Theneehead-1

Vol: 14                                                                                                                                                26.12.2016

இஸ்லாம் பற்றிய ட்ரம்ப்பின் தவறான கண்ணோட்டம்

                                        ஜோநாதன் பவர்

டொனால்ட் ட்ரம்ப்பின் ஒரு நிலையான அச்சம்,; மத்திய கிழக்கில் அதிகாரத்தtrup syriaுக்கு வரப்போகும் சர்வாதிகாரிகளின் வழித்தோன்றல்கள் இஸ்லாமிய போராளிகளாக இருப்பார்கள், அவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை ஒன்றுமில்லாமல் நிறுத்தப்பட்டுவிடும் என்பதாகும். ஒருமுறை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர்களை அணுசக்தி மூலம் அழித்துவிடப் போவதாக அவர் எச்சரித்திருந்தார். மதச்சார்பற்ற எண்ணம் கொண்ட ஜனாதிபதி பசார் அல் அசாத் சிரியாவில் சிவில் யுத்தத்தில் வெல்லக்கூடியதாக தோன்றுகிறபோதிலும் இஸ்லாமியவாதிகள் அவருக்கு நெருக்கமாக இருந்து அவரை இயக்குவார்கள். வன்முறைகளைச் சார்ந்திருப்பதற்கு இஸ்லாமியவாதிகள் குரான் மற்றும் ஹதீத்தை காரணம்காட்டி அவர்களது வன்முறைகளை நியாயப்படுத்துகிறார்கள். அவர்களது விளக்கத்துக்கு நெருக்கமான வசனங்கள் உண்மையில் அவை இரண்டிலும் உள்ளன. இந்தப் பந்திகளை அவர்கள் பெரிதுபடுத்தினாலும் அதிலுள்ள ஏனைய மிகவும் அமைதியான வழிகளை அவர்கள் புறக்கணிக்கிறார்கள், உண்மையில் இஸ்லாத்தில் கடுமையான வழிகளுக்கான ஒரு மரபும் உள்ளது. இருப்பினும் முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் இன்று அதைப் பின்பற்றுவது கிடையாது.

ஹ}வர்ட் பேராசிரியர் ஸ்ரீவன் பிங்கர் வன்முறைகள் பற்றிய அவரது ஞ}பகார்த்தமான ஆய்வின்படி எழுதிய “எங்கள் இயல்பின் சிறந்த தேவதூதர்கள்” என்கிற நூலில் எழுதியிருப்பது, “அநேக முஸ்லிம் நாடு;களின் சட்டங்கள் மற்றும் அநேக நடவடிக்கைகள் மானிடத்தின் புரட்சியை தவற விட்டுவிட்டதைப் போல தோன்றுகிறது” என்று. சர்வதேச மன்னிப்புச் சபையின் கூற்றுப்படி முக்கால்வாசி முஸ்லிம் நாடுகள் அவர்களது குற்றவாளிகளை தூக்கிலிடுகின்றன மற்றும் விபச்சாரம் அங்கு தண்டனைக்குரிய பெரும் குற்றமாகும். அடிமைத்தனத்தை ஒழிப்பது இறுதியாக நடைபெற்றது முஸ்லிம் நாடுகளில்தான் மற்றும் பெரும்பான்மையான நாடுகளில் தொடர்ந்து மனிதக் கடத்தல்களாக மாறிக்கொண்டிருப்பவர்கள் முஸ்லிம்கள்தான். (எனினும் அவற்றை சமப்படுத்தும் விதத்தில் கொலைகள் மற்றும் குற்றங்கள் என்பனவற்றின் விகிதங்கள் கிறிஸ்தவ நாடுகள் என்று அழைக்கப் படுபவற்றை விட முஸ்லிம் நாடுகளில் குறைவாக உள்ளன.)

