Theneehead-1

   Vol:17                                                                                                                               25.10.2018

வர்த்தக தாராளமயமாக்கம் அல்லது முறைப்படுத்தல் எது அதிகம் விரும்பத்தக்கது?

                                                                                                                           -  லக்சிறி பெர்ணாண்டோ

வர்த்தக தாராளமயமாக்கல் அல்லது சுதந்திர வர்த்தகம் என்பது சமீபத்திய ரூபாவின் சரிவு இடம்பெறும் காலகட்டத்தில் ஒரு கூர்மையான சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. எனினும் அது சரtrade srilanka்வதேச ரீதியில், கோட்பாட்டு ரீதியிலும் மற்றும் அனுபவ ரீதியிலும் முற்றாகக் கலந்துரையாடப்படும் ஒரு தலைப்பாக உள்ளது, இருப்பினும் அதில் ஒரு முடிவு எட்டப்படவில்லை.

ஸ்ரீலங்காவில் பொருளாதார முடிவுகளை மேற்கொள்வதில் யோசனைகள் வழங்கும் நெருக்கமான ஒரு குழுவினரின் ,மிகவும் ஆச்சரியப்படும் வகையில்,நாட்டில் ரூபாவின் மதிப்பிறக்கம் மற்றும் பணம் வழங்கலின் பாதகமான சமநிலை, மோசமான ஏற்றுமதி வளர்ச்சி, வெளிநாட்டு முதலீடுகளின் குறைவான உள் வருகை மற்றும் குறைவான பொருளாதார வளர்ச்சி போன்றவை தொடர்பான பொருளாதார நோய்கள் ஏற்படுவதற்கு முழு அளவிலான தாராளமயமாக்கல் கொள்கை இல்லாதிருத்தல் அல்லது அதனை நடைமுறைப் படுத்தாததுதான் காரணம் என வாதிடுகிறார்கள். அவர்கள் அனைத்தினது வெற்றியையும் ஒரே திட்டத்தினூடாக அடைய விரும்புகிறார்கள்.

மறுபக்கத்தில் விமர்சகர்கள், பொறுப்பற்ற சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள், அளவுக்குமீறிய தாராள முதலீட்டுச் சபையின் நிபந்தனைகள், கண்காணிப்பற்ற வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் சமீபத்தில் தாராளமயப்படுத்தப்பட்ட சுங்கவரி பட்டியல்கள் என்பனதான் நீண்டகால மற்றும் வெளிப்புறக் காரணிகளுக்கு மேலதிகமாக மேற்கூறப்பட்ட அவஸ்தைகளுக்குப் பிரதான காரணம் எனச் சுட்டிக்காட்டுகிறார்கள். ருபாயின் மதிப்புக்குறைவு மற்றும் அந்நியச் செலாவணி சிரமங்களின் கீழ் ஸ்ரீலங்கா இப்போது அளவுக்குமீறிய தாராளமயமாக்கலில் இருந்து அளவுக்குமீறிய பாதுகாப்புவாதத்தை நோக்கிச் செல்லும் துரதிருஷ்டமான சாத்தியங்கள் தோன்றியுள்ளன.

ஒரு கொள்கையில் இருந்து மற்றதுக்கு

குறிப்பாக எங்கள் நாட்டில் திறந்த பொருளாதாரம் என்பதுதான் வர்த்தக தாராளமயமாக்கலை குறிப்பிடும் முந்தைய பதமாக இருந்தது. முற்றாக மூடிய பொருளாதாரமோ அல்லcontainerது முற்றாக திறந்த பொருளாதாரமோ ஒருபோதும் இருந்ததில்லை மற்றும் இருக்கப் போவதுமில்லை. சுதந்திரம் பெற்ற காலம் முதல் பொருளாதாரம் ஒரு திசையில் இருந்து மற்றொரு திசைக்குச் செல்வதே ஸ்ரீலங்காவின் அனுபவமாக இருந்தது, அழுத்தம் பியோகிக்காமல் பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய கொள்கை அல்லது வித்தியாசமான அரசாங்கங்கள் மற்றும் ஆலோசகர்களின் யோசனைகளின் மாதிரிகளை பின்பற்றுவது இதற்கான காரணமாக இருக்கலாம். அத்துடன் தேசிய மற்றும் சர்வதேச நிர்பந்தங்களும் மற்றொரு காரணமாக இருக்கலாம்.

