Theneehead-1

   Vol:17                                                                                                                               25.10.2018

எம்மை காலணித்துவ ஆட்சி செய்தவர்களை புலம்பெயர் தமிழர்கள் ஆள் கின்றார்கள்

- ஆளுநர் தெரிவிப்பு

மாணவர்கள் இலகுவான வழிமுறையில் ஆங்கில கல்வியினை கற்பதற்கு ஆசிரியர்கள் தமது கற்கை முறைமையினை இலகுபடுத்துவது அவசியமானது என வடமாகாணreginold251018 ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ் இந்து ஆரம்ப பாடசாலையின் ஆங்கிலமொழி தின விழா பாடசாலை அதிபர் திரு. என்.மகேந்திராஜா தலைமையில் இன்று (23.10.2018); நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர் தமிழ் சிங்கள மொழியினை நாம் கற்றுக்கொள்ளும்போது இலக்கண முறையினை ஆரம்பத்தில் பயன்படுத்துவது கிடையாது பேச்சு வழக்கில் சிறு சிறு வசனங்களை முதலில் கற்றுக்கொண்டே பின்னர் எழுத வாசிக்க கற்றுக்கொள்கின்றோம். அதேபோன்று ஆங்கில கல்வியிலும் முதலில் பேசுவதற்கு கற்றுக்கொடுத்தால் பின்னர் எழுதுவது வாசிப்பது இலகுவானதாக இருக்கும் மாணவர்கள் இலகாக ஆங்கில மொழியினை கற்றுக் கொள்வர்.

நான் இருபத்து ஐந்து ஆண்டுகள் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்தேன் என்னிடம் ஆங்கிலம் கற்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் வேறு வேறு நாடுகளிலும் தாய் நாட்டிலும்  உயர் பதவிகளை வகித்து வருகின்றார்கள். நான் கல்வியினை மாணவர்களுக்கு புகட்டும்போது முதலில் இலக்கணங்களை கற்றுக்கொடுப்பது கிடையாது பேச்சு வழக்கில் இருக்கும் ஒரு சில சிறிய சொற்களை முதலில் சொல்லிக்கொடுத்து பின்னர் அதனுடன் காலப்போக்கில் சொற்களை சேர்த்து பேசுவதற்கு கற்றுக்கொடுத்தேன் அதனால் மாணவர்கள் இலகுவில் ஆங்கிலத்தினை கற்றுக்கொண்டிருந்தார்கள். எனவே மாணவர்கள் இலகுவில் ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கான முறைமையை ஆசிரியர்கள் பயன்படுத்துவது அவசியம் என்று தெரிவித்தார்.

நான் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டபோது ஒரு தொழில் அதிபரை அங்கே சந்தித்தேன். அவருடய தந்தை திரு.கனகரட்ணம் இந்த பாடசாலையின் அதிபராக இருந்திருக்கின்றார். அவருடய மகன் இராஜசீலன் அங்கே பெரிய தொழில் அதிபராக இருக்கின்றார். எம்மை அடக்கி ஆண்ட வெள்ளைக்காரர்களை அவர் அங்கே பணிக்கு அமர்த்தி வேலை வாங்குகின்றார். அவ்வாறான நிலையினை பார்க்கும்போது இங்கிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் எம்மை காலணித்துவ ஆட்சி செய்தவர்களை தாம் ஆழ்வது வியப்புக்குரியது அவ்வாறு பலர் அங்கு இருக்கின்றார்கள். அவர்களை தாய் நாட்டிற்கு வந்து முதலீடு செய்யுமாறு கேட்டிருக்கின்றேன். பலர் அதற்கு இணங்கியும் இருக்கின்றார்கள் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ் உதவிக்கல்விப்பணிப்பாளர் ஆங்கிலம் மொழி கே.சுப்பிரமணியம், திரு.ஈ.ஜே.லெஸ்லி - பிராந்திய ஆங்கில மொழி உதவி மையம், ஆளுநரின் பிரதியேக செயலர் ஜே.எம்.சோமசிறி இணைப்பு செயலர் சுந்தரம் டிவகல்லாலா, கே.செவ்வேள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.