அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி வடக்கு கிழக்கிலும் ஆர்ப்பாட்டம்

அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்துமாறு வலியுறுத்தி போராடும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தprotest for estate workersில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் பேருந்து நிலையம் முன்பாக  (21) காலை 10 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தள நண்பர்களின் ஏற்பாட்டில் “தோட்டத் தொழிலாளருக்காய் வடக்கில் இருந்து ஓர் உரிமை குரல்” என்ற தொனிப் பொருளின் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும், தோட்ட கம்பனிகளுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்களை எழுப்பியிருந்தனர்.

இதேவேளை, மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வினை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு வாழ் இளைஞர்கள், பொது அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தது.

இந்த போராட்டத்தில் மலைய மக்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் 1000 ரூபா சம்பள கோரிக்கைக்கு ஆதரவாகவும் அவைரையும் ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது.

மழையிலும் வெளியிலிலும் பாடுபட்டு இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் மலைய மக்களின் நியாயமான கோரிக்கையினை நிறைவேற்ற நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எங்களை வாழவிடு, மலையக மக்களை வாழவை, ஏழை மக்களை ஒடுக்காதே, தோட்டக் கம்பனிகளின் ஏவல்காரர்களாக அரசாங்கமே செயற்படாதே போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

Theneehead-1

   Vol:17                                                                                                                               22.10.2018