Theneehead-1

                            Vol:17                                                                                                  26.06.2018

கார்த்திகேயன்'- எனது கதாநாயன்.   ( 25.6.19-10.9.1977),

(எனது எழுத்துக்களை மக்களின் நலத்திற்காக அர்ப்பணிக்கச் செய்த திரு.மு.கார்த்திகேசன் 'மாஸ்டர்' நினைவாக)

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-25.6.18

(1)

மேற்குலகில் எழுதப்பட்டுப்,பிரசுரிக்கப்பட்ட முதலாவது தமிழ் நாவல் 'உலகமெல்லாம் வியாபாரிகள்' என்ற எனது முதலாவது நாவல்,1978ம் ஆண்டு 'லண்டன் முரசு' பத்திரிகையில் வநkarthigeyan_M்தது. 1991ம் ஆண்டு புத்தக வடிவில் தமிழ் இலக்கியத்தின் ஆளுமைகளுள் ஒருத்தரான டாக்டர் சிவசேகரம் அவர்கள் முன் வெளியீடு செய்யப்பட்டது. 

இந்த நாவல்,பொது மக்களை மேம்படுத்தவேண்டிய மகத்தான அரசியற் பணியை, அரசியல்வாதிகள் என்னவென்று தங்கள் சுயலாபத்திற்கான 'வியாபாரமாக்கி' விட்டார்கள் என்பதைச் சொல்லும் நாவல்.அந்தக் கதையின் கதாநாயகன்,'கார்த்திகேயன்'. ஏன் நான் 'கார்த்திகேயன்' என்ற பெயரைத் தோர்ந்தெடுத்தேன் என்பது பெரிய கதை. அதன் காரணம்,'கார்த்திகேயன்' என்ற பெயர் 'தமிழ்க்கடவுள்'முருகளின் பெயர் என்பதல்ல. கார்த்திகேயன் கடவுள் தனது, 'ஆறுமுகங்களுடன்' அசுரர்களை அழித்துத் தேவர்களைக் காப்பாற்றினான் என்ற நம்பிக்கையுமல்ல. 

மனித நேயத்தை முன்னெடுத்த ஒரு கம்யுனிஸ்ட மாஸ்டர்:;:

கார்த்திகேசன் மாஸ்டர்( 25.6.19-10.9.1977),நான் முன் பின் பார்த்திராத ஒரு சமூகநலவாதி. 'கார்த்திகேசன் மாஸ்டர்'என்ற அந்த மாபெரும் மனிதரின் மனித மேம்;பாட்டுக்காகச் செய்த பணிகளை,திரு பாலசுப்பிரமணியம் மூலம்,1970ம் ஆண்டுகளிற் தெரிந்து கொண்டேன். சாதி வெறி,வர்க்க அகங்காரம் பரவியிருந்து வெள்ளாளரல்லாதோர் படுமோசமாக அடக்கப் பட்டிருந்த அந்த காலகட்டத்தில்,யாழ்ப்பாணத்தின் சமுகநிலை மாற்றத்திற்கு உழைத்த 'கார்திகேசு' மாஸ்டரின் பணிகளைக் கேள்விப் பட்டேன்.

சாதித் திமிர் கொண்ட ஆறுமுகநாவலரால் ஸ்தாபிக்கப் பட்ட வண்ணார்பண்ணை இந்துக் கல்லூரியில், ஆசிரியராகப் பணியாற்றியவர்.'சாதி சமயம் என்பன ஒட்டுமொத்த மக்களின் உயர்ச்சியையும் பாதிக்கின்றன,அவைகளை உணராத வரைக்கும்; ஒரு சமுதாயம் முன்னேறமுடியாது' என்ற கருத்தைக்கொண்ட 'கம்யுனிஸ்ட்; மாஸ்டர்' ஆசிரியராகப் பணியாற்றி பல்நூறு மாணவர்களின் மூலம் பரந்த கொள்கைகள் பரவக்காரணமாக இருந்தவர் என்றும் கேள்விப் பட்டேன்.arumuganavalar

மிகவும் இறுக்கமான சமூகக் கட்டுமானங்களைக் கொண்ட வடபுலத்தில் கம்யுனிஸ்ட கட்சியை ஸ்தாபித்து அதன் முழுநேரப் பொறுப்பாளரக இருந்துகொண்டு,ஆசிரியராகவுமிருந்து  கடுமையான பணிகளைச் செய்தவர். மக்களின் ஒடுக்கு முறைகளை உடைத்தெறிய இடைவிடாத வகுப்புபகளை எடுத்தவர். வடபுலத்தில் மூலை முடுக்கெல்லாம் அடக்குப் பட்ட சமுதாயம் விழித்தெழக் கம்யுனிஸ்ட் கட்சிக் கிளைகளைத் திறந்து பல பணிகளைச் செய்தவர். 