ஏறத்தாழ 150 வருடங்களுக்கு முன்பே பீட்டர் வற்சன் என்பவர் நீண்ட தூர வர்த்தகத்தைக் கண்டுபிடித்துள்ளார், ஆனால் ஸ்ரீலங்காவின் வரலாற்று நூல்கள், 250 வருடங்களுக்கு முன்பே தப்பாசு மற்றும் பஹலுக்கா என்ற இரு வர்த்தக சகோதரர்கள் பௌத்த சமயத்தை பரப்பும் தங்கள் பாத்திரத்துக்கு அப்பால் பாரதத்துக்கும் லங்காவுக்கும் இடையில் வர்த்தகத்தை மேற்கொண்டதாகக் தெரிவிக்கின்றன.

சுதந்திரத்தின்போது ஸ்ரீலங்கா புறச்சூழல் சார்ந்த திறந்த ஏற்றுமதி பொருளாதாரத்தை மரபுரிமையாகப் பெற்றுக்கொண்டது, காலப்போக்கில் அது இயல்பாகவே கொடுப்பனவு சமநிலைச் சிரமங்களை எதிர்கொண்டது. அதனால்தான் டொனால்ட் ஸ்நோட்கிராஸ் 1966ல் ஸ்ரீலங்காவின் பொருளாதாரம் பற்றிய தனது ஆய்வினை எழுதும்போது “இலங்கை: ஒரு ஏற்றுமதி பொருளாதாரத்தின் மாற்றம்” என அதற்குத் தலைப்பிட்டார். நாடு தனது சித்தாந்த விருப்பங்களுக்கு மேலதிகமாக ஏன் இறக்குமதி பதிலீட்டு கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது என்பதற்கான பிரதான காரணம் கொடுப்பனவு சமநிலையில் உள்ள சிரமங்கள்தான். 1970 ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா தீவிர மூடிய கொள்கைகளை நோக்கித் தள்ளப்பட்டது, அதை தெரிவு செய்தது விருப்பத்தின்படி அல்ல, ஆனால் கட்டாய சூழ்நிலைகளின்படி அதைப் பின்பற்ற நேர்ந்தது.

1977 முதல் பரிணாம வளர்ச்சி பெற்றுவரும் ஒரு புதிய சர்வதேச தொழிலாளர் பிரிவின்கீழ் நாடு திரும்பவும் பொருளாதாரத்தை திறந்துவிடக்கூடியதாக இருந்தது இருந்தாலும் ஒரு எச்சரிக்கையான வேகத்திலேயே அதைச் செய்ய முடிந்தது. அநேக கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகளின் அனுபவங்களின்படி ஒரு நாடு விவசாயம், அரசாங்கத் துறை,சிறு தொழில்கள் உள்நாட்டு சந்தைக்கான உற்பத்திகள் போன்ற ஏனைய துறைகளை அலட்சியம் செய்யாமல் அதை வர்த்தகத்துக்காகத் திறந்து விடும்போது பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படுகிறது. மற்றொரு அவசியமான காரணி அரசாங்கத்தின் கண்காணிப்பு அல்லது தலையீடு (கட்டுப்படுத்துவது அல்ல). அதைத்தான் நாங்கள் சமநிலையான மற்றும் நியாயமான பொருளாதாரக் கொள்கை என அழைக்கிறோம்.

விரும்பத்தக்கது என்ன?

