலமா காரமா என்பதை அறியும்  ஜனநாயகத்துக்கான இறுதி லிற்மஸ் சோதனை வாக்குரிமை ஆகும் - வாக்களிக்கும் உரிமை மற்றும் மக்களால் அது குறித்த நேரத்தில் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். தற்போதைய அரசாங்கம் தாங்கள் ஜனநாயகவாதிகள் என்று கோரிக்கை விடுப்பதற்கு மாறாக தகுந்த காரணங்கள் இன்றித் தேர்தல்களைப் ஒத்திவைக்கிறார்கள். மாற்றங்களைச் செயல்படுத்த முடியாவிட்டால் தற்போது உள்ள முறைக்கே திரும்ப வரலாம். எனவே இந்த தாமதத்தில்  எந்தவித நியாயமும் இல்லை. இது வாக்களர்கள் எதிர்கொள்ளும் ஒருவித பயம் மட்டுமே.

  • கேள்வி: உங்கள் கண்ணோட்டத்தில் 19வது திருத்தம் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்ட சுயாதீனமான தேர்தல் ஆணையகம் என்று அழைக்கப்படும் ஆணையகம் தங்கள் கடமைகளை நிறைவேற்றுகிறார்களா அல்லது அரசாங்கத்தின் வரிகளை பின்தொடர்வதற்காக அவர்களுக்கு சில கோரிக்கைகள் உள்ளனவா?

பதில்: தேர்தல் அணையத்தின் தலைவர் பேசும்போது தான் மக்களின் நலன்களுக்காகவே செயல்படுவதாக கூறுகிறார், ஆனால் உண்மையில் அரசாங்கம் விரும்பும் விளையாட்டைத்தான் அவர் விளையாடுகிறாரா என்று எனக்குப் பயமாக உள்ளது.

  • கேள்வி: எங்களுக்கு ஒரு ஜனாதிபதி, ஒரு பிரதம மந்திரி மற்றும் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள ஒரு அரசாங்கம் எனபன உள்ளன. இருந்தும் முழு நாட்டிலும் அராஜகம் நிலவுகிறது.

பதில்: இது ஒருவேளை நவ தாராளவாதக் கட்டமைப்புக்கு வெளியே உள்ள ஒரு காரணியாகும். எங்களிடம் ஒரு நிறைவேற்று ஜனாதிபதி உள்ளார், இது 1931 முதல் எங்கள் தேவைக்கு ஏற்ப பிரித்தானிய பாணியில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற பாராளுமன்றத்தினால் ஒட்டி இணைக்கப்பட்ட ஒன்றாகும். இன்று இரண்டு வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஜனாதிபதி மற்றும் பிரதமரை நாங்கள் கொண்டிருக்கிறோம். எனவே கொள்கைகள் மற்றும் நலன்களில் ஒரு மோதல் நிலை உள்ளது, அது அரசாங்கத்துக்கு ஒரு செயலற்ற தன்மையை வழங்கியுள்ளது.usadollar

மத்திய வங்கியில் நடைபெற்ற மோசடியை நான் ஒரு பகல் கொள்ளையாகவே பார்க்கிறேன். அது நடப்பதற்கு பின்னால் இருந்த நபர் நாட்டின் இரண்டாவது உயர்மட்ட அதிகாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். நிதிக் குற்றங்களை இழைத்தவர்களுக்காக நடவடிக்கை மேற்கொள்வதற்கு பல்வேறு நிறுவனங்களை உருவாக்கியிருப்பதற்கு மாறாக இந்த முழு நிகழ்வுமே ஓரங்கட்டப்பட்டுவிட்டது மற்றும் அத்தகைய விஷயங்கள் இடம் பெற்றதற்கான வெட்க உணர்வுகூட இவர்களிடம் இல்லை.

எனது ஊடக மாநாட்டில் நான் பிரதமர் ராஜினாமா செய்யவேண்டும் என அழைப்பு விடுத்தேன். இந்தியாவில் ஒரு தொடரூந்து விபத்து ஏற்பட்டு சில மரணங்கள் நிகழ்ந்தால், அந்த தொடரூந்துக்கு அருகில் இருக்காமலோ அல்லது அந்த விபத்து நடந்த நிகழ்ச்சிக்கு எந்த தொடர்பும் இல்லாமலோ உள்ள போக்குவரத்து அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.ஆனால் இங்கு பகல் கொள்ளை நடந்துள்ளபோதும் அதைப் பொருட்படுத்தாமல் அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் பதவிகளைத் தொடருகிறார்கள்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
 

Theneehead-1

   Vol:17                                                                                                                               19.10.2018