மனித நேயத்தில்அப்படியான அன்பும்,ஒட்டுமொத்த மக்களின் மேன்மைக்கும் உழைத்த அந்த அயராத உழைப்பாளி,கடமையுணர்ச்சியில் அப்பழுக்கற்ற பணி செய்த ஆசிரியன், தனது பல பொதுப் பணிகளுக்குமிடையில் ஒரு அன்பான கணவனாக, தந்தையாக வாழ்ந்து பொது வாழ்க்கையிலும் தனிப் பட்ட வாழ்க்கையிலும் பல அரிய நற்பண்புகளால் அன்று பலராலும் மெச்சப் பட்டவர்.அவரின் பெயரை, எனது நாவலில் வரும் முற்போக்குவாத கதாநாயகனுக்கு வழங்கினேன். எனது நாவலில் வரும் 'கார்த்திகேயன்'இலங்கையில் வாழும் தமிழர்களின் ஒட்டுமொத்த சமூக விடுதலைக்காகப் போராடும் தமிழ் மாணவனாகும். 

எனது நாவலின் கதாநாயகனுக்குக் கார்த்திகேசன் மாஸ்டரின் பெயரை ஏன்வைத்தேன் என்றால்,யாழ்ப்பாணத்தில் 1947-77 வரை, ஒட்டுமொத்த தமிழ் மக்களின்சமூகமாற்றங்களுக்காகப் பாடுபட்ட,'கார்த்திகேசன்; மாஸ்டரின்' சிந்தனைக்கு சிரஞ்சீவித் தன்மை கொடுக்கவேண்டும் என்ற எனது ஆவலின் வெளிப்பாடாகும்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரி 'கார்த்திகேசு மாஸ்டரைப்;' பற்றித் தெரிந்து கொண்டபோது,அவரின் சிந்தனையைச் செம்மைப்படுத்திய பல சரித்திரத் தடயங்கள் கண்களிற் பட்டன.இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தையண்டிய கால கட்டத்தில்,வடபுலத்தில் இடதுசாரிக் கொள்கைகளைப் பரப்பி,மக்களிடம் சமத்துவ உணர்வைத் தூண்டியவர்களில், திரு மு.கார்த்திகேசன் மாஸ்டர்,எம்.சி சுப்பிரமணியம்,டாக்டர் சு.வே சீனிவாசகம்,ஆகியோர் இணைந்து செயல் பட்டனர் என்றும்,தோழர் இராமசாமி ஐயர்,நீர்வேலி.எஸ்.கே.கந்தையாவும் இணைந்து பொதுவுடமைத்தத்துவவாதி,கார்ல் மார்க்ஸின்'கம்யூனிஸ்ட் அறிக்கையைத' தமிழில் 1948ம் ஆண்டு மொழிபெயர்த்தார்கள் என்றும் ஆவணங்கள் சொல்கின்றன.
 
1950ம் 60ம் ஆண்டுகளில்,இன்று தொடரும் அரசியற் சிக்கல்களுக்கான பல மாற்றங்கள் இலங்கையில் பல இடங்களிலும் நடந்தன. அன்று யாழ்ப்பாணத்தில் நடந்த மாற்றங்கள்தான் இன்று தமிழர்கள் வாழும்நிலைக்கும் அரசியல் மாற்றங்களுக்கும் முன்னோடியாகவிருந்தன.

அவரின் மாணவர்களிலொருவரான.திரு.ரி.சிறினிவாசனின் கருத்துப்படி,மார்த்திகேசன் மாஸ்டர் அவர்கள்.'ஒரு ஆசிரியர்,அதிபர்,சமூகசீர்திருத்தவாதி,மனிதநேயவாதி,கம்யூனிஸ்ட்,தோழர்,சினேகிதன்,சக உத்தியோகத்தன், இலக்கியவாதி, பிரமாண்டமான செயற்பாடுகளை ஒழுங்குசெய்பவர், நாடகவாதி, விமர்சகர், கல்வியாளன்,தீர்க்தரிசி .நாத்திகன்,என்று பல்முகங்களைக் கொண்ட ஆளுமையாளன்'.அவரால் வடஇலங்கையில் நடந்த மாற்றங்களை அறிவது இளம் தலைமுறைக்கு மிகவும் பிரயோசனமாகவிருக்கும் என்பதால் சில விடயங்களை இங்கு பதிவிடுகிறேன்.

