Theneehead-1

                            Vol:17                                                                                                  22.06.2018

‘கிழக்குத் தமிழர்ஒன்றியம்’- இதுவரை

1.1987 இந்திய - இலங்கைசமாதான ஒப்பந்தத்தின் கீழ் தற்காலிகமாகவேனும் இணைக்கப் பெற்றிருந்த வடக்குகிழக்குமாகாணங்கள் 2007ம் ஆண்டு தனித்தனிமாகாணங்களாகப் பிரிக்கப் பெற்றபின்னர் கிழக்குமாகாணத் தமிழர்களின் சமூக பொருளாதாரஅரசியல் விடயங்களில் பலமறைத் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக 2012 ஆம் ஆண்டின் மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர் கிழக்குமாகாணத் தமிழர்களின் சமூகபொருளாதார அரசியல் இருப்பு நாளாந்தம் கேள்விக்குள்ளாகி வருகின்றது.

மட்டுமல்லாமல் கிழக்குமாகாணத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் மேம்பாட்டிற்குப் பாடுபடக் கூடியதாகக் கட்சி அரசியலுக்கு அப்பால் மக்கள் மயப்படுத்தப் பெற்றதும் வினைத்திறன் மிக்கதுமான பொதுவான பலமானமக்கள் அமைப்பொன்று முழுக் கிழக்குமாகாணமும் தழுவியதாக இல்லை.

இந்தப் பின்னணியில் கிழக்குமாகாணத் தமிழர்கள் தங்களைத் தற்காத்துத் தங்கள் எதிர்கால இருப்பைப் பாதுகாத்துப் பேணி வளர்த்தெடுப்பதற்குரிய “பொறிமுறை”யொன்றினை உருவாக்குமுகமாக த.சிவநாதன், (சிரேஸ்ட சட்டத்தரணி) மற்றும் செங்கதிரோன். த.கோபாலகிருஸ்ணன் ஆகியோரின் அழைப்பின் பேரில் ஏற்பாடு செய்யப்பெற்ற மட்டக்களப்பு மாவட்டமட்டக் கலந்துரையாடல் கூட்டம் 06.01.2018 அன்றுமட்டக்களப்பு, கல்லடிஉப்போடை துளசிமண்டபத்தில் நடைபெற்றது.

2.மட்டக்களப்புமாவட்டத்தின் சகல பிரதேசசெயலாளர் பிரிவுகளிலிருந்தும் பொதுமக்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் விரிவான கலந்துரையாடலின் பின்னர் பின்வரும்; தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பெற்றது.

“எதிர்வரும் கிழக்குமாகாணசபைத் தேர்தலில் கிழக்குமாகாணத் தமிழர்களின் சார்பில் அதிஉச்சபட்ச ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் சகலதமிழ் அரசியல் கட்சிகளும் ஒருபொதுச் சின்னத்தின்கீழ் ஒன்றிணைந்து அஓரேஅணியில் போட்டியிடவேண்டும். இதனைச் சாத்தியப்படுத்தும் வகையில் மக்களைத் தயார்ப்படுத்தவேண்டும்.

3.இத்தீர்மானத்தைச் செயற்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகப் பிரதேசரீதியாகத் தெரிவுசெய்யப் பெற்றசெயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய மாவட்டமட்ட நடவடிக்கைக்குழுவும் இக்கூட்டத்தில் தெரிவுசெய்யப்பெற்றது.

4.இப்புதியஅமைப்புக்குக் “கிழக்குத் தமிழர்ஒன்றியம்” எனப் பெயரிடப்பெற்றது.

5.இதனைத் தொடர்ந்து இதனைப் போன்று அம்பாறை மாவட்டத்திற்கான கலந்துரையாடல் கூட்டம் 21.01.2018 அன்றுஅக்கரைப்பற்று, குருக்கள் வீதி, இந்து இளைஞர்மன்றக் கட்டிடத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்டத்தின் சகலபிரதேச செயலாளர்பிரிவுகளிலிருந்தும் பொதுமக்கள் கலந்துகொண்ட இக் கூட்டத்தில் விரிவான கலந்துரையாடலின் பின்னர் 06.01.2018 அன்று நடைபெற்ற மட்டக்களப்புக் கூட்டத்தின் தீர்மானத்தை ஒருமனதாக ஏற்றுக் கொள்வதாக அக்கரைப்பற்றுக் கூட்ட (அம்பாறைமாவட்ட) அவையும் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. அத்துடன் அம்பாறை மாவட்ட நடவடிக்கைக் குழுவும் தெரிவுசெய்யப்பெற்றது.

6.இதேபோன்று 04.03.2018 அன்று திருகோணமலைமாவட்டத்திற்;கான கலந்துரையாடல் கூட்டம் திருகோணமலைகுளக்கோட்டன் ஒன்றுகூடல் மண்டபத்;தில் நடைபெற்று இக்கூட்டத்திலும் மேற்படி தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப் பெற்று திருகோணமலை மாவட்டநடவடிக்கைக் குழுவும் தெரிவுசெய்யப ;பெற்றது.

7.நிறைவாக 25.03.2018 அன்றுமட்டக்களப்பு, கல்லடி துளசிமண்டபத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டஉறுப்பினர்கள் ஒன்றிணைந்த பொதுக்கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.

