Theneehead-1

Vol: 14                                                                                                                                                23.12.2016

லிபியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தல்; 109 பயணிகள் பத்திரமாக தரையிறங்கினர

மால்டாவில் தரையிறக்கப்பட்ட கடத்தப்பட்ட லிபியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 109 பயணிகள் மற்றும் சில பணியாளர்கள் பத்திரமாக தரையிறங்கினர். libia

லிபியாவில் அதிபராக இருந்து வந்த ஜெனரல் கடாபி 2011-ம் ஆண்டு ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பல்வேறு பிரிவினைவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி, சண்டையிட்டு வருவதால் குழப்பான நிலையானது நீடிக்கிறது.

இந்நிலையில் லிபியாவின் ‘ஆப்ரிகியா ஏர்வேஸ்’  விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ-320 ரக விமானம் சபா என்ற இடத்தில் இருந்து தலைநகர் திரிபோலிக்கு காலை உள்ளூர் நேரப்படி 8.10 மணிக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 111 பயணிகளும், 7 சிப்பந்திகளும் பயணம் செய்தனர். அந்த விமானம், காலை 9.20 மணிக்கு திரிபோலி போய் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதில் இருந்த கடத்தல்காரர்கள் இருவர் விமானத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டி, அதை கடத்தினார்.

பின்னர் அந்த விமானம், லிபியாவின் அண்டை நாடான மால்டாவில் உள்ள மத்திய தரைக்கடல் தீவில் தரை இறங்கியது.

விமானம் கடத்தப்பட்ட சம்பவத்தினை மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் டுவிட்டரில் உறுதி செய்தார். கோரிக்கை நிறைவேற்றப் படுகிறவரையில் பயணிகளை விடுதலை செய்யப்போவதில்லை என கடத்தல்காரர் கூறியதாக மால்டா அரசு வட்டார தகவல்கள் வெளியாகியது. விமானத்தை கடத்திய இருவர் கையில் வெடிகுண்டுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் முன்னதாக விமானத்தை தகர்க்கப்போவதாக மிரட்டல் விடுத்தனர் என்று மீடியா செய்திகள் வெளியாகியது.
 
இதற்கிடையே கடத்தப்பட்ட விமானம் தரையிறங்கிய மால்டா விமான நிலையம் மூடப்பட்டது. விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. விமானம் தரையிறங்கியுள்ள இடத்தில் பாதுகாப்பு படை வீரர்களும், துணை மருத்துவ ஊழியர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். மால்டாவில் உள்ள லிஜா நகர துணை மேயர் மத்கா மேக்ரி, கடைசியாக கிடைத்த தகவல்கள் அந்த விமானத்தில் பயணம் செய்த பெண்களும், குழந்தைகளும் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக கூறுகின்றன என்றார். இதற்கிடையே இரண்டாவது கட்டமாக சிலர் விமானத்தில் இருந்து தரையிறங்கினர். மொத்தம் இதுவரையில் 109 பேர் தரையிறக்கப்பட்டு உள்ளனர் என்று மால்டா பிரதமர் தெரிவித்து உள்ளார். விமான பணியாளர்களும் தரையிறங்க தொடங்கினர். இப்போது சில பணியாளர்களும், கடத்தல்காரர்களும் உள்ளே இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 விமான நிலையத்தில் முன்னதாக பேச்சுவார்த்தைக்கான குழுவும் நிறுத்தப்பட்டது.

ஏற்கனவே தரையிறங்கிய பயணிகள் அவசர, அவசரமாக பஸ்களில் வெளியே கொண்டுவரப்பட்டனர். பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே விமான நிலையத்தில் அசம்பாவித சம்பவம் தொடர்பான எந்தஒரு நிகழ்வும் தென்படவில்லை. இரு கடத்தல்காரர்களும் கையில் கையெறி குண்டுகளை வைத்து உள்ளனர், ஆனால் அவர்களுடைய கோரிக்கை என்ன என்பது தெரியவில்லை என்று அந்நாட்டு எம்.பி. கூறிஉள்ளார்.

dantv