 
இலங்கை -அந்நியர் ஆட்சியில் 1948ல்.இலங்கை சுதந்திரம் பெற்றபோது ,இலங்கையின் கல்வி,பொருளாதாரம் என்பன ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் பிடியிலிருந்தது.  குறிப்பாக யாழ்ப்பாணத்தில்,அந்த நிலவரம், அந்நியர் ஆட்சியில் அவர்கள் கொடுத்த கல்விiயால் பயன் பெற்ற 'மேட்டுக்குடி வெள்ளாரிடம்' மட்டுமிருந்தது. இந்நிலமையின் சரித்திரத்தைத் திரும்பிப் பார்த்தால்,1832ம் ஆண்டு பிரித்தானியர் தாங்கள் ஆண்ட இலங்கையின் விபரங்களிலிருந்து தெரிய வரும். 'திரு.றோபோர்ட் மொங்கோமரி மார்ட்டின்' என்வர் எழுதிய 'பிரித்தானிய காலனித்துவ நாடுகளின் சரித்திரம்' என்ற அந்த முதலாவது அறிக்கையில் இலங்கை மக்கள் அத்தனைபேரும் ' கறுப்பு' மக்களாகக் கணிக்கப் பட்டிருக்கிறார்கள்.சிங்கள்,தமிழ்,முஸ்லிம் என்ற வித்தியாசம் எதுவும் கிடையாது. வெள்ளையின் பிரித்தானிய பார்வையில் இலங்கை மக்கள் அத்தனை பேரும்'கறுப்பர்களாகும்'. British-Ceylon

இதைப் பற்றிய மேலுமுள்ள சரித்திரத் தடயம் என்னவென்றால்,1658ம் ஆண்டு,ஒல்லாந்தரிடமிருந்த யாழ்ப்பாணம் டச்சுக்காரர் கைகளுக்கு மாறியது.அவர்கள் அப்போது யாழ்ப்பாண சமூக வழக்கத்திலிருந்த, 'குடிமை, அடிமை' முறைகளை டச்சுக்காரர் விளங்கிக் கொள்ளவில்லை. அத்துடன்'தங்களின் ஆளுமையைத்'; தக்க வைக்க 'வெள்ளாராரின்'உதவி இன்றியமையாததாகவிருந்தது.தங்கள் நிர்வாகத்தை அன்றிருந்த சமூகக் கட்டுமானங்களையொட்டி வரையிறுத்தார்கள். அதையொட்டியே ஆங்கிலேயரும் எல்லோரையும்' கறுப்பர்களாகக்' 1832ல் கணக்கெடுத்தார்கள்.

ஆங்கிலேயர் இலங்கை முழுவதையும் 1815ல் தங்கள் ஆதிக்கத்திற்குக் கொண்டுவரமுதலே,1813ம் ஆண்டு தொடக்கம் போர்த்துக்கேய,டச்சுக் கத்தோலிக்கபாதிரிகளால், பாடசாலைகள் பரந்த விதத்தில் யாழ்ப்பாணத்திலும்,ஒருசிறிய அளவில் மட்டக்களப்பிலும் ஆரம்பிக்கப்பட்டன.

அதைப் பாவித்து, இலங்கையில் 'வெள்ளாளர்கள்' கிறிஸ்தவர்களாகிப் படிப்பில் முன்னேறினார்கள்.1815ம் ஆண்டு இலங்கை முழுதும் ஆங்கிலேயர் ஆளுமைக்குள் வந்தது. டச்சுக்காரரின் கத்தோலிக்க சமயத்துடன் ஆங்கிலேயரின் 'புரட்டஸ்டன்ட்'சமயமும் இலங்கையில் முன்னெடுக்கப் பட்டது.1820ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தமிழ் அச்சகம் உண்டானது.

1829ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்கர்களுக்கும்,புதிதாய் வந்த புரட்டஸ்டன்ட் சமயக்காரருக்குமிடையில் சண்டை வந்தது. இந்தச் சண்டை பிரித்தானிய நிர்வாகம்'தாழ்த்தப்பட்ட' மக்களைத் தங்கள் பாடசாலைகளிலோ அல்லது நிர்வாகத்திலோ சேர்த்ததினால் வந்ததால் என்று கூறப்படுகிறது.

1832ம் ஆண்டு,யாழ்ப்பாணத்திலிருந்த 'கறுப்பர்கள்' தொகை-145638 அவர்களிடம் அடிமையாகவிருந்த 'கறுபர்களின்'(தமிழர்கள்) தொகை: 20483 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது அடிமையாக இருந்தவர்கள் சாதி அடிப்படையில்'வெள்ளாள சாதியினர்க்கு கொத்தடிமையாக விருந்தவரர்களாக விருக்கலாம்.