திறந்த பொருளாதாரம் என்பது ஒரு சஞ்சீவி அல்ல, ஆனால் ஏற்றுமதி மேம்பாட்டிற்கான உறுதியான நடவடிக்கைகளை அறிவுபூர்வமாக பின்பற்றுவதற்கு கிடைத்துள்ள businessஒரு வாய்ப்பாகும். வர்த்தகத்திற்கு முதல் அல்லது அதனுடன் சேர்ந்து உற்பத்தி வரவேண்டும். ஸ்ரீலங்காவைப் பொறுத்தவரை அதுதான் குறைபாடாக அல்லது பின் தங்கியதாக உள்ளது. ஏற்றுமதிக்குச் சிறந்ததாக உள்ளது சந்தைப் பொறிமுறையுடன் கூடிய பொருளாதாரத் திட்டமிடல். அரசாங்க - மற்றும் தனியார்துறை ஆகிய இரண்டு இயந்திரங்களும் ஒன்றாக வேலை செய்ய முடியும். வெற்றி அல்லது தோல்வி அல்லது அவற்றின் அளவு தூய கோட்பாடு அல்லது சித்தாந்தம் மூலமாக அல்லாது ஆனால் அனுபவ ஆதாரங்களால் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். இந்தச் சூழ்நிலையில் கேட்பதற்கு ஏற்புடைய கேள்வி, ஸ்ரீலங்காவுக்குத் தேவையானது முழு வர்த்தக தாராளமயமாக்கலா அல்லது வர்த்தக ஒழுங்குமுறைப்படுத்துதலா என்பதுதான்? தரப்பட்டுள்ள சூழ்நிலையின் கீழ் எது மிகவும் விரும்பத்தக்கது?

வர்த்தக ஒழுங்குமுறைப்படுத்தல் ஒரு குறிப்பிட்டளவு தாராளமயமாக்கலைக் கொண்டுள்ளது, ஆனால் பூரணமாக இல்லை. வர்த்தக ஒழுங்காக்கலுக்குத் தேவையானது ஒரு தெளிவான (அதி நவீன) அரசாங்கத் தலையீடு மற்றும் கண்காணிப்பு. கொடுப்பனவு சமநிலையைத் தவிர, வர்த்தகப் பற்றாக்குறையை மிகவும் நெருக்கமாகக் கண்காணிப்பதுடன் நாணய வீதத்தை ஒரு நியாயமான வரம்பிற்குள் வைத்திருக்க வேண்டும். ஏற்றுமதியை ஊக்குவிக்கும் முகமாக சலுகைகள் வழங்கப்படலாம் ஆனால் அவை அளவுக்குமீறிய தன்மையாக இருக்கக்கூடாது.

சுங்கவரிப்பட்டியல் அமைப்பு, துணை வரி போன்ற சிக்கலான வரிகளை நீக்கி எளிமையாக்கப்பட வேண்டியதுடன் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டிக் குறைக்கக் கூடிய வகையில் நிலையான வரி வீதங்களைக் கொண்டிருக்க வேண்டும். உள்ளுர் முகவர்களின் சம்மதத்துடன் கப்பல் பயண நடைமுறைகள் கூட ஒழுங்கமைக்கப்படலாம். ஸ்ரீலங்காவின் சாதகமான ஒரு இடம் வழங்கப்பட்டால் அதி வேகமாக அபிவிருத்தி அடையக்கூடிய ஒரு பகுதி கப்பல் தொழில்துறை ஆகும்.

முதல் கட்டத்திலிருந்து பாடங்கள்

1977ல் திறந்த பொருளாதாரம் என்ற பெயரில் தாராளமயமாக்கல் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதில் ஒரு நியாயம் இருந்தது. உணவுப் பற்றாக்குறை,உணவுக் கட்டுப்பாடு, அeconomicரிசித் தடைகள், பங்கீட்டு உணவைப் பெறுவதற்கு நீண்ட வரிசை போன்றவைகளினால் மக்கள் சோர்வடைந்து இருந்தார்கள். அந்நியச் செலாவணி கட்டுப்பாடு, வெளிநாடுகளில் பட்டப்படிப்பை தொடர விரும்பியவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள விரும்பியவர்களை பெரிதும் பாதித்தது. ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாடுகள,; அரசியல் அல்லது இன ரீதியான ஏற்றுமதி - இறக்குமதி உரிம முறை, முதலீட்டு பொருட்களின் பற்றாக்குறை, முதலீட்டு நிதி போன்றவை காரணமாக வர்த்தக சமூகம் விரக்தி அடைந்திருந்தது. ஆகவே ஒரு பெரிய மாற்றம் தேவையாக இருந்தது.

