Theneehead-1

                            Vol:17                                                                                                  25.06.2018

முஸ்லிம் விரோத வெறுப்பு: தமிழ் ஊடகங்களும் அதில் இணைந்துள்ளன! ஊடக நெறிமுறை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது!

                                             முகமட் ஹ}ரீஸ்

பிரதான நீரோட்டத்தில் உள்ள தமிழ் ஊடகங்களும் கூட தாமதமின்றி முஸ்லிம் விரோத வெறுப்பு பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. ஜூன் 16ல் பிரபல தமிழ் செய்திப்Anti-Muslim-Hate-Tamil-Media-Joins-In-Virakesari பத்திரிகையான வீரகேசரி பரபரப்பான ஒரு செய்தியாக அதன் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தி ஒன்றைப் பிரசுரித்திருந்தது, அது பின்வருமாறு இருந்தது: ‘ஞ}னசார தேரோவின் கைது - றமழான் பண்டிகைப் பரிசு’ (முஸ்லிம்களுக்கு) என்று அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை மறைமுகமாக முரட்டுத் தேரரின் முஸ்லிம் விரோத வெறுப்புப் பிரச்சாரத்துடன் இணைத்திருந்தது. உண்மையில் இந்த தலைப்புச் செய்தி சத்தியத்துக்கு அப்பாற்பட்டதாகவும் மற்றும் இந்த சுட்டிக்காட்டல் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் புற்றுநோய்போன்ற ஒன்றினால் முற்றுகை இடப்பட்டுள்ள முஸ்லிம்களின் உணர்வுகளையும் மனவெழுச்சிகளையும் தடாலடியாக புதுப்பிப்பதையும் ஊக்குவிக்கின்றது.

 ஏப்ரல் 2018ல் இதேபோல முரண்பாடாக மற்றொரு தமிழ் செய்திப்பத்திரிகையான தினக்குரல் அதன் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்தியாக “கிழக்குத் தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம் இனவாதம் எழுச்சி பெறுகிறது’ என்று பிரசுரித்திருந்தது, அதுவும் கூட திருகோணமலை பாடசாலையில் இடம் பெற்ற ஹிஜாப் பிரச்சினையின் பின்னணியை பொய்யானதும் மற்றும் தவறானபோக்கில் தூண்டக்கூடியதுமான விதத்தில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் இழைத்தவர்களாக பார்க்கும் வகையில் எழுதப்பட்டிருந்தது. எச்சரிக்கை தரும் இந்த முன்னேற்றங்கள், வடக்கு - கிழக்குப் பிரதேசங்களில் சிவசேனா ஊடுருவி தமிழ் மக்களை பேசும் மொழியால் சகோதரர்களாக உள்ள முஸ்லிம்களுக்கு எதிராகத்தூண்டி விடுவதன் பின்னணியில் பார்க்கக்கூடியதாக உள்ளது, இது பரந்த அளவிலான அரசியல் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு பரிமாணங்கள் ஸ்ரீலங்காவின் கடலோரப் பகுதிகளுக்கு அப்பாலும் செயற்பட்டுவருவதைக் காடடுகிறது. ஸ்ரீலங்கா பத்திரிகை முறைப்பாடுகள் சபை (பி.சி.சி.எஸ்.எல்) வெறுப்பை தூண்டி பாதிப்பை எற்படுத்தியுள்ள இந்த ஊடகங்களில் அப்பட்டமான மீறல்களை எப்படி சிறப்பாக சமாளிக்கப் போகிறது என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

