Theneehead-1

   Vol:17                                                                                                                               26.10.2018

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஆபத்தானது - ஜே.வி.பி எச்சரிக்கை

"ஐ.நா சபையின் மனித உரிமைகள் பேரவையை ஏமாற்றி மீண்டும் 1979 ஆம் ஆண்டை நோக்கி பயணிக்கும் புதிய பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை ஏற்றுகொள்ள முடியாது" என plfபாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை  முன்னணியின் பிரசார செயலாளருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்கத்தால் புதிதாக கொண்டுவர எதிர்பார்க்கப்படும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று  இடம்பெற்ற போதே விஜித ஹேரத்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய விஜித ஹேரத்,"பயங்கரவாததடைச்சட்டத்தை ஒழிப்பதாக கூறி பழைய சட்டத்தில் உள்ள ஒரு சில ஏற்பாடுகளை நீக்கி அதற்கு மாறாக புதிய பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டத்தில் மேலும் பயங்கரவாதத்தினை உருவாக்கும் வகையிலும் மக்களின் உரிமைகளுக்கு பாரதூரமான பாதிப்பினை ஏற்படுத்தி மனித உரிமைகள் பேரவையை ஏமாற்றும் வகையிலான சட்ட மூலத்தினையே அரசாங்கம் தயார் செய்துள்ளது.

புதிதாக கொண்டுவரப்போவதில் பயங்கரவாத்துக்கு எதிரான மாற்றுச்சட்டதின் கீழ் நிரபராதி ஒருவரையும் குற்றவாளியாக்கும் வகையிலான சட்ட ஏற்பாடுகள் இதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள பிரச்சினைகளையும் நாட்டின் பாதுகாப்பை பேணுவதற்கு தற்காலத்தில் நடைமுறையில் உள்ள சட்ட நடைமுறைகள் போதுமானதாகும்.

இதற்கென பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டுவருவதற்கோ மனித உரிமைகள் பேரவை கட்டளையிடும் வரை காத்திருக்கவோ வேண்டி அவசியமில்லை. மீண்டும் நாட்டை 1979 ஆம் ஆண்டை நோக்கிச்செல்ல இடமளிக்பேவதில்லை என்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்படவேணடும்." என்று குறிப்பிட்டார்.