1977ம் ஆண்டின் திறந்த பொருளாதாரம் வெற்றி பெற்றதா? ஆம், ஒரு பெரிய அளவிற்கு ஆனால் முற்றாக இல்லை. ஒருவேளை அதைத் தடுத்தது எதுவென்றால் உள்ளக அரசியல் சூழ்நிலைகளில் ஏற்பட்ட பெரிய மாற்றம்தான்,குறிப்பாக வடக்கில் மற்றும் அதேபோல தெற்கிலும் நடந்த உள்நாட்டுப் போர்தான் அதற்கான முக்கிய காரணம். மறுபுறத்தில் இந்தச் சூழ்நிலைகள் திறந்த பொருளாதாரம் காரணமாகவே தோன்றியதாக சில ஆய்வுகள் (நியுட்டன் குணசிங்க) தெரிவிக்கின்றன.

ஏடாகூடமான  வெளிநாட்டு வர்த்தகத்தின் தாராளமயமாக்கல் பெருமளவு இனமுறுகலைப் பற்றவைத்தது, அது தமிழர்களுக்கு எதிரான 1983 இனக்கலவரத்துக்கு வழிவகுத்தது. இறக்குமதித் தாராளமயமாக்கல்கூட வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இருபகுதி விவசாயிகளையும் பெருமளவு பாதித்தது, இளைய தலைமுறையினர் கிளர்ச்சி இயக்கங்களின் (எல்.ரீ.ரீ.ஈ மற்றும் ஜே.வி.பி) முதுகெலும்பாக மாறினார்கள். ஆர்.பிரேமதாஸ  சமூக நலன்புரி நடவடிக்கைகள் மூமாக திறந்த பொருளாதாரக் கொள்கையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த முயற்சித்தார், ஆனால் அது மிகவும் தாமதமான ஒன்றாக இருந்தது.

 பிறகு நடந்தவை சரித்திரம், ஆனால் கற்றுக்கொண்ட பாடங்கள் தெளிவானவையாக இருந்தன, கொள்கைகள் சமநிலையானவையாகவும், நியாயமானதாகவும், அதிகரிப்பானதாகவும் மற்றும் மக்களின் சம்மதத்துடன் நடைமுறைப்படுத்தப்படுவையாகவும் இருந்தாலோ அல்லது அங்கு ஒரு அரசியல் பின்னடைவு இருந்தாலோ அன்றி பாரிய தாராளமயமாக்கல் முயற்சிகளை ஏற்றெடுக்கக்கூடாது. தற்போது கூட தாரளாமயமாக்கப்பட்ட வர்த்தகத்துறை சிங்களவர்களுக்கும் மற்றும் முஸ்லிம்களுக்கும் இடையில் உரசலை ஏற்படுத்தியுள்ளது.

நான் இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது, உலகவங்கி இந்தச் செய்தியை  ஆணவத்துடன் அறிவித்துள்ளது “முதியோர் மக்கள் தொகை ஸ்ரீலங்காவின் நலன்புரித் திட்டங்களை திறனற்றவையாக்குகின்றன” (எகானமிநெக்ஸ்ட்,16 ஒக்ரோபர் 2018). வெளிப்படையான இந்த ஆலோசனை தெளிவாக உள்ளது. இதற்கு உலக வங்கி மட்டுமே முழுப் பொறுப்பு இல்லாமலிருக்கலாம், ஆனால் நவ தாராளவாதிகளான ஒரு சிறிய குழு ஒன்றுசேர்ந்து ஸ்ரீலங்காவின் திட்டங்களுக்கான அவர்களின் பரிசோதனைகளையும் மற்றும் கோட்பாடுகளையும் கட்டளைகளாக அறிவிக்கிறார்கள்.