உண்மையான பௌத்த போதனைகளுக்கு அவமதிப்பை ஏற்படுத்துபவர் என்று பரவலாகக் கருதப்படும் இந்த பிக்குவுக்கு, நீதிமன்றத்தில் இருந்த ஒரு நீதிபதியை அவமதித்தல், நிதிமன்றத்தை அவமதித்தல், போன்ற துர்நடத்தைகளுக்காகவும், குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றவியல் துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல் என்பனவற்றை மேற்கொண்டதற்காகவும் மற்றும் திருமதி சந்தியா எக்னாலிகொட மீது கெட்ட வார்த்தைகள்பேசி அச்சுறுத்தியதுக்காகவுமே சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. முதல் மற்றும் இரண்டாவது குற்றங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி,  அபராதமாக விதிக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக அவை இரண்டையும் ஏககாலத்தில் அனுபவிக்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார். இஸ்லாத்தையும் முஸ்லிம்களின் கலாச்சாரத்தையும் அவதித்தது போன்ற அவர்மீதுள்ள பல தீவிரமான குற்றச்சாட்டுகளுக்காக அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. மிகவும் முரண்பாடான வகையில் சட்டம் பலமுறை அவருக்காக வளைந்து கொடுத்துள்ளது மற்றம் நகைச்சுவையானபடி ஒரு நாளின் சில மணி நேரங்கள் அவர் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். வண. ஞ}னசார தேரோ மற்றும் அவரது தீவிரவாத அமைப்பான பொது பல சேனா மற்றும் அவரது சகோதர வெறுப்புக் குழுக்களுடன் சேர்ந்து இனவெறி - பாதிப்புள்ள முன்னாள் மகிந்த ராஜபக்ஸ ஆட்சியில் என்ன செய்தார்கள் என்பது நன்கறிந்த ஒரு விடயம்.

இருப்பினும் அவரது முஸ்லிம்களுக்கு எதிரான விரோதப் போக்குகள் அmuslim protest srilankaந்த ஆட்சிக்கும் அப்பாற்பட்டு யகபாலன என அழைக்கப்படும் இந்த ஆட்சிக் காலத்திலும் கூடத் தொடர்கிறது.அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் மதத்தையும் மற்றும் கலாச்சாரத்தையும் தண்டனை விலக்கோடு அதிகம் பயமின்றி அல்லது சட்ட அமலாக்கல் அதிகாரிகளின் அனுமதியோடு தாராளமாக தொடர்ந்து செய்து வருகிறார், ஒரு சிறிய நீதிமன்றின் நீதிபதியின் தைரியம் மற்றும் துணிவான ஒரு பெண் செயற்பாட்டாளரான சந்தியா ஆகியோரின் செயற்பாட்டினால் நீதியின் செயற்பாடு அது செயற்பட வேண்டிய முறையில் செயற்பட்டுள்ளது ஏனென்றால் அவரது நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முஸ்லிம் விரோத பிரச்சாரத்தின் ஊடாக அவர் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை அழிவுக்கு உட்படுத்திக் கொண்டிருப்பதை முற்றிலும் தவிர்த்து அல்லது கண்டும் காணாதது போல நீதித்துறை நடந்துவருகிறது. அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத் திட்டத்தை  அடைவதற்காக இந்தப் பிக்குவின் ரௌடித்தனமான நடத்தையை ஊக்குவிக்கிறார்கள், மற்றும் கோவில்களால் கூட அவரை அழிவுப்பாதையில் இருந்து காப்பாற்ற முடியவில்லை இந்த நிலையில் மிகவும் திருத்தமுடியாத காவி உடை தரித்த துறவியை சீர்திருத்த முயற்சி மேற்கொண்ட  நீதிபதி மிகுந்த பாராட்டுக்குரியவர். ஆனால் முஸ்லிம் விரோத வெறுப்புக்கு தண்டணை வழங்குவதற்கு நீதி நடவடிக்கையில் எவ்வளவு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதைப் பார்க்கும்போது ஸ்ரீலங்காவில் முஸ்லிம்களுக்கு சமமான உபசரணைகள் வழங்கப்படுவதில் உள்ள ஏமாற்றுவேலையை இது எடுத்துக்காட்டுகிறது.

