Theneehead-1

Vol: 14                                                                                                                                                23.12.2016

 டில்லி அதிரடி: அ.தி.மு.க.,வில் அதிர்வு


மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை, ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வில், அதிர்வை sasikala1ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின், தமிழக அரசும், அ.தி.மு.க.,வும் கலகலத்துள்ளன. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், முதல்வராக பன்னீர்செல்வத்தை, ஒருமனதாக தேர்வு செய்தனர்; அவரும் பதவியேற்றார்.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு, சசிகலாவை, அவரது குடும்பத்தினர் முன்னிறுத்தினர். அவருக்கு, கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர். முதல்வர் பன்னீர்செல்வமும் ஆதரவு தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா வருவதை விரும்பாத மத்திய அரசு, அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.

பன்னீர்செல்வம் அல்லது தம்பிதுரையை, அந்த பதவிக்கு கொண்டு வர, காய் நகர்த்துகிறது. இதை, சசிகலா குடும்பத்தினர் ஏற்கவில்லை.மேலும் தாமதமானால், பதவி பறிபோய் விடும் எனக் கருதிய, சசிகலா குடும்பத்தினர், அதற்கான பணிகளைதுரிதப்படுத்தினர்.

மாவட்ட செயலர்களை அழைத்து பேசி, 29ம் தேதி, பொதுக்குழுவை கூட்ட உத்தரவிட்டு உள்ளனர்.அதன் தொடர்ச்சியாக, கட்சி, ஆட்சி அனைத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.அவர்களின் எண்ணத்திற்கேற்ப, தமிழக அமைச்சர் கள், அ.தி.மு.க., பொதுச் செயலர் மற்றும் முதல்வர் பதவியை, சசிகலா ஏற்க வேண்டும் என, வெளிப்படையாக வலியுறுத்த துவங்கினர்.

இந்நிலையில், ராமமோகன ராவ் வீட்டில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியதன் மூலம், மத்திய அரசு, சசிகலா குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்களுக்கு, மறைமுகஎச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், அ.தி.மு.க., தலைமை வட்டாரம், கடும் அதிர்ச்சியில் உள்ளது.மத்திய அரசின் முடிவுக்கு உடன்படுவதா அல்லது மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து நிற்பதா என தெரியாமல், குழப்பம் அடைந்து உள்ளனர்.

dantv