தாராளமயமாக்கலுக்கான தெளிவான ஆணை இல்லை

ஐதேக தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய அரசாங்கம், 2015 ஆகஸ்ட் தேர்தல்களுக்கு முன்னர் வெளியிட்ட தனது தேர்தல் அறிக்கையில் பொருளாதாரத்தைப் பலப்investபடுத்துவதற்கான ஒரு மூலோபாயத்தை வெளியிட்டது ஆனால் அதை தாராளமயமாக்குவதாகச் சொல்லவில்லை. அதில் 16 திட்டங்கள் இடம்பெற்றிருந்தன, ஆனால் அவற்றில் எதுவும் தாராளமயமாக்கல் பற்றிய அர்த்தத்தில் பேசவில்லை,சர்வதேச சந்தையில் ஸ்ரீலங்காவின் நிலையை பலப்படுத்துவோம் என்று மட்டுமே சொன்னது.

ஐதேக எப்போதும் அதிகம் தாராளமயமான பொருளாதாரக் கொள்கையைக் கொண்டிருந்தது, ஆனால் தேர்தல்களில் அவர்கள் பேசியது சமூகச் சந்தைப் பொருளாதாரம் பற்றியே தவிர தாராளச் சந்தைப் பொருளாதாரம் பற்றி அல்ல. இப்போது வெறும் தாராளமயமாக்கலுக்காக அந்தப் பேச்சு நிறுத்தப்பட்டு விட்டது. ஆகஸ்ட் 2015க்குப் பிறகு அமைக்கப்பட்ட அரசாங்கம்  ஒரு ஐதேக அல்லது நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அல்ல ஆனால் சரியோ அல்லது தவறோ வித்தியாசமான  பொருளாதார முன்னோக்கங்களைக் கொண்ட ஸ்ரீ.ல.சு.க உடனான ஒரு கூட்டணி அரசாங்கம். ஆகவே அநேகமான பாரிய பொருளாதார முயற்சிகளைக் கட்டவிழ்த்து விடுவதற்கு முன்பே முறையான ஆலோசனைகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் கலப்பான சமிக்ஞைகள் வருங்கால சர்வதேச பங்காளிகளுக்கும் மற்றும் முதலீட்டாளர்களுக்கும் தொடர்பு படுத்தப்படும்.

குழப்பமான கொள்கைகளினால் உண்டாகும் பாரிய சுமையை இறுதியில் சாதாரண மக்களே சுமக்கவேண்டி ஏற்படும். அரசியல் காரணிகளைப்பற்றி பார்க்காமல் நாட்டின் பொருளாதார வாய்ப்புகளைப் பற்றிப் பேசுவது கடினம். ஒரு அரசியல் - பொருளாதார முன்னோக்கு நாட்டிற்கான சிறந்து கொள்கை அணுகுமுறையாக இருக்கலாம். நாட்டின் எதிர்காலத்தை நவ தாராளவாத பொருளியலாளர்களின் கையில் மட்டும் தனியாக விட்டுவிடுவது மிகவும் முக்கியமானதாகும்.

திறந்த பொருளாதாரத்தின் தற்போதைய குழப்பமான கட்டம்

திறந்த பொருளாதாரக் கொள்கைகளின் தற்போதைய கட்டம் 2015ம் ஆண்டின் புதிய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டதல்ல. அது 1994ம் ஆண்டின் அரசியல் மாற்றம் பிரகடனப் படுத்திய ‘இலகுவான வழியிலான திறந்த பொருளாதாரம்’ என்பதிலிருந்தே ஆரம்பமானது. அது அர்த்தப்படுத்தியது சமூக பாதுகாப்பு மற்றும் நலன்புரிசேவை கட்டமைப்புகளை அரசாங்கத்துறை முயற்சிகளுடன் சேர்த்து மேம்படுத்துவது என்பதையே. தவறுகள் அல்லது கவனக்குறைவுகள் எதுவாக இருந்தாலும் சமீபத்தைய காலம் வரை இதுதான் நாட்டில் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டு வந்தது. புதிய கட்டத்தின் கடைசிப் பகுதியில் அச்சமூட்டுவதாக இருந்தவை எவை என்றால் ஊழல், உறவினர்களுக்கு உயர் பதவிகளை வழங்குதல், மற்றும் வீண் விரயம் என்பனவே, துரதிருஷ்டவசமாக இவை தற்போதைய விநியோகத்தின் கீழ் சிறிதேனும் குறையாமல் இருக்கின்றன.