வரலாற்றாசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து விரல் சுட்டுவது ஷரியா சட்டத்தின்படி இடம்பெறும் தண்டனைகள் மற்றும் கோரிக்கைகள் பற்றியே. முந்தைய மதங்களான கிறீஸ்தவம், பௌத்தம், மற்றும ;கன்பூசியானிசம் என்பனவற்றின் செய்திகளை மீறும் வகையில், போர்வெறித்தனங்கள் பற்றியும் மற்றும் இஸ்லாம் தொடக்கம் முதலே ஒரு போர் வீரனைப் போன்ற மதம் என்பது பற்றியும் குரானில் பத்திகள் உண்டு. விமர்சகர்கள் மேலும் சுட்டிக்காட்டுவது விஞ்ஞ}னம், மருத்துவம், வானியல், கணிதம் மற்றும் கட்டிடக்கலை என்பனவற்றைக் காட்டிலும் இஸ்லாம் மிகவும் முந்தையது என்று. வெகு சமீபத்தில் மட்டும்தான் சில இஸ்லாமிய நாடுகள் புனிதம் மற்றும் மதச்சார்பின்மை என்பனவற்றுக்கு இடையே உள்ள வேறுபாட்டை கண்டறிந்தன.

ஹ}வர்ட் அரசியல் விஞ்ஞ}னி சாமுவேல் ஹட்டிங்டன் தனது அதிகம் விற்பனையான புத்தகத்தில் “ஈரோஏசியாவில் நாகரீகங்கள் இடையே பெரிதும் வரலாற்று தவறான வரிகள் மீண்டும் ஒருமுறை ஒளிர்கின்றன என எழுதியுள்ளார். இது குறிப்பாக உண்மையாக இருப்பது, பிறை வடிவ இஸ்லாமிய அடையாளம் கொண்ட நாடுகளான ஆபிரிக்கா முதல் மத்திய ஆசியாவரையான நாடுகளின் எல்லைகளில். அனால் அத்தகைய விமர்சகர்கள் கவனிக்காமல் விட்டது என்னவென்றால்  பெரும்பாலான விடயங்களில் இத்தகைய  ஊக்கமுள்ள முஸ்லிம்களின் சிறுபான்மை இயக்கங்கள் (அல் கைதா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் என்பன உட்பட) மற்றும் அவற்றின் வன்முறைகளை அதிகளவிலான பெரும்பான்மையான முஸ்லிம்கள் நிராகரித்துள்ளார்கள் என்பதை. உண்மையில் இஸ்லாம் தாரளமயமாவதுடன் நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே அதன் கட்டுப்பாடுகளை தளர்த்தியும் வருகிறது.

மெரிலான்ட் பல்கலைக்கழக குழு ஒன்று. வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலுள்ள 102 முஸ்லிம் அமைப்புகளின் இலக்குகளை ஆராய்ந்து கண்டுபிடித்தது 1985 மற்றும் 2004 க்கு இடையே வன்முறைகளில் ஈடுபடும் அமைப்புகளின் விகிதம் 54 விகதத்தில் இருந்து 14 விகிதமாக குறைவடைந்துள்ளது என்பதை. வன்முறையற்ற எதிர்ப்புகளில் ஈடுபடுவோர் விகிதம் மும்மடங்காக உள்ளதுடன் தேர்தல் ரீதியான அரசியலில் ஈடுபடுவோர் விகிதம் இரட்டிப்பாக உள்ளது. அராபிய வசந்தம் துனிசியா,எகிப்து, ஓமான், ஜோர்தான், யேமன்,மற்றும் மொராக்கோ  ஆகிய நாடுகளில மலர்ந்தாலும் கூட பெரும்பான்மையான விடயங்களில் அது தோல்வியடைந்ததற்கு   பெருமளவு வன்முறையற்ற போராட்டங்களே அதற்கு காரணம். நாங்கள் வரலாற்றில் இன்னும் பின்னோக்கிப் போனால், அவற்றில் பெரும்பான்மையானவை சாத்தியமானது  மேற்கத்தைய அவதானிகள் ஒன்றில் அவற்றை புறக்கணித்தது அல்லது அதை அறியாமலிருந்தது என்பனவற்றின் காரணத்தினால்தான்.