இக் கூட்டத்தில் திருகோணமலை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான மாவட்ட நிர்வாகக் கட்டமைப்புகள் ஏற்கெனவே தெரிவுசெய்யப்; பெற்றுள்ள மாவட்டநடவடிக்கைக் குழு உறுப்பினர்களையும் உள்வாங்கி ஏற்படுத்தப ;பெற்றுள்ளதுடன் இதுவரை இயங்கிய திரு.த.சிவநாதன் மற்றும் த.கோபாலகிருஸ்ணன் ஆகிய இரு இணைப்பாளர்களுக்கும் மேலதிகமாகத் திருகோணமலை மாவட்;;டத்திலிருந்து திரு.பூ.உகநாதன் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பெற்றார். அத்துடன் பின்வரும் பதவியாளர்கள் மாவட்டக் குழுக்களுக்குத் தேர்ந்தெடுக்கப் பெற்று இணைப்பாளர்களும் மாவட்டக் குழுக்களும் இணைந்ததான ஓர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு கிழக்குத் தமிழர்ஒன்றியத்திற்கென ஏற்படுத்தப் பெற்றுள்ளது.

கிழக்குத் தமிழர்ஒன்றியத்தின் இடைக்காலநிர்வாகக் கட்டமைப்பு
east front

அந்தந்தமாவட்டத்திலுள்ள பிரதேசசெயலாளர் பிரிவுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் செயற்குழு உறுப்பினர்களும் தெரிவுசெய்யப் பெற்றனர்.

இணைப்பாளர்களுடன் மாவட்டக் குழுக்கள் இணைந்து பிரதேசசெயலாளர் பிரிவுமட்டக் கட்டமைப்புகளை எதிர்காலத்தில் ஏற்படுத்துவதுடன் கிராமசேவகர்பிரிவு ட்டக் குழுக்களும் உருவாக்கம் பெற்று இணைப்பாளர்கள்    மாவட்டக் கட்டமைப்புகள்

பிரதேசயெலாளர்பிரிவு மட்டக் கட்டமைப்புகள்     கிராமசேவகர்பிரிவுமட்டக் குழுக்கள் எனத் தொடுக்கப்பெற்ற வலைப்பின்னல் ஊடாகக் கிழக்குத் தமிழர்ஒன்றியத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பெறும்.

.இலங்கையின் கிழக்குமாகாணத்தை வாழ்விடமாகக் கொண்டத மிழர்களின் சமூகபொருளாதார அரசியல் மேம்பாட்டிற்காகஉழைத்தல்.

.கிழக்குமாகாணத்தை வாழ்விடமாகக் கொண்டதமிழர்கள் அனைவரையும் சாதி,மத,பிரதேச,பால், வர்க்கமற்றும் கட்சிஅரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைத்தல்.

கிழக்குமாகாணத்தில் வதியும் ஏனைய சகோதர இனங்களுடன் நல்லுறவைப் பேணி வளர்த்தலினூடாக இலங்கையின் தேசியஒருமைப்பாட்டிற்கும் இன நல்லிணக்கத்திற்கும் பங்களித்தல். ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்ட கிழக்குத் தமிழர்ஒன்றியத்தின் உத்தேசவேலைத்திட்டவரைபும் (றுழசம Pடயn) இக்கூட்டத்தில் இறுதிப்படுத்தப் பெற்று அங்கீகரிக்கப்பெற்றுள்ளது. இவ்வேலைத்திட்ட வரைபு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பெறுவதற்காகஅச்சில் உள்ளது.

.கிழக்குமாகாணத் தமிழர்களின் எதிர்கால சமூக,பொருளாதார, அரசியல் மேம்பாட்டிற்கான உத்தேசசெயற்பாடுகளை விபரமாகஉள்ளடக்கியுள்ள இவ் உத்தேச வேலைத்திட்டவரைபில் கிழக்குத் தமிழர்ஒன்றியத்தின் அரசியல் சார்ந்த செயற்பாடு பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இனப்பிரச்சினைக்கான நிரந்தரஅரசியல் தீர்வாகஅதிகுறைந்தபட்சம் இலங்கையின் வடக்குகிழக்கு மாகாணங்கள் இணைந்து ஒரேஅலகாகஅ மைந்த–சுயநிர்ணயஉரிமையுடன் கூடிய - போதியஅதிகாரம் பகிர்ந்தளிக்க ப் பெற்ற ஒற்றைமொழிவாரி மாநிலசுயாட்சிஅலகையே கிழக்குத் தமிழர்ஒன்றியம் ஆதரிக்கும். ஆனால் அத்தகையதீர்வு எட்டப்படும்வரை அவடமாகாணத்துக்குரியஅரசியல் சமன்பாடு pழக்குமாகாணத்திற்குப் பொருந்தாதகள நிலையைக் கருத்தில் கொண்டுகிழக்குத் தமிழர்கள் எதிர்நோக்கும் தனித்துவமான சமூக,பொருளாதார பிரச்சினைகளைக் கையாளும் வகையில் பொருத்தமான‘அரசியல் வியூகம்’களைக் கிழக்குத் தமிழர்ஒன்றியம் வகுத்து அதனைவினைத்திறனுடன் செயற்படுத்தும்.”

மேலும்,மாவட்டக் கட்டமைப்புகள் வினைத்திறனுடன் செயலாற்றுவதற்கு ஒவ்வொருமாவட்டத்திலும் அம்மாவட்டத்திலுள்ள துறைசார்நிபுணர்கள் மற்றும் தொழில்வாண்மையாளர்களை உள்ளடக்கிய‘வழிகாட்டல் குழு’(ளுவநநசiபெ ஊழஅஅவைவநந)க்கள் ஏற்படுத்தப்பெற்றுச் செயற்படும்.

கிழக்குத் தமிழர்ஒன்றியத்தின் செயற்பாடுகளைக் கிழக்குமாகாணத்தின் கிராமங்கள் தோறும் முன்னெடுக்குமுகமாக பிரதேசசெயலாளர் பிரிவுமட்டத்தில் பொதுமக்கள் கலந்துரையாடல் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பெற்றுப்பிரதேசசெயலாளர் பிரிவுமட்டக் கட்டமைப்புக்களை உருவாக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.