இதன்படி இஸ்லாமிய மதவாத வெறுப்புணர்வு வெறுமே சிங்கள பௌத்த வெறுப்புக் குழுக்களுடன் மட்டும் கட்டுப்பட்டிருக்கவில்லை மாறாக தமிழ் சமூகத்தில் உள்ள அவர்களின் தீவிரவாத உறவினர்களிடம் - சிவசேனை - தொடர்புகளைக் கொண்டிருப்பதற்கான சாட்சியங்கள் இருப்பது தெளிவாகிறது. திருகோணமலையில் உள்ள தமிழ் பாடசாலையில் உள்ள ஹிஜாப் பிரச்சினை இந்த வெறுப்பு மூலகங்களாலும் மற்றும் சில அதிருப்தியாளர்களான உள்ளுர் அரசியல்வாதிகளாலும் தூண்டப்பட்டுள்ளது. பின்னர் சிவசேனை குழு மறக்கப்பட்டிருந்த மற்றொரு மோதல் பகுதியான கால்நடைகள் வெட்டப்படுவதற்கும் உயிர்கொடுத்துள்ளதுடன், வடக்கில் மாட்டிறைச்சித் தடைக்கும் அழைப்பு விடுத்துள்ளது, அந்தக் குழுவின் தலைவர் மறைமுகமாக முஸ்லிம்களை வேற்றுக்கிரக வாசிகள் எனக்குறிப்பிட்டுள்ளதுடன் அவர்கள் இந்த நாட்டின் பெரும்பான்மையினரான பௌத்தர்கள் மற்றும் இந்துக்களின் மத நம்பிக்கைகளுடன் ஒத்து வாழ முடியாவிட்டால் அவர்கள் இந்த தீவை விட்டு வெளியேறவேண்டும் என்று சொல்லியுள்ளார், இன மற்றும் மத அடிப்படையான மோதல்களினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில் தீங்கு விளைவிக்கும் திட்டங்களை மேற்கொள்ளும் மற்றொரு முயற்சிக்கான குறிப்பே இது சிங்கள பௌத்தம் மற்றும் ஹிந்தி என்பன, முஸ்லிம் விரோத தீவிரவாத குழுக்கள் இடையே பலன்களைப் பெறுவதற்கு இன்னும் எத்தனை கூட்டு முயற்சிகள் உள்ளனவோ என பலரும் சந்தேகிக்கிறார்கள்.

ஞ}னசாரதேரோ உட்பட குற்றவாளிகளால் ஆட்சி செய்யப்பட்ட முன்னைய ஆட்சியை தண்டிப்பதற்காக அவர்களுக்கு எதிராக வாக்களிக்கப்பட்டது,முஸ்லிம் சமூகத்துக்கு அழbbsுத்கமவில் நடந்த பயங்கரங்களில் இருந்து விடுபடுவதற்குள் மோசமான திகன முஸ்லிம் விரோத வன்முறை நடைபெற்றது, அதற்குச் சில மாதங்களுக்குப் பின்னர் கணிசமானளவு தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் எச்சரிக்கையளிக்கும் விதத்தில் எழுந்துள்ள இந்த முன்னேற்றங்கள், உண்மையில் பாதிக்கப்பட்ட சமூகத்தின் முதுகுத்தண்டையே விறைக்கவைக்கும் விதத்தில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏனென்றால் மற்றொரு யுத்தத்துக்கான எழுச்சி - சமய ரீதியில் தூண்டிவிடப்பட்ட ஒரு யுத்தம். எற்கனவே சமூக ஊடகங்களில் இன மற்றும் மத விரோத வெறுப்புகளை முன்னேற்றும் செயற்பாடுகள் - குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரானவை - புயலாக உருவெடுத்துள்ளன. சிங்கள ஊடகங்களின் சில பகுதிகள் கூட வெகு தாரளமாக இஸ்லாமியவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. இப்போது முக்கியமான தமிழ் செய்திப் பத்திரிகைகளும் கூட அதில் இணைந்துள்ளன, குறைந்தபட்சம் இதன் தாக்கங்கள் ஆபத்தானவை என்றே சொல்லலாம். இந்த ஆபத்தான விளைவுகளுக்கு மாறாக, சிவசேனை பற்றி தமிழ் அரசியல்வாதிகள் கூட எச்சரிக்கை மணியோசையை எழுப்பி வருகிறார்கள், ஆனால் அரசாங்கம் எதையும் கேட்கவில்லை, எதையும் பார்க்கவில்லை என்கிற கொள்கையையே இன்னமும் பின்பற்றி வருகின்றது. முஸ்லிம் அரசியல் தலைமைகள் எப்போதும் போலவே மனதிடம் மற்றும் செயல்திறம் இல்லாமல் இருப்பதுடன் தங்க முட்டைகள் உள்ள தங்கள் சொந்தக் கூடுகளைப் பாதுகாப்பதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளார்கள். இந்தப் பின்னணியில் முஸ்லிம்களைப்பற்றிச் சரியாகச் சொல்வதானால் அவர்கள் ஒரு அனாதைச் சமுகமாக அல்லது யாரும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

