Theneehead-1

                            Vol:17                                                                                                  26.06.2018

பச்சிலைப்பள்ளி விசேட சபை அமர்வில் எதிர்தரப்பு தரப்பு உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் விசேட சபை அமர்வpachchilaipalliை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் கூட்டிய போதும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளாமையினால்  பெரும்பான்மையின்றி சபையின்  கூட்டத்தை நடத்த முடியாது 11 மணிக்கு அமர்வு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இது  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

சில விசேட காரணங்களுக்காக பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் விசேட அமர்வினை தவிசாளர்   சுப்பிரமணியம் சுரேன் கூட்டுவதற்கு தீர்மானித்து அதற்கான அழைப்பினை சபையின் நிர்வாக ஒழுங்கு நடவடிக்கைக்கு புறம்பாக தொலைபேசி அழைப்பின் மூலம் சபை உறுப்பினர்களுக்கு விடுந்திருந்தார். எழுத்து மூலமான அழைப்பு வழங்கப்படவில்லை என்பதோடு, என்ன காரணத்திற்காக விசேட சபை அமர்வு கூட்டப்பட்டது, நிகழ்ச்சி நிரல் என எதுவும் இன்றி விசேட அமர்வுக்கு வருமாறு தொலைபேசி மூலம் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து  எதிர்தரப்பு உறுப்பினர்கள் இன்றைய சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை. வியாபார நிலையங்களுக்கும் ஏனைய தேவைகளுக்கும்  பிரதேச சபையின் பணியாளர்களை கொண்டு கடிதங்களை விநியோகி்த்து வரும்  பிரதேச சபையின் நிர்வாகம் தங்களுக்கும் அவ்வாறு செய்யாது தொலைபேசி  மூலம் கூட்டத்திற்கு வருமாறு ஒரு வரியில் அறிவிப்பது முறையற்ற நடவடிக்கை எனத் தெரிவித்து 13 உறுப்பினர்களை கொண்ட சபையில் 7 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இதனால் ஆளும் கட்சியின் ஆறு உறுப்பினர்கள்  கலந்துகொள்ள சபை 9.45 மணிக்கு ஆரம்பித்து 11 மணிக்கு பெரும்பான்மை இன்மையால்  நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்தோடு தவிசாளரின் தன்னிச்சையான நடவடிக்கைக்கும் எதிர்தரப்பு உறுப்பினர்கள் தங்களின் எதிர்ப்பினையும் தெரிவித்துள்ளனர். பெரும்பான்மை இல்லாத ஆளும் கட்சியான தமிழரசு கட்சி  தங்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்துவிட்டு தற்போது தன்னிச்சையான நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றது எனவும் எதிர்தரப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இன்றைய அமர்வில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சுயேச்சைக் குழு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த ஏழு உறுப்பினர்களே தங்களின் எதிர்ப்பினை தெரிவித்து கலந்துகொள்ளவில்லை