அக்கால கட்டத்தில் பிரித்தானியர்மட்டுமல்லாது,மற்றைய மேற்கத்திய ஆதிக்க சக்திகளான ஸ்பானிஸ்,போர்த்துக்கேயர் போன்றோரும்,தங்களின் காலனித்துவ நாடுகளில் அடிமைகளை வைத்திருந்தார்கள்.
இங்கிலாந்தில் மனித உரிமைவாதிகளின்'அடிமைத்தனத்திற்கு எதிரான' போராட்டங்களால் அடிமைத்தளைகள் அகற்றும் சட்டம் 1833ம் ஆண்டு கொண்டு வரப் பட்டது. மனிதர்களை வாங்குவதும் விற்பதும் சட்ட விரோதமாக்கப் பட்டது.

அக்கால கட்டத்தில் பிரித்தானியாவின் பிரபல எழுத்தாளர் சார்ள்ஸ் டிக்கின்ஸ்(1812-1870),சமுதாய மாற்றத்தை அடிப்படையாக முக்கியமாக ஒடுக்கப்பட்ட குழந்தைகள், மக்கள் பற்றிப்; பல நாவல்கனை எழுதிக் கொண்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, பிரித்தானிய காலனித்துவ நாடுகளிலும் சமுக மாற்றம், கல்வி மேம்பாடு போன்ற விடயங்கள் முன்னெடுக்கப் பட்டன. அக்கால கட்டத்தில் காலனித்துவ நாடுகளின் கல்வி கிறிஸ்தவ பாதிரிமாரின் கையிலிருந்தது. அதைப் பாவித்து, இலங்கையில் 'வெள்ளாளர்கள்' கிறிஸ்தவர்களாகிப் படிப்பில் முன்னேறினார்கள். யாழ்ப்பாணத் தமிழர்கள் தமிழில் 'பைபிளைப்'படிக்கவேண்டும் என்று,ஆறுமுகநாவர் பைபிளைத் தமிழாக்கம் செய்தார்.

1847ல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபராகவிருந்த பீட்டர் பேர்சிவல் தாழ்த்தப்பட்ட சிறுவர்களைப் பாடசாலைக்குச் சேர்த்தபோது ஆறுமுகநாவலர் அதை எதிர்த்து வெளியேறி வண்ணார் பண்ணையில்' வேளாளருக்கு' மட்டும் பாடசாலையையை அமைத்தார்.

1871ல் யாழ்ப்பாணத்தில் இன்னுமொரு சாதிக் கலவரம் வந்தது. ஆறுமுகநாவலர், 'வேளாளரின் நலம் கருதி,;'சைவபரிபாலன சபையை'அமைத்தார். ஒடுக்கப் பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் மிகவும் அடிமட்டத்திலிருந்தது.Tamil women 1876

1876ல் யாழ்ப்பாணத்தில் பஞ்சம் வந்தபோது,ஆறுமுகநாவலர் ;வேளார்களுக்கு மட்டும்' உணவு தேடிக் கொடுத்தார்.'படித்தவர்களுக்கு' மட்டுமான அதிகாரத்தால் 1887ல் சேர் பொன் இராமநாதன்,பிரித்தானிய அரசின் 'ஒட்டுமொத்தமான இலங்கைக்குமான'பிரதிநிதியான பெரிய பதவிக்கு வந்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையில் எந்த மாற்றமும் வரவில்லை.1907ம் ஆண்டு, பி. அருணாசலம்,சாதி முறையின் கட்டுமானத்தின் தேவை பற்றிப் பேசினார்.

அரச நிர்வாகத்தில் 'மக்கள் குழுக்களின் பிரதிநிதிகள்' மையப்படுத்த வேண்டும் என்ற பிரித்தானியக் கொள்கையை,'மேற்குடியினரால்,' முன்னெடுக்கப்பட்ட சபை நிராகரித்தது. 1921ம் ஆண்டு,'தமிழ் மஹாஜன சபை' உண்டாக்கப்பட்டு,அதன் வேண்டுகோளாக 50:50 பிரதிநிதித்துவம் முன் வைக்கப் பட்டது. 1923ம் ஆண்டு,திரு.பி.அருணாச்சலம் 'இலங்கை தமிழ் மக்கள் சங்கத்தை'(மேற்குடியினர் மட்டும்) உண்டாக்கினார்.

அந்த ஆண்டு சுதுமலையில் சாதிக்கலவரம் வெடித்தது.

தொடரும்