இன்றைய பத்திரிகைத்துறைக்கு வெறுப்பு பேச்சு ஒரு சவாலாகவே உள்ளது. சமூக உணர்வுள்ள பத்திரிகையாளர்கள் வெறுப்பு நிறைந்த செய்திகள் எவ்வளவு விரைவாகக் கசிகின்றன மற்றும் அடிக்கடி இணையங்களில் அளவுக்கு அதிகமான கருத்துக்களை பகிருகின்றன என்பதுபற்றி சரியாகவே அச்சமடைந்துள்ளார்கள். செய்திகளை வரையறை செய்வது உட்பட ஊடகவியலாளர்களின் சொந்த தொழில்முறை நடவடிக்கைகள் வெறுப்பு பிரச்சாரவாதிகளின் குரல்களை எவ்வாறு பெருக்கலாம் என்பது பற்றி குறைவாகவே பேசப்பட்டது. பின்னர் சில ஊடக நிறுவனங்கள் சகிப்புத்தன்மையற்ற நிலைக்கு உணவு ஊட்டுபவையாகவும் மற்றும் அந்நியர்கள் பற்றிய அச்சம், இஸ்லாம் பற்றிய அச்சம் முதல் மத தீவிரவாதம் வரையான வெறுப்புணர்வை தூண்டும் சக்திகளின் உற்சாகமூட்டுபவர்களாகவும் மற்றும் அவர்களின் கருத்தியல் செய்தித் தொடர்பாளர்களாகவும் பணிபுரிகின்றன. சுதந்திரமான பேச்சுரிமை கூட, வெறுப்பு பேச்சுக்களை விசேடமாக சிறுபான்மையினருக்கு எதிரான பேச்சுக்களைக் கையாள விசேட கவனம் தேவை என வாதிடுகிறது, அவர்கள் அதை எதிர்ப்பதில் பலவீனர்களாக உள்ளார்கள் என்பதினால். எனினும் இந்த விஷயம் பற்றிய கலந்துரையாடல்களில் பெரும்பாலும் கவனம் செலுத்தப்படுவதில்லை: சட்டபூர்வமான கவலைகள் தேவையற்ற தணிக்கைக்கு உட்படும்போது அதற்கான வரைவிலக்கணங்கள் தெளிவற்றவையாக உள்ளதை நாங்கள் காண்கிறோம்.