இதற்கு மேலதிகமாக அரசாங்கத்தின் ஐதேக பிரிவினர் சில பகுதிகளில் நவ தாராளக் கொள்கைகளை அதிகாரத்துவ முறையில் கட்டவிழ்த்து விட்டுள்ளனர், அவற்றில் இரண்டை கீழ்கண்டவாறு சிறப்பித்துக் கூறலாம்,

(1)உலக வர்த்தக அமைப்பு மற்றும் சிலவற்றின் பழைய பரிந்துரைகளைப் பின்பற்றி விவசாயப் பொருளாதாரத்தின் செயற்கைச் சந்தைப்படுத்தல் நடவடிக்கையாக  உர மானியத்துக்குப் பதிலாக பணம் வழங்குவதை அறிமுகப்படுத்தியது. ஆனால் முன் ஆய்வுகள், முறையான தயாரிப்பு அல்லது மக்களின் ஆதரவு என்பன இல்லாததால் அது மோசமான தோல்வியடைந்தது.

(2)இன்னும் நடைமுறையில் உள்ள இதேபோன்ற ஒரு கொள்கைதான், சில அமெரிக்கன் தனியார் பள்ளிகளில் நவ தாராளவாத பரீட்சார்த்தமாக நடத்தப்பட்டதைப் பின்பற்றி பாடசாலைச் சீருடைக்குப் பதிலாக பண வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கை, இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தும்போது கூட முன் ஆய்வுகள், முறையான ஆராய்ச்சி அல்லது இந்த சந்தைப் பொறிமுறையை பாராட்டுவதற்கு உகந்த மக்களின் கல்வியறிவு என்பன இருக்கவில்லை.

முறையாகவும் படிப்படியாகவும் நடைமுறைப்படுத்தப் பட்டால், சுதந்திர வர்த்தகம் ஒரு மோசமான யோசனையாக இருக்காது. ஹென்றி ஜோர்ஜ் ( பாதுகாப்பு அல்லது சுதந்திர வர்த்தகம்1886) வாதிடுவது போல, நடுத்தர மக்கள் மட்டுமன்றி உழைக்கும் மக்களும் இதனால் நன்மையடையலாம். எனினும் முதலாவது அக்கறை மக்கள் மற்றம் அவர்களின் நல்வாழ்வு என்பதாகவே இருக்கவேண்டும். சுதந்திர வர்த்தகத்தின் இறக்குமதிப் பக்கம் சுலபமானது ஆனால் ஏற்றுமதிப் பக்கம் கடினமானது. வெறுமே கோஷம் போடுவது ஏற்றுமதியை ஊக்குவிக்காது. ஏற்றுமதிக்கு முன்னதாகவே உற்பத்தியும் மற்றும் தொழிற்சாலைகளும் அங்கிருக்க வேண்டும். இதுதான் இன்று ஸ்ரீலங்காவில் பின்தங்கியதாக உள்ளது மற்றும் தற்போதைய அரசாங்கமோ அல்லது அதற்கு முன்பிருந்த அரசாங்கமோ இந்த நிலமையை மேம்படுத்த அதிகமாக எதையும் செய்யவில்லை. தற்போதுள்ள சாதகமற்ற சர்வதேசச் சூழலில் புதிய சுதந்திர வர்த்தக முயற்சிகள் அல்லது உடன்படிக்கைகள் பற்றிப் பேசுவதே பைத்தியக்காரத்தனம். தற்போது தேசிய பொருளாதார ஒருங்கிணைப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

சில முடிவுகள்

1977 முதல் இந்தியாவுக்கு முன்னால் ஸ்ரீலங்காவின் தாராளமயமான வாத்தகம்  நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது நிச்சயமாக சில ஏற்ற இறக்கங்களும் உள்ளன. எனினும் நாடு இன்னமும் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாறவில்லை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி என்பனவற்றுக்கு இடையில்;;;;; உள்ள பெரிய வித்தியாசத்தை கருத்தில் கொண்டால், ஏற்றுமதிப் பொருளாதாரத்தைவிட ஸ்ரீலங்காவை இறக்குமதிப் பொருளாதார நாடு எனக் கருதுவதே நியாயமானதாகும்.