1187ல் சலாதீனின் ஜெருசலேம் வெற்றியினை நினைவு கூருங்கள், அடுத்த 700 வருடங்கள் ஜெருசலேம் முஸ்லிம் ஆட்சியின் கீழ்தான் இருந்தது. தேவாலயங்கள் திறந்திருந்தன மற்றும் யூதர்களுக்கு அவர்களின் ஜெப ஆலயங்களை திரும்பக் கட்டுவதற்கும் நிதி வழங்கப்பட்டது. முன்பு முஸ்லிம்கள் மற்றும் யூதர்கள் ஆகியோர் நகர சுவர்களுக்குள் வாழ்வது பிரதானமாக தடை செய்யப்பட்டிருந்த போது, சிலுவைப்போர் நடத்தியவர்கள் ஜெருசலேமை ஆண்ட காலத்தை விட இது முரண்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல 15ம் நூற்றாண்டு மதல் பெரும்பான்மையான அராபியர்கள் ஒட்டமான் ஆட்சியின் கீழ் இருந்தபோது, அதன் ஐநூறு வருட கிறீஸ்தவர்கள் மற்றும் யூதர்களின் வாழ்க்கை அங்கீகரிக்கப் பட்டு பாதுகாக்கப்பட்டது. கிறீஸ்தவ ஸ்பெயினில் இருந்து வெளியேற்றப்பட்ட பெரும்பாலான யூதர்களுக்கு ஒட்டமான் சக்கரவர்த்தியால் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது. அதேபோல கத்தோலிக்க அடக்குமுறையில் இருந்து தப்பி வந்த ஜேர்மன், பிரான்ஸ், மற்றும் செக் புரட்டஸ்ஸான்ட்டுகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டது. கொடூரமான தண்டனைகள் நிறைவேற்றுப் பட்டுவந்த சில முஸ்லிம் நாடுகளில் அது குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நைஜீரியாவின் முன்னாள் முஸ்லிம் ஜனாதிபதி காலஞ்சென்ற உமரு யார் அவுதா, அங்கு விபச்சாரக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு இளம்பெண்ணை தூக்கிலிடுவதற்கு அங்கு எதிர்ப்புகள் எழுந்த வேளை என்னிடம் சொன்னது ஷரியா சட்டம் பரந்த விளக்கத்திற்காக திறந்துள்ளது. அதற்கு மேலும் அவள்மீது சாட்டப்பட்டுள்ள குற்றத்துக்கு மூன்று சாட்சிகள் தேவைப்படுகிறது மற்றும் உண்மையான வாழ்க்கையில் அது சாத்தியமற்றது” என்று.

இன்று முஸ்லிம் நாடுகள் நைஜீரியா, துருக்கி, பாகிஸ்தான், பங்களாதேஷ், துனிசியா, மலேசியா மற்றும் செனகல் (மற்றும் 160 மில்லியன் முஸ்லிம்கள் இந்தியாவில் உள்ளார்கள்) போன்ற பல்வேறுபட்டவை, ஜனநாயக நாடுகள் ஆகும் மற்றும் ஜோர்தான், ஓமான் மற்றும் மொராக்கோ என்பன அந்த வழியை ஆரம்பிக்க உள்ள நாடுகள் ஆகும்.

நான், இஸ்லாமைப் பார்க்கும்போது, நாங்கள் அச்சம் அடைவதற்கு ஒன்றுமில்லை  அதுதான் அச்சம் அடைகிறது என்ற முடிவுக்கே வந்துள்ளேன். அது குறிப்பாக கொன்சன்டைனுக்கு முந்திய கிறீஸ்தவத்திலும்  குறைவான கொடூரமானதும் மற்றும் வன்முறையான வரலாற்றையே கொண்டுள்ளது. முஸ்லிம்கள் வெளியாட்களின் தலையீடோ அல்லது இராணுவ உதவியோ இன்றி போராளிகளை கையாள வேண்டிய கட்டாயத்தை அவர்களே தீர்மானிக்க விட்டுவிடவேண்டும்.

தேனீ மொழிபெயர்ப்பு;: எஸ்.குமார்
 

dantv