வெறுப்பு பேச்சுக்களில் சிலவற்றை தவறற்றவை என்று முத்திரையிடுவதற்கும் மற்றும் மேலாதிக்க மதிப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய விமர்சனங்களை அமைதியாக்குவதற்கும் ஏற்ற ஒரு சாக்காக அவற்றைப் பயன்படுத்துவது பல ஊடகவியலாளர்கள் மத்தியில் புரிந்து கொள்ளும் விதத்தில் இழிந்த தன்மையைப் பெறுகிறது. ஒரு தற்காப்பு தாக்கமாக, கருத்து சுதந்திரம் என்கிற அவர்களது சட்ட உரிமையின் பின்னால் அவர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள். இருந்தும் சட்ட வரம்புகள்;, தொழில் நடத்தை எல்லைகளை வரையறை செய்யக்கூடாது. பத்திரிகையாளர்கள் கடைப்பிடிக்கும் இரகசியம் பாதுகாப்பது போன்ற பல கோட்பாடுகள் சட்டத்தால் அமல்படுத்தப்பட்டவை அல்ல உண்மையில் அவை சட்டத்துக்கு முரணானவையாகவும் இருக்கலாம், ஆனால் இருந்தபோதும் அவைanti muslim violence4 ஒரு நெறிமுறை விடயம் என்று தானாகவே ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. இதேபோல தீவிரமான தீமைகள் ஊக்குவிக்கப்படும்போது, அதில் உள்ள உண்மையான ஆபத்துக்கு பதிலளிக்கும் விதத்தில் ஊடகவியலாளர்கள் தங்கள் நெறிமுறைத் தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். வெறுப்பு பேச்சு தொடர்பான நெறிமுறை நியமம் ஒரு முன்னேற்றமான வேலையாக உள்ளது. நெருக்கமான ஆய்வு மற்றும் கவனமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டிய கவலைதரும் போக்குகள் பல உள்ளன. பரந்தளவில் ஸ்ரீலங்காவில் போருக்குப் பிந்தைய அபிவிருத்திகளைப் பொறுத்தமட்டில் அநேக முஸ்லிம்கள் மகிழ்ச்சியற்ற நிலையிலேயே உள்ளனர், எவ்வாறாயினும் தங்கள் மதம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான இழிநிலை ஒரு பரந்த கருத்தியல் ரீதியான தாக்குதலின் ஒருபகுதி எனவும் சமூகத்தில் சமமான நிலையில் தாங்கள் வாழ்வதை அது கடினமாக்குவதாகவும் அவர்கள் கருதுகிறார்கள். இதில் கவலைக்குரியது என்னவென்றால் அரசியல்வாதிகள் ஏற்கனவே நாட்டை முனைவாக்கப்படுத்தியிருப்பதுடன் மற்றும் வெறுப்பு குழுக்களை ஆயுதமாகப் பயன்படுத்தி வெறுப்பினைச் சட்டபூர்வமாக்கியுள்ளனர் மற்றும் இதில் ஊடகங்கள் பாராட்டத்தக்கதான ஒரு பங்கினை வகிக்கின்றன.

வெறுப்பு பேச்சின் கீழ் விவாதிக்கப்படுவதும் மற்றும் மிகவும் தீங்கிழைப்பதுமான அம்சங்களில் ஒன்று வெறுப்பு பிரச்சாரம் சாத்தியமான இனவாத தளங்கள் அல்லது பாதாதைகளுக்கு என மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மாறாக அவை ஊடக நிறுவனங்கள் உட்பட வலையமைப்பு இயக்கத்தின் ஊடாக ஒரு அதிநவீன முயற்சியை உள்ளடக்கியுள்ளன. தீவிரவாத வெளிப்பாடு அதன் ஆயுதச்சாலையின் ஒரு பகுதி மட்டுமே, மிகவும் தீவிரமான ஆயுதமாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. உளவியலாளர்கள் மற்றும் சமூகவியலாளர்கள் எங்களுக்குச் சொல்லுவது என்னவென்றால் காவலாளிகள் கீழே உள்ளபோது அவர்கள் சொல்லும் செய்திகள் மனங்களுக்குள் நுழைந்து தூண்டலை ஏற்படுத்துகின்றன என்று. வெளிப்படையான நச்சுப் பேச்சுகளுக்கு மட்டுமல்லாது  போலியான மேற்கோள்கள் மற்றும் நியாயமான பிரசங்கங்களில் இணைந்துள்ள வெறுப்பு பிரச்சாரங்கள் பற்றியும் ஊடகவியலாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். உணாச்சிகளைத் தூண்டும் செய்திகள் மற்றும் தங்கள் செய்திக் கதைகளில்  இனவாதம் அல்லது வெறுப்பு சுவையைச் சேர்ப்பது என்பன துரதிருஷ்டவசமாக வர்த்தக நோக்கங்களுக்காக பொதுவான ஒன்றாக மாறியுள்ளது.