நிச்சயமாக சுற்றுலாத்துறையை ஒரு ஏற்றுமதித் தொழில் எனப் பெயரிட்டால், இந்த நிலை அல்லது படம் ஓரளவு மேம்படுத்தப்படலாம். எனினும் வெறும் ஒப்பனை மாற்றங்களின் மூலம் இதைச் செய்ய முடியாது, அவசியமானது  என்னவென்றால் சுற்றுலாத்துறையை நாட்டின் முக்கிய தொழிற்றுறையாக மேம்படுத்த வேண்டும். இந்த நோக்கத்துக்கு கூட போக்குவரத்து, வங்கி வசதிகள், சுற்றுலாத் தலங்கள், மக்களின் சம்மதம் போன்ற சில குறிப்பிட்ட உள்ளக நிலைமைகள் மேம்படுத்தப்பட வேண்டும். சுவிற்சலாந்து என்கிற நாடு ஒரு அபிவிருத்தியடைந்த பொருளாதார நாடாக மாறியது பிரதானமாகவும் சுற்றுலா மற்றும் வங்கித் தொழில் மூலமாகவும்தான். சுற்றுலாத் தொழிலை புதிய உயரங்களில் முன்னேற்றுவதற்கு, நாட்டுக்கு அதன் சொந்த வீதிகளையும் மற்றும் விமானசேவை முயற்சிகளையும் அபிவருத்தி; செய்யவேண்டி ஏற்படலாம்.

ஸ்ரீலங்காவை மாற்றியமைப்பதில் தோல்வி ஏற்பட்டுள்ளது, அடிப்படையில் தவறான முன்னுரிமைகள் மற்றும் பொருளாதார அடிப்படையில் உள்ள முரண்பாடுகள் காரணமாகவே. தாராள இறக்குமதி சில்லறை வாத்தகத்தை விரிவாக்க உதவியுள்ளன, ஆனால் அதில் நாங்கள் விவாதிப்பதின்படி எதிர்மறை விளைவுகளும் உள்ளன. வர்த்தகப் பற்றாக்குறையை ஒரு நாடு நீண்ட காலத்துக்கு அலட்சியப்படுத்தக்கூடிய ஒன்று அல்ல. முதன் முதலில் திறந்தபோது வியட்னாம் கூட வர்த்தகப் பற்றாக்குறையை எதிர்கொண்டது, ஆனால் தேசிய பொருளாதாரம் நல்ல அடிச்சுவட்டில் சென்றதால், விரைவிலேயே நிலமை மாறியது மற்றும் ஏற்றுமதியும் விருத்தியடைந்தது.

ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாடு, விவசாயத் துறையை புறக்கணித்ததே ஆகும், அதில் சனத்தொகையில் 30 விகிதமானவர்கள் தங்கியுள்ளார்கள், ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான அதன் பங்களிப்பு 10 விகிதத்திலும் குறைவு. அரசாங்கத்துக்கு குறைவான வருவாய் கிடைப்பதற்கு இதுவும் ஒரு காரணம், வரவு செலவு திட்டத்தின் பற்றாக்குறைக்கு  இது ஒரு மூலைக்கல்லாக உள்ளது. உணவுத் தொழில்களும் ஊக்குவிக்கப்பட வேண்டும் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் இயற்கை உணவு என்பனவற்றின் ஏற்றுதி  ஒரு இலாபகரமான தொழிலாக உள்ளது. இந்த தேவைகள் அனைத்தையும் கருத்தில்கொண்டு, அரசாங்க கொள்கை முயற்சிகளை மறுசீரமைப்பு செய்தால், வெறும் தாராளமயமாக்கலுக்கு மாறாக ஒழுங்குமயமாக்கலே சரியான அணுகுமுறை என்பது தெளிவாகும்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்