உதாரணத்துக்கு ஐக்கிய இராச்சியத்தை எடுத்துக்கொண்டால் இங்கு ஊடகங்களின் பங்களிப்பு காரணமாக வெறுப்புணர்வுக் குற்றங்கள் எழுச்சி பெற்றிருப்பது தெளிவாகத் தெரிகிறது. நீண்ட காலமாக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வலதுசாரி குறுஞ் செய்தித்தாள்கள் சிறுபான்மையினர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் என்பனவற்றை இழிவாகச் சித்தரித்து வருகின்றன. இந்த இழிவாகச் சித்தரிக்கும் நிலை ஒரு புதிய நிகழ்வு அல்ல நீண்டகாலமாக பிரித்தானிய ஊடகங்களில் இடம்பெற்றுவரும் ஒன்றுதான். சில காலமாக நிபுணர்கள் எச்சரித்து வருவது குரோத உணர்வுடன் கூடிய ஊடகச் செய்திகள், முஸ்லிம் விரோத மற்றும் இஸ்லாமிய அச்ச வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் குற்றங்கள் அதிகரிப்பதற்கு ஊக்கமளித்து வருகின்றன என்று. ஆகையினால் அநேக செய்தித்தாள்கள், ஒலி மற்றம் ஒளிபரப்பிகள் மற்றும் ஏனைய ஊடக நிறுவனங்கள் என்பன மதச்சார்பின்மை மற்றும் பாரபட்சம் போன்றவற்றிற்கு எதிரான சவாலை எழுப்பத் தவறிவிட்டன,விழிப்புணர்வை தூண்டுவதற்கும் மற்றும் அறியாமைகளுக்கு எதிரான சவால்களை மேற்கொள்வதற்குப் பதில் சகிப்புத்தன்மையற்ற நிலை மற்றும் இனவாதம் போன்ற தீச் சுவாலைகளை தூண்டிவிடுகின்றன.

எனவே ஊடகவியலாளர்கள் இனவாதம் மற்றும் தீவிரவாதம் என்பனவற்றை எச்சரிக்கையுடன் கவனமாக கையாளவேண்டும், சகிப்புத்தன்மையற்ற நிலைக்கு கட்டுப்படுவதைத் தவிர்க்க வேண்டும், நவீன சமூகத்தை உருவகப்படுத்தும் வகையில் ஓரளவு அலங்காரமான மொழிகள்,மதம்,கலாச்சாரங்கள், மற்றும் வித்தியாசமான வரலாற்று முன்னோக்கங்கள் என்பனவற்றை பயன்படுத்தி செய்திகள் வெளியிட வேண்டும். இத்தாலிய பத்திரிகையாளர் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான றொபேட்டோ நட்டாலி சொல்லியிருப்பதைப் போல,” ஊடகவியலாளர்களுக்கு இனவெறுப்புச் சுவாலைகளை ஊதிப் பெரிதாக்கும் வேலையைத் தவிர்க்க வேண்டிய கடமை உள்ளது. போர்ககுணமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை ஆனால் சாதாரணமாக அவர்களது வேலையைச் செய்வதுடன் மற்றும் தாங்கள் காணும் உண்மையை மதிப்பதுடன் எப்போதும் எங்கள் தொழிலை வழிநடத்தும் சட்டத்துக்குள்ளேயே இருப்போம்”. மேற்கிலுள்ள பொது ஒளிபரப்பாளர்கள் உட்பட அநேகமான ஊடகவியலாளர்களின் தொழிற்சங்கங்கள் மற்றும் ஊடகங்கள் என்பன  நன்னெறி அறிவிப்புக்களின் நல்ல நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட இனவாதத்தை எதிர்ப்பதற்கு அhப்பணிப்புடன் விசேடமான பணிக் குழுக்கள் மற்றும் வழிகாட்டல்களை நிறுவியுள்ளார்கள். அதே நேரத்தில் தேசிய பத்திரிகைச் சபைகள், சகிப்புத்தன்மையற்ற நிலைக்கு சவாலான சட்டத் தொகுப்புகளை பின்பற்றி வருவதுடன் மற்றும் ஊடகங்களில் இடம்பெறும் இனவெறி சம்பந்தமான செய்திகள் பற்றி பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் முறைப்பாடுகளையும்  எடுத்துக் கொள்கின்றன. சிலர் தமது சட்ட விதிகளை சாத்தியமான குறுகிய வார்த்தைகளில் வெளியிடுவது போலத் தோன்றுகிறது மற்றும் சில வழக்குகள் வலிமையான முதன்மையான வழக்குகளாகத் தோன்றிய போதிலும் செய்தித்தாள்களுக்கு எதிராக அவற்றைப் பார்ப்பது மறுக்கப்படுகிறது. ஊடகங்களின் சகிப்புத்தன்மையற்ற நிலை தொடர்பான எல்லாப் பிரச்சினைகளையும் நெறிமுறை விதிகள் தீர்த்துவிடாது, ஆனால் ஊடகவியலாளர்கள் பொறுப்புணர்வை மேற்கொள்தற்கு அவை உதவுகின்றன மற்றும் ஊடகவியலாளர்கள் தங்கள் மனச்சாட்சிப்படி கடமையாற்றுவதை அவை ஊக்குவிக்கின்றன.

இந்தப் பேச்சு அனைத்துக்குமான ஒரு முடிவுரை: மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது, தீவிரமான பிரச்சாரங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியத்துக்காக பல்வேறு இன மற்றும் கலாச்சாரக் குழுக்களிலிருந்து அதிகமானவர்களை ஊடகவியலாளர்களாக ஆட்சேர்ப்பு செய்யவேண்டும். இது திறமையானதாக இருப்பதற்கு ஊடகத்துறையில் பொறுப்புணர்வு மற்றும் முழு சமூகத்தின் பிரதிபலிப்பும் இருக்கவேண்டியது அவசியம். இப்போது ஸ்ரீலங்காவின் சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ஐ.சி.சிஎஸ்.எல்) உட்பட ஊடகங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அங்கங்கள் என்பன, இனவாதம் மற்றும் இந்த நாட்களில்  அதிக தேவை மற்றும் விநியோகக் காரணங்களுக்காக ஊடகங்களை கொள்ளைநோய் போல பிடித்தாட்டும் முஸ்லிம் விரோத சொல்லாட்சி என்பனவற்றை கட்டுப்படுத்தும் விதத்தில் கணிசமாLukman-Harees-2க விதிமுறைகள் அடங்கிய அதிகம் சட்டப் பிடிமானங்களைப் பயன்படுத்த வேண்டும். ஊடகவியல், பிரபலமான மற்றும் ஆபத்தான கருத்துக்களை முறையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். செய்திகளை வெளியிடுவதற்;கான தரம் ஊடகங்களிடம் இருக்கவேண்டியது அவசியம், மக்கள் தங்களுக்குத் தேவையான செய்திகளை பாரபட்சமோ, தப்பெண்ணமோ இல்லாமல் பெறுவதை அது உறுதிப்படுத்த வேண்டும். ஊடகவியலாளர்களின் ஏனைய திறன்களைப்போலவே, ஊடகத்துறையை அரசாங்கம் கட்டுப்படுத்துவதற்கு அனுமதிக்காமல், நேரடி சிந்தனை, மனச்சாட்சிப்படி முடிவெடுத்தல், நெறிமுறை விதிகளை உரியமுறையில் பிரயோகிப்பதற்கான திறமை என்பனவற்றை அடைவதற்கு காலமும், பயிற்சியும் மற்றும் முயற்சியும் தேவையாக உள்ளன. ஆம்! மக்களின் விழிப்புணர்வு காரணமாக கட்டுப்படுத்துபவர்களுக்கு முறைப்பாடு செய்தல், அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்துதல் மற்றும் முரடடுத்தனமான பத்திரிகைகள்  தவறாக வழிநடத்தும் அல்லது இனவாத. மதவாத தொடர்பான தாக்குதல்களுக்கு வழிகோலும் தவறான செய்திகளை பிரசுரித்தல் அல்லது ஊடக நெறிமுறையை மீறும் மோசமான பத்திரிகைக்கு எதிராக நீதிமன்றம் போவதன் மூலம் ஊடகத்துறையை நல்ல முறையில் வளர்க்க வேண்டும். பொதுமக்களிடையே ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் ஆர்வம் பொதுமக்களினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.


தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்